தொடரும் தோழர்கள்

செவ்வாய், மே 22, 2012

விசாலினியின் புத்தியும்,வலைப்பதிவின் சக்தியும்! ---வரலாறு காணாத சென்னை யூத் பதிவர் சந்திப்பு..

                               சத்யம் டி.வி. யினர்  விசாலினியை பேட்டி காண்கின்றனர்

சந்திப்பின் மற்றொரு முக்கிய நிகழ்வு  சாதனைச் சிறுமி விசாலினிக்குப் பாராட்டு.விசாலினி பற்றிப் புதிதாக நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?அவள் நுண்ணறிவுத்திறன் ஈவு 225 என்பதும்,அவள் தேர்ச்சி பெற்றிருக்கும் தேர்வுகளும் எல்லாம் நீங்கள் அறிந்ததே.


 அவள் தாயார் அன்று சொன்ன ஒரு செய்தி.ஆபீசர் சங்கரலிங்கம் அவளைப் பற்றித் தன் பதிவில் எழுதிய பின்தான் அவள் உலகம் முழுவதும் அறியப்பட்டவளானாள்.இப்போது தினம் ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வருகின்றன--அவளுக்கு அழைப்பு விடுத்து,அவளைப் போதிக்கச் சொல்லி எனப் பல்வேறு விதமாக. அத்தகைய அஞ்சல்களையெல்லாம் அச்சிட்டு த் தொகுத்து வைக்கிறார்கள் விசாலினியின் தாய்.ஒரே ஒரு மாதத்தின் தொகுப்பு மட்டும் கொண்டு வந்திருந்தார்கள்.

                                                       விசாலினியும் ,தாயாரும்

(விசாலினிக்குப் பதிவர்கள் சார்பில் பரிசு வழங்கியவர்கள் புலவர் ஐயா அவர்களும் நானும்.எனவே அந்தப் படம் என்னிடம் இல்லை!)

வலைப்பதிவின் மகத்தான சக்தி இப்போது புரிகிறதா.எனவே நம்மால் ஆக்கமுடியும் என்பதை உணர்ந்து ஆக்க பூர்வமான பதிவுகள் வெளியிடமுயல வேண்டும்.

விசாலினியுடன் ஒரு கேள்வி- பதில் நேரமும் இருந்தது.

நேற்று விசாலினிக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு.அதன் பலனாக அவளைப் பற்றி இந்த நாடு முழுவதும் அறிந்து,நமது நடுவண் அரசும் அவளை ”இந்தியாவின் பெருமை(Pride of India) என்று அழைத்துக் கௌரவப்படுத்தவேண்டும்.அவள் மேன்மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும்.இதுவே நம் அனைவரின் விருப்பம்.வாழ்த்துகிறோம் அவளை.

நாம் சந்தித்தோம்,அறிமுகம் செய்து கொண்டோம்,அளவளாவினோம்,தேநீர் அருந்தினோம்.இது எப்போதும் நடப்பது.இம்முறை நாம் கூடி இரு சாதனையாளர்களுக்கு மரியாதை செய்தோம்.நம்மில் ஒருவரை,அவர் சமூகப் பணிக்காகச் சென்ற ஆண்டின் பதிவராகத் தேர்வு செய்தோம் என்ற இவைதாம் அந்தச் சந்திப்புக்குப்  பெருமை சேர்க்கின்றன.

இச்சந்திப்புக்கு ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி முடித்த அனைவரும் பாராட்டப் பட வேண்டியவர்கள்

மேலும் சில படங்கள்-












அடுத்த சந்திப்புக்காகக் காத்திருக்கிறேன்!

டிஸ்கி:-  ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
                செய்ந்நன்றி கொன்ற  மகற்கு”

  சந்திப்பு நடத்த இடம் கொடுத்து உதவியதோடு,வந்திருந்த அனைவருக்கும் ஜெ.மோ.வின்” யானை டாக்டர்” புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கிய  டிஸ்கவரி புக் பேலஸ் உரிமையாளர் திரு .வேடியப்பன் அவர்களுக்கு  தமிழ்ப்பதிவுலகம் சார்பில் நன்றி.

