தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூலை 22, 2011

பேய்!-(சிறுகதை இறுதிப் பகுதி)

இரவு உணவை முடித்து விட்டுச் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல் 10 மணிக்குப் படுத்தேன்.இரவு விளக்கு இல்லாமல் நான் தூங்குவதில்லை. படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் உறங்கி விட்டேன்.

திடீரென்று விழிப்பு வந்தது.கண்விழித்தேன்.இருட்டாக இருந்தது.புழுக்கமாக இருந்தது. மின்சாரம் இல்லை என்பதை உணர்ந்தேன்.கைபேசியின் விளக்கு ஒளியில் மணி பார்த்தேன். 12.05.எழுந்து வெளியே போகலாமா என்று யோசித்தேன். அப்போதுதான் ’கம்’ மென்று மல்லிகைப் பூ மணம் என் நாசியைத் தாக்கிற்று. கிறங்க வைக்கும் மணம்.எங்கிருந்து வருகிறது என யோசித்தேன்.அதே நேரம் ஒரு பெண்ணின் அழு குரல் கேட்டது.பெரிய அழுகை இல்லை.சிறு விசும்பல்கள்.அதில் அதீத சோகம் இருந்தது.ஹால் பக்கமிருந்துதான் சத்தம் வந்துகொண்டிருந்தது. பேய்தானா? லேசாக பயம் வந்தது.ஹனுமான் சாலீஸா வைச் சொல்ல ஆரம்பித்தேன். சொல்லியவாறே படுத்தேன். தூங்கி விட்டேன்.

கண்விழிக்கும் போது காலை மணி 5.30.நான் வழக்கமாகக் கண்விழிக்கும் நேரமே. ஹாலுக்கு வந்தேன்.சுற்றிப் பார்த்தேன் எந்த மாற்றமும்,தடயமும் தெரியவில்லை. அதெல்லாம் கனவா?உண்மை நிகழ்வா எனப் புரியாத ஒரு குழப்பம்.

என் வேலைகளை முடித்துச் சாப்பிட்டு விட்டு அலுவலகம் புறப்பட்டேன்.சிலர் கேட்டார்கள் முதல் நாள் அனுபவம் எப்படி என்று.எனக்கு எதுவும் தெரியவில்ல என்று சொல்லி விட்டேன்.அலுவலக வேலைகள் முடிய இரவு ஏழு மணி ஆகிவிட்டது. வீடு திரும்புமுன்,சில பொருட்கள் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் சென்றேன்.அங்குதான் அவனைப் பார்த்தேன்.என் நண்பன் குமரன்.நீண்ட நாட்களுக்குப் பின் இப்போதுதான் பார்த்தேன்.

அவனைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.ஒரு மருந்துக் கம்பெனியில் ஃபீல்ட் மேனேஜர். ஜாலியானவன்.ப்ளே பாய்.எந்தப் பெண்ணா யிருந்தாலும் வசியம் செய்து விடுவான்.காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது.காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு விடுவான்.

அங்கு சந்தித்து சிறிது நேரம் பேசிய பின் அவன் சொன்னான்.”வா,நமது இந்தச் சந்திப்பைக் கொண்டாடலாம்.”அவன் அகராதியில் கொண்டாட்டம் என்றால் ஒன்றுதான்—பாருக்குப்போவது.

போனோம்.அவன் விஸ்கியும்,நான் வழக்கம்போல் பியரும்.சுருதி ஏறினால் பேச்சு எப்போதுமே அதிகமாகுமே.அவனது புதிய நண்பிகள் பற்றியெல்லாம் சொன்னான்.

நான் குடியிருக்கும் வீடு பற்றியும் முதல் நாள் அனுபவம் பற்றியும் சொன்னேன்.

”வாவ்!சுவாரஸ்யம்! பெண்பேய்! மல்லிகைப்பூ!மோகினிப் பிசாசு என்றால் அழகாக இருக்குமே!நானா இருந்தா நேற்றே அந்தப் பேயை……… என்று சொல்லிச் சிரித்தான்.போதை ஏறியிருந்தது.

”போதும்,போகலாம்” என்று சொல்லி முடித்துக் கொண்டு எழுந்தேன்.அவனால் சரியாக நிற்க முடியாமல் தள்ளாடினான்.இந்த நிலையில் அவனை எப்படி விட்டு விட்டுப் போவது. ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.மணி 10 ஆகி விட்டது.ஹாலில் ஒரு படுக்கை போட்டு அவனைப் படுக்க வைத்துவிட்டு நான் அறையில் படுத்தேன்.

திடீரென்று விழிப்பு வந்தது -நேற்று போலவே.மணி பார்த்தேன்.12.15.மல்லிகைப்பூ மணம்!ஆனால் அழு குரல் கேட்கவில்லை.மாறாக வளையல் ஒலி.பெரு மூச்சுகள். முனகல்கள்.எழுந்து சென்று பார்க்க எண்ணினேன்.என்னால் படுக்கையிலிருந்து எழ முடியவில்லை.அப்படியே மயக்கம் போன்ற உறக்கம்.

காலை எழுந்து வந்து பார்த்தேன்.குமரனைக் காணவில்லை.வாசல் கதவு சும்மா சாத்தி இருந்தது.என்ன ஆனான்?மனது உறுத்தியது.அவன் தங்கியிருப்பதாகச் சொன்ன ஓட்டலுக்குச் சென்றேன்.ரிசப்ஷனில் கேட்டேன்.

”அவர் நேற்று இரவே காலி பண்ணிட்டுப் போயிட்டாரே. இரவு ஒரு மணி இருக்கும். வேகமாக வந்தார்.காலி செய்து போய்விட்டார்.”

பின் சிரித்துக் கொண்டே சொன்னான்.”அவர் வரும்போது அப்படி ஒரு மல்லிகை மணம்!அவர் அறைக்குச் சென்ற பின்னும் அந்தமணம் இங்கே இருந்தது.அவர் காலி செய்து போனபின் அந்த மணம் இல்லை! அந்த இரவில் என்ன செண்ட் போட்டாரோ?”

நாள் முழுவதும் அதே சிந்தனையிலேயே இருந்தேன்.


அன்று இரவு மல்லிகை மணமில்லை,அழுகையில்லை!

டிஸ்கி:- முடிவுக்கு இரண்டு டிராக் வைத்திருந்தேன்.ஆனால் மூன்றாவதாக ஒரு சுவாரஸ்யமான டிராக் தந்தவர்,என் பள்ளியில் எனக்கு ஜு.....னியர்(!),நான் விளையாடிய செம்மண்ணில் விளையாடியவர்-நண்பர் செங்கோவி!(-சென்ற பதிவின் பின்னூட்டத்தில்!)அவருக்கு நன்றி.தொடக்கத்துக்குக் காரணம் அவர்;முடிவுக்கும் காரணம் அவரே!

61 கருத்துகள்:

 1. குமரனுடன் ஒட்டிக்கிட்டுப் போன பேயை விட்டுத் தொலைங்க:-)))))

  நல்லாத்தான் எழுதி இருக்கீங்க. இனிய பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. அருமை சார்!
  மற்ற இரண்டு 'ட்ராக்' எல்லாம் அப்புறமா ரிலீஸ் பண்ண மாட்டிங்களா?

  பதிலளிநீக்கு
 3. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  ரைட்டு...
  டபிள் ரைட்டு!

  பதிலளிநீக்கு
 4. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //அடுத்த கதைக்கு ஆயத்தமாகுங்க தல...//
  சொல்லிட்டீங்கல்ல!
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 5. துளசி கோபால் கூறியது...

  //குமரனுடன் ஒட்டிக்கிட்டுப் போன பேயை விட்டுத் தொலைங்க:-)))))

  நல்லாத்தான் எழுதி இருக்கீங்க. இனிய பாராட்டுகள்.//
  நன்றி துளசி கோபால் அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. ஜீ... கூறியது...

  //அருமை சார்!
  மற்ற இரண்டு 'ட்ராக்' எல்லாம் அப்புறமா ரிலீஸ் பண்ண மாட்டிங்களா?//
  இனி அவை இனிக்காது!
  நன்றி ஜீ!

  பதிலளிநீக்கு
 7. வந்தவர் பேயை கொண்டு போயிட்டாரா?

  பதிலளிநீக்கு
 8. சூப்பர்..சூப்பர்..

  //என் பள்ளியில் எனக்கு ஜு.....னியர்(!),நான் விளையாடிய செம்மண்ணில் விளையாடியவர்-நண்பர் செங்கோவி!//

  யாரோ ஒரு வயசான ஆளைச் சொல்லப்போறீங்கன்னு படிச்சுக்கிட்டே வந்தா, எம்பேரு..ஜு-வை இழுத்து ஜுனியர்னு சொல்லி, என் இமேஜைக் காப்பத்துனதுக்கு நன்றி சார்.

  ‘நண்பர்’ வார்த்தைக்கு ஸ்பெஷல் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // பாராட்டுகள் ...//
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 10. கந்தசாமி. கூறியது...

  //வந்தவர் பேயை கொண்டு போயிட்டாரா?//
  பேயைக்கூட மடக்கிட்டான்?!
  நன்றி கந்தசாமி.

  பதிலளிநீக்கு
 11. அதுசரி, அப்போ அந்தக் குமரன் கேரக்ட நானா?

  //ஜாலியானவன்.ப்ளே பாய்.எந்தப் பெண்ணா யிருந்தாலும் வசியம் செய்து விடுவான்.காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது.காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு விடுவான்.//

  //அவன் விஸ்கியும்,நான் வழக்கம்போல் பியரும்...போதை ஏறியிருந்தது.//

  இதெல்லாம் அநியாயம் சார்..அக்கிரமம்..ஒன்னாவது பொருந்துதா? இப்படி என்னை ‘கருத்தியல் பலாத்காரம்’ பண்ணலாமா?

  பதிலளிநீக்கு
 12. //
  சென்னை பித்தன் கூறியது...
  கந்தசாமி. கூறியது...

  வந்தவர் பேயை கொண்டு போயிட்டாரா?//
  பேயைக்கூட மடக்கிட்டான்?!
  நன்றி கந்தசாமி.//

  இதுக்கு விளக்கம் வேற கேட்காங்களே?

  பதிலளிநீக்கு
 13. செங்கோவி கூறியது...

  //சூப்பர்..சூப்பர்..

  //என் பள்ளியில் எனக்கு ஜு.....னியர்(!),நான் விளையாடிய செம்மண்ணில் விளையாடியவர்-நண்பர் செங்கோவி!//

  யாரோ ஒரு வயசான ஆளைச் சொல்லப்போறீங்கன்னு படிச்சுக்கிட்டே வந்தா, எம்பேரு..ஜு-வை இழுத்து ஜுனியர்னு சொல்லி, என் இமேஜைக் காப்பத்துனதுக்கு நன்றி சார்.

  ‘நண்பர்’ வார்த்தைக்கு ஸ்பெஷல் நன்றி.//

  என்னை வயசான ஆள் என்று சொல்கிறீர்களா?!
  நன்றி செங்கோவி.

  பதிலளிநீக்கு
 14. செங்கோவி கூறியது...

  //அதுசரி, அப்போ அந்தக் குமரன் கேரக்ட நானா?

  //ஜாலியானவன்.ப்ளே பாய்.எந்தப் பெண்ணா யிருந்தாலும் வசியம் செய்து விடுவான்.காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது.காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு விடுவான்.//

  //அவன் விஸ்கியும்,நான் வழக்கம்போல் பியரும்...போதை ஏறியிருந்தது.//

  இதெல்லாம் அநியாயம் சார்..அக்கிரமம்..ஒன்னாவது பொருந்துதா? இப்படி என்னை ‘கருத்தியல் பலாத்காரம்’ பண்ணலாமா?//
  உங்கள் பின்னூட்டத்தால் உருவான கேரக்டர் அது.அவ்வளவே.
  அது நீங்களல்ல.உங்களைப் போய் அப்படியெல்லாம் சொல்வேனா?! நீங்கள் 24காரட்டாயிற்றே!

  பதிலளிநீக்கு
 15. செங்கோவி கூறியது...

  //
  சென்னை பித்தன் கூறியது...
  கந்தசாமி. கூறியது...

  வந்தவர் பேயை கொண்டு போயிட்டாரா?//
  பேயைக்கூட மடக்கிட்டான்?!
  நன்றி கந்தசாமி.//

  //இதுக்கு விளக்கம் வேற கேட்காங்களே?//
  அதானே!:)

  பதிலளிநீக்கு
 16. வாவ்!சுவாரஸ்யம்! பெண்பேய்! மல்லிகைப்பூ!மோகினிப் பிசாசு என்றால் அழகாக இருக்குமே!நானா இருந்தா நேற்றே அந்தப் பேயை……… என்று சொல்லிச் சிரித்தான்.போதை ஏறியிருந்தது.//

  அவரு நம்மாளு தல ஹி ஹி.....

  பதிலளிநீக்கு
 17. Alfred Joseph Hitchcock ன் படத்தைப்பார்ப்பது போன்ற உணர்வு தங்கள் கதையைப் படிக்கும்போது இருந்தது. கதையின் முடிவு அருமை. மீதி உள்ள அந்த இரண்டு முடிவுகளையும் வெளியிடுங்களேன்.

  பதிலளிநீக்கு
 18. அருமையான கதையில்
  வளமையான நடையில்
  இளமையான முடிவு

  பதிலளிநீக்கு
 19. //என்னை வயசான ஆள் என்று சொல்கிறீர்களா?! // யாரு சொன்னது அப்படி? யாராவது அப்படிச் சொல்ல முடியுமா ஐயா?

  //உங்களைப் போய் அப்படியெல்லாம் சொல்வேனா?! நீங்கள் 24காரட்டாயிற்றே!// ரைட்டு!

  பதிலளிநீக்கு
 20. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  வாவ்!சுவாரஸ்யம்! பெண்பேய்! மல்லிகைப்பூ!மோகினிப் பிசாசு என்றால் அழகாக இருக்குமே!நானா இருந்தா நேற்றே அந்தப் பேயை……… என்று சொல்லிச் சிரித்தான்.போதை ஏறியிருந்தது.//

  //அவரு நம்மாளு தல ஹி ஹி.....//
  மனோ,மனோதான்!ஹா,ஹா!

  பதிலளிநீக்கு
 21. எது எப்படியோ..?
  எனக்குக் கதை பிடிச்சிருக்கு
  பிடிச்சிருக்கு. அடுத்த கதை தேவை

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 22. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //அருமை அருமை தல.......//

  நன்றி,நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 23. வே.நடனசபாபதி கூறியது...

  // Alfred Joseph Hitchcock ன் படத்தைப்பார்ப்பது போன்ற உணர்வு தங்கள் கதையைப் படிக்கும்போது இருந்தது. கதையின் முடிவு அருமை. மீதி உள்ள அந்த இரண்டு முடிவுகளையும் வெளியிடுங்களேன்.//
  இந்த முடிவுக்குப் பின் அந்த முடிவுகள் எனக்கே அவ்வளவாகப் பிடிக்கவில்லை!
  நன்றி சபாபதி அவர்களே.

  பதிலளிநீக்கு
 24. A.R.ராஜகோபாலன் கூறியது...

  //அருமையான கதையில்
  வளமையான நடையில்
  இளமையான முடிவு//

  நன்றி ராஜகோபாலன்.

  பதிலளிநீக்கு
 25. செங்கோவி கூறியது...

  //என்னை வயசான ஆள் என்று சொல்கிறீர்களா?! //

  //யாரு சொன்னது அப்படி? யாராவது அப்படிச் சொல்ல முடியுமா ஐயா?//
  நல்ல பிள்ளை!நன்றி.


  //உங்களைப் போய் அப்படியெல்லாம் சொல்வேனா?! நீங்கள் 24காரட்டாயிற்றே!// //ரைட்டு!//
  நான் சொல்வதெல்லாம் உண்மை!

  பதிலளிநீக்கு
 26. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //எது எப்படியோ..?
  எனக்குக் கதை பிடிச்சிருக்கு
  பிடிச்சிருக்கு. அடுத்த கதை தேவை//
  வருது,வருது!
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 27. மல்லிகை குமரன் மயக்கும் பொன்னான மலரல்லவோ....

  கடவுளின் தீர்ப்பில் மட்டுமல்ல பேயின் தீர்ப்பிலும் கெட்டவர்கள் கடைசியில் அழிக்கப்படுவார்கள்.... ஒரு வேளை காரணம் கூட அவனாக இருக்கக்கூடும்..

  கதை எளிமையாக அருமையாக இருந்தது..

  பதிலளிநீக்கு
 28. மல்லிகைப் பூ மணம் படிக்கும்போதே வீசுதே!

  பதிலளிநீக்கு
 29. உங்களின் துன்பத்தை உங்கள் நண்பன் கொண்டு சென்றார் .

  நீங்கள் அவரை பார்த்து சொல்லலாம் ,நண்பேன்டா

  பதிலளிநீக்கு
 30. மாய உலகம் கூறியது...

  //மல்லிகை குமரன் மயக்கும் பொன்னான மலரல்லவோ....

  கடவுளின் தீர்ப்பில் மட்டுமல்ல பேயின் தீர்ப்பிலும் கெட்டவர்கள் கடைசியில் அழிக்கப்படுவார்கள்.... ஒரு வேளை காரணம் கூட அவனாக இருக்கக்கூடும்..

  கதை எளிமையாக அருமையாக இருந்தது.//

  நன்றி மாய உலகம்!
  //ஒரு வேளை காரணம் கூட அவனாக இருக்கக்கூடும்..//
  சூப்பர்! என்னோட ஒரு டிராக்கைப் பிடிச்சுட்டீங்க!

  பதிலளிநீக்கு
 31. FOOD கூறியது...

  //மல்லிகைப் பூ மணம் படிக்கும்போதே வீசுதே!//

  எதுக்கும் இரவு கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!
  நன்றி !

  பதிலளிநீக்கு
 32. M.R கூறியது...

  //உங்களின் துன்பத்தை உங்கள் நண்பன் கொண்டு சென்றார் .

  நீங்கள் அவரை பார்த்து சொல்லலாம் ,நண்பேன்டா//
  சரிதான்!
  நன்றி M.R.

  பதிலளிநீக்கு
 33. வலையகம் கூறியது...

  // வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டை இணைக்க:
  http://www.valaiyakam.com/page.php?page=about//
  செய்து விடுகிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 34. அப்பாடா ஒருமாதிரியா நல்லவிதமா பேய்க்கதையை
  முடித்துவிட்டீர்கள்.அடுத்தகதை எப்போ?.. இந்தப்பேய்
  திரும்பி வருமா?..........சின்னப் புள்ளையில பயந்தது
  இன்னும் பயம் போகவில்லை அதுக்குத்தான் கேட்டேன்.
  அருமையான கதை வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 35. ஜெண்டு கதைக்கு பூஜ்ஜெண்டு பிடிங்க

  பதிலளிநீக்கு
 36. அம்பாளடியாள் கூறியது...

  //அப்பாடா ஒருமாதிரியா நல்லவிதமா பேய்க்கதையை
  முடித்துவிட்டீர்கள்.அடுத்தகதை எப்போ?.. இந்தப்பேய்
  திரும்பி வருமா?..........சின்னப் புள்ளையில பயந்தது
  இன்னும் பயம் போகவில்லை அதுக்குத்தான் கேட்டேன்.
  அருமையான கதை வாழ்த்துக்கள்.//

  பேய் போய் விட்டது!
  நன்றி அம்பாளடியாள்!

  பதிலளிநீக்கு
 37. அப்பாதுரை கூறியது...

  //ஜெண்டு கதைக்கு பூஜ்ஜெண்டு பிடிங்க//
  ஜெண்டுக்கு நன்றிங்கோ!

  பதிலளிநீக்கு
 38. ! ஸ்பார்க் கார்த்தி @ கூறியது...

