தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 25, 2011

மூணோண் மூணு!--தொடர்பதிவு

நண்பர்கள் அப்பாதுரையும்,அதன் பின் பாலாவும் விடுத்த அன்பு அழைப்பை ஏற்றுக் களத்தில் நானும் குதிக்கிறேன்!அப்பாதுரை அவர்கள் மூன்று நாட்களுக்குள் எழுதாத ஒருவருக்கு ஏதோ காணாமல் போய் விட்டதாக வேறு பயமுறுத்தியிருந்தார்.எனக்கும் கொஞ்சம் பயம்தான்.மூன்று நாட்களுக்குப்பின் ஒரு நாள் சாப்பாட்டுக்குப் பின் இருமல் வந்தது.துப்பும்போது எச்சில் சிவப்பாக இருந்தது.சரிதான் அப்பாதுரை சொன்னது போல் ஏதோ விபரீதம் எனப் பயந்தேன். பின்னரே நினைவுக்கு வந்தது,சாப்பிட்ட பின் பீடா போட்டேன் என்பது!

இதோ மூன்று மூன்றாய்-----

1)எனக்குப் பிடித்த மூன்று-
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
இவற்றைக் கொள்கையாய்ச் சொன்னவர்கள் பறக்க விட்டு விட்டார்கள் .
நானாவது ’பிடித்துக்’ கொள்கிறேனே!

2)எனக்குப் பிடிக்காத மூன்று
பொது இடத்தில் புகை பிடித்தல்(அவர்கள் பிடிக்கிறார்கள்;எனக்குப் பிடிக்கவில்லை!)
நிகழ்ச்சியின் நடுவே கைபேசியில் பேசுவது
பைத்தியம்(இதுவரை பிடிக்கவில்லை)

3)நான் வணங்கும் மூன்று
என் தாய்
குலதெய்வம் ரங்கனாதபுரம் சாஸ்தா
என் அப்பன் தென்னாடுடைய சிவன்

4)என்னை வணங்கும் மூன்று
மூன்று,முப்பது,முன்னூறு,மூவாயிரம்……..எல்லா உயிரும் என்னைத் தொழும் ----(நான்கொல்லான்,புலால் மறுத்தான்)

5)பயப்படும் மூன்று
குரைக்கும் தெருநாய்கள்
நரைக்கும் காதோர முடி(இப்போ தலை முழுதும் நரைச்சாச்சு!)
முறைக்கும் மனைவி!

6)புரியாத மூன்று
நான் சில்லறையோடு பேருந்தில் செல்கையில் பலர் நூறு ரூபாய் நோட்டுக் கொடுத்துக்கூட டிக்கெட் எடுக்கிறார்கள்.ஆனால் என்றாவது நான் சில்லறை இல்லாமல் போய் பத்து ரூபாய் கொடுத்தால் கூட நடத்துனர் விரட்டுகிறாரே(சாவு கிராக்கி!) ஏன்?

தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சி என்று முன்பே தெரிந்து,திட்டமிட்டு அதைப் பார்க்க அமரும்போது மின்சாரம் போய் விடுகிறதே ஏன்?

என்னையே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே!

7)மேஜையின் மேல் உள்ள மூன்று
(மேஜையே கிடையாது,இதில் அதன் மேல் என்ன?)
கணினி மேஜை மேல்
கணினி
மோடம்
கண்டதெல்லாம்!

8)சிரிக்க வைக்கும் மூன்று
டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்
செந்தில்-கவுண்டமணி காமெடி
பதிவுகளில் வரும் பல ஜோக்ஸ்

9)தற்போது செய்து கொண்டிருக்கும் மூன்று
கைகள் கணினியைத்தட்டுகின்றன
காதுகள் பாம்பே ஜெயஸ்ரீ யின்(ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அல்ல!)
பாட்டைக் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
மூக்கு எங்கிருந்தோ வரும் வெங்காயம் வதக்கும் வாசனையை ரசித்துக் கொண்டிருக்கிறது.

10)வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று
மானசரோவர் யாத்திரை
ஆசிரம வாசம்
நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு சிவன் கோவில் அமைத்தல்

11)செய்யக்கூடிய மூன்று
இயன்ற வரை பிறருக்கு உதவுதல்.
வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் சிறிது வேதம் கற்றல்
ஆர்வமுள்ளவருக்குக் கற்பித்தல்.

12)கேட்க விரும்பாத மூன்று
நள்ளிரவில் நாயின் ஊளை
சுருதியேயில்லாத பாட்டு
பொருளேயில்லாத பேச்சு

13)பிடித்த உணவு வகை
மிளகு குழம்பு
பருப்புத் துவையல்
சுட்ட அப்பளம்
(மூன்றும் சேர்ந்து!)

14)அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள்
கர்நாடக இசையில்- பிறவா வரம் தாரும்
என்றைக்கு சிவ க்ருபை
தத்வமறிய
திரை இசையில்
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
செந்தமிழ்த் தேன் மொழியாள்
ஒருநாள் போதுமா

15)பிடித்த மூன்று படங்கள்
மூன்றாம் பிறை
கப்பலோட்டிய தமிழன்
மௌனராகம்

16)இது இல்லாமல் வாழ முடியாது என நினைப்பது

வலைப் பதிவும் பதிவுலக நண்பர்களும் அவர்கள் பதிவுகளும்!!ஹா,ஹா,ஹா!

ஒரு பதிவு எழுத இதுவரை நான் இந்த அளவு சிரமப்பட்டது கிடையாது!
இந்த இனிய சிரமம் கொடுத்த அப்பாதுரைக்கும்,பாலாவுக்கும் நன்றி

இதைத் தொடர நான் அழைப்பது---ஜோதியில் கலக்க யாருக்கெல்லாம் விருப்பமோ.வாங்க!

83 கருத்துகள்:

 1. "மூணோண் மூணு!-- அழகாய் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. நான் தின்ன வந்த வடைக்காக தான் வெங்காயம் வதகினாகளோ
  வடையும் வெங்காய சட்டினியும் அருமை

  பதிலளிநீக்கு
 3. வித்தியாசமான மூன்று ...முத்துக்கள் தந்து அசத்தி விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 4. அனைத்து வாக்குகளும் அள்ளி தந்தோம்
  3 comments ....he he plz note ..3 efffect

  பதிலளிநீக்கு
 5. wittiyasama irukku, kaathoram mudi naraikkuthaa ? atha pidungi podalame?

  பதிலளிநீக்கு
 6. //குரைக்கும் தெருநாய்கள்

  முறைக்கும் மனைவி!//

  என்னா ஒரு வில்லத்தனம்! :-)

  பதிலளிநீக்கு
 7. //மூன்றாம் பிறை
  மௌனராகம்
  டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்
  செந்தில்-கவுண்டமணி காமெடி
  பதிவுகளில் வரும் பல ஜோக்ஸ்//

  நீங்க இளைஞன் பாஸ்! :-)
  பதிவு அருமை!

  பதிலளிநீக்கு
 8. //செந்தில்-கவுண்டமணி காமெடி//
  யாரு, நம்ம சிபி செந்தில் காமெடியா, அது நல்லாத்தான் இருக்கும்!

  பதிலளிநீக்கு
 9. இராஜராஜேஸ்வரி சொன்னது…

  //"மூணோண் மூணு!-- அழகாய் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்.//
  நன்றி இராஜராஜேஸ்வரி!

  பதிலளிநீக்கு
 10. ரியாஸ் அஹமது கூறியது...

  // நான் தின்ன வந்த வடைக்காக தான் வெங்காயம் வதகினாகளோ
  வடையும் வெங்காய சட்டினியும் அருமை//
  சூடாக இருந்ததா?
  ஒரு நன்றி!

  பதிலளிநீக்கு
 11. ரியாஸ் அஹமது கூறியது...

  // வித்தியாசமான மூன்று ...முத்துக்கள் தந்து அசத்தி விட்டீர்கள்//
  இரண்டாவது நன்றி ரியாஸ்.

  பதிலளிநீக்கு
 12. ரியாஸ் அஹமது கூறியது...

  //அனைத்து வாக்குகளும் அள்ளி தந்தோம்
  3 comments ....he he plz note ..3 efffect//

  மூன்றாவது நன்றி!

  பதிலளிநீக்கு
 13. வலையகம் கூறியது...

  //வணக்கம் நண்பரே

  உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

  http://www.valaiyakam.com///
  இணைத்து விட்டேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 14. HajasreeN கூறியது...

  //wittiyasama irukku, kaathoram mudi naraikkuthaa ? atha pidungi podalame?//
  நன்றி நண்பரே!தற்பொழுது தலை முடி முழுவதும் நரைத்து விட்டதே!

  பதிலளிநீக்கு
 15. ஜீ... கூறியது...

  //குரைக்கும் தெருநாய்கள்

  முறைக்கும் மனைவி!//

  //என்னா ஒரு வில்லத்தனம்! :-)//

  சத்தமா எதுவும் சொல்லாதீங்க!

  பதிலளிநீக்கு
 16. ஜீ... கூறியது...

  //நீங்க இளைஞன் பாஸ்! :-)
  பதிவு அருமை!//

  உங்களுக்கு ஒரு பார்ட்டி கொடுக்க வேண்டும்!
  நன்றி ஜீ.

  பதிலளிநீக்கு
 17. FOOD கூறியது...

  //செந்தில்-கவுண்டமணி காமெடி//
  //யாரு, நம்ம சிபி செந்தில் காமெடியா, அது நல்லாத்தான்//

  அதுவும்தான்!:D

  பதிலளிநீக்கு
 18. மிக அருமையாக உங்களுக்கு பிடித்தவைகளை மூன்று மூன்றாக தொகுத்துதந்திருக்கிறீர்கள்.உங்கள் போல் என்னால் தர இயலாவிட்டாலும் எனக்குப் பிடித்த மூன்றை தருகிறேன்.

  1.உங்கள் பதிவு
  2.உங்களுக்கு பதிவுக்கு வரும் பின்னோட்டங்கள்
  3.பின்னோட்டத்திற்கு நீங்கள் தரும் பதில்கள்

  பதிலளிநீக்கு
 19. அண்ணே கலக்கலா சொல்லி இருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 20. வித்தியாசமான மூன்று ...முத்துக்கள் தந்து அசத்தி விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 21. //பைத்தியம் )இதுவரை பிடிக்கவில்லை)//

  பிறகு எதற்கு சென்னைப்பித்தன் என்று பெயர் வைத்துள்ளீர்கள் சார்?

  பதிலளிநீக்கு
 22. //தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சி என்று முன்பே தெரிந்து,திட்டமிட்டு அதைப் பார்க்க அமரும்போது மின்சாரம் போய் விடுகிறதே ஏன்?//

  அதற்குப்பெயர்தான் தொலை(யும்)காட்சியோ?

  பதிலளிநீக்கு
 23. //’சுட்ட’ அப்பளம்//

  திருடாதீங்க சார்!

  பதிலளிநீக்கு
 24. //சிரிக்க வைக்கும் மூன்று
  பதிவுகளில் வரும் பல ஜோக்ஸ்//

  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 25. வித்தியாசமான, சிரித்து விழ வைத்த மூன்று. கடமை கண்ணியம் கட்டுப்பாடு.. ஹிஹிஹிஹி.

  முடி நரைச்சுப் போனவங்க கண்ணாடில பாத்து தன் கஷ்டத்தை நினைச்சுக்குவாங்க.. அந்த முடியே காணாம போயிட்டா? சோதனை மேல் சோதன்..

  பதிலளிநீக்கு
 26. வே.நடனசபாபதி கூறியது...

  //மிக அருமையாக உங்களுக்கு பிடித்தவைகளை மூன்று மூன்றாக தொகுத்துதந்திருக்கிறீர்கள்.உங்கள் போல் என்னால் தர இயலாவிட்டாலும் எனக்குப் பிடித்த மூன்றை தருகிறேன்.

  1.உங்கள் பதிவு
  2.உங்களுக்கு பதிவுக்கு வரும் பின்னோட்டங்கள்
  3.பின்னோட்டத்திற்கு நீங்கள் தரும் பதில்கள்//
  மூன்றுபற்றிய உங்கள் பதிவுக்கு முன்னோட்டமாக உங்கள் பின்னோட்டத்தை எடுத்துக் கொள்ளலாமா?
  நன்ரி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 27. விக்கியுலகம் கூறியது...

  //அண்ணே கலக்கலா சொல்லி இருக்கீங்க!//
  நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 28. மாலதி கூறியது...

  //வித்தியாசமான மூன்று ...முத்துக்கள் தந்து அசத்தி விட்டீர்கள்//
  நன்றி மாலதி.

  பதிலளிநீக்கு
 29. ! சிவகுமார் ! கூறியது...

  //பைத்தியம் )இதுவரை பிடிக்கவில்லை)//

  //பிறகு எதற்கு சென்னைப்பித்தன் என்று பெயர் வைத்துள்ளீர்கள் சார்?//
  எந்தப் பைத்தியம் தான் பைத்தியம் என்று ஒத்துக்கொள்ளும்?

  பதிலளிநீக்கு
 30. ! சிவகுமார் ! கூறியது...

  //தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சி என்று முன்பே தெரிந்து,திட்டமிட்டு அதைப் பார்க்க அமரும்போது மின்சாரம் போய் விடுகிறதே ஏன்?//

  //அதற்குப்பெயர்தான் தொலை(யும்)காட்சியோ?//
  இருக்கும்,இருக்கும்!

  பதிலளிநீக்கு
 31. ! சிவகுமார் ! கூறியது...

  //’சுட்ட’ அப்பளம்//

  // திருடாதீங்க சார்!//

  “பித்தா,பிறைசூடி,என்னைக் காப்பாத்தப்பா”
  நன்றி சிவகுமார்.

  பதிலளிநீக்கு
 32. செங்கோவி கூறியது...

  //சிரிக்க வைக்கும் மூன்று
  பதிவுகளில் வரும் பல ஜோக்ஸ்//

  // நன்றி ஐயா.//

  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 33. அப்பாதுரை கூறியது...

  //வித்தியாசமான, சிரித்து விழ வைத்த மூன்று. கடமை கண்ணியம் கட்டுப்பாடு.. ஹிஹிஹிஹி.

  முடி நரைச்சுப் போனவங்க கண்ணாடில பாத்து தன் கஷ்டத்தை நினைச்சுக்குவாங்க.. அந்த முடியே காணாம போயிட்டா? சோதனை மேல் சோதன்..//

  பிரச்சினையே இல்லை.யூல் பிரன்னர் ஸ்டைல் என்று சொல்லிக் கொள்ளலாம்!
  நன்றி அப்பாதுரை.

  பதிலளிநீக்கு
 34. சார்

  எல்லாமே சூப்பர். பெண்டாட்டியின் முறைப்ப; எனக்கு பிடிக்காத மூன்றில் கடைசி நக்கல்; என்னையே என்னால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை - என்ற பளிச்.

  பிடித்த உணவு லிஸ்ட் அமோகம். என் அம்மா இங்கே வந்தபோது விதவிதமாக இந்த எழுபது வயதில் செய்து போட்டதற்கு என்னவெல்லாம் நன்றி சொல்லுவது.

  உதிரி: இதை படித்துவிட்டு என் ப்ளாக் வந்து என்னை பற்றி தப்பாய் நினைக்காதீர்கள். நான் கடைசியில் போட்டு இருக்கும் இடுகை - சும்னங்காட்டியும் !

  பதிலளிநீக்கு
 35. சாய் கூறியது...

  //சார்

  எல்லாமே சூப்பர். பெண்டாட்டியின் முறைப்ப; எனக்கு பிடிக்காத மூன்றில் கடைசி நக்கல்; என்னையே என்னால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை - என்ற பளிச்.

  பிடித்த உணவு லிஸ்ட் அமோகம். என் அம்மா இங்கே வந்தபோது விதவிதமாக இந்த எழுபது வயதில் செய்து போட்டதற்கு என்னவெல்லாம் நன்றி சொல்லுவது.

