தொடரும் தோழர்கள்

ஞாயிறு, டிசம்பர் 11, 2011

ஹாலிடே!ஜாலிடே!!

ஆசிரியர் வகுப்பில் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதப் பணித்தார். தலைப்பு ”உன்னிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால் என்ன செய்வாய்?”

ராமு வெற்றுத் தாளை மடித்துக் கொடுத்தான்.ஆசிரியர் அதைக் கண்டு கோபமடைந்தார்.”ராமு! என்ன இது ?ஒன்றுமே எழுதாமல் கொடுத்திருக்கிறாய்?” என்றார்.

ராமு சொன்னான்”என்னிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால் இப்படித்தான் செய்வேன்”

ஆசிரியர்(சௌந்தர்!)-ராமு,இந்த வரை படத்தில் அமெரிக்கா எங்கிருக் கிறதெனக் காட்டு.

ராமு சரியாகச் சுட்டிக்காட்டுகிறான்.

ஆ:நன்று! மாணவர்களே,அமெரிக்காவைக் கண்டு பிடித்தது யார்?

மாணவர்கள்:ராமு சார்!!

ஆசிரியர்(கருன்!):ஏண்டா லேட்டு?

மாணவன்:வரவழியில் இருந்த போர்ட்தான் காரணம் சார்.

ஆசிரியர்:என்ன போர்ட்?

மாணவன்: மாணவன் படம் போட்டுப் “பள்ளிக்கூடம்!மெள்ளப்போ “என்று எழுதியிருந்தது சார்!

ஆசிரியர்:யாருமே கேட்காவிட்டாலும் பேசிக்கொண்டே  இருக்கும் நபரை என்னவென்று அழைப்போம்?

மாணவன்:ஆசிரியர் சார்.
 ---------------------------------------------------------------------------------------
ஆசிரியர்:ராணி! நாய்  பற்றி நீ எழுதிய கட்டுரையும்  உன் அண்ணன் எழுதிய கட்டுரையும் ஒன்றாக இருக்கிறதே!அதேதானா இது?

ராணி;இல்லை சார்.அதே நாய்!
--------------------------------------------------------------------------------------

21 கருத்துகள்:

  1. பகல் வணக்கம்,ஐயா! நகைச்சுவைக் கதைகள் அருமை!அதிலும் அந்த அதே நாய்,படு ஜோர்!

    பதிலளிநீக்கு
  2. அடடா இன்னைக்கு நானும் மாட்னேனா?

    ஹா.ஹா...

    பதிலளிநீக்கு
  3. இன்று மாணவர் தினமா என்ன? எல்லாம் மாணவர்கள் பற்றிய நகைச்சுவைகளாக உள்ளனவே? எல்லாமே ஜோர்!

    பதிலளிநீக்கு
  4. ஸ்டூடன்ட்ஸ் ஸ்பெஷல் ஜோக்குகள் அனைத்தும் ரசிக்க வைத்தன. அதிலும் கருன் சம்பந்தப்பட்டஜோக்... சூப்பர்!

    பதிலளிநீக்கு
  5. மாணவ நகைச்சவை
    அனைத்தும் நல் சுவை!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  6. ஹாலிடேயை ஜாலிடே ஆக்கிப் போனது தங்கள் பதிவு
    தொடர வாழ்த்துக்கள் த.ம 8

    பதிலளிநீக்கு
  7. 'மெள்ளப் போ' வேகமாக சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  8. ஹாலிடே ஜாலிடேவாகிப்போனது ஆசிரியர் மாணவர்கள் ஜோக்குகளால்.

    பதிலளிநீக்கு
  9. சுவையான நகைச்சுவைத் துணுக்குகள்..
    அருமை ஐயா..

    பதிலளிநீக்கு
  10. ஆசிரியர்:ராணி! நாய் பற்றி நீ எழுதிய கட்டுரையும் உன் அண்ணன் எழுதிய கட்டுரையும் ஒன்றாக இருக்கிறதே!அதேதானா இது?

    ராணி;இல்லை சார்.அதே நாய்!
    >>
    நம்ம ம்மணவர்களை அடிச்சுக்க ஆள் கிடையாது

    பதிலளிநீக்கு
  11. சிரிப்பு சிறந்த மருந்து. நன்றி ஐயா.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  12. சுவையான நகைச்சுவை,அதிலும் 3ம் 5ம் அதிக சுவை..

    பதிலளிநீக்கு
  13. அன்பு உள்ளங்களே! வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு