இன்று மார்கழி முதல் நாள்.
தட்சணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி.
கோலம்,பஜனை,பொங்கல் என்று காலை வேளைகள்
அழகாகும்,பக்தி மயமாகும், சுவையாகும்.
பஜனை முடிந்து சூடான பொங்கல் சாப்பிட்ட
அந்த நாட்களை நினைத்துப் பார்த்து நாக்குச் சப்புக்கொட்டிக்கொள்ள வேண்டியதுதான்.