தொடரும் தோழர்கள்

வெள்ளி, பிப்ரவரி 25, 2011

அன்புள்ள அப்பா!-தொடர்கிறது!

14-8-1978

அன்புள்ள அப்பா,
கலிஃபோர்னியாவிலிருந்து இன்றுதான் திரும்பினோம்.அங்கே எடுத்த ஃபோட்டோக்கள் மற்றும் படக் கார்டுகள் அனுப்பியிருக்கிறேன்.எல்லோரும் பார்த்த பின்,என் மாமனார் வீட்டில் கொடுத்து விடவும்.இந்த டூர் ஒரு மிக நல்ல மாற்றமாக இருந்தது.ஆனால் நான் என் பாட்டு க்ளாஸை விட்டு விட்டுப் போனது கஷ்டமாகத்தான் இருந்தது.இன்று திரும்பி வந்து சாயந்திரமே வகுப்பை ஆரம்பித்து விட்டேன்.சில ஃபோட்டோக்கள் சக்திக்கும் அனுப்பியிருக்கிறேன்.

கொஞ்ச காலம் முன் சக்தி சில கேசட்டுகளும், இசைத்தட்டுகளும் அனுப்பியிருந்தான்.கேட்கக் கேட்க திகட்டவில்லை.ஆகாஷ்வாணி கேட்பது போல் உணர்ந்தேன்.என் மாணவிகளுக்கெல்லாம் போட்டுக் காட்டினேன்.திருச்சியிலிருந்து வந்த ஒரு தமிழ்ப்பெண் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னட,மராத்தி,பெங்காலி மாணவிகளுக்கு சம்ஸ்கிருத,தெலுங்குக் கீர்த்தனைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்!!

அப்பா!இந்த சங்கீதம் என்னை மீண்டும் பிறக்க வைத்திருக்கிறது.புது உற்சாகம் அளித்திருக்கிறது.இதற்கு நான் சக்திக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அவன் தூண்டுதல் இல்லையென்றால் இது நடந்திருக்காது.அவனைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தால் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்காமலிருக்க முடியவில்லை.உங்களை, .அம்மாவை, நம் குடும்பத்தின் உறவை இழந்திருப்பேன்.இப்போது என்ன வாழ்கிறது?நீங்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்க,நான் விசுவுடன் அமெரிக்காவில் வாழும் இந்த வாழ்க்கையில் என்ன அடைந்து விட்டேன்?எனக்கே பதில் தெரியவில்லை.பதில் என்றாவது கிடைக்கும் என்றும் தோன்றவில்லை.அப்பா நான் மறுபடியும் சொல்கிறேன்.விசு மிக நல்லவர். எந்தக் குறையும் இல்லை.நீங்கள் எதிர்பார்த்திருந்த மாப்பிள்ளை.அமெரிக்காவில் பெரிய படிப்புப் படித்தவர், நல்லவேலையில் இருப்பவர்.நிறைய சம்பாதிப்பவர்,கடமை தவறாத கணவர்,தந்தை.இதற்கு மேல் வேறு என்ன எதிர்பார்ப்பது?அதெல்லாம் நான் முன்பே தொலைத்துவிட்ட ஒரு கனவு.-வெகு நாட்களுக்கு முன் திருச்சியில்,வேறு ஒருவரை நினைத்திருந்தபோது.

இப்படிக்கு,
உங்கள் அன்புள்ள
கல்யாணி.
14-4-1984

அன்புள்ள அப்பா,
19 வருடங்களுக்குப் பின் சக்தியை,டாக்டர்.சக்திவேலைப் பார்த்தேன்.நியூயார்க்குக்கு ஏதோ வேலையாக வந்தவன் நம்மாத்துக்கும் வந்திருந்தான்.விசுவும்,குழந்தைகளும் ரொம்ப சந்தோஷமாக அவனை வரவேற்றனர்.அவர்களுக்கு அவனை ரொம்பப் பிடித்து விட்டது.பேசிக் கொண்டே இருந்தனர்.அவன் எனக்காக புத்தகங்கள்,கேசட்டுகள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு,இன்னும் என்னென்னவோ வாங்கி வந்தான்.ரொம்ப சந்தோஷமான ஒரு நாள்!

இப்படிக்கு
உங்கள் அன்புள்ள
கல்யாணி.


20-1-1990
அன்புள்ள அப்பா,
என்னுடைய பீரோ லாக்கரில் கிடந்த இந்தக் கடிதங்களை யெல்லாம் இன்று எடுத்துப் படித்தேன்.உங்களுக்கென்று எழுதி அனுப்பாமல் விட்ட கடிதங்கள். ஏன் அனுப்பவில்லை என்று தெரியுமா?சக்தி பற்றி உங்களுக்கு எழுத முடியாது.காரணம் நீங்கள் கோபிப்பீர்கள் என்ற பயமல்ல.உங்களை நான் காயப்படுத்த விரும்பவில்லை.எனக்குத்தெரியும்,சக்தி நல்லவன்,வாழ்க்கையில் முன்னேறக் கூடியவன் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள்.ஆனால்,இந்த சமுதாயத்துக்குப் பயந்து,குடும்பத்தின் நல்ல பெயருக்காக,நீங்கள் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.இந்தக் கடிதங்கள் உங்களை மேலும் காயப் படுத்தியிருக்கும்.இன்று,உங்கள் மறைவுக்கு இரண்டு வருடத்துக்குப்பின்,ஒரு சாலை விபத்தில் டாக்டர்.சக்திவேல் அகால மரணம் அடைந்து 6 மாதங்களுக்குப்பின்,இக் கடிதங்களைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது.இந்த அனுப்பப்படாத,தபால் தலை ஒட்டாத கடிதங்கள் மாறியிருக்கக் கூடிய என் வாழ்க்கையின் பிரதிபலிப்பே!

இப்படிக்கு
கல்யாணி விஸ்வநாதன்.
(இது ஒரு பள்ளியில் நடைபெற்ற ஆங்கிலச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதையின் தமிழாக்கம்!தமிழாக்கம் செய்த பெருமை மட்டுமே எனக்கு.சில மாற்றங்கள் செய்தேன்.சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும்-சித்ரா அவர்கள் சுட்டிக்காட்டியது போல!)

15 கருத்துகள்:

 1. சரி, தமிழாக்கம் செய்தவர் தாங்கள். இதனை எழுதியவர் யார்? சொல்லவிலையே!
  நல்லாத்தான் இருக்கு படிக்க.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கு நன்றி ப்ரணவம் ரவிகுமார்!

  பதிலளிநீக்கு
 4. நீண்ட நாட்களுக்கு முன் யு.எஸ்ஸில் இருக்கும் உறவினர் அனுப்பிய ஆங்கிலக் கதை இது.எழுதியது ஒரு மாணவன் என்று மட்டுமே அறிவேன்! மகிழ்ச்சியும் நன்றியும் கக்கு- மாணிக்கம்!

  பதிலளிநீக்கு
 5. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //நல்லா சுவாரஸ்யமா இருக்கு கதை...//
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 6. அருமையான கதைங்க... நல்ல மொழியாக்கமும் கூட. எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 7. அஞ்சல் வழியாக சொல்லப்பட்ட அல்லது சொல்லாமல் விட்ட ஒரு அருமையான க(வி)தை!

  பதிலளிநீக்கு
 8. சிறுகதையின் முடிவு , சிந்திக்க வேண்டியது. பலரின் நினைவுகளைத் திரும்பிப்பார்க்க வைக்கும்.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு