தொடரும் தோழர்கள்

வியாழன், டிசம்பர் 31, 2015

சந்திப்பும்,பிரிவும்!
தயங்கி நிற்கின்றாய் அங்கே

இருவருக்கும் தெரியும் நம் பிரிவு நிச்சயம் என்று

எஞ்சி நிற்கப் போகின்றவை உன் நினைவுகள் மட்டுமே!

எத்தனை உணர்ச்சிகளின் கலவை அந்த நாட்கள்

உற்சாகமாய்ச் சில,உயிரற்றவையாய் சில

இன்பத்தின் எல்லையைத் தொட்டவை சில

துன்பத்தில் அழுந்தித் துவண்டவை சில

ஆறுதல் அளித்தவை சில

ஆதரவற்றுத் தவித்தவை சில

இலாப நட்டக் கணக்குப் பார்த்தால்

இருப்பு என்னவோ பூச்சியம்தான்!

போ!

அடுத்தவள் உள் நுழையக்காத்திருக்கிறாள்

வரட்டும் அவள்.

என்ன வெல்லாம் சுமந்து வருவாளோ அவள்?

எதிர்பார்ப்பதுதானே என்னால் முடியும்?!

பழையன கழிதலும் 

புதியன புகுதலும்

நிகழ்வுதுதானே !

ஆனால் 

உன் சந்திப்பும் பிரிவும்

என் வயதைக் கூட்டி விட்டனவே! 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!                                              வருக 201615 கருத்துகள்:

 1. அருமையான விடைபெறலும், வரவேற்பும் ஐயா
  தங்களுக்கு இனிய 2016 புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா

  வருகிற ஆங்கில புத்தாண்டு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் த.ம3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. நினைத்தேன்!

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. தலைப்பைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது! இது புதுவருடத்திற்கான வரவு என்று...

  எங்கள் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள் சார்!

  பதிலளிநீக்கு
 5. அருமையான வரிகள் 2016, 15 ற்கான காதல் வரிகள்!!!!! படம் கூட அழகுதான்! ம்இப்படித்தானே ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தைக் கழட்டி விடுகிறது!

  பதிலளிநீக்கு
 6. வளர்பிறை வண்ணம் போலே
  வாழ்மனை சிறக்க மக்கள்
  இளமையின் பூரிப் பாக
  எழிலுற நெஞ்சம் எல்லாம்
  அளவிலாச் செல்வம் சேர்த்தும்
  அறிவுடன் அன்பைச் கோர்த்தும்
  வளமுடன் வாழ்க வென்று
  வாஞ்சையாய் வாழ்த்து கின்றேன் !

  தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள அய்யா,
  வணக்கம்.
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016
  நட்புடன்,
  புதுவைவேலு

  பதிலளிநீக்கு
 8. வித்தியாசமான நல்வரவிற்கு நன்றி. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

  பதிலளிநீக்கு
 9. மிக நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அய்யாவின் பக்களில் ....

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா!
  http://www.friendshipworld2016.com/

  பதிலளிநீக்கு
 10. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

  பதிலளிநீக்கு
 11. புத்தாண்டை வரவேற்று தாங்கள் இயற்றியிருக்கும் கவிதை அருமை. பாராட்டுக்கள்! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. அருமை அய்யா! பிறக்கும் இனிய புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்! என்றும் அன்புடன் கரூர்பூபகீதன்!

  பதிலளிநீக்கு
 13. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

 14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு