தொடரும் தோழர்கள்

புதன், பிப்ரவரி 09, 2011

கதையல்ல,நிஜம்!!

“ட்ரிங்,ட்ரிங்”

“போலீஸ் கட்டுப்பாட்டு அறை”

”ஹலோ,போலீஸா,எங்களைக் காப்பாத்துங்க”

“நீங்க யாரு,எங்கிருந்து பேசுகிறீர்கள்,என்ன நடந்தது சொல்லுங்கள்!”

“அய்யா!நாங்க ஆபத்துல இருக்கோம்.காப்பாத்துங்க”

“ஹலோ,தெளிவா சொல்லுங்க”

“நாங்க மூணு பேர் இங்க,திலக் விஹாரில் ஒரு ஃப்லாட்டிலேருந்து பேசுறோம்.இந்த வீட்டில திருடிட்டு இருக்கும்போது,வெளில தெரிஞ்சு போய், நிறைய பேர் வீட்டுக்கு வெளில கூட்டமாக் கூடிட்டாங்க.இப்போ நாங்க வெளில வந்தோம்னா எங்களுக்குச் சங்குதான்!கூட்டம் ஒரு வேளைக் கதவைத் திறந்து உள்ள வந்தாலும் வரலாம்.அதுக்குள்ள வந்து எங்களைக் காப்பாத்துங்க!புண்ணியமாப் போகட்டும்!”

போலீஸிடமிருந்து தப்பியோடுவது போய் இப்போது திருடர்கள் போலீஸிடம் பாதுகாப்புக் கேட்கிறார்கள்.போலீஸ்காரருக்குச் சிரிப்பு வந்தது.

தன் கடமையைச் செய்தார்.

போலீஸார் சென்று அத்திருடர்களைப் பத்திரமாகக் கைது செய்து,வெளியே நின்று கொண்டிருந்த 250 பேரிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.
இது கதையல்ல,நிஜம்!

தலைநகர் டில்லியில் ஜனவரி 28 ஆம் தேதி நடந்த ஒரு உண்மைச் சம்பவம்!

truth is sometimes stranger than fiction!
உண்மை சில நேரங்களில் புனைவை விட விந்தையானது!( சினிமாவில் மேஜர் சுந்தரராஜன் பாணி!)

22 கருத்துகள்:

 1. பயணமும் எண்ணங்களும் கூறியது...

  // ஹாஹா . அடப்பாவிகளா..:))))//

  நானும் சிரிச்சுக்கிட்டேதான் எழுதினேன்!
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 2. //உண்மை சில நேரங்களில் புனைவை விட விந்தையானது//

  ஆமாங்க எசமான் ஆமா ஹா ஹா ஹா ஹா.................

  பதிலளிநீக்கு
 3. சென்னை காதலரின் பழைய மெட்ராஸ் நினைவுகள் தொடரட்டும் !!

  பதிலளிநீக்கு
 4. உண்மை சம்பவத்தை மிகவும் நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள் . பத்திரிகை உலகம் ஒரு நல்ல நிருபரை இழந்து விட்டதோ ? வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 5. உண்மை சம்பவத்தை மிகவும் நகைச்சுவையாக எழுதி உள்ளீர்கள் . பத்திரிகை உலகம் ஒரு நல்ல நிருபரை இழந்து விட்டதோ ? வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 6. இப்படி அக்கம்பக்கத்தவர் எல்லோரும் ஒன்று கூட ஆரம்பித்தால், திருட்டு பயம் ஏது? பகிர்வுக்கு நன்றிங்க...
  நேரம் இருக்கும் பொழுது, இந்த பதிவையும் வாசித்து பாருங்க. நன்றி.
  http://konjamvettipechu.blogspot.com/2010/09/blog-post_19.html

  பதிலளிநீக்கு
 7. MANO நாஞ்சில் மனோ கூறியது...
  //உண்மை சில நேரங்களில் புனைவை விட விந்தையானது//
  //ஆமாங்க எசமான் ஆமா ஹா ஹா ஹா ஹா.................//
  என்னவெல்லாம் நடக்குது பாருங்க!
  வருகைக்கு நன்ரி மனோ!

  பதிலளிநீக்கு
 8. கக்கு - மாணிக்கம் கூறியது...

  //சென்னை காதலரின் பழைய மெட்ராஸ் நினைவுகள் தொடரட்டும்! //
  நிச்சயம் தொடரும் கக்கு-மாணிக்கம் அவர்களே!
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 9. Vasu கூறியது...
  // பத்திரிகை உலகம் ஒரு நல்ல நிருபரை இழந்து விட்டதோ ? வாசுதேவன்//

  யார் அந்த நல்ல நிருபர்?!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசு!

  பதிலளிநீக்கு
 10. @chitra
  வருகைக்கு நன்றி!
  இதோ புறப்பட்டாச்சு வெட்டிப் பேச்சுக்கு!

  பதிலளிநீக்கு
 11. இல்லாவிட்டாலும் காவல்துறைக்கும்,திருடர்களுக்கும் உள்ள புரிந்துணர்வு அனைவரும் அறிந்ததே.

  பதிலளிநீக்கு
 12. கே. ஆர்.விஜயன் கூறியது...
  //இல்லாவிட்டாலும் காவல்துறைக்கும்,திருடர்களுக்கும் உள்ள புரிந்துணர்வு அனைவரும் அறிந்ததே.//
  அதுவும் சரிதான்,இனிய விஜயன்!
  வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. பிரியமுடன் பிரபு கூறியது...
  //ha ha h true//
  வருகைக்கு நன்றி பிரபு!

  பதிலளிநீக்கு
 14. //உண்மை சில நேரங்களில் புனைவை விட விந்தையானது!//

  நீங்கள் கூறுவது உண்மைதான். ஆனாலும் பெரும்பாலான கதைக்கான கரு உண்மை சம்பவங்களிலிருந்தே பெறப்படுக்கிறது.

  இந்த சம்பவத்தில் நீங்கள் சொல்லாமல் விட்டது. இந்த திருட்டை நடத்தியவர், பக்கத்து வீட்டுக்காரர் என்பதைத்தான்.

  பதிலளிநீக்கு
 15. வே.நடனசபாபதி கூறியது...

  //இந்த சம்பவத்தில் நீங்கள் சொல்லாமல் விட்டது. இந்த திருட்டை நடத்தியவர், பக்கத்து வீட்டுக்காரர் என்பதைத்தான்.//
  இந்த நிகழ்ச்சியின் விந்தையே திருடர்கள் போலீஸை உதவிக்கழைப் பதுதான்!எனவே அதை மட்டுமே எடுத்துக் கொண்டேன்!
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 16. சிரித்து ரசித்தேன். இதே பாணியில் தங்கவேலுவோ சந்திரபாபுவோ ஒரு படத்தில் காமெடி செய்த நினைவு.

  பதிலளிநீக்கு
 17. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாதுரை அவர்களே!

  பதிலளிநீக்கு