தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூலை 21, 2011

பேய் !(சிறுகதை)

புரோக்கர் காட்டிய அந்த வீடு எனக்குப் பிடித்திருந்தது.

சிறிய வராண்டா,வரவேற்பறை,ஒரு படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறை என்று கச்சிதமான வீடு.

பத்து நாள் தேடலுக்குப் பின் இப்போதுதான் வீடு கிடைத்திருக்கிறது.
அலுவலக நண்பர்கள் கூடக் கேட்டார்கள், தனி ஆளுக்கு ஒரு வீடு எதற்காக, லாட்ஜில் ஒரு அறை போதுமே என்று.

ஆனால் எனக்கு லாட்ஜ் வாழ்க்கையும்,ஓட்டல் சாப்பாடும் பிடிப்பதில்லை.

தனியாக நிம்மதியாய் நானே சமைத்துச் சாப்பிடுவதே என் விருப்பம் .

வீடு முழுவதும் சுற்றிப்பார்த்தேன்.படுக்கையறை நிலைப்படியின் மேல் ஒரு தகடு அடிக்கப்பட்டிருந்தது.வீட்டிலிருந்து வெளியே வரும்போது பார்த்தேன்,வாசல் நிலைமேலும் ஒரு தகடு.

புரோக்கரைக் கேட்டேன்.வீட்டுச் சொந்தக்காரர் யாரோ சாமியாரின் பக்தராம்; அவர் கொடுத்த தகடை நன்மைக்காக அடித்திருக்கிறார் என்று சொன்னார்.
புரோக்கருடன் சென்று வீட்டுச் சொந்தக்காரரைப் பார்த்து முன் பணம் கொடுத்து வீட்டை முடித்தேன்.வாடகை கம்மிதான்.

அலுவலகத்தில் வீட்டைப் பற்றிச் சொன்னதும் நண்பர்கள் ”அய்யய்யோ,அந்த வீடா” என்றனர்.அந்த வீட்டில் பேய் இருக்கிறதாம்.அங்கு வசித்த ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்;அவள் அங்கு பேயாகச் சுற்றுகிறாளாம்” என்றனர்.

நான் சொன்னேன் ‘என்னை எந்தப் பேயும் ஒன்றும் செய்ய முடியாது,நான் ஆஞ்சநேய பக்தன்”

மறு நாள் வீட்டில் குடி புகுந்தேன்.

சாமான்களை எடுத்து வைத்துகொண்டிருந்தபோது வாசலிலிருந்து சார் என்ற குரல் கேட்டது.போய்ப் பார்த்தேன். ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

”வாங்க,யார் நீங்க?” நான்.

அவர் சொன்னார்”நான் எதிர் வீட்டில் இருக்கிறேன்.இந்த வீட்டைப் பற்றித் தெரிந்துதான் குடி வந்தீர்களா?”

“ஆமாம் .ஏதோ பேய் இருப்பதாகச் சொன்னார்கள்,அதைத்தானே சொல்கிறீர்கள்?”

”ஆமாம்.அதனால்தான் யாரும் இங்கு குடி வரவில்லை.அதிலும் நீங்கள் தனியாக வேறு இருக்கிறீர்கள்.”

”அதனால்?”

”சார்! இந்த வீட்டில் ஒரு இளம் தம்பதி இருந்தனர்.பொருத்தமான ஜோடி.ஒரு நாள் இரவுப் பணிக்காகச் சென்ற அவன் வீடு திரும்பும்போது அவள் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போயிருந்தாள். ”நான் இனி வாழ விரும்பவில்லை” என ஒரு சிறு சீட்டு மட்டும் எழுதி வைத்திருந்தாள்.போஸ்ட்மார்ட்டத்தில் அவள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருக்கிறாள் என்பது தெரிய வந்தது.போலீஸ் எவ்வளவு முயன்றும் காரணம் யாரென்று தெரியவில்லை. அதன் பின் அவன் ஊரை விட்டுப் போய்விட்டான்.இந்த வீடும் பேய் வீடு ஆகி விட்டது. ”அவர் சொன்னார்.

நான் கேட்டேன் “பேயை யாராவது பார்த்திருக்கிறார்களா ?”

“இல்லை. ஆனால் இரவுகளில் சிலநாள் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்’”அவர்.

நான் சிரித்தேன்.’நன்றி சார்.நான் ஜாக்கிரதையாக இருக்கிறேன்!”

அவர் சென்ற பின்,வாசல் நிலையில் அடிக்கப்படிருந்த தகடைப் பிய்த்து எறிந்தேன்.
இரவு வந்து கொண்டிருந்தது!

(சிறுகதை தொடரும்)

டிஸ்கி;தெரியாத்தனமா வார்த்தை கொடுத்து மாட்டிக்கிட்டேன். ஒரு பதிவின் பின்னூட்டத்தில்,நண்பர்கள் செங்கோவியும்,மைந்தன் சிவாவும் சிறுகதை என்று ஏமாந்ததாகச் சொல்ல, ஜம்பமாக அதே தலைப்பில் கதை எழுதி விடலாம் என்று சொல்லி விட்டு ஆரம்பித்து விட்டேன்.இப்போது எப்படித்தொடர்வது?தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறேன்.அதனால்தான் ---break!

46 கருத்துகள்:

 1. தொடக்கமே அருமை தொடருங்கள்
  பித்தர் எழுத்தொடங்கியதுமே பேய்
  சித்தம் கலங்கி ஓடி யிருக்கும்
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 2. //இரவு வந்து கொண்டிருந்தது!

  (சிறுகதை தொடரும்)//

  சிறுகதை எப்படி சார் தொடரும்? உங்க அக்கப்போர் தாங்கலியே.

  பதிலளிநீக்கு
 3. //தெரியாத்தனமா வார்த்தை கொடுத்து மாட்டிக்கிட்டேன். ஒரு பதிவின் பின்னூட்டத்தில்,நண்பர்கள் செங்கோவியும்,மைந்தன் சிவாவும் சிறுகதை என்று ஏமாந்ததாகச் சொல்ல, //

  ஹா..ஹா..ஓ..இது தான் விஷயமா..பாலகன் அறியாமல் செய்த பிழையை மன்னிச்சிடுங்க சார்..இப்படி நீங்க சொல்பேச்சு பொறுக்காத மனுசர்னு தெரியாமப் போச்சு..எங்களை மாதிரியே உங்களையும் நினைச்சுட்டோம்..

  பதிலளிநீக்கு
 4. நானா இருந்தா இன்னேரம் அந்தப் பேயை ரேப் பண்ணி, கதையை முடிச்சிருப்பேன்.

  பதிலளிநீக்கு
 5. பேய் பிடிக்கல்ல தானே!! தொடருங்க தொடருங்க ..))

  பதிலளிநீக்கு
 6. எப்படியோ நீங்க இந்த சவாலைச் சந்திப்பதன் மூலம் எங்களுக்கு ஒரு விறுவிறுப்பான தொடர் கிடைத்தது.

  பதிலளிநீக்கு
 7. அட..

  இப்படியெல்லாம் வேற பீதியை கிளப்ப
  ஆரம்பிச்சிட்டீகளா ?

  இதுல தொடரும் வேற...

  சரிதான்..
  இப்பதான் நீங்க " கதை " விடப்போற
  ஆசிரியர் - ங்கிறது சரி..


  http://sivaayasivaa.blogspot.com/2011/07/1.html

  நன்றி...

  பதிலளிநீக்கு
 8. சார் உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். நேரம் கிடைத்தால் எழுதுங்கள்.

  http://balapakkangal.blogspot.com/2011/07/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 9. இராத்திரியில படிக்கலாம் என்று இருந்தன் கத வேற
  பேய்க்கதையா அதுதான் இப்ப படிச்சன்.தலையைச்
  சொறியவேணாம் ஆரம்பமே அருமை அடுத்த றீலையும்
  இப்புடியே விட்டுக்கொண்டு போங்க ஐயா....(யாருக்குத்
  தெரியும் இண்டைக்கு இராத்திரிக்கு எனக்கு காச்சல்தான்)

  பதிலளிநீக்கு
 10. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  // தொடக்கமே அருமை தொடருங்கள்
  பித்தர் எழுத்தொடங்கியதுமே பேய்
  சித்தம் கலங்கி ஓடி யிருக்கும்//
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 11. செங்கோவி கூறியது...

  //இரவு வந்து கொண்டிருந்தது!

  (சிறுகதை தொடரும்)//

  //சிறுகதை எப்படி சார் தொடரும்? உங்க அக்கப்போர் தாங்கலியே.//

  இது தொடர் சிறுகதை!:)

  பதிலளிநீக்கு
 12. செங்கோவி கூறியது...

  //தெரியாத்தனமா வார்த்தை கொடுத்து மாட்டிக்கிட்டேன். ஒரு பதிவின் பின்னூட்டத்தில்,நண்பர்கள் செங்கோவியும்,மைந்தன் சிவாவும் சிறுகதை என்று ஏமாந்ததாகச் சொல்ல, //

  // ஹா..ஹா..ஓ..இது தான் விஷயமா..பாலகன் அறியாமல் செய்த பிழையை மன்னிச்சிடுங்க சார்..இப்படி நீங்க சொல்பேச்சு பொறுக்காத மனுசர்னு தெரியாமப் போச்சு..எங்களை மாதிரியே உங்களையும் நினைச்சுட்டோம்..//

  எனக்கு இரண்டு பதிவுக்குச் சான்ஸ் கொடுத்துட்டீங்க! நல்லதுதானே செஞ்சிருக்கிறீங்க!

  பதிலளிநீக்கு
 13. செங்கோவி கூறியது...

  // நானா இருந்தா இன்னேரம் அந்தப் பேயை ரேப் பண்ணி, கதையை முடிச்சிருப்பேன்.//
  பாவம்,ஏற்கனவே ரேப் னாலதான் பேயாகிட்டா .அதுக்குப் பிறகும் அதே பிரச்சினையா?

  பதிலளிநீக்கு
 14. செங்கோவி கூறியது...

  // எப்படியோ நீங்க இந்த சவாலைச் சந்திப்பதன் மூலம் எங்களுக்கு ஒரு விறுவிறுப்பான தொடர் கிடைத்தது.//

  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 15. கந்தசாமி. கூறியது...

  //பேய் பிடிக்கல்ல தானே!! தொடருங்க தொடருங்க ..))//
  பேயை யாருக்காவது பிடிக்குமா?:)
  நன்றி கந்தசாமி.

  பதிலளிநீக்கு
 16. துளசி கோபால் கூறியது...

  //ம்........ அப்புறம்????//
  அதுதான் எனக்கே தெரியவில்லை!:)
  நன்றி துளசி கோபால் அவர்களே.

  பதிலளிநீக்கு
 17. ஆரம்பமே இப்படியென்றால் அடுத்தது எப்படியோ ? தொடக்கமே ஆவலைத் தூண்டுகிறது. தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. தொடங்கிட்டீங்க, எப்படியும் தொடருவீர்கள். நம்பிக்கையில் நாங்கள்.

  பதிலளிநீக்கு
 19. ஆரம்பமே அசத்தலா இருக்கு அய்யா
  தொடருங்கள்
  நானும் தொடர்கிறேன் சற்று
  பயத்துடன்

  பதிலளிநீக்கு
 20. சிவ.சி.மா. ஜானகிராமன் கூறியது...

  அட..

  இப்படியெல்லாம் வேற பீதியை கிளப்ப
  ஆரம்பிச்சிட்டீகளா ?

  இதுல தொடரும் வேற...

  சரிதான்..
  இப்பதான் நீங்க " கதை " விடப்போற
  ஆசிரியர் - ங்கிறது சரி..


  http://sivaayasivaa.blogspot.com/2011/07/1.html

  நன்றி...

  அவ்வப்பொழுது ’கதை’ விட வேண்டியதுதான்.
  நன்றி மெய்யன்பரே.

  பதிலளிநீக்கு
 21. பாலா கூறியது...

  //சார் உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். நேரம் கிடைத்தால் எழுதுங்கள்.//

  ஏற்கனவே நண்பர் அப்பாதுரையிடம் டைம் வாங்கியிருக்கிறேன்!இப்போது உங்கள் அழைப்பு.அன்பு அழைப்பு களுக்கு அடி பணிகிறேன்- விரைவில்.
  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 22. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //அருமையான கதை..//
  நன்றி கருன்.

  பதிலளிநீக்கு
 23. அம்பாளடியாள் கூறியது...
  //
  இராத்திரியில படிக்கலாம் என்று இருந்தன் கத வேற
  பேய்க்கதையா அதுதான் இப்ப படிச்சன்.தலையைச்
  சொறியவேணாம் ஆரம்பமே அருமை அடுத்த றீலையும்
  இப்புடியே விட்டுக்கொண்டு போங்க ஐயா....(யாருக்குத்
  தெரியும் இண்டைக்கு இராத்திரிக்கு எனக்கு காச்சல்தான்)//

  “காக்க காக்க கனகவேல் காக்க!”
  நன்றி அம்பாளடியாள்!

  பதிலளிநீக்கு
 24. வே.நடனசபாபதி கூறியது...

  //ஆரம்பமே இப்படியென்றால் அடுத்தது எப்படியோ ? தொடக்கமே ஆவலைத் தூண்டுகிறது. தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.//
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 25. FOOD கூறியது...

  //தொடங்கிட்டீங்க, எப்படியும் தொடருவீர்கள். நம்பிக்கையில் நாங்கள்.//
  தொடர்ந்தாக வேண்டும்!
  நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 26. A.R.ராஜகோபாலன் கூறியது...

  //ஆரம்பமே அசத்தலா இருக்கு அய்யா
  தொடருங்கள்
  நானும் தொடர்கிறேன் சற்று
  பயத்துடன்//
  ”அச்சந்தவிர்!” :)
  நன்றி ஏ.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு
 27. கதை இண்ட்ரெஸ்ட்டிங்கா போயிட்டு இருக்கும்போது தொடரும் போட்டுட்டீங்களே? அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. கதை ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது! என்னுடைய ஆவி அழைக்கிறது படித்துப்பாருங்களேன்!

  பதிலளிநீக்கு
 29. பாலா கூறியது...

  //கதை இண்ட்ரெஸ்ட்டிங்கா போயிட்டு இருக்கும்போது தொடரும் போட்டுட்டீங்களே? அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.//
  விரைவில்!
  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 30. thalir கூறியது...

  //கதை ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது! என்னுடைய ஆவி அழைக்கிறது படித்துப்பாருங்களேன்!//
  படிக்கிறேன்.
  நன்றி தளிர்.

  பதிலளிநீக்கு
 31. பிளாக்கிலே பேயை புகுத்தியுள்ளீர்கள் ஜாக்கிரதை போற போக்கிலே எழுதிய உங்களையும், படிக்க வந்த எங்களையும் ஒரு சாத்து சாத்த போகிறது, எதற்கும் அவர் வீசிய அந்த தகடை கொடுங்கள் என் பிளாக்கிலே கட்டிவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 32. கதை ஆரம்பிக்கும்போதே End card போட்டுட்டீங்களே அய்யா... இன்னும் கொஞ்சம் பதிவின் நீளத்தை அதிகரிக்கலாம்...:)

  பதிலளிநீக்கு
 33. சிறு தொடர்கதை.... பேய் வீட்டில் தைரியமாக குடியேறிவிட்டீர்கள்... இரவு வந்தது.... நாங்கள் லைட்டை அனைக்காம அடுத்து என்ன என்ற ஆவலுடன் முழித்துக்கொண்டிருக்கிறோம்... நல்லாருக்கு ஐயா.... பார்ட் க்காக காத்திருப்பு

  பதிலளிநீக்கு
 34. தொடர் பே...ய் சிறுகதைக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 35. ! ஸ்பார்க் கார்த்தி @ கூறியது...

  //பிளாக்கிலே பேயை புகுத்தியுள்ளீர்கள் ஜாக்கிரதை போற போக்கிலே எழுதிய உங்களையும், படிக்க வந்த எங்களையும் ஒரு சாத்து சாத்த போகிறது, எதற்கும் அவர் வீசிய அந்த தகடை கொடுங்கள் என் பிளாக்கிலே கட்டிவிடுகிறேன்.//
  ஹா,ஹா! :)
  நன்றி கார்த்தி.

  பதிலளிநீக்கு
 36. முத்துசிவா கூறியது...

  // கதை ஆரம்பிக்கும்போதே End card போட்டுட்டீங்களே அய்யா... இன்னும் கொஞ்சம் பதிவின் நீளத்தை அதிகரிக்கலாம்...:)//
  அடுத்த பதிவுக்கும் ஏதாவது வேணுமில்லே?! :-)
  நன்றி முத்து சிவா.

  பதிலளிநீக்கு
 37. மாய உலகம் கூறியது...

  //சிறு தொடர்கதை.... பேய் வீட்டில் தைரியமாக குடியேறிவிட்டீர்கள்... இரவு வந்தது.... நாங்கள் லைட்டை அனைக்காம அடுத்து என்ன என்ற ஆவலுடன் முழித்துக்கொண்டிருக்கிறோம்... நல்லாருக்கு ஐயா.... பார்ட் க்காக காத்திருப்பு//
  எனக்கே இப்போது கொஞ்சம் பயமாக இருக்கிறது! :)
  நன்றி மாய உலகம்.

  பதிலளிநீக்கு
 38. இராஜராஜேஸ்வரி கூறியது...

  //தொடர் பே...ய் சிறுகதைக்குப் பாராட்டுக்கள்.//
  நன்றி இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 39. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  // டிஸ்கி செம காமெடி//
  வாங்க சிபி!நன்றி.

  பதிலளிநீக்கு
 40. பேய் படம், அட அடுத்து பேய்க்கதையா? ம்... நடத்துங்க நடத்துங்க.....

  அடுத்த பகுதியையும் இப்ப படிக்கிறேன் [நான் கொஞ்சம் லேட்]

  பதிலளிநீக்கு
 41. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //பேய் படம், அட அடுத்து பேய்க்கதையா? ம்... நடத்துங்க நடத்துங்க.....

  அடுத்த பகுதியையும் இப்ப படிக்கிறேன் [நான் கொஞ்சம் லேட்]//
  லேட்டானாலும் லேட்டஸ்ட்!
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
 42. வணக்கம் ஐயா, சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்,

  திரிலிங் கதை ஒன்றைத் தொடங்கியிருக்கிறீங்க.
  முதற் பாகத்தில் சஸ்பென்ஸோடு அடுத்த பாகத்திற்கு நகர்த்தியிருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 43. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //பேய் படம், அட அடுத்து பேய்க்கதையா? ம்... நடத்துங்க நடத்துங்க.....

  அடுத்த பகுதியையும் இப்ப படிக்கிறேன் [நான் கொஞ்சம் லேட்]//
  லேட்டானாலும் லேட்டஸ்ட்!
  நன்றி வெங்கட்.

  23 ஜூலை, 2011 3:46 pm
  நீக்கு
  பிளாகர் நிரூபன் கூறியது...

  //வணக்கம் ஐயா, சிறிய இடைவேளையின் பின்னர் வந்திருக்கிறேன்,

  திரிலிங் கதை ஒன்றைத் தொடங்கியிருக்கிறீங்க.
  முதற் பாகத்தில் சஸ்பென்ஸோடு அடுத்த பாகத்திற்கு நகர்த்தியிருக்கிறீங்க.//
  இயலும்போது வாங்க!
  நன்றி நிரூ.

  பதிலளிநீக்கு