25 கருத்துகள்:

  1. விசாலினி என்ற குழந்தை அருந்திறலாளரை (Child Prodigy) கௌரவித்த இளம் பதிவர்களுக்கும் எந்த செய்தியையும் அந்த குழந்தைப் படத்தை வெளியிட்ட தங்களுக்கு எனது வாழ்த்துக்கள். நிச்சயம் அவர் ‘இந்தியாவின் பெருமை’ தான்.

    நானும் அடுத்த பதிவர் சந்திப்புக்கு காத்திருக்கிறேன் . அப்போதுதானே தங்களுடைய அடுத்த நேர்முக வருணனை கிடைக்கும்!!

    பதிலளிநீக்கு
  2. புகைப்படங்களை வேறு வேறு கோணத்தில் எடுத்திருந்தால்
    இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ ?
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. @வே.நடனசபாபதி
    அடுத்த சந்திப்புக்கு நீங்களும் வருகிறீர்கள்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. Ramani சொன்னது…

    // புகைப்படங்களை வேறு வேறு கோணத்தில் எடுத்திருந்தால்
    இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ ?//
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
    ஒப்புக் கொள்கிறேன்.
    இருந்த இடத்தை விட்டு எழாமல் படம் எடுத்தால் இப்படித்தான்!
    அடுத்த முறை உங்கள் ஆலோசனையை கருத்தில் கொள்வேன்.
    நன்றி ரமணி

    பதிலளிநீக்கு
  5. //வலைப்பதிவின் மகத்தான சக்தி இப்போது புரிகிறதா. ///

    இந்த ஓர் விஷயம்தான் விழா நன்றாக முடிய ஆணிவேராக இருந்தது சார்..

    பதிலளிநீக்கு
  6. பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. am happy coz my picture is in ur post.......thank u sir....

    பதிலளிநீக்கு
  8. ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
    ////////////////////////////////
    உண்மைதான்.....!வேடியப்பனுக்கு நாம் நன்றி கடமை பட்டவனாகிறோம்!

    பதிலளிநீக்கு
  9. நன்றி ஐயா.....

    தங்களை நேரில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.....

    பதிலளிநீக்கு
  10. பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. vaazhthukkal! Ayya! Ungalukku oru viruthinai pakirnthullen!Neengal petrukondaal makzhven; enathu thalathirkku varukai thaarungal!

    பதிலளிநீக்கு
  12. ஒரு நல்ல செய்தி நல்ல மனசோடு நல்ல மனிதரால் சொல்லப்பட்டால் அது உலகெங்கும் ஒலிக்கும் என்பது திரு.ஆபீசர் சங்கரலிங்கம் அவர்களால் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டது. வாழ்த்துக்கள் அவருக்கும் அந்த குழந்தைக்கும்.

    பதிலளிநீக்கு
  13. மிக நல்ல விடயம் படிக்க படிக்க ஆசையாக இருக்கிறது நாங்கள் இப்படி ஒன்று எப்போது செய்வதென்று ..நான் மறுபடியும் கூறுகிறேன் இது சென்னையுடன் மட்டுமில்லாமல் உலகம் பூராகவும் உள்ள பதிவர்களை சந்திக்கும் ஒரு நிகழ்வாக மாற வேண்டும்

    நன்றி ஐயா

    விசாலினிக்கு எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும்,திரு.வேடியப்பன் அவர்களுக்கும் நன்றிகள் பல.
    நீங்களும்,புலவர் ஐயாவும் இணைந்து விருதளித்தது இன்னும் மகிழ்வு.

    பதிலளிநீக்கு
  15. @சம்பத்குமார்
    உண்மைதான்.நன்றி சம்பத்

    பதிலளிநீக்கு
  16. விருதுக்கு நன்றி.மிக்க மக்ழ்வுடன் ஏற்றுக் கொண்டேன்.
    நன்றி சீனி

    பதிலளிநீக்கு
  17. இளைஞர்களோடு விழாவில் கலந்து கொண்டது எனக்கும் மகிழ்ச்சி.

    முன் கூட்டிய திருமண வாழ்த்துகள்
    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. அருமை சார். நிகழ்ச்சிக்கு வர முடியாத என் போன்றோருக்கு படங்கள் பார்த்தது நிறைவை தந்தது

    பதிலளிநீக்கு