இவரது வங்கியின் சார்பாக அன்னியச் செலாவணி கம்பெனிகள் சிலவற்றை நியூயார்க், சவுதி அரேபியா, ஹாங்காங் போன்ற சில இடங்களில் நிறுவுவதென மூன்று மாதங்களுக்கு முன் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பணிக்காக அந்த வங்கியில் பணிபுரியும் 20 ஊழியர் களைத் தேர்ந்தெடுத்து வெளி நாட்டுக்கு அனுப்புவது என்பதும் ஏற்கனவே தீர்மானிக் கப்பட்ட விஷயம். இதற்கான விதிமுறைகளெல்லாம் விவரமாக வகுக்கப்பட்டு நேர்முகத் தேர்வும் நடந்தாகிவிட்டது. நிரப்பப்படவேண்டிய 20 இடங்களுக்கு 500 ஊழியர்கள் போட்டி.
கிருஷ்ணசாமி விட்டுச்செல்லும் இடத்திற்கு அடுத்தபடியாக சேர்மனை அரசாங்கம் நியமிக்கும் வரை தற்காலிமாக சேர்மனாக பணி புரிய இருக்கும் தற்போது வங்கியின் இரண்டாவது இடத்தை வகிக்கும் அதிகாரியின் தம்பி மகனும், வங்கியின் அன்னியச் செலாவணி பிரிவினது ஜெனரல் மேனேஜரின் அண்ணன் மகள் இந்த நேர்முகத் தேர்வினை மேற்கொண்டுள்ள 500 ஊழியர்களில் அடக்கம்.
கிருஷ்ணசாமியின் பதவி விலகலுக்குப் பிற்கு அடுத்த சேர்மன் நியமிக்கப் படுவதற்கு இருக்கப் போகும் இடைவெளியில் தங்கள் இஷ்டம் போல இந்த 20 இடங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று மேற்கண்ட இரு அதிகாரிகள் சதி செய்வதாக ஒரு நம்பகமான வதந்தி ஏற்கனவே பரவ ஆரம்பித்து விட்டது.
இது இப்படி இருக்கையில் சென்ற வாரம் கிருஷ்ணசாமிக்கு ஒரு முக்கியமான போன்கால் வந்தது. அகில இந்திய வங்கி ஊழியர்களது வேலை முறைகளைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அதில் தற்போது நிலவி வரும் சீர்கேடுகளைக் களைய யோசனைகளை பரிந்துரைக்கும் பொருட்டு, அரசாங்கம் கமிட்டி ஒன்றினை ஒரு வருட கால வரம்புடன் நிறுவப் போவதா கவும், கிருஷ்ணசாமியின் திறமை மிக்க தொழிலாளர் நிர்வாக அனுபவம் காரணமாக, அந்த கமிட்டியின் சேர்மனாகப் பணியாற்ற அவரது சம்மதத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அவரை அரசாங்க அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலம் அணுகினார். கிருஷ்ணசாமி தன் சம்மதத்தைத் தெரிவிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார்.
வங்கி ஊழிய நிர்வாக விஷயங்களை கரைத்துக் குடித்தவர் கிருஷ்ணசாமி. ஊழியர் நிர்வாகத் துறையில் உள்ள முறைகேடுகள் சரிசெய்ய வெகுவாக பாடுபடுபவர். அதைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அளிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப் போகிறதே என்று அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் ஓய்வு காலத்தின் முதலாண்டில் கூட தனது வங்கிப் பணியினைத் தொடரலாமே என்று நினைத்து சந்தோஷப் பட்டார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, தன் பரிபூரண சம்மதத்தை தொலைபேசி மூலம் அறிவித்தார். 2 மணி நேரங்களுக்குப் பிறகு, அந்த விஷயம் பற்றி கடைசியாக தீர்மானிக்க வேண்டிய டெல்லி உயர் அதிகாரியின் அந்தரங்கச் செயலரிடமிருந்து கிருஷ்ணசாமிக்கு வந்த தொலைபேசி செய்தி அவரை திகைப்பில் ஆழ்த்தியது.
