தொடரும் தோழர்கள்

செவ்வாய், பிப்ரவரி 08, 2011

சென்னைக்காதல்-2

காதலிக்க நேரமில்லை’ என்று ஆரம்பமாயிற்று என் சென்னைக் காதல்!

பத்தொன்பது வயது வரை சிற்றூர்களிலேயே வாழ்ந்து பழகிய ஒருவன்,இருபதாவது வயதில் நகரத்துக்கு வந்தால் பிரமிப்பு ஏற்படாதா?

அந்தத் திரை அரங்கம்,,ஓட்டல்,அவை தவிர முதன் முதலாகப் பார்த்த அலை மோதும் கடல்,பரந்த கடற்கரை எல்லாமே புதிய அனுபவம்தான்.கடலில் கால் நனைய நின்றது, தே.மா.ப.சு. சாப்பிட்டது,குழந்தையாக மாறி மணலில் ஓடியது எல்லாமே புது அனுபவம்தான்.எல்லாவற்றையும் விட வியப்பை எற்படுத்தியது,அவன் பார்த்த இளம் பெண்கள்,அவர்களின் நாகரிக உடை,அவர்கள் பேசிய ஆங்கிலம்.

மெஸ்ஸில் சுவை உணவு
லஸ்ஸில் விண்டோ ஷாப்பிங்
பஸ்ஸில் ஊர் சுற்றல்
மிஸ்ஸிங்—வேறென்ன படிப்புதான்!
(கடைசியில் மேக்கப் பண்ணிட்டோமுன்னு வச்சிக்குங்க!)

கல்லூரி விடுதியில் மிக அருமையான சைவ உணவு கிடைத்தது.ஞாயிறன்று தயாராகும் மோர்க்குழம்பு மிகப் பிரசித்தம்.வெண்டைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி,எண்ணெயில் வறுத்து,மோர்குழம்பில் போட்டிருப்பார்கள்!பீன்ஸ் பொரியல்,மைசூர் ரசம்,தயிர்.
சாப்பிட்ட சாப்பாடு செரிக்க வேறென்ன செய்வது?—ஊரைச் சுற்று!

லஸ்!மயிலையின்ரத்த நாளம்!இன்றும் இருக்கும் சுக நிவாஸ்-மங்களூர் போண்டா பிரமாதம்.இல்லாமல் போய் விட்ட சாந்தி விஹார்.அன்றைக்கு ’காஃபி டே’ யோ,ஜாவா க்ரீனோ’ ‘மோக்கா’ வோ இல்லை—சந்திப்பதற்கும்,சல்லாபிப்பதற்கும்.(இப்போதெல்லாம் இம்மாதிரி இடங்களில் எழுதுகிறார்கள்—’காஃபியும், பேச்சும்’,காஃபியும் அதற்கு மேலும்,’என்றெல்லாம்!

அப்போது எங்களுக்கு இருந்ததெல்லாம் சாந்தி விஹார் தான்.வெறும் காஃபி மட்டும் குடிப்பதற்காகக் கூட்டமாய்ப் போய் அரைமணிக்கும் மேல் அங்கு அமர்ந்து பேசி விட்டு(பார்த்து விட்டும்!) வருவோம்.இல்லையென்றால், குளக்கரையில் இருந்த உடுப்பியின் ரூஃப் கார்டனில், மணக்கும் நிகரற்ற குழம்பியுடன் ஊர் வம்பு!

வெள்ளியன்று,பக்தி அதிகமாகி விடும்!கபாலீச்வரரையும், கற்பகாம்பாளையும், பார்க்காமல் இருக்க முடியாது—நல்ல தரிசனம் அன்றுதானே கிடைக்கும்!!அந்தக் கோவில் அன்றும் என்னைப் பெரிதும் கவர்ந்தது,இன்றும் கவர்கிறது,என்றும் கவரும்!வேறுபாடு பார்வகளில்தான்!

லஸ்ஸிங்கும்(லஸ்ஸுக்குப் போய் சுற்றி விட்டுப் பார்த்து விட்டு வருவதற்கு நாங்கள் வைத்த பெயர்),கோவிலிங்கும் இல்லாத நாட்களில் இருக்கவே இருக்கிறது அழகிய சாந்தோம் கடற்கரை.(பீச்சிங்).முன்பே எழுதியது போல சிறிய, ஆர்ப்பாட்டமில்லாத ,அழகிய கடற்கரை.இன்று இல்லாமல் போய் விட்டாலும் என் நினைவில் நிற்கும்,நினைவில் கலந்து விட்ட கடற்கரை.கச்சேரி ரோடு வழியாக நடந்தே போய்க் கடற்கரையில் பொழுதைக் கழித்துவிட்டு நடந்தே திரும்பி வருவோம்.

இன்று பெரிய பெரிய வணிக வளாகங்கள் இருக்கலாம்.ஆனால் அன்று சிறிய ’லாக்ஸ் அண்ட் லாக்ஸ்’, கடையில் பொருள் வாங்கிய(அல்லது பார்த்துவிட்டு வாங்காமல் வந்த),சுகமே தனிதான்!அச்சிறிய கடையின் நெரிசல் நெருக்கங்கள்,எங்கள் அலட்டல்கள்(பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆயிற்றே!) ,கடைக்காரரின் தனிக் கவனிப்பு எல்லாமே மறக்க முடியுமா?

சனிக்கிழமை இரவுகள் விடுதியில் கட்டவிழ்த்து விட்ட இரவுகள். பெரும்பாலும் சினிமா பார்க்கும் நாட்கள்.இன்றில்லாத அரங்குகளான மினர்வாவில் ‘ஹடாரி’ குளோபில் முதல் நாள் முதல் காட்சி ‘ஃப்ரம் ரஷ்யா வித் லவ்” சஃபைரில் ‘க்ளியோபாட்ரா’,’மை ஃபேர் லேடி’,சஹானிஸ்(ராஜகுமாரி)யில் ’சரேட்’ ’டாக்டர்.நோ’’எல்ஃபின்ஸ்டன், ஓடியன் அரங்குகளில் பல ஆங்கிலப் படங்கள்,--மறக்க முடியுமா?

எல்லாவற்றிலும் முக்கியமானது இந்தச்சென்னையென்னும் பெண் என்னில் நிகழ்த்திய மாற்றங்கள்!

அவை பற்றிப் பின்னால் பார்ப்போம்!

22 கருத்துகள்:

 1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,மனோ அவர்களே!

  பதிலளிநீக்கு
 2. பிளாக் என்றால் இது போல விழயங்கள் அல்லவா எழுதவேண்டும்? இது போன்ற ஒரு தனிப்பட்டவரின் பார்வை அனுபவங்கள் நம் கையெழுத்து போல தனித்து நிற்பது. இந்த பகிர்வுகளே வாசிபவனுக்கும் அந்த இனிமையை/அனுபவத்தை தருகிறது. நான் இதனை உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். தொடருங்கள். தொடர்கிறோம்.பகிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பிளாக் என்றால் இது போல விழயங்கள் அல்லவா எழுதவேண்டும்//
  yes i agri

  பதிலளிநீக்கு
 4. அந்த காலத்து விஷயங்கள் எந்த ஒரு ஒளிபதிவும் ஆகாத உங்கள் மனத்திரையில் மட்டுமே இன்னும் ஓடிக்கொண்டிருக்கிற,மற்றவர்களால் கேட்க மட்டுமே முடிந்த அந்த விஷயங்கள் மிகவும் பொக்கிஷமானவை. அவை கால ஓட்டத்தால் உலகம் மாறினாலும் அந்த மனம் இருக்கும்வரை அதுவும் இருக்கும். அதை உணர படிக்க முடிந்தால் பெரிய கொடுத்துவைப்புதான்.அந்த வகையில் நானும் கொட்டுத்துவைத்தவந்தான்.

  பதிலளிநீக்கு
 5. கக்கு - மாணிக்கம் சொன்னது…

  //நான் இதனை உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். தொடருங்கள். தொடர்கிறோம்.பகிவுக்கு நன்றி.//
  மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
 6. @ஆர்.கே.சதீஷ்குமார்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. கே. ஆர்.விஜயன் கூறியது...

  //அந்த வகையில் நானும் கொட்டுத்துவைத்தவந்தான்.//
  மனம் திறந்து பாராட்டும் உங்களைப் போன்ற வாசகர்கள் இருக்கும் வகையில் நானும் கொடுத்துவைத்தவந்தான்.
  நன்றி விஜயன்!

  பதிலளிநீக்கு
 8. திருச்சியில் என் கல்லூரிபருவத்தை நினைவுபடுத்தியது. மாலை ஆனதும் NSB ரோட்டை வலம் வருவோம் தரிசனத்துக்காக .
  ஜாலியான பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. சிவகுமாரன் கூறியது...

  //திருச்சியில் என் கல்லூரிபருவத்தை நினைவுபடுத்தியது. மாலை ஆனதும் NSB ரோட்டை வலம் வருவோம் தரிசனத்துக்காக .
  ஜாலியான பகிர்வுக்கு நன்றி//
  மறக்க முடியுமா அந்த நாட்களை? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,சிவகுமாரன்!

  பதிலளிநீக்கு
 10. சிவகுமாரன் கூறியது...

  //திருச்சியில் என் கல்லூரிபருவத்தை நினைவுபடுத்தியது. மாலை ஆனதும் NSB ரோட்டை வலம் வருவோம் தரிசனத்துக்காக .
  ஜாலியான பகிர்வுக்கு நன்றி//
  மறக்க முடியுமா அந்த நாட்களை? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,சிவகுமாரன்!

  பதிலளிநீக்கு
 11. உங்கள் மலரும் நினைவுகளைக் குறித்து வாசிக்கும் போது, உங்கள் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்கிறோம்.... தொடர்ந்து எழுதுங்க....

  பதிலளிநீக்கு
 12. Thank you for visiting my blog.

  You have a very good blog.... Following!

  பதிலளிநீக்கு
 13. Chitra கூறியது...
  // உங்கள் மலரும் நினைவுகளைக் குறித்து வாசிக்கும் போது, உங்கள் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்கிறோம்.... தொடர்ந்து எழுதுங்க.//
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா அவர்களே!
  Chitra கூறியது...

  //Thank you for visiting my blog. //
  pleasure is mine!
  //You have a very good blog.... Following!//
  this is what I too have to say,chithra!
  thank u.

  பதிலளிநீக்கு
 14. //மெஸ்ஸில் சுவை உணவு
  லஸ்ஸில் விண்டோ ஷாப்பிங்
  பஸ்ஸில் ஊர் சுற்றல்
  மிஸ்ஸிங்—வேறென்ன படிப்புதான்!//

  மெஸ்ஸில், லஸ்ஸில், பஸ்ஸில்,மிஸ்ஸிங்
  என்ற அடுக்குதொடர்கள் அபாரம்.

  மங்களூர் போண்டா (இதை உடுப்பியில் கோலி பாஜி என்பார்கள்) பற்றி எழுதி அதை சாப்பிடும்
  ஆசையை தூண்டிவிட்டீர்கள்!

  சுவையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. வே.நடனசபாபதி கூறியது...
  //மங்களூர் போண்டா (இதை உடுப்பியில் கோலி பாஜி என்பார்கள்) பற்றி எழுதி அதை சாப்பிடும்
  ஆசையை தூண்டிவிட்டீர்கள்!//
  வாங்க,ஒரு நாள் போய்ச் சாப்பிட்டு விட்டு வருவோம்!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 16. சென்னை காதல் ௨ ஒரே மூச்சில் படிக்கும் வண்ணம் இருந்தது. விறு விறுப்பான நடை ... சுஜாதா/James Hadley chase எழுத்துகளை
  நினைவூட்டியது....சென்னையை இவ்வளவு சுவாரஸ்யமாக வர்ணிக்கமுடியுமா என்ற பிரமிப்பு உண்டாகிறது .சென்னை காதல் மேலும் பல பதிவுகளை எதிர்பார்கிறேன் வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 17. சாந்தி விஹார் நினைவிருக்கிறது.

  மெஸ் மோர்க்குழம்பு விவரம் உடனே ஒரு பிடி பிடிக்கச் சொல்கிறது. எழுபதுகளின் தொடக்கத்தில் சம்ஸ்க்ருத கல்லூரி அருகில் ஒரு திருநெல்வேலிக்காரரின் மெஸ் ஒன்றில் ஒரு இரவு சாப்பிட்டது இன்றைக்கும் நினைவிருக்கிறது. ஊரிலிருந்து வந்திருந்த என் தாத்தா அழைத்துக்கொண்டு போனார். சுண்டைக்காய் சைசில் மாவடு கொடுத்தார்கள். அதற்குப் பிறகு அந்த மாதிரி மாவடு நான் சாப்பிட்டதேயில்லை. நிறையத் தேடியிருக்கிறேன் - கிடைக்கவில்லை.

  லஸ்ஸில் ஒரு ரத்னா கபே இருந்ததோ?

  அடுத்த சென்னைப் பயணத்தில் ஒரு முறை மயிலை/திருவல்லிக்கேணி போக வேண்டும்.

  பதிலளிநீக்கு
 18. அப்பாதுரை அவர்களே!
  நீங்கள் சொல்லும் மெஸ் கல்யாணி மெஸ் என நினைகிறேன்.
  எனக்குத்தெரிந்து,சுகநிவாஸ்தான் லஸ்ஸில் நீண்ட நாட்களாக இருக்கும் ஹோட்டல்!
  கபாலியையும்,பார்த்தசாரதியையும் பார்க்காமல் ஒரு சென்னை விஜயம் இருக்கலாமா?
  சஃபைர் இப்போது இல்லை. புளூடயமண்டை மறக்க முடியுமா?
  வருகைக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 19. நல்ல நினைவாற்றல்... பயணம் நல்லாதான் இருக்கு.... தொடருங்க.

  பதிலளிநீக்கு
 20. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கருணாகரசு அவர்களே!

  பதிலளிநீக்கு