தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூலை 14, 2011

ரஜினி ரஜினிதான்!

ரஜினிகாந்த் அமிதாப்பிடம் சொன்னார்”எனாக்குத்தெரியாத ஆளே கிடையாது. ஏதாவதொரு ஆள் பேர் சொல்லுங்க.நிச்சயமாக எனக்குத் தெரிந்திருக்கும்.”

அமிதாப் எரிச்சலுடன் கேட்டார் “டாம் க்ரூஸ்ஸைத் தெரியுமா?”

”ஓ!என் பழைய நண்பராயிற்றே.வாங்க போய்ப் பார்க்கலாம்”என்றார் ரஜினி.

இருவரும் ஹாலிவுட் சென்று,ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத்தட்டினர்.
டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார்”தலைவா,வாங்க வாங்க.நீங்க வந்ததில் மிக மகிழ்ச்சி.நீங்களும் உங்கள் நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்”.

அமிதாப் கொஞ்சம் அசந்து போனார்.ஆனாலும் சந்தேகம்.கேட்டார்”அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா?” என்று

ரஜினி சொன்னார் “நன்றாகத் தெரியும்”.

இருவரும் வெள்ளை மாளிகைக்குச் சென்றனர்.

ரஜினியைப் பார்த்த ஒபாமா சொன்னார்” என்ன ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சி.ஒரு கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.வாங்க ,காஃபி சாப்பிடுவோம்; கூட்டம் கிடக்கட்டும் !”

அமிதாப் கொஞ்சம் ஆடிப் போனார்.

இருந்தும் ஒப்புக் கொள்ள மனமில்லாமல் கேட்டார்”போப்பைத் தெரியுமா?”

ரஜினி சொன்னார்”என் மூதாதையர்கள் இத்தாலியில் இருந்தனர்.போப்பை நன்றாகத்தெரியும்.

இருவரும் வாடிகன் சென்றனர்.

போப்பைப் பார்க்கப் பெரிய கூட்டம் கூடியிருந்தது.ரஜினி சொன்னார்”இங்கு நின்றால் நான் வந்திருப்பது போப்புக்குத் தெரியாது.நான் காவலர்களிடம் சொல்லி விட்டு உள்ளே போய் போப்புடன் பால்கனியில் வந்து நிற்கிறேன் பாருங்கள்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் போப்புடன் பால்கனியில் வந்து நின்று கையசைத்தார் ரஜினி.திரும்பி வந்து பார்த்தால் அமிதாப்புக்கு ஒரு சிறிய நெஞ்சு வலி வந்து சிகிச்சை அளிக்கப் பட்டிருந்தது.

”என்ன ஆச்சு?” ரஜினி கேட்டார்.

அமிதாப் சொன்னார்.”நீங்கள் போப்புடன் பால்கனி வரும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை.நீங்கள் இருவரும் பால்கனிக்கு வந்தபின் அருகில் நின்ற இத்தாலியர் கேட்டார்---
.........
.........
“பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?!”

36 கருத்துகள்:

 1. செம்ம செம்ம கலக்கல்!! :-)
  RAJINI ROCKZZZZ !!!!!

  பதிலளிநீக்கு
 2. கலக்கிறீங்க ஐயா :-)

  பதிலளிநீக்கு
 3. ஆகா....கலக்கலான காமெடி..

  ரஜினிக்கு அருகில் நிற்பவர் கூட அடையாளம் தெரியாது போய் விடும் அளவிற்கு நம்ம தலைவர் எப்பவுமே நம்பர் ஒன்!

  பதிலளிநீக்கு
 4. Eraganave padiththaga irunthaalum thalaivarukkaga eththanai murai vendumanalum padikkalam... miga arumai

  பதிலளிநீக்கு
 5. தாங்களும் ரஜினி ரசிகர்தானோ!

  பதிலளிநீக்கு
 6. ரஜினி காந்த் இதை படிச்சா இன்னும் உற்சாகமாயிடுவார் ....

  பதிலளிநீக்கு
 7. தலைப்புதான் என்னுடைய கமெண்டும்.... ரஜினி ரஜினிதான்.

  பதிலளிநீக்கு
 8. ஜீ... கூறியது...

  // செம்ம செம்ம கலக்கல்!! :-)
  RAJINI ROCKZZZZ !!!!!//
  yes!
  நன்றி ஜீ!

  பதிலளிநீக்கு
 9. அப்பாதுரை கூறியது...

  //hehehe!//
  ஹி ஹி!
  நன்றி அப்பாதுரை!

  பதிலளிநீக்கு
 10. டக்கால்டி கூறியது...

  // Super Sir.. :-)
  நன்றி டக்கால்டி!

  பதிலளிநீக்கு
 11. கந்தசாமி. கூறியது...

  //கலக்கிறீங்க ஐயா :-)//
  நன்றி கந்தசாமி!

  பதிலளிநீக்கு
 12. நிரூபன் கூறியது...

  //ஆகா....கலக்கலான காமெடி..

  ரஜினிக்கு அருகில் நிற்பவர் கூட அடையாளம் தெரியாது போய் விடும் அளவிற்கு நம்ம தலைவர் எப்பவுமே நம்பர் ஒன்!//
  ஆமாம்,ஆமாம்!
  நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 13. செங்கோவி கூறியது...

  //ஐயா..ஐயா தான்.//
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 14. முத்துசிவா கூறியது...

  //Eraganave padiththaga irunthaalum thalaivarukkaga eththanai murai vendumanalum padikkalam...//
  correct!
  miga arumai//
  நன்றி முத்துசிவா!

  பதிலளிநீக்கு
 15. FOOD கூறியது...

  //தாங்களும் ரஜினி ரசிகர்தானோ!//
  பாபாஜி பக்தனும் கூட!
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 16. koodal bala கூறியது...

  //ரஜினி காந்த் இதை படிச்சா இன்னும் உற்சாகமாயிடுவார் ..//
  அதுதான் ரசிகர்களுக்கு வேண்டும்!
  நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 17. பாலா கூறியது...

  //தலைப்புதான் என்னுடைய கமெண்டும்.... ரஜினி ரஜினிதான்.//
  சந்தேகமின்றி!
  நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 18. இந்த தகவலை ஒரு பிரபலம் ஏற்கனவே மேடையில் சொல்லி சிலரால் விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் இது ஒரு நையாண்டி என்பதால் வாய் விட்டு சிரிக்க தடையில்லை.

  பதிலளிநீக்கு
 19. நல்ல ஜோக் ஐயா... வேறு என்ன சொல்வது - “ரஜினி ரஜினிதான்....”

  பதிலளிநீக்கு
 20. வே.நடனசபாபதி கூறியது...

  //இந்த தகவலை ஒரு பிரபலம் ஏற்கனவே மேடையில் சொல்லி சிலரால் விமர்சிக்கப்பட்டார்.//
  யார் அவர்?
  //இருப்பினும் இது ஒரு நையாண்டி என்பதால் வாய் விட்டு சிரிக்க தடையில்லை.//
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 21. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //நல்ல ஜோக் ஐயா... வேறு என்ன சொல்வது - “ரஜினி ரஜினிதான்....”//
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 22. ரியாஸ் அஹமது கூறியது...

  // ரஜினி வர்றார் பவனி//
  ஆகா!

  பதிலளிநீக்கு
 23. ரியாஸ் அஹமது கூறியது...

  // AIYAA U R ALSO RAJINI ..//

  எனக்கும் அவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு ரியாஸ்!இருவருமே திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்!
  நன்றி ரியாஸ்!

  பதிலளிநீக்கு
 24. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // urchchaagamaana padhivu..
  arumai..//
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 25. அவர் வேறு யாருமல்ல. கவிஞர் வைரமுத்து அவர்கள்தான்

  பதிலளிநீக்கு
 26. வே.நடனசபாபதி கூறியது...

  //அவர் வேறு யாருமல்ல. கவிஞர் வைரமுத்து அவர்கள்தான்//
  தகவலுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 27. செம காமடி சிப்பு சிப்பா வருது - "ரஜினி ரஜினிதான்!" - நன்றி ஐய்யா

  பதிலளிநீக்கு
 28. மனசாட்சி கூறியது...

  // செம காமடி சிப்பு சிப்பா வருது - "ரஜினி ரஜினிதான்!" - நன்றி ஐய்யா//

  நன்றி மனசாட்சி :)

  பதிலளிநீக்கு