கமிட்டியின் சேர்மன் இடத்திற்கு இரண்டு மூன்று பேர் போட்டியிடுவதாகவும், கிருஷ்ணசாமிக்கு அந்த பதவி கிடைக்க வேண்டுமெனில், அவர் டெல்லி அதிகாரிக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும் என்றும் அந்த செய்தி அறிவித்ததது.டெல்லி உயர் அதிகாரி யின் உறவினர் ஒருவர் கிருஷ்ணசாமியின் வங்கியில் பணி புரிவதாகவும், அவர் வெளி நாட்டுக்கு அனுப்புவதற்கான நேர்முகத் தேர்வை மேற்கொண்டுள்ள 500 பேர்களில் ஒருவர் எனவும், கிருஷ்ணசாமி எப்படியாவது இந்த ஊழியரை தேர்வு செய்யப் போகிற 20 நபர்கள் அடங்கிய லிஸ்டில் சேர்ப்பாரேயானால், கமிட்டியின் சேர்மன் பதவி கிருஷ்ண சாமிக்குத் தான் நிச்சயம் என அறுதியிட்டது அந்தரங்கக் காரியதரிசியின் குரல். இந்தச் செய்தியை தெரிவித்த பிறகு கிருஷ்ணசாமியின் பதிலுக்குக் கூட காத்திராமல் அந்தக் குரல் ரிஸீவரை வைத்து விட்டது. மறுபடியும் அதே குரல் போன் செய்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய நபரின் முழு விவரங்களைக் கொடுத்தது. இந்த விஷயத்தைப் பற்றி முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தான் கிருஷ்ணசாமியின் சேர்மன் பதவி பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று கறாராக அந்தக் குரல் அறிவித்தது.
இந்த விஷயம் கிருஷ்ணசாமியை தர்ம சங்கடமான நிலைக்குத் தள்ளியது. இப்போதே கிருஷ்ணசாமி மனது வைத்தால் தனது உடனடி கீழ் அதிகாரியை அழைத்து இதற்கான ஆணையினை பிற்ப்பிக்கலாம். கீழ் அதிகாரியையும், அன்னியச் செலாவணி ஜெனரல் மேனேஜரையும் திருப்திப் படுத்துவது மிக எளிது. அவர்களிருவரும் ஏற்கனவே தங்கள் உற்வினர்களை லிஸ்டில் சேர்க்க திட்டமிட்டிருப்பது கிருஷ்ணசாமி அறிந்ததே.
அன்று காலை ஆபிஸ் வரும்போது இந்த விஷயம் பற்றிய சிந்தனை தலை தூக்கியது. அந்த சிந்தனையை மனத்திலிருந்து அகற்றிக் கொண்டு வேறு பல நல்ல விஷயங்களைப் பற்றி வலுக்கட்டாயமாக யோசித்து நினைவை திசை திருப்பினார்.
கிருஷ்ணசாமியைச் சந்திப்பதற்காகவும், அன்று மாலையில் நடைபெறும் பிரிவு உபசாரக் கூட்டத்தில் பங்கேற்கவும் பல ஊர்களிலிருந்து ஊழியர்கள் திரள் திரளாக வந்திருந்தினர். அவர்கள் எல்லோரையும் தன் அறையிலேயே சந்தித்து அளவளாவினார். அன்று முழுவதும் அதற்கே சரியாக இருந்தது. ஏற்கனவே திட்டமிட்டு எல்லா முக்கியப் பணிகளையும் முடித்து விட்டபடியால் அலுவல் தொந்தரவு அதிகம் இல்லாமல் ஊழியர் களிடம் பேசிக்கொண்டிருப்பதிலேயே எல்லா நேரத்தையும் கழித்தார்.
அன்று மாலை 6 மணிக்கு விழா. விழாவிற்கு மனைவியையும் அழைத்துக் கொண்டு வர வேண்டும் என விழாக் குழுவின் உறுப்பினர்கள் கிருஷ்ணசாமியை கேட்டுக் கொண்டனர். அவரும் சம்மதித்தார். ஊழியர்களிடம் பேசும்போது நிதி திரட்டும் விஷயம் எதேச்சையாக கிருஷ்ணசாமிக்குத் தெரிய வந்தது. ஆனால் விழாக்குழுவின் உறுப்பினர் களிடத்தில் அதைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை.
சுமார் 6 மணி அளவில் விழா நடைபெறும் இடம் காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரத்தில் கரைந்து கொண்டிருந்தது. கிருஷ்ணசாமி கர்நாடக சங்கீதப் பிரியர் என்பதை எல்லா ஊழியர்களும் அறிந்திருந்த படியால் அன்று அந்த ஒலிபெருக்கி இசையை அவர்கள் வெகுவாக ரசித்தனர். விழா மேடை எளியமுறையில் அழகாக அலங்கரிக் கப்பட்டிருந்தது. சுமார் 5000 பேர் கொண்ட பெரும் கூட்டம் கண்டு அங்கு எல்லோரும் வியந்தனர்.
சரியாக 6 மணிக்கு கிருஷ்ணசாமி தன் மனைவியுடன் காரில் வந்து இறங்கினார். கரகோஷம் வானைப் பிளந்தது. விழாக் கமிட்டியின் செயலர் அவரை மேடைக்கு அழைத்துச் சென்றார். மேடையில் 7 இருக்கைகள் போடப்பட்டிருந்தன. கிருஷ்ணசாமியும் அவர் மனைவியும் நடு இடங்களை அலங்கரித்தனர். மற்ற ஐந்து இருக்கைகளை வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் விழா கமிட்டியின் செயலர் நிரப்பினர்.
வாடிக்கையாளர்களில் சிலர், ஊழியர்களில் பலர், கிருஷ்ணசாமி அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆற்றிய பணியினை ஓங்கி உலகளந்தனர்.
கிருஷ்ணசாமிக்குப் பிறகு தற்காலிமாக சேர்மன் பதவி ஏற்கும் உயர் அதிகாரி தான் அன்று சிறப்பும் பேச்சாளர். அவர் உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து போய், வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறி, கிருஷ்ணசாமியின் அரும் பணிக்கு அஞ்சலி செய்தார். அடுத்தது கிருஷ்ணசாமியின் பிரிவு உபசார உரை. அதற்கு முன் விழாக் கமிட்டியின் செயலர் ஓடி வந்து ஒரு லட்சத்திற்கான செக்கை வங்கியின் இரண்டாவது உயர் அதிகாரி மூலம் கிருஷ்ணசாமியிடம் சேர்ப்பித்தார்.
என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ என்று திகிலுடன் எல்லோரும் ஆவலான எதிர்பார்ப் புடன் காத்துக் கொண்டிருந்தனர்!
--தொடரும்
தொடரும் தோழர்கள்
நீண்ட சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 25, 2015
வியாழன், செப்டம்பர் 24, 2015
தனி ஒருவன்!
தனது 35
வருட உத்யோக வாழ்க்கை நாளையுடன் முடியப் போகிறது என்று எண்ணுகின்ற போது
கிருஷ்ணசாமி அவர்களுக்கு சற்று மலைப்பாகத் தான் இருந்தது. கடந்த ஒரு வருட காலமாகவே பதவி ஓய்வு பற்றிய
சிந்தனை அடிக்கடி தலை தூக்கிக்கொண்டிருந்தாலும், காலம்
கரைந்து அது ஒரு நாள் கெடுவிற்கு வந்த நின்ற போது ஒரு சொல்லவொண்ணாத உணர்வு அவரைக்
கவ்விக் கொண்டது.
இந்த பதவி
ஓய்வு காரணமாக தன்னிடம் தற்போது உள்ள மட்டிலடங்காத அதிகாரம் பறிபோய் விடப்போகிறதே
என்ற கவலையை அவர் எள்ளளவும் கொள்ளாத காரணத் தால் அவர் நிலையிலிருந்த எண்ணற்ற
அதிகாரிகளின் மத்தியிலிருந்து அவர் தனித்து நின்றார்.
வெள்ளி, ஜூலை 22, 2011
பேய்!-(சிறுகதை இறுதிப் பகுதி)
இரவு உணவை முடித்து விட்டுச் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல் 10 மணிக்குப் படுத்தேன்.இரவு விளக்கு இல்லாமல் நான் தூங்குவதில்லை. படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் உறங்கி விட்டேன்.
திடீரென்று விழிப்பு வந்தது.கண்விழித்தேன்.இருட்டாக இருந்தது.புழுக்கமாக இருந்தது. மின்சாரம் இல்லை என்பதை உணர்ந்தேன்.கைபேசியின் விளக்கு ஒளியில் மணி பார்த்தேன். 12.05.எழுந்து வெளியே போகலாமா என்று யோசித்தேன். அப்போதுதான் ’கம்’ மென்று மல்லிகைப் பூ மணம் என் நாசியைத் தாக்கிற்று. கிறங்க வைக்கும் மணம்.எங்கிருந்து வருகிறது என யோசித்தேன்.அதே நேரம் ஒரு பெண்ணின் அழு குரல் கேட்டது.பெரிய அழுகை இல்லை.சிறு விசும்பல்கள்.அதில் அதீத சோகம் இருந்தது.ஹால் பக்கமிருந்துதான் சத்தம் வந்துகொண்டிருந்தது. பேய்தானா? லேசாக பயம் வந்தது.ஹனுமான் சாலீஸா வைச் சொல்ல ஆரம்பித்தேன். சொல்லியவாறே படுத்தேன். தூங்கி விட்டேன்.
கண்விழிக்கும் போது காலை மணி 5.30.நான் வழக்கமாகக் கண்விழிக்கும் நேரமே. ஹாலுக்கு வந்தேன்.சுற்றிப் பார்த்தேன் எந்த மாற்றமும்,தடயமும் தெரியவில்லை. அதெல்லாம் கனவா?உண்மை நிகழ்வா எனப் புரியாத ஒரு குழப்பம்.
என் வேலைகளை முடித்துச் சாப்பிட்டு விட்டு அலுவலகம் புறப்பட்டேன்.சிலர் கேட்டார்கள் முதல் நாள் அனுபவம் எப்படி என்று.எனக்கு எதுவும் தெரியவில்ல என்று சொல்லி விட்டேன்.அலுவலக வேலைகள் முடிய இரவு ஏழு மணி ஆகிவிட்டது. வீடு திரும்புமுன்,சில பொருட்கள் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் சென்றேன்.அங்குதான் அவனைப் பார்த்தேன்.என் நண்பன் குமரன்.நீண்ட நாட்களுக்குப் பின் இப்போதுதான் பார்த்தேன்.
அவனைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.ஒரு மருந்துக் கம்பெனியில் ஃபீல்ட் மேனேஜர். ஜாலியானவன்.ப்ளே பாய்.எந்தப் பெண்ணா யிருந்தாலும் வசியம் செய்து விடுவான்.காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது.காரியம் முடிந்ததும் கழற்றி விட்டு விடுவான்.
அங்கு சந்தித்து சிறிது நேரம் பேசிய பின் அவன் சொன்னான்.”வா,நமது இந்தச் சந்திப்பைக் கொண்டாடலாம்.”அவன் அகராதியில் கொண்டாட்டம் என்றால் ஒன்றுதான்—பாருக்குப்போவது.
போனோம்.அவன் விஸ்கியும்,நான் வழக்கம்போல் பியரும்.சுருதி ஏறினால் பேச்சு எப்போதுமே அதிகமாகுமே.அவனது புதிய நண்பிகள் பற்றியெல்லாம் சொன்னான்.
நான் குடியிருக்கும் வீடு பற்றியும் முதல் நாள் அனுபவம் பற்றியும் சொன்னேன்.
”வாவ்!சுவாரஸ்யம்! பெண்பேய்! மல்லிகைப்பூ!மோகினிப் பிசாசு என்றால் அழகாக இருக்குமே!நானா இருந்தா நேற்றே அந்தப் பேயை……… என்று சொல்லிச் சிரித்தான்.போதை ஏறியிருந்தது.
”போதும்,போகலாம்” என்று சொல்லி முடித்துக் கொண்டு எழுந்தேன்.அவனால் சரியாக நிற்க முடியாமல் தள்ளாடினான்.இந்த நிலையில் அவனை எப்படி விட்டு விட்டுப் போவது. ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன்.மணி 10 ஆகி விட்டது.ஹாலில் ஒரு படுக்கை போட்டு அவனைப் படுக்க வைத்துவிட்டு நான் அறையில் படுத்தேன்.
திடீரென்று விழிப்பு வந்தது -நேற்று போலவே.மணி பார்த்தேன்.12.15.மல்லிகைப்பூ மணம்!ஆனால் அழு குரல் கேட்கவில்லை.மாறாக வளையல் ஒலி.பெரு மூச்சுகள். முனகல்கள்.எழுந்து சென்று பார்க்க எண்ணினேன்.என்னால் படுக்கையிலிருந்து எழ முடியவில்லை.அப்படியே மயக்கம் போன்ற உறக்கம்.
காலை எழுந்து வந்து பார்த்தேன்.குமரனைக் காணவில்லை.வாசல் கதவு சும்மா சாத்தி இருந்தது.என்ன ஆனான்?மனது உறுத்தியது.அவன் தங்கியிருப்பதாகச் சொன்ன ஓட்டலுக்குச் சென்றேன்.ரிசப்ஷனில் கேட்டேன்.
”அவர் நேற்று இரவே காலி பண்ணிட்டுப் போயிட்டாரே. இரவு ஒரு மணி இருக்கும். வேகமாக வந்தார்.காலி செய்து போய்விட்டார்.”
பின் சிரித்துக் கொண்டே சொன்னான்.”அவர் வரும்போது அப்படி ஒரு மல்லிகை மணம்!அவர் அறைக்குச் சென்ற பின்னும் அந்தமணம் இங்கே இருந்தது.அவர் காலி செய்து போனபின் அந்த மணம் இல்லை! அந்த இரவில் என்ன செண்ட் போட்டாரோ?”
நாள் முழுவதும் அதே சிந்தனையிலேயே இருந்தேன்.
அன்று இரவு மல்லிகை மணமில்லை,அழுகையில்லை!
டிஸ்கி:- முடிவுக்கு இரண்டு டிராக் வைத்திருந்தேன்.ஆனால் மூன்றாவதாக ஒரு சுவாரஸ்யமான டிராக் தந்தவர்,என் பள்ளியில் எனக்கு ஜு.....னியர்(!),நான் விளையாடிய செம்மண்ணில் விளையாடியவர்-நண்பர் செங்கோவி!(-சென்ற பதிவின் பின்னூட்டத்தில்!)அவருக்கு நன்றி.தொடக்கத்துக்குக் காரணம் அவர்;முடிவுக்கும் காரணம் அவரே!

வெள்ளி, பிப்ரவரி 25, 2011
அன்புள்ள அப்பா!-தொடர்கிறது!
14-8-1978
அன்புள்ள அப்பா,
கலிஃபோர்னியாவிலிருந்து இன்றுதான் திரும்பினோம்.அங்கே எடுத்த ஃபோட்டோக்கள் மற்றும் படக் கார்டுகள் அனுப்பியிருக்கிறேன்.எல்லோரும் பார்த்த பின்,என் மாமனார் வீட்டில் கொடுத்து விடவும்.இந்த டூர் ஒரு மிக நல்ல மாற்றமாக இருந்தது.ஆனால் நான் என் பாட்டு க்ளாஸை விட்டு விட்டுப் போனது கஷ்டமாகத்தான் இருந்தது.இன்று திரும்பி வந்து சாயந்திரமே வகுப்பை ஆரம்பித்து விட்டேன்.சில ஃபோட்டோக்கள் சக்திக்கும் அனுப்பியிருக்கிறேன்.
கொஞ்ச காலம் முன் சக்தி சில கேசட்டுகளும், இசைத்தட்டுகளும் அனுப்பியிருந்தான்.கேட்கக் கேட்க திகட்டவில்லை.ஆகாஷ்வாணி கேட்பது போல் உணர்ந்தேன்.என் மாணவிகளுக்கெல்லாம் போட்டுக் காட்டினேன்.திருச்சியிலிருந்து வந்த ஒரு தமிழ்ப்பெண் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னட,மராத்தி,பெங்காலி மாணவிகளுக்கு சம்ஸ்கிருத,தெலுங்குக் கீர்த்தனைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்!!
அப்பா!இந்த சங்கீதம் என்னை மீண்டும் பிறக்க வைத்திருக்கிறது.புது உற்சாகம் அளித்திருக்கிறது.இதற்கு நான் சக்திக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அவன் தூண்டுதல் இல்லையென்றால் இது நடந்திருக்காது.அவனைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தால் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்காமலிருக்க முடியவில்லை.உங்களை, .அம்மாவை, நம் குடும்பத்தின் உறவை இழந்திருப்பேன்.இப்போது என்ன வாழ்கிறது?நீங்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்க,நான் விசுவுடன் அமெரிக்காவில் வாழும் இந்த வாழ்க்கையில் என்ன அடைந்து விட்டேன்?எனக்கே பதில் தெரியவில்லை.பதில் என்றாவது கிடைக்கும் என்றும் தோன்றவில்லை.
அப்பா நான் மறுபடியும் சொல்கிறேன்.விசு மிக நல்லவர். எந்தக் குறையும் இல்லை.நீங்கள் எதிர்பார்த்திருந்த மாப்பிள்ளை.அமெரிக்காவில் பெரிய படிப்புப் படித்தவர், நல்லவேலையில் இருப்பவர்.நிறைய சம்பாதிப்பவர்,கடமை தவறாத கணவர்,தந்தை.இதற்கு மேல் வேறு என்ன எதிர்பார்ப்பது?அதெல்லாம் நான் முன்பே தொலைத்துவிட்ட ஒரு கனவு.-வெகு நாட்களுக்கு முன் திருச்சியில்,வேறு ஒருவரை நினைத்திருந்தபோது.
இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி.
14-4-1984
அன்புள்ள அப்பா,
19 வருடங்களுக்குப் பின் சக்தியை,டாக்டர்.சக்திவேலைப் பார்த்தேன்.நியூயார்க்குக்கு ஏதோ வேலையாக வந்தவன் நம்மாத்துக்கும் வந்திருந்தான்.விசுவும்,குழந்தைகளும் ரொம்ப சந்தோஷமாக அவனை வரவேற்றனர்.அவர்களுக்கு அவனை ரொம்பப் பிடித்து விட்டது.பேசிக் கொண்டே இருந்தனர்.அவன் எனக்காக புத்தகங்கள்,கேசட்டுகள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு,இன்னும் என்னென்னவோ வாங்கி வந்தான்.ரொம்ப சந்தோஷமான ஒரு நாள்!
இப்படிக்கு
உங்கள் அன்புள்ள
கல்யாணி.
20-1-1990
அன்புள்ள அப்பா,
என்னுடைய பீரோ லாக்கரில் கிடந்த இந்தக் கடிதங்களை யெல்லாம் இன்று எடுத்துப் படித்தேன்.உங்களுக்கென்று எழுதி அனுப்பாமல் விட்ட கடிதங்கள். ஏன் அனுப்பவில்லை என்று தெரியுமா?சக்தி பற்றி உங்களுக்கு எழுத முடியாது.காரணம் நீங்கள் கோபிப்பீர்கள் என்ற பயமல்ல.உங்களை நான் காயப்படுத்த விரும்பவில்லை.எனக்குத்தெரியும்,சக்தி நல்லவன்,வாழ்க்கையில் முன்னேறக் கூடியவன் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள்.ஆனால்,இந்த சமுதாயத்துக்குப் பயந்து,குடும்பத்தின் நல்ல பெயருக்காக,நீங்கள் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.இந்தக் கடிதங்கள் உங்களை மேலும் காயப் படுத்தியிருக்கும்.இன்று,உங்கள் மறைவுக்கு இரண்டு வருடத்துக்குப்பின்,ஒரு சாலை விபத்தில் டாக்டர்.சக்திவேல் அகால மரணம் அடைந்து 6 மாதங்களுக்குப்பின்,இக் கடிதங்களைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது.இந்த அனுப்பப்படாத,தபால் தலை ஒட்டாத கடிதங்கள் மாறியிருக்கக் கூடிய என் வாழ்க்கையின் பிரதிபலிப்பே!
