தொடரும் தோழர்கள்

புதன், ஜூலை 06, 2011

நவில்தொறும் நூல்நயம்--நண்பேன்டா-தொடர் பதிவு.

நண்பர் ரியாஸ் அஹமது அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று இப்பதிவைத் தொடர்கிறேன்.



பலருக்கு இளமைக்கால நட்பு இறுதி வரை தொடர்கிறது.
அதற்கெல்லாம் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒரு ஊர் வேண்டும்.எனக்கோ ”யாதும் ஊரே,யாவரும் கேளிர்”
பள்ளிப் படிப்பு மூன்று ஊர்களில்!
கல்லூரிப் படிப்பு இரண்டு ஊர்களில்!
அலுவலகப் பணி பத்து ஊர்களில்!
எங்குமே வேர் விட முடியாத ஒரு வாழ்க்கையில் ஆயுட்கால நட்பு எங்கிருந்து வரும்?

ஆயினும் அந்தந்தக் கால கட்டத்தில் நல்ல நண்பர்கள் இல்லாமல் இல்லை.

அப்பு என்கிற கணேசன்

என் ஆரம்பப் பள்ளிப் பருவத்தில் ஆறாண்டுக் கால நண்பன்.சாத்தூரில் என்னுடன் --கல்லெறிந்து மாங்காய் பறித்தவன்,வைப்பாற்று மணலில்கால் புதைய நடந்தவன்,மணல் மேடு எனும் இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் கதை பேசியவன்,ஓலையில் காற்றாடி செய்து,அதை முள்ளால் குச்சியில் குத்தி அதை லேசாகத் திருகி அதனிடம் ”குன்னாங்குன்னாங்குர்ரா” என்று சொல்லி(அப்போதுதான் நன்றாகச் சுற்றுமாம்!) கையில் பிடித்துக் கொண்டு என்னுடன் ஓடியவன், நானே எழுதி நடித்த என் முதல் நாடகத்தில் எனக்குச் சவாலாக நடித்தவன்.என் விளையாட்டுத் தோழன்.நான் சாத்தூரை விட்டுக் கோவில்பட்டி சென்றபின் ஓர் அரையாண்டு விடுமுறை சமயத்தில் கோவில் பட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்.ஓரிரு நாட்களில் என் தாத்தா வெளியூரிலிருந்த வந்தவர் என்னை அவர் ஊருக்கு அழைக்கவே அவருடன் சென்று விட்டேன்.பின்னர் அப்பு வந்து நான் இல்லாததால் ஏமாற்றமடைந்து சென்று விட்டான்.அப்படி ஒரு நண்பேன்டா நான்! பின்னர் அடுத்த விடுமுறைக்கு அவன் வந்தான் எனபது வேறு!இப்போது எங்கு இருக்கிறானோ!

பெரிய ரமணி என்கிற ராமசாமி

கோவில்பட்டியில் என் நண்பன்.வகுப்புத்தோழன்.பெரிய வீட்டுப் பிள்ளை.நானும் அவனும் சேர்ந்து கிரிக்கெட்டில் கலக்கியிருக்கிறோம்.நான் சொல்லும் மர்மக்கதைகளின் பரம ரசிகன் அவன்.என் அண்ணா கானன் டாயில்,எட்கார் வேலஸ் என்று பலரது கதைகளைப் படித்துச் சுருக்கமாகச் சொல்வார்.அதற்குக் கண்,காது மூக்கெல்லாம் வைத்து நான் அவனுக்குச் சொல்வேன்.அக்கதைகளால் உந்தப்பட்ட அவன் தமிழில் வரும் துப்பறியும் கதைப் புத்தகங்கள் பல வாங்கிப் படித்து விட்டு எனக்கும் தருவான்.எனக்குப் பல நாட்கள் பால முருகன் கஃபேயில் டிஃபன் வாங்கிக் கொடுத்திருக்கிறான்.பின்னர் கால்நடை மருத்துவர் ஆனதாகக் கேள்விப் பட்டேன்.

கலந்தர்

என் வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வில் என்னுடன் எனக்கு ஒரு பலமாய் இருந்தவர்.சில உண்மைகளை எனக்கு எடுத்து உரைத்தவர்.சில முடிவுகளை எடுத்து அவற்றைச் செயல்படுத்த உதவியவர்.எனக்கு ஏற்பட்ட துயர் கண்டு வருந்தியவர்.எனது பிரச்சினையின் தீர்வுக்கு உதவினாலும்,அப்படி நிலை ஏற்பட்டதற்காக வருந்தியவர்.நீண்ட நாட்களாகத் தொடர்பில் இல்லாவிட்டாலும், இன்றும் என்றும் என் நெஞ்சில் நிற்பவர்.திருப்பூர் நண்பர்.

சேஷாத்ரி

என்னுடன் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்ட மேற்படிப்புப் படித்தவர்.சில ஆண்டுகள் தொடர்பில் இருந்த பின் அவர் வேலைக்காகக் குவைத் சென்று விட நானும் பல ஊர்களுக்கு மாற்றல் ஆகத் தொடர்பு அற்றுப் போனது.

