தொடரும் தோழர்கள்

ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஜினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 06, 2015

எச்சச்ச எச்சச்ச,கச்சச்ச கச்சச்ச!



முத்து படத்தில் ஒரு காட்சி.

மீனா நாடகத்தில் நடிக்கும்போது ரஜனி தும்மல் போடுவார்.

மீனா அவரைக் கண்டிப்பார்.

உடனே ரஜனி சொல்வார்”தும்மலு,இருமலு,விக்கலு கொட்டாயி.............. இதெல்லாம் கேட்டு வராது,தானாதான் வரும்,,,,,,,,,எச்சச்ச எச்சச்ச கச்சச்ச கச்சச்ச”

ஆம் தும்மல் தானாகத்தான் வருகிறது.

வியாழன், ஜூலை 14, 2011

ரஜினி ரஜினிதான்!

ரஜினிகாந்த் அமிதாப்பிடம் சொன்னார்”எனாக்குத்தெரியாத ஆளே கிடையாது. ஏதாவதொரு ஆள் பேர் சொல்லுங்க.நிச்சயமாக எனக்குத் தெரிந்திருக்கும்.”

அமிதாப் எரிச்சலுடன் கேட்டார் “டாம் க்ரூஸ்ஸைத் தெரியுமா?”

”ஓ!என் பழைய நண்பராயிற்றே.வாங்க போய்ப் பார்க்கலாம்”என்றார் ரஜினி.

இருவரும் ஹாலிவுட் சென்று,ஸ்டூடியோவில் டாம் க்ரூஸ் அறைக் கதவைத்தட்டினர்.
டாம் க்ரூஸ் உரக்கக் குரல் கொடுத்தார்”தலைவா,வாங்க வாங்க.நீங்க வந்ததில் மிக மகிழ்ச்சி.நீங்களும் உங்கள் நண்பரும் என்னுடன் மதிய உணவு சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும்”.

அமிதாப் கொஞ்சம் அசந்து போனார்.ஆனாலும் சந்தேகம்.கேட்டார்”அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைத் தெரியுமா?” என்று

ரஜினி சொன்னார் “நன்றாகத் தெரியும்”.

இருவரும் வெள்ளை மாளிகைக்குச் சென்றனர்.

ரஜினியைப் பார்த்த ஒபாமா சொன்னார்” என்ன ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சி.ஒரு கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.வாங்க ,காஃபி சாப்பிடுவோம்; கூட்டம் கிடக்கட்டும் !”

அமிதாப் கொஞ்சம் ஆடிப் போனார்.

இருந்தும் ஒப்புக் கொள்ள மனமில்லாமல் கேட்டார்”போப்பைத் தெரியுமா?”

ரஜினி சொன்னார்”என் மூதாதையர்கள் இத்தாலியில் இருந்தனர்.போப்பை நன்றாகத்தெரியும்.

இருவரும் வாடிகன் சென்றனர்.

போப்பைப் பார்க்கப் பெரிய கூட்டம் கூடியிருந்தது.ரஜினி சொன்னார்”இங்கு நின்றால் நான் வந்திருப்பது போப்புக்குத் தெரியாது.நான் காவலர்களிடம் சொல்லி விட்டு உள்ளே போய் போப்புடன் பால்கனியில் வந்து நிற்கிறேன் பாருங்கள்” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

சொன்னது போலவே கொஞ்ச நேரத்தில் போப்புடன் பால்கனியில் வந்து நின்று கையசைத்தார் ரஜினி.திரும்பி வந்து பார்த்தால் அமிதாப்புக்கு ஒரு சிறிய நெஞ்சு வலி வந்து சிகிச்சை அளிக்கப் பட்டிருந்தது.

”என்ன ஆச்சு?” ரஜினி கேட்டார்.

அமிதாப் சொன்னார்.”நீங்கள் போப்புடன் பால்கனி வரும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை.நீங்கள் இருவரும் பால்கனிக்கு வந்தபின் அருகில் நின்ற இத்தாலியர் கேட்டார்---
.........
.........
“பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?!”