தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூலை 01, 2011

பொன் மாலைப் பொழுது!-டீ சர்ட்

நேற்று மாலை வெளியில் செல்வதற்காக,pant உம் டீ சர்ட்டும் அணிந்து கொண்டு புறப்பட்டேன்!வான் ஹ்யுசென் ஸ்டூடியோ டீ சர்ட்.என் நண்பரின் மகன் யு.எஸ்ஸிலிருந்து அனுப்பிய அன்பளிப்பு! (போதும் தற்பெருமை!)

வீட்டை விட்டு வெளியேறித் தெருவில் நடக்க ஆரம்பித்தேன்.எதிரில் வந்த ஓரிருவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு போவதைக் கண்டேன்.இந்த வயதிலும் எவ்வளவு ஸ்டைலாக உடையணிந்து கம்பீரமாக நடந்து போகிறார் என வியந்து பார்க்கிறார்கள் எனப் பெருமையுடன் நடந்தேன்!இரண்டு தெரு தாண்டி மூன்றாவது தெருவில் செல்லும் போதுதான் தற்செயலாகக் கவனித்தேன்—டீ சர்ட்டைத் திருப்பி அணிந்து கொண்டிருக்கிறேன் என்பதை!

அவர்கள் பார்த்தற்குக் காரணம் இதுதானே என வெட்கப்பட்டேன்.இப்படியே போக முடியாது.ஏதாவது குழந்தை பார்த்து விட்டால் “அய்யய்யோ!மாமாவுக்குச் சட்டையே போட்டுக்கத் தெரியலை” என்று கத்தி மானத்தை வாங்கி விடும்!(யாரப்பா அது? மாமாவா, தாத்தாவா என்று கேட்பது? ரி.அ. தானே?) எப்படி மாற்றுவது? யோசித்தேன்.

திடீரென்று உடம்பெல்லாம் அரிப்பது போல் சொறிந்து கொள்ள ஆரம்பித்தேன். சட்டையைக் கழற்றிப் பார்த்து விட்டு,நான்கு முறை உதறினேன்.பின் சரியாக அணிந்து கொண்டேன். என்னைக் கடந்து போக வேண்டிய நபர் நின்று கேட்டார்”என்ன சார் , எறும்பா?” ”ஆமாம் சார்,கவனிக்காமப் போட்டுக் கொண்டு விட்டேன்,பிடுங்கி விட்டது!” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினேன்!

எப்படி இந்த அனுபவம்!

அடுத்த பதிவும் ஒரு மாலைப் பொழுது அனுபவம்தான்.ஆனால் சிறிது வித்தியாசமான அனுபவம்!

50 கருத்துகள்:

  1. என்னை தவிர யாரு ஐயா இந்த மாதிரி வில்லங்கம உங்களை கேட்க்க போறாங்க ....

    பதிலளிநீக்கு
  2. ///ஹ்யுசென் ஸ்டூடியோ டீ சர்ட்.என் நண்பரின் மகன் யு.எஸ்ஸிலிருந்து அனுப்பிய அன்பளிப்பு! ////

    ஐயா ஒரு சந்தேகம் ...நண்பரின் மகன் உங்களுக்கா இந்த மாதிரி வாங்கி அனுப்பினார் ..இதற்கு சிபிஐ விசாரணை அமைக்க விரும்புகிறேன் ....எங்கயோ இடிக்குது

    பதிலளிநீக்கு
  3. பொன் மாலைப் பொழுது!-டீ சர்ட்"சூப்பர்

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹா ............ எனக்கும் இதுப்போல் நடந்ததுண்டு

    பதிலளிநீக்கு
  5. உங்களின் சமயோசித நடவடிக்கையை எத்தனை வியந்தாலும் தகும்
    அமர்க்களமான அனுபவ பதிவு

    பதிலளிநீக்கு
  6. அண்ணே, டீ சர்ட் பற்றி செம பதிவுதான்

    பதிலளிநீக்கு
  7. ரியாஸ் அஹமது கூறியது...

    // என்னை தவிர யாரு ஐயா இந்த மாதிரி வில்லங்கம உங்களை கேட்க்க போறாங்க ....//
    அதானே!

    பதிலளிநீக்கு
  8. ரியாஸ் அஹமது கூறியது...

    //ஐயா ஒரு சந்தேகம் ...நண்பரின் மகன் உங்களுக்கா இந்த மாதிரி வாங்கி அனுப்பினார் ..இதற்கு சிபிஐ விசாரணை அமைக்க விரும்புகிறேன் ....எங்கயோ இடிக்குது//
    இதில் என்ன சந்தேகம்.45 ஆண்டு கால நட்பய்யா!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  9. புதுகை.அப்துல்லா கூறியது...

    :)

    :-D
    நன்றி!

    பதிலளிநீக்கு
  10. இராஜராஜேஸ்வரி கூறியது...

    // பொன் மாலைப் பொழுது!-டீ சர்ட்"சூப்பர்//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  11. THOPPITHOPPI கூறியது...

    //ஹஹஹா ............ எனக்கும் இதுப்போல் நடந்ததுண்டு//
    அனுபவித்தால்தான் தெரியும்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  12. A.R.ராஜகோபாலன் கூறியது...

    // உங்களின் சமயோசித நடவடிக்கையை எத்தனை வியந்தாலும் தகும்
    அமர்க்களமான அனுபவ பதிவு//
    நன்றி ஏ.ஆர்.ஆர்!

    பதிலளிநீக்கு
  13. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //அண்ணே, டீ சர்ட் பற்றி செம பதிவுதான்//
    நன்றி சிபி!

    பதிலளிநீக்கு
  14. ஹா..ஹா..ஐயா கலக்கிட்டீங்க..பேண்ட்டை மாத்திப் போட்டிருந்தா என்னய்யா செஞ்சிருப்பீங்க?

    பதிலளிநீக்கு
  15. ஹிஹிஹி கவனம் ஐயா வெளில போகும் போது இனி ஒருதடவை பான்டையும் சரிபாத்துக்கோங்கோ...))

    பதிலளிநீக்கு
  16. எனக்கும் இதுபோல் அனுபவம் ஏற்பட்டதுண்டு. ஆனால் அது வீட்டுக்குள் தான். என் துணைவியார் பார்த்து, சொல்லி சரி செய்ததுண்டு. இதற்கெல்லாம் காரணம் நமக்கு வயசாகிவிட்டதுதான். என்ன சரிதானே?

    பதிலளிநீக்கு
  17. சட்டை(T-shirt) இந்த போடு போட்டிருச்சே, இதைத்தான் ”சக்கை போடு போடு ராஜா”ன்னு சொல்வாங்களோ!

    பதிலளிநீக்கு
  18. ஏதோ ஒரு ஃபிகர கரெக்ட் பண்ணனும்கிற அவசரத்தில் நடந்த விஷயமாவே தெரியுது...

    பதிலளிநீக்கு
  19. நீங்க உண்மையிலேயே புத்திசாலிதான். :)

    பதிலளிநீக்கு
  20. செங்கோவி சொன்னது…

    // ஹா..ஹா..ஐயா கலக்கிட்டீங்க..பேண்ட்டை மாத்திப் போட்டிருந்தா என்னய்யா செஞ்சிருப்பீங்க?//
    வாய்ப்பே இல்லை!டீ சர்ட்டில் வித்தியாசம் அவ்வளவாகத் தெரியாது;ஆனால் பேண்ட் அப்படியில்லையே!
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  21. கந்தசாமி. கூறியது...

    //ஹிஹிஹி கவனம் ஐயா வெளில போகும் போது இனி ஒருதடவை பான்டையும் சரிபாத்துக்கோங்கோ...))//
    எதையாவது அணிந்துகொண்டாவது போனல் சரிதான்!
    நன்றி கந்தசாமி!

    பதிலளிநீக்கு
  22. வே.நடனசபாபதி கூறியது...

    //எனக்கும் இதுபோல் அனுபவம் ஏற்பட்டதுண்டு. ஆனால் அது வீட்டுக்குள் தான். என் துணைவியார் பார்த்து, சொல்லி சரி செய்ததுண்டு. இதற்கெல்லாம் காரணம் நமக்கு வயசாகிவிட்டதுதான். என்ன சரிதானே?//
    இரண்டாவது குழந்தைப்பருவம்?!
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  23. FOOD கூறியது...

    //சட்டை(T-shirt) இந்த போடு போட்டிருச்சே, இதைத்தான் ”சக்கை போடு போடு ராஜா”ன்னு சொல்வாங்களோ!//
    ஹா,ஹா!
    நன்றி சங்கரலிங்கம்!

    பதிலளிநீக்கு
  24. koodal bala கூறியது...

    //ஏதோ ஒரு ஃபிகர கரெக்ட் பண்ணனும்கிற அவசரத்தில் நடந்த விஷயமாவே தெரியுது.//
    இந்த வயதிலா?என்ன கூடல் பாலா?!
    நன்றி !

    பதிலளிநீக்கு
  25. பாலா கூறியது...

    //நீங்க உண்மையிலேயே புத்திசாலிதான். :)//
    :-) நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  26. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    // ரைட்டு...//
    டபுள் ரைட்!
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  27. நான் கேட்க நினைத்ததை செங்கோவி கேட்டு விட்டார். அடச்சே!

    பதிலளிநீக்கு
  28. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

    பதிலளிநீக்கு
  29. * வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //நல்ல அனுபவம்..
    ஹா.ஹா...//
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  30. அப்பாதுரை கூறியது...

    //நான் கேட்க நினைத்ததை செங்கோவி கேட்டு விட்டார். அடச்சே!//
    பதில் அதேதான்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  31. அம்பாளடியாள் கூறியது...

    //என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....//
    ????!!!!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  32. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

    பதிலளிநீக்கு
  33. சரியான சமாளிபிகேஷன். நீங்க பரவாயில்லை செ.பி. சார்,
    அவசரத்தில், லுங்கிக்குப் பதிலாய் , பாவாடையை கட்டிக்கிட்டு வந்த ஆசாமிகளும் உண்டு .

    பதிலளிநீக்கு
  34. சிவகுமாரன் கூறியது...

    //சரியான சமாளிபிகேஷன். நீங்க பரவாயில்லை செ.பி. சார்,
    அவசரத்தில், லுங்கிக்குப் பதிலாய் , பாவாடையை கட்டிக்கிட்டு வந்த ஆசாமிகளும் உண்டு .//
    ஹா,ஹா,ஹா!
    நன்றி சிவகுமாரன்!

    பதிலளிநீக்கு
  35. எங்களுக்கே (!!!!!!!!வயது குறைவுதான் ஐயா) இப்படி நடக்கும் போது நீங்க டி சார்டை மாற்றி போட்டு நடப்பது இயற்க்கையே. எழுதிய விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  36. கே. ஆர்.விஜயன் கூறியது...

    //எங்களுக்கே (!!!!!!!!வயது குறைவுதான் ஐயா) இப்படி நடக்கும் போது நீங்க டி சார்டை மாற்றி போட்டு நடப்பது இயற்க்கையே. எழுதிய விதம் அருமை.//
    நன்றி விஜயன்!

    பதிலளிநீக்கு
  37. இதற்குப் பெயர்தான் சமயோஜிதமோ?.... நல்ல மாலைப் பொழுது...

    பதிலளிநீக்கு
  38. வெங்கட் நாகராஜ் சொன்னது…

    //இதற்குப் பெயர்தான் சமயோஜிதமோ?.... நல்ல மாலைப் பொழுது...//
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  39. ஐயோ...ஐயோ...இது எல்லாருக்குமே நடக்கிற விஷயம்தான்.ஆனாலும் நீங்க சொன்ன விதம்தான் சிரிப்பு !

    பதிலளிநீக்கு
  40. ஹேமா சொன்னது…

    //ஐயோ...ஐயோ...இது எல்லாருக்குமே நடக்கிற விஷயம்தான்.ஆனாலும் நீங்க சொன்ன விதம்தான் சிரிப்பு !//
    நன்றி ஹேமா!

    பதிலளிநீக்கு
  41. vidivelli கூறியது...

    //supper aiyaa.........
    nalla pathivu//
    நன்றி விடிவெள்ளி!

    பதிலளிநீக்கு
  42. This kind of embarrassing situations might have been faced by all at one time or the other Humorously described. Vasudevan

    பதிலளிநீக்கு
  43. Vasu கூறியது...

    // This kind of embarrassing situations might have been faced by all at one time or the other Humorously described. //
    thank u vasu!

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் ஐயா, சட்டையை மாற்றிப் போட்ட விதம், சட்டைக்குள் எறும்பு என நகைச்சுவை கலந்து ஓர் குறுங் கதை வடிவில் உங்கள் அனுபவத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க. ரசித்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  45. நிரூபன் கூறியது...

    //வணக்கம் ஐயா, சட்டையை மாற்றிப் போட்ட விதம், சட்டைக்குள் எறும்பு என நகைச்சுவை கலந்து ஓர் குறுங் கதை வடிவில் உங்கள் அனுபவத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க. ரசித்தேன் ஐயா.//
    நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு
  46. இதுக்குத்தான் நான் டி-ஷர்ட் போடுவதில்லை போடவும் முடியாது கம்பெனி யூனிபார்ம் மட்டுமே

    பதிலளிநீக்கு