நான் விருப்ப ஓய்வில் வந்து சென்னையில் மீண்டும் குடியேறிய பின்,அவரது தொலைபேசி எண்ணைத் தேடிக் கண்டு பிடித்து அவரைத் தொடர்பு கொண்டேன். அன்று நட்பு மீண்டும் துளிர்த்தது.என்னை விட ஒரு வயது மூத்தவர் ஆகையால் நான் அவரது தம்பி என்றே இன்று என்னைச் சொல்பவர்.அவரது ஆசை-கோவையில் அவரது நிலத்தில் சிவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி,அருகில் நாங்கள் குடியேற வேண்டும் .அந்த ஆலயப் பொறுப்பை நானேற்க வேண்டும் என்பது.அவன் சித்தம் எதுவோ?

இன்று என் பதிவின் மூலம் உலகெங்கும் நட்பு வட்டம் விரிந்தது போல் உனர்கிறேன்!

இதைத் தொடர நான் அழைப்பது

1)நினைத்துப் பார்க்கிறேன் வே,நடனசபாபதி

2)நினைவில் நின்றவை கே.ஆர்.விஜயன்

3)venkatnagaraj வெங்கட் நாகராஜ்

4)கூடல்பாலா கூடல்பாலா

என்னை எழுதப் பணித்த தம்பி ரியாஸ் அஹமதுக்கு நன்றி!

40 கருத்துகள்:

  1. நெருடலான நட்பு வட்டம் நண்பேண்ட

    பதிலளிநீக்கு
  2. koodal bala கூறியது...

    //எங்களையும் சேத்துக்குங்க//
    பதிவுலகம் தந்த உறவுகள்!
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  3. அழைப்புக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே. நண்பேன்டா தொடர் பதிவை நானும் தங்கள் அன்புக்கட்டளையை ஏற்று தொடர இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இழந்த நட்புகளை நினைத்து பார்த்து எழுதும் சுகமே தனி தான் ..அதில் உங்களை
    அழைத்து நான் பாடம் கற்றேன் ..மிக்க நன்றி ஐயா ...

    அது சரி அது என்ன நண்பர் ஆரம்பித்து முடிக்கையில் தம்பி சொல்றிங்களே என்ன செய்தி ...நான் உங்கள் பேரன் ஆமா சொல்லிபுட்டேன் ..

    அம்மாடி கொஞ்சம் விட்டா நம்மளை கிழடு ஆக்கிருவீகளோ ...

    பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வு... நண்பர்களைப் பற்றி அவ்வப்போது நினைப்பதும் ஒரு வித சுகம்தான்.....

    என்னையும் அழைத்தமைக்கு நன்றி... ஏற்கனவே நண்பர் A.R. ராஜகோபாலும் பின்னூட்டத்தில் அழைத்திருக்கிறார்... இரண்டொரு நாட்களில் எழுதி விடுகிறேன்....

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஐயா. என்னை தொடர அழைத்தமைக்கு நன்றி. இதன் மூலம் நட்பு மரியாதை செய்வோம்.

    பதிலளிநீக்கு
  7. வே.நடனசபாபதி கூறியது...

    //அழைப்புக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே. நண்பேன்டா தொடர் பதிவை நானும் தங்கள் அன்புக்கட்டளையை ஏற்று தொடர இருக்கிறேன்.//
    கலக்குங்க!நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  8. ரியாஸ் அஹமது கூறியது...

    //இழந்த நட்புகளை நினைத்து பார்த்து எழுதும் சுகமே தனி தான் ..அதில் உங்களை
    அழைத்து நான் பாடம் கற்றேன் ..மிக்க நன்றி ஐயா ...//
    நன்றி ரியாஸ்!

    //அது சரி அது என்ன நண்பர் ஆரம்பித்து முடிக்கையில் தம்பி சொல்றிங்களே என்ன செய்தி ...நான் உங்கள் பேரன் ஆமா சொல்லிபுட்டேன் ..

    அம்மாடி கொஞ்சம் விட்டா நம்மளை கிழடு ஆக்கிருவீகளோ ...//
    யாராவது சிறுவனை அழைக்கும் போது தம்பி என்றுதான் அழைப் போம்! பேரனே என்றா அழைப்போம்!

    பதிலளிநீக்கு
  9. ரியாஸ் அஹமது கூறியது...

    // INDLI 2-3
    TAMIL10 3-4//
    thanks!

    பதிலளிநீக்கு
  10. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    // நன்பேண்டா..//

    ஆம் நண்பா!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  11. FOOD கூறியது...

    // நாங்க இருக்கோம்லா!//
    சார்!உங்களை மறக்க முடியுமா? வாழ்க்கையின் ஆதாரமாயிற்றே!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  12. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //நல்ல பகிர்வு... நண்பர்களைப் பற்றி அவ்வப்போது நினைப்பதும் ஒரு வித சுகம்தான்.....

    என்னையும் அழைத்தமைக்கு நன்றி... ஏற்கனவே நண்பர் A.R. ராஜகோபாலும் பின்னூட்டத்தில் அழைத்திருக்கிறார்... இரண்டொரு நாட்களில் எழுதி விடுகிறேன்....//
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  13. கே. ஆர்.விஜயன் கூறியது...

    // நன்றி ஐயா. என்னை தொடர அழைத்தமைக்கு நன்றி. இதன் மூலம் நட்பு மரியாதை செய்வோம்.//
    நன்றி விஜயன்!

    பதிலளிநீக்கு
  14. அசத்தலான மலரும் நினைவுகள் ஐயா
    நட்புக்கு மரியாதை

    பதிலளிநீக்கு
  15. ஐயா நட்பு தொடர்பான பதிவு அருமை.....
    நல்ல நண்பர்கள்...
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. A.R.ராஜகோபாலன் கூறியது...

    //அசத்தலான மலரும் நினைவுகள் ஐயா
    நட்புக்கு மரியாதை//
    நன்றி ராஜகோபாலன்!

    பதிலளிநீக்கு
  17. vidivelli கூறியது...

    //ஐயா நட்பு தொடர்பான பதிவு அருமை.....
    நல்ல நண்பர்கள்...
    வாழ்த்துக்கள்//
    நன்றி vidivelli!

    பதிலளிநீக்கு
  18. "நவில்தொறும் நூல்நயம்--நண்பேன்டா-தொடர் பதிவு."--
    அருமையாய் பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  19. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //"நவில்தொறும் நூல்நயம்--நண்பேன்டா-தொடர் பதிவு."--
    அருமையாய் பகிர்ந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.//
    நன்றி இராஜராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு
  20. //பலருக்கு இளமைக்கால நட்பு இறுதி வரை தொடர்கிறது.
    அதற்கெல்லாம் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒரு ஊர் வேண்டும்.// சத்தியமான வார்த்தைகள்..

    பதிலளிநீக்கு
  21. செங்கோவி கூறியது...

    //பலருக்கு இளமைக்கால நட்பு இறுதி வரை தொடர்கிறது.
    அதற்கெல்லாம் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒரு ஊர் வேண்டும்.// //சத்தியமான வார்த்தைகள்.//
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  22. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    // குட்//
    தேங்க்ஸ்!

    பதிலளிநீக்கு
  23. குடந்தை அன்புமணி கூறியது...

    // ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html//
    பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  24. விக்கியுலகம் கூறியது...

    //அண்ணே அண்ணே நானு!//
    வாங்க,வாங்க ஜோதில கலந்துடுங்க!
    நன்றி விக்கி!

    பதிலளிநீக்கு
  25. நண்பர்கள் பற்றி-பல
    நண்பர்கள் தொடர்வதே
    பண்புகள் பல்வகை-என
    பலரும் அறிவதே
    இது போல் தொடர்கள் வளர்க
    வாழ்த்துக்கள்
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ஐயா,
    உங்களின் எளிமையான குணத்திற்குத் தலை வணங்குகிறேன்.
    காரணம், உங்களின் நட்புக்களுக்குச் சிகரம் கொடுத்து, அவர்களின் உன்னத குணத்தினைப் போற்றி இப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  27. நிரூபன் கூறியது...

    //வணக்கம் ஐயா,
    உங்களின் எளிமையான குணத்திற்குத் தலை வணங்குகிறேன்.
    காரணம், உங்களின் நட்புக்களுக்குச் சிகரம் கொடுத்து, அவர்களின் உன்னத குணத்தினைப் போற்றி இப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. ரசித்தேன்.//
    மிக்க நன்றி நிரூபன்!

    பதிலளிநீக்கு
  28. இன்று எனது வலைப்பூவில் இந்த பகிர்வினைத் தொடர்ந்திருக்கிறேன்.... தங்கள் அழைப்பிற்கு நன்றி.

    http://venkatnagaraj.blogspot.com/2011/07/blog-post.html

    பதிலளிநீக்கு
  29. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //இன்று எனது வலைப்பூவில் இந்த பகிர்வினைத் தொடர்ந்திருக்கிறேன்.... தங்கள் அழைப்பிற்கு நன்றி.

    http://venkatnagaraj.blogspot.com/2011/07/blog-post.html//
    அழைப்பை ஏற்றமைக்கு நன்றி!
    பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. சென்னைப் பித்தன் சார்! அழகான நட்பு வளையம் உங்களைச் சுற்றி.. என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க!

    நானும் ஒரு விவேகானந்தா கல்லூரி மாணவன்...

    பதிலளிநீக்கு
  31. மோகன்ஜி கூறியது...

    // சென்னைப் பித்தன் சார்! அழகான நட்பு வளையம் உங்களைச் சுற்றி.. என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க!

    நானும் ஒரு விவேகானந்தா கல்லூரி மாணவன்...//
    வாங்க மோகன்ஜி!நீங்க நம்ம கல்லூரி மாணவர் நீங்க இல்லாம ஆட்டமா?சும்மா நின்னு ஆடுங்க!

    பதிலளிநீக்கு