ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில்
“pant போட்டவனெல்லாம் sofa ல உக்கார்; வேட்டி கட்டினவ னெல்லாம் தரையில உக்கார்” என்பார் எம்.ஆர்.ராதா. முழுக்கால் சட்டை அணிந்தால்
மதிப்பு வேட்டி கட்டினால் அவமதிப்பு என்பது போல்.ஆனால் இதை வேறு
விதமாகவும் பார்க்கலாம். முழுக்கால் சட்டை அணிந்து கொண்டு தரையில்
கால் மடக்கி அமர்வது கடினமே.வேட்டி அணிந்து கொண்டு தரையில் அமர்வது
எளிது.
தொடரும் தோழர்கள்
உடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 08, 2015
வெள்ளி, ஜூலை 01, 2011
பொன் மாலைப் பொழுது!-டீ சர்ட்
நேற்று மாலை வெளியில் செல்வதற்காக,pant உம் டீ சர்ட்டும் அணிந்து கொண்டு புறப்பட்டேன்!வான் ஹ்யுசென் ஸ்டூடியோ டீ சர்ட்.என் நண்பரின் மகன் யு.எஸ்ஸிலிருந்து அனுப்பிய அன்பளிப்பு! (போதும் தற்பெருமை!)
வீட்டை விட்டு வெளியேறித் தெருவில் நடக்க ஆரம்பித்தேன்.எதிரில் வந்த ஓரிருவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டு போவதைக் கண்டேன்.இந்த வயதிலும் எவ்வளவு ஸ்டைலாக உடையணிந்து கம்பீரமாக நடந்து போகிறார் என வியந்து பார்க்கிறார்கள் எனப் பெருமையுடன் நடந்தேன்!இரண்டு தெரு தாண்டி மூன்றாவது தெருவில் செல்லும் போதுதான் தற்செயலாகக் கவனித்தேன்—டீ சர்ட்டைத் திருப்பி அணிந்து கொண்டிருக்கிறேன் என்பதை!
அவர்கள் பார்த்தற்குக் காரணம் இதுதானே என வெட்கப்பட்டேன்.இப்படியே போக முடியாது.ஏதாவது குழந்தை பார்த்து விட்டால் “அய்யய்யோ!மாமாவுக்குச் சட்டையே போட்டுக்கத் தெரியலை” என்று கத்தி மானத்தை வாங்கி விடும்!(யாரப்பா அது? மாமாவா, தாத்தாவா என்று கேட்பது? ரி.அ. தானே?) எப்படி மாற்றுவது? யோசித்தேன்.
திடீரென்று உடம்பெல்லாம் அரிப்பது போல் சொறிந்து கொள்ள ஆரம்பித்தேன். சட்டையைக் கழற்றிப் பார்த்து விட்டு,நான்கு முறை உதறினேன்.பின் சரியாக அணிந்து கொண்டேன். என்னைக் கடந்து போக வேண்டிய நபர் நின்று கேட்டார்”என்ன சார் , எறும்பா?” ”ஆமாம் சார்,கவனிக்காமப் போட்டுக் கொண்டு விட்டேன்,பிடுங்கி விட்டது!” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினேன்!
எப்படி இந்த அனுபவம்!
அடுத்த பதிவும் ஒரு மாலைப் பொழுது அனுபவம்தான்.ஆனால் சிறிது வித்தியாசமான அனுபவம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)