தொடரும் தோழர்கள்

செவ்வாய், பிப்ரவரி 01, 2011

ஆன்மீகம் இங்கு வேண்டாமே!

எனது ஆன்மீகப் பதிவிலிருந்து திருமந்திரம் பற்றி நான் எழுதியவற்றை இப்பதிவில் இறக்குமதி செய்து இப்பதிவை ஒரு பல்சுவைப் பதிவாக மாற்றப் போகிறேன் என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். சில திருமந்திரப் பதிவுகளை இறக்குமதியும் செய்திருந்தேன்.


ஆனால் இப்போது யோசிக்கும்போது,ஆன்மீகத்தை இப்பதிவில் கலக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.இங்கு நான் எழுதும் விஷயங்களுக்கும்,ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே இந்தப் பதிவில் எழுதுவதாக இருந்த ”திருமூலரின் சூனிய சம்பாஷணை” என்ற தொடர் பதிவை என் மற்ற பதிவான “நமக்குத் தொழில் பேச்சு” வில் இன்று முதல் பதியப் போகிறேன்.

http://shravanan.blogspot.com

தொடர்ந்து வருகை தாருங்கள்;கருத்துச் சொல்லுங்கள்.

10 கருத்துகள்:

 1. நல்ல முடிவு. ஆன்மிகம் பற்றி இங்கு பல பதிவுகள் வந்தாலும் பெரும்பாலும் எவரும் விருப்பம் கொள்வதில்லை எனக்கும் அப்படித்தான். நம் கருத்துக்களை இந்த விழயத்தில் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் விடுவதே சிறப்பு. இல்லையெனில் தேவையற்ற மண்டை வலிகள் வந்து துன்பப்பட நேரிடும். Just keep going. அது போதும்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு கலக்குங்க

  பதிலளிநீக்கு
 3. எனது மற்றப் பதிவு ஆன்மீகத்துக்கான தனி பதிவு.ஆன்மீகம் வேண்டுவோர் அங்கு வந்து படிக்கட்டும், விருப்ப மிருந்தால்.இங்கு இனி ஆன்மீகம் வராது.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,கக்கு - மாணிக்கம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 4. நல்ல முடிவு. வாழ்த்துக்கள்.இந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

  பதிலளிநீக்கு
 5. வாங்க இனியவன்.பதிவெல்லாம் தேதி,நேரம் குறிப்பிட்டு ஷெட்யூல் பண்ணி வைத்து விட்டு விடுப்பில போயிட்டீங்க போல?
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. //இங்கு நான் எழுதும் விஷயங்களுக்கும்,ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.//
  நீங்கள் சொன்னால் எப்படி. நாங்கள் அல்லவா சொல்லவேண்டும். இருந்தாலும் தங்களது கருத்து சுதந்திரத்தில் தலையிட விரும்பவில்லை. எனது கருத்து(?) அங்கும் தொடரும்!!

  பதிலளிநீக்கு
 7. இல்லை ஐயா எனக்கு internet connection கொடுத்தவர் அந்த தொழிலையே விட்டுவிட்டார். நாங்கள் எல்லாம் நடுத்தெருவில் ஆகிவிட்டோம். இப்பொழுது புதிய connectin எடுத்துவிட்டேன் அதுதான் தாமதம். இருந்தாலும் நண்பனின் மூலமாகத்தான் பதிவிட்டுக்கொண்டிருந்தேன்.

  பதிலளிநீக்கு
 8. வே.நடனசபாபதி கூறியது
  //எனது கருத்து(?) அங்கும் தொடரும்!!//
  தொடருங்கள் !காத்திருக்கிறேன்!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,நடனசபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 9. இனியவன் கூறியது...

  // இருந்தாலும் நண்பனின் மூலமாகத்தான் பதிவிட்டுக் கொண்டிருந்தேன்.//
  பதிவுப்போதை அவ்வளவு எளிதில் விடுமா?
  பதிலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு