தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 10, 2011

கடவுளுக்குத்தானே தெரியும்?


ஒரு கோவிலில் ஒருவன் கூட்டிப் பெருக்கும் வேலை செய்து வந்தான். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தம் குறைகளைச் சொல்லி வேண்டி விட்டுப்போகிறார்களே,இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு நின்று கொண்டே இருக்கிறாரே கடவுள்,அவருக்கு ஓய்வு வேண்டாமா என எண்ணினான்.


கடவுளிடம் சென்று கள்ளமில்லா மனதோடு சொன்னான்” கடவுளே!  நான் ஒரு நாள் உங்களுக்குப் பதிலாக நின்று கொள்கிறேன்.நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்!”

கடவுளும் புன்சிரிப்புடன் சம்மதித்தார்.”அப்படியே செய்யலாம்.உன்னை என் போல் மாற்றி விடுகிறேன்.நீ இங்கு நின்று கொள்.ஆனால்,ஒரு நிபந்தனை. உன் முன் என்ன நடந்தாலும் நீ குறுக்கிடவோ பேசவோ கூடாது.அப்படிச் செய்தால் எனது திட்டங்கள் மாறிப் போகும்.”

அவன் கடவுளாக நின்று கொண்டான்.

சிறிது நேரத்தில் ஒரு பணக்காரன் வந்தான்.ஒரு கட்டுப் பணத்தை எடுத்து உண்டியலில் போட்டு விட்டு வேண்டிக் கொண்டான்”கடவுளே! நான் உனக்குக் கொடுத்துக்  கொண்டே இருக்கிறேன்.நீயும் என் வியாபாரம் சிறப்பாக நடந்து எனக்கு நல்ல லாபம் கிடைக்க அருள் செய்”   அவன் போகும்போது பணம் நிறைந்த பையை அங்கு விட்டுச் சென்று விட்டான். கடவுளாக நின்றவனால் ஏதும் செய்ய இயலவில்லை!

அதன் பின் ஒரு ஏழை வந்தான்.அவன் தன் பையில் இருந்த ஒரே ஒரு காசை எடுத்து உண்டியலில் போட்டான்.”கடவுளே! எனக்கு எவ்வளவோ செய்ய ஆசை.ஆனால் வசதியில்லை.என் குடும்பம் பசியில் வாடுகிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என உனக்கே தெரியும் ”என்று சொல்லிக் கண்களை   மூடிப் பிரார்த்தித்துக் கண்களைத் திறந்தான். அந்தப் பணப் பையைப் பார்த்தான்.மிக்க மகிழ்ச்சியோடு அதை எடுத்துக் கொண்டு  கடவுளுக்கு  நன்றி சொல்லிப் புறப்பட்டான்.கடவுளாக நின்றவனும் மகிழ்ந்தான்.

அடுத்ததாக ஒரு மாலுமி வந்தான்.அவன் மறு நாள் கப்பல் பயணம் செல்ல  வேண்டும்.ஆறு மாதம் கழித்துதான் திரும்புவான்.அவன் வணங்கிக்  கொண்டிருக்கும்போதே,பணக்காரன்  போலீஸுடன் வந்தான். மாலுமியைக் கண்டதும் இவன்தான் என் பணத்தை எடுத்திருக்கிறான் என்று சொல்ல போலீஸ் மாலுமியைப் பிடித்துக் கொண்டார்கள்.அவன் இறைவனிடம் முறையிட்டான்,இறைவா நிரபராதியான என்னை ஏன் தண்டிக்கிறாய் என்று.

இதைப் பார்த்தான் கடவுளாக நிற்பவன்:”இவன் தவறு செய்யவில்லை, இதற்கு முன் வந்த ஏழைதான் எடுத்தான் “ என்று சொல்ல ,பணக்காரன். மாலுமி இருவருமே கடவுளுக்கு நன்றி தெரிவித்தனர்.தான் ஒரு நல்ல செயல் செய்தோம்,கடவுள் பாராட்டுவார் என்று அவன் எண்ணினான்.

இரவு கடவுள் வந்ததும் அவரிடம் நடந்தவற்றைச் சொன்னான். கடவுள்சொன்னார்”ஏன் இப்படிச் செய்தாய்?உன்னைப் பேசாமல் இருக்கச் சொன்னேனே?நீ என்ன செய்து விட்டாய்?அந்தப் பணக்காரன் ஏமாற்றிச் சம்பாதிக்கிறான். எனவே அவன் பணம் உன்மையான அந்த ஏழைக்குப் பயன்படட்டும் என நினைத்தேன்.அந்த மாலுமி போகப் போகும் கப்பல் புயலில் மாட்டப் போகிறது.மாலுமியின் உயிருக்கு
ஆபத்து.போலீசிடம் அகப்பட்டிருந்தால் அவன் பிழைத்திருப்பான். பணம் தொலைந்ததில் பணக்காரனின் கர்ம பலன் சிறிது குறைந் திருக்கும்.ஆனால் எல்லா வற்றையும்  நல்லது செய்வதாக எண்ணி நீ மாற்றி விட்டாய்.”

ஆம் கடவுளின் திட்டங்களை யார் அறிவார்?எதை, எப்படி, எப்போது, எங்கு எவருக்குச் செய்ய வேண்டும் எனத் தீர்மானிப்பவர் அவரல்லவா!


22 கருத்துகள்:

  1. அழகான எழுத்துநடை. அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. //ஆம் கடவுளின் திட்டங்களை யார் அறிவார்?எதை, எப்படி, எப்போது, எங்கு எவருக்குச் செய்ய வேண்டும் எனத் தீர்மானிப்பவர் அவரல்லவா!//

    அதானே... நல்ல பகிர்வு...

    பதிலளிநீக்கு
  3. என்ன இருந்தாலும் மனிதனுக்கு உணர்வுகள் உண்டே! நன்று

    பதிலளிநீக்கு
  4. மணல் கயிறு திரிப்பதில் நீங்கள் வல்லவர் தான் போங்கள்

    பதிலளிநீக்கு
  5. -ஆம்! கடவுளின் கணக்கை யாரறிவார்? அவனின் விளையாடலை அவனையன்றி யாரே உணர இயலும்? அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. பல நேரங்களில் நாம் பேசாமல் இருந்தால் நடப்பதின் அர்த்தம் பின்னர் புரிந்து விடுகிறது. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  7. ஆம் கடவுளின் திட்டங்களை யார் அறிவார்?எதை, எப்படி, எப்போது, எங்கு எவருக்குச் செய்ய வேண்டும் எனத் தீர்மானிப்பவர் அவரல்லவா!
    >>>
    ரொம்ப சரியா சொன்னிங்க ஐயா!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்,ஐயா!அருமையான விழிப்பூட்டும் கதை!"எல்லாம் அவன் பாத்துக்குவான்"அப்புடீன்னு சொல்லுறது இதுக்காகத் தானோ?

    பதிலளிநீக்கு
  9. Unmai. Kadavul ethu seithalum Nam Nanmaikkagave irukkum. Mika arumaiyana pathivu. Vaalthukkal Sir.

    பதிலளிநீக்கு
  10. Unmai. Kadavul ethu seithalum Nam Nanmaikkagave irukkum. Mika arumaiyana pathivu. Vaalthukkal Sir.

    பதிலளிநீக்கு
  11. ////ஆம் கடவுளின் திட்டங்களை யார் அறிவார்?எதை, எப்படி, எப்போது, எங்கு எவருக்குச் செய்ய வேண்டும் எனத் தீர்மானிப்பவர் அவரல்லவா!///

    சரியாகச் சொன்னீர்கள்..

    பதிலளிநீக்கு
  12. ஆட்டுவிப்பவன் அவன். ஆடுபவர்கள் நாம். இந்த Role Play மாறாமல் இருப்பதுதான் நல்லது என்பதை அருமையான பதிவின் மூலம் வெளிப்படுத்தியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. செமையான கதை தல, தெய்வம் செய்ய நினைத்தது தடைபடாது இல்லையா...!!!

    பதிலளிநீக்கு
  14. அவன் போடும் கணக்கை விடுவிப்பார் யாருமில்லை தல...!!!

    பதிலளிநீக்கு
  15. கடவுளுக்கு தான் தெரியும் யாருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்று... நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  16. வருகை தந்தமைக்கும்,கருத்துச் சொன்னமைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. தேவை இல்ல வரங்கள் வேண்டி கிட்டினால் வரும் சங்கடங்கள் இவை ..புராணங்களில் இது போல் பல நிகழ்ச்சிகள் உள்ளன வாசு

    பதிலளிநீக்கு
  18. தானே புயலில் 32-36 செத்து போயிட்டாங்க. இது கடவுள் செய்தது இல்லை. ஏதோ ஒரு வேலைக்காரன் கடவுள் டூட்டி செய்யும் போது நேர்ந்த தவறு

    பதிலளிநீக்கு