தொடரும் தோழர்கள்

பிறந்தநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்தநாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 07, 2015

உலகநாயகா!மருதநாயகமாக வா! -(மாயக்கட்டில் பகுதி-2!)



களத்தூர் கண்ணம்மாவின் செல்வமே,


கலை உலகின் ஆனந்த ஜோதியே
கலைத் தாயின் பாத காணிக்கையான
உன் கலைப் படைப்புக்களை
பார்த்தால் பசி தீரும்.
கலை உலகின் வானம்பாடி நீ.
இயக்குநர் சிகரத்தின் மேடையில்
மீண்டும் அரங்கேறி,அவர்
சொல்லத்தான் நினைத்தை
நினைத்தாலே இனிக்கும்படி
தில்லு முல்லு செய்யாமல்
ஒரு தொடர்கதை ஆக்கி
அபூர்வ ராகங்கள் பாட
உன்னால் தான் முடியும் தம்பி
நாம் பிறந்த மண்ணில்
இந்தியனாக, நாயகனாக,






தேவர் மகனாக திரை உலகோடு
ஏக் துஜே கேலியேஆகி
பேசாமல் பேசும் படம் எடுத்து
கண்ணில்லாமல் ராஜபார்வை பார்த்து
மூன்றாம் பிறையாய் சுடர்விட்ட நீ


ஆயிரம் பிறை சினிமா உலகிலேயே கண்டு களி
இளமையிலே ஊஞ்சலாடி
 மன்மத லீலை, புரிந்து
மன்மத அம்புகள் தொடுத்து
ஹலோ ராதா, ஹரே கிருஷ்ணா
என்று ராங் நம்பர்களை அழைத்து
உல்லாசப் பறவை ஆகப் பறந்து
மூன்று முடிச்சு போட்டாய்!
காக்கிச் சட்டையோடு
காதல் பரிசு தந்த,
ஜனரஞ்சக விக்ரம், சிங்காரவேலன்
எல்லாம் இன்ப மயம்
ஆனால் வாழ்வே மாயம்
சலங்கை ஒலியுடன் சாகர சங்கமமாகி,
ஸ்வாதி முத்யம் படைத்து
சிப்பிக்குள் முத்தானாய்.
16 வயதினிலே சப்பாணியாக
மயிலிடம் மையல் கொண்டு,
பலாத்காரம் செய்ய முனைந்த
பரட்டையைவதம் செய்தாய்
சிவப்பு ரோஜாக்களை
ரத்தத்தில் ஊற வைத்து
காதலியை ஆராதித்தாய்.
சட்டம் என் கையில் என்றில்லாமல்
சிறை சென்று தண்டனை அனுபவித்து,
கைதியின் டைரி குறிப்பில் எழுத
பலபடங்கள் உண்டு.
அவள் அப்படித்தான் என்றல்லாமல்
மகளிர் மட்டும் என்று முழங்கி
சதிலீலாவதியை, சரளாவை கெளரவித்தாய்
கோவை மாப்பிள்ளையாக
ஹேராம் என்று விருமாண்டியாக பல
குணாதிசயங்களை வெளிப்படுத்தி
ஆளவந்து, தப்புத் தாளங்கள் போட்டு,
உத்தம வில்லன் ஆனாய்
பாபநாசம் செய்தாய்,
முன்பல் கல்யாணராமனை
அற்புதமாக்கி,
கோகிலாவை காவியமாக்கி,
மீண்டும் கோகிலாவை காதலிக்க வைத்த 
சகலகலாவல்லன் நீ
மைக்கேல், மதன காமராஜனே,
அவ்வை ஷண்முகியே, பஞ்சதந்திரனே,
இந்த்ரன், சந்த்ரனே, தெனாலியே,
வசூல் ராஜாவே ரசகிர்களின் அபூர்வ
சகோதரனே (ராஜா என்னை மன்னித்து விடு)
வாழ்க நீ பல்லாண்டு!!!
தசாவதாரனே, விஸ்வரூபனே,
மஹாநதியே, அன்பே சிவம் உனக்கு
நான் உன்னைப்போல ஒருவன் தான் என்றாய்.
தவறு என்கிறோம் நாங்கள்
உன்னைப் போல் ஒரு கலைஞன் உண்டோ 
என்று அதிசயிக்கிறோம்.
தீபாவளிக்கு தூங்கா வனத்தில்
குருதிப்புனலுடன் வேட்டை ஆடு! விளையாடு!!
வெற்றிவிழா கொண்டாடு!!
மாயக் கட்டிலில் படுத்துறங்கி
மருதநாயகமாக ஜனனி
உலகநாயகனே!


வெள்ளி, அக்டோபர் 25, 2013

தலைகீழாக நின்றாலும் வயது மாறாது!



உடன்பிறப்பே!

நீ அறிந்திடுவாயா?

பல்லாண்டுகளுக்கு முன்,குறிப்பாக 1944 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 25 ஆம் நாளன்று திருவல்லிக்கேணி நல்லதம்பி முதலித் தெருவில் இருந்த ஒரு வீட்டில் ஒரு சாமானியன் பிறந்திட்டான்.

ஆயினும் அவன் பிறந்த நாளன்று மழை கொட்டியது,இடைவிடாமல்.

வேறு யாராவது புனிதன் அன்று அதே மண்ணில் பிறந்திட்டதன் காரணமாக அம்மழை கொட்டியிருக்கக்கூடும்!

சிறப்பாகச் சொல்ல என்ன இருக்கிறது அவன் வாழ்க்கையில்?

வளர்ந்திட்டான்;படித்திட்டான்;பணியில் அமர்ந்திட்டான்;மணம் புரிந்திட்டான்,மக்களைப் பெற்றிட்டான்;பணி ஓய்வு பெற்றிட்டான் ;இன்றோவெனில்...பொழுது போக்குதற்கு என்னென்னவொ செய்திடுகிறான்.

ஆனால் இன்றைய வாழ்க்கையில் அவனுக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்திடுவது,மன நிறைவினை அளித்திடுவது,அவன் வலை மூலம் ஈட்டிய நட்புகள்; உன் போன்ற உடன் பிறப்புகள்!

இன்று அவன் வயது தலைகீழாக நின்றாலும் மாறாது

ஆம்.......

வயது…….

69.

இந்நாளில் இவன், இந்த நட்புறவுகள்,வாழ்நாள்  முழுவதும் தொடர்ந்திட வேண்டும் என வேண்டி நின்றிடுகிறான்!

அன்புடன்

சென்னை பித்தன்
 

செவ்வாய், அக்டோபர் 25, 2011

வாழ்த்துங்கள் உறவுகளே!


இன்று காலை முதல் தொலைபேசி அழைப்பு திருவண்ணாமலையில் இருக்கும் என் அக்காவிடமிருந்து.

பின் சென்னையில் இருக்கும் உறவினர்கள்,நண்பர்கள்,துபாய்,தோஹா என்று பல இடங்களிருந்தும்,தொலைபேசி அழைப்புகள்.

எல்லாம் இன்று பிறந்த இந்தக் குழந்தைக்கு வாழ்த்துச் சொல்ல!

1944 இல் இந்நாளில் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த இந்தக் குழந்தைக்கு இன்று 67 ஆண்டுகள் முடிந்து விட்டன.

எப்போதும் நான் சொல்லும் அதே சொற்கள்தான்--

உடலுக்கு வயது 67;உள்ளத்துக்கு வயது 27தான்!

இறைவன் அருளும் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என்னுடனிருந்து என்னை வழி நடத்தட்டும்

miles to go before i sleep!