  உதிரி: இதை படித்துவிட்டு என் ப்ளாக் வந்து என்னை பற்றி தப்பாய் நினைக்காதீர்கள். நான் கடைசியில் போட்டு இருக்கும் இடுகை - சும்னங்காட்டியும் !//

  நன்றி சாய்.உங்கள் பதிவில் என் கமெண்ட்!

  பதிலளிநீக்கு
 36. மூணு மூணு விடயங்கள் நல்லாயிருகு சார்

  பதிலளிநீக்கு
 37. நன்றி சார். என் ப்ளோகில் உங்களுக்கு பதில் போட்டு இருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 38. Riyas கூறியது...

  // மூணு மூணு விடயங்கள் நல்லாயிருகு சார்//
  நன்றி ரியாஸ்.

  பதிலளிநீக்கு
 39. சாய் கூறியது...

  //நன்றி சார். என் ப்ளோகில் உங்களுக்கு பதில் போட்டு இருக்கின்றேன்.//
  பார்த்தேன்;ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 40. ஐயா!
  நீங்கள் பட்டபாட்டை தற்போது
  நானும் படுகின்றேன்.
  சிவனே என்று நீங்கள்
  இருந்தீர்கள். நாராயணா என
  நானிருந்தேன்.
  என்ன செய்வது?
  விதி யாரை விட்டது.

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 41. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  //ஐயா!
  நீங்கள் பட்டபாட்டை தற்போது
  நானும் படுகின்றேன்.
  சிவனே என்று நீங்கள்
  இருந்தீர்கள். நாராயணா என
  நானிருந்தேன்.
  என்ன செய்வது?
  விதி யாரை விட்டது.//

  அவன் ஆட்டுவிக்கிறான்;நாம் ஆடத்தானே வேண்டும்!
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 42. மூணோண் மூணு!--

  முத்தான பதிப்பு .
  அழகான கருத்து
  உள்ளத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐய்யா

  பதிலளிநீக்கு
 43. M.R கூறியது...

  // மூணோண் மூணு!--

  முத்தான பதிப்பு .
  அழகான கருத்து
  உள்ளத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐய்யா//

  நன்றி M.R.

  பதிலளிநீக்கு
 44. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  // மூன்றும் முத்துக்கள் தலைவரே..//

  நன்றி கருன்.

  பதிலளிநீக்கு
 45. //மூன்றுபற்றிய உங்கள் பதிவுக்கு முன்னோட்டமாக உங்கள் பின்னோட்டத்தை எடுத்துக் கொள்ளலாமா?//

  தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நிச்சயம் முயற்சிப்பேன்.

  பதிலளிநீக்கு
 46. வே.நடனசபாபதி கூறியது...

  //மூன்றுபற்றிய உங்கள் பதிவுக்கு முன்னோட்டமாக உங்கள் பின்னோட்டத்தை எடுத்துக் கொள்ளலாமா?//

  //தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நிச்சயம் முயற்சிப்பேன்.//
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 47. 33333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333

  பதிலளிநீக்கு
 48. ////////
  2)எனக்குப் பிடிக்காத மூன்று

  பைத்தியம்(இதுவரை பிடிக்கவில்லை)/
  ////

  தங்களின் விருப்பம் போல் விரைவில் பிடிக்க வாழ்த்துகிறேன்...

  பதிலளிநீக்கு
 49. ///////
  8)சிரிக்க வைக்கும் மூன்று
  டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்
  செந்தில்-கவுண்டமணி காமெடி
  பதிவுகளில் வரும் பல ஜோக்ஸ்////////

  நாங்க மெனக்கிட்டு பதிவாபோடுறோம்
  அதெல்லாம் உங்களுக்கு ஜோக்கா...

  பதிலளிநீக்கு
 50. /////
  3)பிடித்த உணவு வகை
  மிளகு குழம்பு
  பருப்புத் துவையல்
  சுட்ட அப்பளம்///////  சுட்ட அப்பளமா..

  சரி எங்கிருந்து சுடுவிங்க...
  வீட்டிலிருந்தா அல்லது கடையில் இருந்தா...