இப்படிக்கு
கல்யாணி விஸ்வநாதன்.
(இது ஒரு பள்ளியில் நடைபெற்ற ஆங்கிலச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதையின் தமிழாக்கம்!தமிழாக்கம் செய்த பெருமை மட்டுமே எனக்கு.சில மாற்றங்கள் செய்தேன்.சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும்-சித்ரா அவர்கள் சுட்டிக்காட்டியது போல!)

வியாழன், பிப்ரவரி 24, 2011
அன்புள்ள அப்பா!
(இதுவும் ஒரு காதல் கதைதான்.ஒரு வித்தியாசமான காதலைப் பற்றி பேசும் கதை.நீளம் அதிகம்.பொறுமையாகப் படியுங்கள்.முடிவில் ஒரு கொக்கி!)
27-01-1965
அன்புள்ள அப்பா,
நீங்கள்,அம்மா,ராஜி,சீனு எல்லாரும் சௌக்கியமென்று நம்புகிறேன். இங்கே, நியூயார்க்கில், குளிர் நடுக்குகிறது;ஆனால் அவர் சொல்கிறார்,நான் கடுங்குளிரிலிருந்து தப்பி விட்டேன் என்று.
கொட்டுகின்ற பனியை பார்க்காமல் போய் விட்டேனே என்று வருந்துகிறேன்.அதே சமயம் திருச்சியை விட்டு வந்ததும் வருத்தமாகத்தான் இருக்கிறது.திருச்சி மற்றும் அதனுடன் இணைந்த மற்றவை-நீங்கள்,அம்மா,ராஜி, சீனு,பக்கத்தாத்து ரமா,உச்சிப்பிள்ளையார் கோயில், விகடன், ஃபில்டர் காஃபி,ஹோலி க்ராஸ் கல்லூரி,ஃபிசிக்ஸ் துறை, அனைத்துக்கும் மேலாய் சக்தி-இந்த நினைவாகவே இருக்கிறேன்.
இக்கடிதத்தில் சக்தி பற்றி எழுதியது உங்களுக்குப் பிடிக்காதுதான்.கவலைப் படாதீர்கள் அப்பா.நீங்கள் என் நன்மைக்காகவே என்னை விசுவுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தீர்கள் என்பது எனக்குத்தெரியும்.நான் சக்தி பற்றி உங்களிடம் சொன்ன அன்று,நீங்கள் கோபத்தில் கத்தியதும்,அம்மா தன் கண்ணீரை மடிசார் தலைப்பினால் மௌனமாகத் துடைத்துக் கொண்டதும் இன்னும் என் நினைவில் நிற்கின்றன.அதன் பின் பொறுமையாக நான் ஏன் சக்தியை மணக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விவரித்தீர்கள்.20 என்பது வாழ்க்கை பற்றித் தீர்மானிக்க மிகவும் சிறிய வயது என்பதையும், குடும்பத்துக்கும், ராஜிக்கும் இதனால் பாதிப்பு எற்படுவதையும், அக்ரஹாரத்தில் நமக்கு ஏற்படும் தலைகுனிவையும்,ஒரு மாமிசம் சாப்பிடும் ஆண், வெங்காயம் கூடச் சாப்பிடாத ஒரு பெண்ணுக்கு சரியான துணையாக முடியாது என்பதையும் இன்னும் எத்தனையோ காரணங்களயும் எடுத்துரைத்தீர்கள்.சக்தி ஒரு சமணமுனிவராக மாறினாலும் கூட உங்களால் வேறு பல காரணங்கள் சொல்லியிருக்க முடியும்.ஆனால் இதற்கு எதிராக,விசு,பூணல் அணிந்தவர், நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை,அமெரிக்காவில் கம்ப்யூடர் துறையில் உயர்ந்த வேலையில் இருப்பவர்,இப்படி எத்தனையோ காரணங்கள் உங்களுக்கு இருந்தன, விசுவைத் தேர்ந்தெடுப்பதற்கு..அப்பா,நான் குறை கூறவில்லை,விசுவும் ரொம்ப நல்லவர்தான்.
அம்மாவிடம் சொல்லுங்கள்,அம்மா சொன்னபடி நான் கொழுக்கட்டை செய்யவில்லையென்று,ஏனென்றால் இங்கே தேங்காய் விலை அதிகம்,அவருக்கு கொழுக்கட்டை பிடிக்காதாம்.
ஆனால் சங்கராந்தி அன்று,அவர் விருப்பப்படி வெளியில் போய் சாப்பிட்டோம்.ஒரு கடல் உணவு விடுதிக்குச் சென்றோம்.சாட்டர்ஜி குடும்பத்தையும் அவர் அழைத்திருந்தார்.அவர்கள் பேசிய அமெரிக்க ஆங்கிலம் எனக்குச் சரியாகப் புரியவில்லை.மெனு கார்டில் தலையைப் புதைத்துக் கொண்டேன்.மற்றவர்கள் என்னவெல்லாமோ ஆர்டர் செய்தனர்.நான் ஒரு சாண்ட்விச்சும் ஜூசும் கொண்டு வரச் சொன்னேன்.அன்றுதான் அப்பா நான் தெரிந்து கொண்டேன்,அவருக்கு மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும், மீனும் மிகவும் பிடிக்கும் என்று.
உங்களுக்குத் தெரியுமா அப்பா,எனக்காக சக்தி அசைவம் சாப்பிடுவதையே விட்டு விட்டாரென்று.அதுவும் நான் எதுவும் சொல்லாமல், அவராகவே.ஆனால் சக்தி நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை இல்லையே,அவரால் சுப்பிரமணிய ஐயரின் பெண்ணான கல்யாணியை எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும்?
அவ்வப்போது,எங்கள் நலம் பற்றி எழுதுகிறேன். என்னால் சீனுவின் பூணலுக்கு வர முடியாது என நினைக்கிறேன். எனக்குப் பட்டுப் புடவை வாங்க வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லுங்கள்.இங்கே அதையெல்லாம் கட்டிக் கொள்ள முடியாது.கோமாளித்தனமாக இருக்கும்.
இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி
அன்புள்ள அப்பா, 20-10-1968
நாங்கள் சௌக்கியம்
கௌதம் பேச ஆரம்பித்துவிட்டான்.அவன் ’தோசை’ என்று சொல்வதுபோல் எனக்குக் கேட்டது.ஆனால்,விசு அது வெறும் உளறல்தான் என்கிறார்.
உங்கள் முந்திய கடிதத்திலிருந்து பக்கத்தாத்து ராஜிக்குக் கல்யாணம் நடந்து ஜாம்ஷெட்பூரில் இருக்கிறாள் என அறிந்து கொண்டேன்.சந்தோஷம்.சாரதா மாமியிடம் கேட்டு அவள் விலாசத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.அவளுடன் தொடர்பு கொள்கிறேன்.
ராஜி கணவருடன் மெட்ராசில் சந்தோஷமாக இருப்பாள் என நம்புகிறேன்.சென்ற மாதம் அவளுடன் ஃபோனில் பேச ரொம்ப சந்தோஷமாக இருந்தது.சீனுவைப் பரிட்சைக்கு நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள்.சக்திக்குக் கல்யாணம் ஆகி விட்டதாக ராஜி சொன்னாள். அவனுக்கு என் வாழ்த்துக்களை மானசீகமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனென்றால் ராஜி என் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டாள்.என் காரணமாக நீங்கள் உங்கள் நீண்ட நாள் நண்பரான, சங்கரவேலுடன்(சக்தியின் அப்பா) உங்கள் நட்பைத்துண்டித்து விட்டீர்கள் என்று எனக்குத்தெரியும்.சக்தி அவன் அம்மா விருப்பப்படி மாமா மகளை கல்யாணம் செய்துகொண்டதாக அறிகிறேன்.
ஆவணி அவிட்டம் வழக்கம் போல் சிறப்பாக நடந்ததா? விசுவின் அம்மா ஒரு கட்டுப் பூணல் கொடுத்திருந்தார்கள், ஆவணி அவிட்டத்துக்காக.ஆனால் அன்று அவர் பாஸ்டனில் இருந்தார்.இங்கே இருந்திருந்தாலும் பூணலை உபயோகித்திருக்க மாட்டார்.சென்ற மூன்று வருடங்களில் அவர் பூணல் அணிந்து நான் பார்த்ததே இல்லை.கௌதம் இப்போது அந்த நூல் சுருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.அது வெறும் நூல்தான்,வேறென்ன சொல்ல.அதன் முக்கியத்துவம் அவனுக்கு என்றாவது தெரியுமா என்பது சந்தேகமே.விசு அவன் ஆங்கிலத்தை மட்டுமே கேட்கும்படி செய்து வருகிறார்.அதுவே அவனுக்கு நல்லது செய்யும் என்கிறார்.ஆனல் நான் தனியாக இருக்கும்போது பொன்னியின் செல்வனையும்,பாரதியார் கவிதைகளையும் படித்துக் காட்டுகிறேன்.அந்த கவிதைப் புத்தகம்,சக்தி எனக்கு பரிசளித்தது.அவன் கையெழுத்து அதன் முதல் பக்கத்தில் இருக்கிறது.அப்புத்தகத்தைப் பார்த்த விசு ஒரு முறை சக்தி பற்றி என்னிடம் கேட்டார்.பயப்படாதீர்கள்,அப்பா.விசு ரொம்ப நல்லவர்.அதை சாதாரணமாக எடுத்துகொண்டார்.பின் அவர் அவரது அமெரிக்க நண்பி பற்றிக்கூறினார்.அவருடன் பணி புரிந்த அவளுடன் மூன்று மாதம் சேர்ந்து வாழ்ந்தது பற்றியும் சொன்னார்.அவள் ஒரு நாள் வந்திருந்தாள்.நல்லவள்தான்.
அம்மாவை ஒரு வருஷத்துக்குப் போதுமான சாம்பார் பொடி அனுப்பச் சொல்லுங்கள்.என் ஃபிரண்ட் சுதா அடுத்த வாரம் மெட்ராஸ் வருகிறாள்,சீனுவை சென்னைக்கு அனுப்பி அவளிடம் பொடியைக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.
இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி
3-6-1974.
அன்புள்ள அப்பா,
நாங்கள் சௌக்கியமாக வந்து சேர்ந்தோம்.இரண்டு மாதங்கள் இந்தியாவில் கழித்துவிட்டு இங்கு வந்தவுடன்,இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது சிரமமாகத்தான் இருக்கிறது.கௌதமும் ரஞ்சனாவும் வடை பாயசத்தோடு வாழை இலையில் சாப்பாடு கேட்கிறார்கள்,இந்த ஊரில்!அமெரிக்காவுக்குத் திரும்பி வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர் விசுதான்.
நான் இந்தியாவில் சில புத்தகங்களை விட்டுவிட்டேன்.அவை என் மாமியாராத்தில்தான் இருக்கவேண்டும்.அவை கிடைத்தால் பத்திரமாக வைத்திருங்கள்,நான் அடுத்த முறை வரும் வரை.அவை எனக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை;ஏனென்றால்,அவை சக்தி எனக்களித்த பரிசு.அப்பா,சக்தியின் விலாசத்தை நான் சாரதா மாமியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.அப்பா,உங்களுக்குத் தெரியுமா,சக்தி இப்போது மெட்ராஸில் ஒரு பிரசித்தமான இதய நோய் நிபுணர்;எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.நான் அவனுக்குக் கடிதம் எழுதினேன்.அதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.அவன் பெண்களுக்கு என்ன பெயர் தெரியுமா அப்பா?-கல்யாணி,ராகமாலிகா.அவன் என்னுடன் ஃபோனில் பேசினான்.அவன் இன்னும் மாமிசம் சாப்பிடுவதில்லை;நான் கிடைக்கவில்லை என்பதனால் அவன் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.அவன் இன்னும் பாடுகிறாயா என்று கேட்டபோதுதான் எனக்கே நினைவு வந்தது,நான் ஒரு காலத்தில் பாடிக்கொண்டிருந்தேன் என்பது.ஆனால் நான் திருச்சியையும்,என் சிறந்த ரசிகனான சக்தியையும் பிரிந்து வந்தபின் அதை மறந்தே போனேன்.
அவன் ஃபோன் வந்தபின் நான் பாட முயன்றேன் ‘குறையொன்றும் இல்லை’ என்று.ஆனால் குறை இருந்தது.நீண்டநாள் பாடாததனால் மட்டுமல்ல;என் கண்களில் நீர் நிறைந்து தொண்டை அடைத்துக் கொண்டதாலும்தான்.ஒருநாள் விசு,குழந்தைகளின் முன் பாடினேன்.கௌதம் ரசித்துக் கேட்டான்;ஆனால் அப்பாவும் பெண்ணும் பாட்டு முடியும் வரை பொறுமையின்றித் தவித்தார்கள்.
அப்பா,அடுத்தமுறை யாராவது இந்தியா வந்து திரும்பும்போது மறக்காமல் ஒரு சுருதிப் பெட்டி அனுப்பவும்.நான் மீண்டும் பாட ஆரம்பிக்கப் போகிறேன்.
இப்படிக்கு
உங்கள் அன்புள்ள
கல்யாணி.
(இன்னும் வரும்)
(மயிலை சட்ட மன்றத்தொகுதி வேட்பாளர் சென்னை பித்தனின் வேண்டுகோள்!
இண்ட்லியைப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு!
தமிழ் 10 ஐப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு!
தமிழ்மணத்தைப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு!
அம்மாக்களும்தான்! )

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)