  // எப்படியாவது அந்த பேயை கண்டுபிடிங்க, முடியலைன நண்பனையாவது கண்டுபிடிங்க ஒரு ரகசியம் கேக்கணும்,,,,,,,,,,,
  தப்பா நினைக்க வேண்டாம் அந்த மல்லிகை பூ சென்ட் எங்க வாங்குனதுன்னு தான்//

  பார்த்தா கேட்டுச் சொல்லிடறேன்!
  நன்றி கார்த்தி!

  பதிலளிநீக்கு
 39. aiya !!kathaiyal ellaam asaththalthaan ..
  aduththathirku kaththirukkiram.

  பதிலளிநீக்கு
 40. எதிர்பாராத முடிவு.... பேயின் கல்யாணம்.... :) நல்லாத்தான் இருக்கு....

  பதிலளிநீக்கு
 41. aiya !!kathaiyal ellaam asaththalthaan ..
  aduththathirku kaththirukkiram.

  பதிலளிநீக்கு
 42. 100 ஃபாலோயர்ஸ்....:) வாழ்த்துகள் சார்.

  பதிலளிநீக்கு
 43. vidivelli கூறியது...

  //aiya !!kathaiyal ellaam asaththalthaan ..
  aduththathirku kaththirukkiram.//

  நன்றி விடிவெள்ளி!

  பதிலளிநீக்கு
 44. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //எதிர்பாராத முடிவு.... பேயின் கல்யாணம்.... :) நல்லாத்தான் இருக்கு....//

  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 45. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //100 ஃபாலோயர்ஸ்....:) வாழ்த்துகள் சார்.//
  உங்கள் ஆதரவுதான்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 46. கதை நல்லாயிருக்கு சார்,,

  பதிலளிநீக்கு
 47. Riyas கூறியது...

  //கதை நல்லாயிருக்கு சார்,//
  நன்றி ரியாஸ்!

  பதிலளிநீக்கு
 48. மல்லிகைப் பூ செண்டோடு ஒட்டிச் சென்று விட்டதா பேய்...வித்தியாசமான முடிவு, ஐயா.

  பதிலளிநீக்கு
 49. நிரூபன் கூறியது...

  // மல்லிகைப் பூ செண்டோடு ஒட்டிச் சென்று விட்டதா பேய்...வித்தியாசமான முடிவு, ஐயா.//
  நன்றி நிரூபன்.

  பதிலளிநீக்கு
 50. என் சார்! ஏதாவது தப்பா சொல்லிட்டேனா.....

  பதிலளிநீக்கு
 51. ஸ்வாரஸ்யமாய்க் கதையை நகர்த்தியிருக்கிறீர்கள் .

  பதிலளிநீக்கு
 52. ! ஸ்பார்க் கார்த்தி @ கூறியது...

  //என் சார்! ஏதாவது தப்பா சொல்லிட்டேனா.....
  கார்த்தி! உங்க கருத்துரை “நடிகை(நிறைவுப் பகுதி)” என்ற பதிவில் வெளியாகி விட்டது. அதைத்தான் சொன்னேன்.வேறெதுவும் இல்லை!
  நன்றி கார்த்தி!

  பதிலளிநீக்கு
 53. மோகன்ஜி கூறியது...

  //ஸ்வாரஸ்யமாய்க் கதையை நகர்த்தியிருக்கிறீர்கள் .//
  நன்றி மோகன்ஜி!

  பதிலளிநீக்கு
 54. திக் திக் கதை. உங்க நண்பர் பேயையே.... பலே ஆள்தான். ஒரு படத்துல சத்யராஜ் பேய்னு நனைச்சு வேலைக்காரியை .....

  சுவாரஸ்யம் மிக்க கதை

  பதிலளிநீக்கு
 55. நகைச்சுவையாய்... எல்லா மூன்றும் முத்துக்கள்.
  சிவன் கோயில் கட்டும் போது எனக்கு சொல்லி அனுப்புங்கள். நீங்கள் சிவபக்தர் தானே . என் அருட்கவி தளத்திற்கு வந்து பாருங்கள்.

  பதிலளிநீக்கு