  சுடுவது தவறில்லையா....

  பதிலளிநீக்கு
 51. ///////
  16)இது இல்லாமல் வாழ முடியாது என நினைப்பது

  இதைத் தொடர நான் அழைப்பது---ஜோதியில் கலக்க யாருக்கெல்லாம் விருப்பமோ.வாங்க!////////


  எந்த ஜோதி பரங்கிலையா..?

  பதிலளிநீக்கு
 52. வணக்கம் தலைவரே...


  கொஞ்சம் நக்கல்...
  மேற்கண்ட கமாண்ட்ஸ் மறந்திடுங்க...

  அடுத்த வருவது என்னுடைய கமாண்ட்ஸ்

  பதிலளிநீக்கு
 53. தங்களின் மனநிலையை படம்பிடித்து காட்டகிறது...

  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 54. பல பதிலகள் சுவாரஸ்யமாகவும் சில பதில்கள் ஹாஸ்யமாகவும்
  ஒரே ஒரு பதில் மட்டும் இப்படிச் சொல்லாமல் இருந்திருக்கலாமோ
  என்னும் படியாகவும் இருந்தது
  முத்தான பதில்களைத் தந்தமைக்கும்
  எனது பதிவுக்கு வந்திருந்து வாழ்த்தியமைக்கும் நன்றி
  தொடர்ந்து சந்திப்போம்

  பதிலளிநீக்கு
 55. பல பதிலகள் சுவாரஸ்யமாகவும் சில பதில்கள் ஹாஸ்யமாகவும்
  ஒரே ஒரு பதில் மட்டும் இப்படிச் சொல்லாமல் இருந்திருக்கலாமோ
  என்னும் படியாகவும் இருந்தது
  முத்தான பதில்களைத் தந்தமைக்கும்
  எனது பதிவுக்கு வந்திருந்து வாழ்த்தியமைக்கும் நன்றி
  தொடர்ந்து சந்திப்போம்

  பதிலளிநீக்கு
 56. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  //33333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333//
  இது எனக்குப் பைத்தியம் பிடிக்க வைக்கும் முயற்சியா?!
  நன்றி சிபி.

  பதிலளிநீக்கு
 57. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  ////////
  2)எனக்குப் பிடிக்காத மூன்று

  பைத்தியம்(இதுவரை பிடிக்கவில்லை)/
  ////

  //தங்களின் விருப்பம் போல் விரைவில் பிடிக்க வாழ்த்துகிறேன்...//
  எதுக்கெல்லாம் வாழ்த்துவது என்ற விவஸ்தையே இல்லாமல் போயிடுச்சு!(இதையெல்லாம் படிச்சதும் பிடித்தாலும் பிடிக்கலாம்)

  பதிலளிநீக்கு
 58. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  ///////
  8)சிரிக்க வைக்கும் மூன்று
  டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்
  செந்தில்-கவுண்டமணி காமெடி
  பதிவுகளில் வரும் பல ஜோக்ஸ்////////

  //நாங்க மெனக்கிட்டு பதிவாபோடுறோம்
  அதெல்லாம் உங்களுக்கு ஜோக்கா...//
  நான் ஜோக்கான பதிவுகள் பற்றிச் சொல்லவில்லை;பதிவில் வரும் ஜோக்ஸ் பற்றித்தான்!

  பதிலளிநீக்கு
 59. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  /////
  3)பிடித்த உணவு வகை
  மிளகு குழம்பு
  பருப்புத் துவையல்
  சுட்ட அப்பளம்///////  // சுட்ட அப்பளமா..

  சரி எங்கிருந்து சுடுவிங்க...
  வீட்டிலிருந்தா அல்லது கடையில் இருந்தா...

  சுடுவது தவறில்லையா....//

  முருகா!இவரும் சிவகுமாருடன் சேர்ந்து விட்டாரே. உன்னையும் கேட்பார்கள் ,அவ்வைக்குப் பழத்தை ஏன் ’சுட்டு’க் கொடுத்தாய் எனறு.

  பதிலளிநீக்கு
 60. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  ///////
  16)இது இல்லாமல் வாழ முடியாது என நினைப்பது

  //இதைத் தொடர நான் அழைப்பது---ஜோதியில் கலக்க யாருக்கெல்லாம் விருப்பமோ.வாங்க!////////


  எந்த ஜோதி பரங்கிலையா..?//

  காந்தமலை ஜோதி தெரியும்,அது என்ன பரங்கிமலை ஜோதி?

  பதிலளிநீக்கு
 61. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //வணக்கம் தலைவரே...


  கொஞ்சம் நக்கல்...
  மேற்கண்ட கமாண்ட்ஸ் மறந்திடுங்க...

  அடுத்த வருவது என்னுடைய கமாண்ட்ஸ்//
  கிண்டல் இல்லையென்றால் போரடித்து விடும்.ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 62. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //தங்களின் மனநிலையை படம்பிடித்து காட்டகிறது...

  வாழ்த்துக்கள்..//
  3+3 நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 63. Ramani கூறியது...

  //பல பதிலகள் சுவாரஸ்யமாகவும் சில பதில்கள் ஹாஸ்யமாகவும்
  ஒரே ஒரு பதில் மட்டும் இப்படிச் சொல்லாமல் இருந்திருக்கலாமோ
  என்னும் படியாகவும் இருந்தது
  முத்தான பதில்களைத் தந்தமைக்கும்
  எனது பதிவுக்கு வந்திருந்து வாழ்த்தியமைக்கும் நன்றி
  தொடர்ந்து சந்திப்போம்//

  எந்தப் பதில் என்று சொல்லியி ருந்தால் வரும் பதிவுகளில் கவனமாக இருக்க உதவுமே!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
  தொடர்வோம்!

  பதிலளிநீக்கு
 64. ஒவ்வொரு மூன்றுகளும் தந்தவிதம் அருமை
  ஐயா .எனக்காக இன்னொரு தகவல் பரிமாற்றம்
  நீங்கள் செய்ய வேண்டும் .எங்கள் புலவர் ஐயா
  சா இராமாநுசம் அவர்களின் கருத்துரைப் பெட்டியில்
  என்னால் கருத்துரை இட முடிவதில்லை அந்தப் பெரியவர்
  மீதும் அவர்கவிதைகள்மீதும் நான்கொண்டிருக்கும் விருப்பை
  கருத்திட முடியாமல் தவிக்கும் என் மனதின் ஆதங்கத்தைத்
  தெருவிப்பீர்களா?......

  பதிலளிநீக்கு
 65. உங்கள் பின்னூட்டம் நெகிழ வைத்து விட்டது.அவருக்குத் தெரிவித்து விட்டேன்.
  நன்றி அம்மா!

  பதிலளிநீக்கு
 66. அனைத்து பதில்களும் சிற‌ப்பாக இருக்கின்றன!

  பதிலளிநீக்கு
 67. நகைச்சுவை உணர்வோடு முணோன் மூணு பதிவை கலக்கிவிட்டீர்கள் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 68. //சொன்னவர்கள் பறக்க விட்டு விட்டார்கள் .
  நானாவது ’பிடித்துக்’ கொள்கிறேனே!
  அவர்கள் பிடிக்கிறார்கள்;எனக்குப் பிடிக்கவில்லை

  பைத்தியம்(இதுவரை பிடிக்கவில்லை)

  தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சி என்று முன்பே தெரிந்து,திட்டமிட்டு அதைப் பார்க்க அமரும்போது மின்சாரம் போய் விடுகிறதே ஏன்?//
  சிரித்துக்கொண்டே படித்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 69. மனோ சாமிநாதன் கூறியது...

  //அனைத்து பதில்களும் சிற‌ப்பாக இருக்கின்றன!//
  நன்றி மனோ சாமிநாதன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 70. மாய உலகம் கூறியது...

  //நகைச்சுவை உணர்வோடு முணோன் மூணு பதிவை கலக்கிவிட்டீர்கள் பாராட்டுக்கள்//
  நன்றி மாய உலகம்.

  பதிலளிநீக்கு
 71. மாய உலகம் கூறியது...

  //சொன்னவர்கள் பறக்க விட்டு விட்டார்கள் .
  நானாவது ’பிடித்துக்’ கொள்கிறேனே!
  அவர்கள் பிடிக்கிறார்கள்;எனக்குப் பிடிக்கவில்லை

  பைத்தியம்(இதுவரை பிடிக்கவில்லை)

  தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சி என்று முன்பே தெரிந்து,திட்டமிட்டு அதைப் பார்க்க அமரும்போது மின்சாரம் போய் விடுகிறதே ஏன்?//
  // சிரித்துக்கொண்டே படித்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்//
  மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 72. பின்னரே நினைவுக்கு வந்தது,சாப்பிட்ட பின் பீடா போட்டேன் என்பது!//

  ஐயா...இது ரொம்ப ஓவரு. நீங்கள் எம் மனம் நோகும் வண்ணம் உங்கள் உடல் நிலை பற்றிச் சீரியஸ் ஆகச் சொல்லிட்டு, பின்னர் காமெடி போன்று மாற்றியிருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 73. உங்களின் ரசனைகளை முத்தான மூன்று விடயங்களாகத் தொகுத்து, வெவ்வேறு தலைப்பின் கீழ் பதிந்திருக்கின்றீர்கள். ரசனைகளிலும் சமூகம் மீதான அக்கறை தெரிகின்றது.

  ரசித்தேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 74. அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். எல்லா விஷயங்களும் எதார்த்தமாக, நகைச்சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்

  //குறைக்கும்
  நரைக்கும்
  முறைக்கும்

  சூப்பர்.

  பதிலளிநீக்கு
 75. நிரூபன் கூறியது...

  பின்னரே நினைவுக்கு வந்தது,சாப்பிட்ட பின் பீடா போட்டேன் என்பது!//

  //ஐயா...இது ரொம்ப ஓவரு. நீங்கள் எம் மனம் நோகும் வண்ணம் உங்கள் உடல் நிலை பற்றிச் சீரியஸ் ஆகச் சொல்லிட்டு, பின்னர் காமெடி போன்று மாற்றியிருக்கிறீங்க.//
  சீரியஸ் காமெடி?!:)
  அன்புக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 76. நிரூபன் கூறியது...

  // உங்களின் ரசனைகளை முத்தான மூன்று விடயங்களாகத் தொகுத்து, வெவ்வேறு தலைப்பின் கீழ் பதிந்திருக்கின்றீர்கள். ரசனைகளிலும் சமூகம் மீதான அக்கறை தெரிகின்றது.

  ரசித்தேன் ஐயா.//
  நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 77. பாலா கூறியது...

  //அழைப்பை ஏற்று பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். எல்லா விஷயங்களும் எதார்த்தமாக, நகைச்சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்

  //குறைக்கும்
  நரைக்கும்
  முறைக்கும்

  சூப்பர்.//
  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 78. மிக்க நன்றி ஐயா என் தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு.
  அத்தோடு என் மனவலி தீர வழியும் பிறந்துவிட்டது .
  உங்கள் ஆக்கங்கள் காண மீண்டும் வருகிறேன்......

  பதிலளிநீக்கு
 79. அம்பாளடியாள் கூறியது...

  // மிக்க நன்றி ஐயா என் தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு.
  அத்தோடு என் மனவலி தீர வழியும் பிறந்துவிட்டது .
  உங்கள் ஆக்கங்கள் காண மீண்டும் வருகிறேன்......//
  இதைக்கூடச் செய்யவில்லை யென்றால் எப்படி?
  நன்றி அம்பாளடியாள்!

  பதிலளிநீக்கு
 80. நகைச்சுவையாய்... எல்லா மூன்றும் முத்துக்கள்.
  சிவன் கோயில் கட்டும் போது எனக்கு சொல்லி அனுப்புங்கள். நீங்கள் சிவபக்தர் தானே . என் அருட்கவி தளத்திற்கு வந்து பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 81. மூணோண் மூணு - அத்தனை பதில்களும் ரசிக்கத்தக்கவை. நல்ல பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு