தொடரும் தோழர்கள்
மார்கழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்கழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, டிசம்பர் 26, 2015
ஆருத்ரா தரிசனம்.
மார்கழியின் மற்றொரு இனிய அங்கம்,திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக் கப்படும்,சிவனுக்கு உகந்த நாள்.
பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள். “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர் களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை.
அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.
அன்று,சிதம்பரத்தில் மிக விசேஷமான அபிஷேக ஆராதனைகள் செய்யப் படும் (கேட்டதுதான்.பார்த்ததில்லை)
எங்கள் வீடுகளில் செய்யப்படும் களியும் ஏழு கறிக்கூட்டும் மிகவும் சுவையானவை. ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது. இனிப்பான களியையும், உப்பு,காரம் நிறைந்த கூட்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது –சுகம்!
செய்முறை தெரிய வேண்டுமா?ஜெயஸ்ரீயைத் தவிர வேறு யாரைக் கேட்க முடியும்?
இன்று திருவாதிரை.தில்லை நடராஜரை வணங்கி எல்லா நலமும் பெறுவோம்.
(மீள்பதிவு)
டிஸ்கி:இந்த ஆண்டு எங்கள் வீட்டில் எந்தப் பண்டிகையும் கிடையாது;வழக்கமாகக் கொடுக்கும் எதிர் வீட்டுக்காரர்களும் மாற்றலில் போய் விட்டார்கள்;எனவே களி கூட்டு கிடையாது!
செவ்வாய், டிசம்பர் 16, 2014
மார்கழிப் பொங்கல்
இன்று மார்கழி முதல் நாள்.
தட்சணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி.
கோலம்,பஜனை,பொங்கல் என்று காலை வேளைகள்
அழகாகும்,பக்தி மயமாகும், சுவையாகும்.
பஜனை முடிந்து சூடான பொங்கல் சாப்பிட்ட
அந்த நாட்களை நினைத்துப் பார்த்து நாக்குச் சப்புக்கொட்டிக்கொள்ள வேண்டியதுதான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
