தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 26, 2015

ஆருத்ரா தரிசனம்.

மார்கழியின் மற்றொரு இனிய அங்கம்,திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக் கப்படும்,சிவனுக்கு உகந்த நாள்.

பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள். “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர் களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை.

அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

அன்று,சிதம்பரத்தில் மிக விசேஷமான அபிஷேக ஆராதனைகள் செய்யப் படும் (கேட்டதுதான்.பார்த்ததில்லை)

எங்கள் வீடுகளில் செய்யப்படும் களியும் ஏழு கறிக்கூட்டும் மிகவும் சுவையானவை. ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது. இனிப்பான களியையும், உப்பு,காரம் நிறைந்த கூட்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது –சுகம்!

செய்முறை தெரிய வேண்டுமா?ஜெயஸ்ரீயைத் தவிர வேறு யாரைக் கேட்க முடியும்?

இன்று திருவாதிரை.தில்லை நடராஜரை வணங்கி எல்லா நலமும் பெறுவோம்.

(மீள்பதிவு)


டிஸ்கி:இந்த ஆண்டு எங்கள் வீட்டில் எந்தப் பண்டிகையும் கிடையாது;வழக்கமாகக் கொடுக்கும் எதிர் வீட்டுக்காரர்களும்  மாற்றலில் போய் விட்டார்கள்;எனவே களி கூட்டு கிடையாது!

9 கருத்துகள்:

 1. ஆருத்ரா தரிசனம், திருவாதிரைக் களி
  எல்லாம் பேசிச்செல்லும் பகிர்வு
  அருமை ஐயா..

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா
  அற்புதமான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. தில்லையிலேயே நான்காண்டுகள் படித்து அவர் பெயரையே கொண்டிருக்கும் நான் திருவாதிரைப் பண்டிகையை கொண்டாடாமல் இருப்பேனா? நேற்று திருவாதிரை களி செய்து, தில்லை நடராசருக்கு படைத்து, வணங்கி திருவாதிரைப் பண்டிகையை கொண்டாடினோம்.

  பதிலளிநீக்கு
 4. ஆருத்ரா தரிசனப்பதிவு அருமை! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 5. நான் பிரயாணத்தில் இருந்ததால் களியும் கூட்டும் மிஸ்ட்..இல்லையெனில் செய்திருப்பேன் ..

  கீதா

  பதிலளிநீக்கு