“//வாழ்க்கையின் சூறாவளிகளில் நமக்கு உதவ அவன் இருக்கிறான் என்ற
நம்பிக்கை நமக்கும் வேண்டும்.”// ...சென்னை பித்தனின்
அந்த மானைப் பாருங்கள் பதிவிலிருந்து.
//அற்புதம் - கடைசி வரியைத் தவிர.
இல்லை. அப்படி இருந்தால் அவளாகவும் இருக்கலாம். இல்லையா?//
இல்லை. அப்படி இருந்தால் அவளாகவும் இருக்கலாம். இல்லையா?//
....அப்பதிவில் திரு அப்பாதுரை அவர்களின் கருத்து.
இல்லை-இல்லையா ஆகி விட்டது.
அவனும்
அவளும்தானே அர்த்தநாரி?
இப்படி என் எண்ணச் சிறகுகள்
விரிந்தன.அவன்- அவள்-அது...!அதுவாகக் கூட இருக்கலாம் தானே! நிலம்,நீர்,நெருப்பு,காற்று,அண்டம்-பஞ்சபூதங்கள்!
ஒவ்வொன்றுக்கும்
ஒரு தலம் . அதை வர்ணித்து
தீக்ஷிதர் கீர்த்தனைகள் பாடியுள்ளார்
ஊர் கீர்த்தனை ராகம்
நிலம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதம் ஆனந்தபைரவி
நீர் திருவானைக்கா ஜம்புபதே யமுனாகல்யாணி
நெருப்பு திருவண்ணாமலை அருணாசலநாதம் சாரங்கா
காற்று காளஹஸ்தி காளஹஸ்தீசம் உசேனி
அண்டம் சிதம்பரம் ஆனந்தநடன கேதாரம்
மகாகவி காளிதாசர் சாகுந்தலத்தில் இறை வணக்கத்தை
இயற்கைத் தேவதைகளுக்கு அர்ப்பணித்துள்ளர்.
இறைவனைப் போற்றுவதும்,தூற்றுவதும் அவரவர் இன்பதுன்பங்களைப் பொறுத்தே அமையும்
450க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை(நமக்குக் கிடைத்தது வரை) சுந்தரத் தெலுங்கினில் இயற்றிய தியாக ராஜர்.இராமனைக் கண்டித்தும் உள்ளார்”போலி பக்தர்களையும், மெய்ய டியார்களையும் சமமாக்குவது
உனக்கு மரியாதை அல்ல.என்னை இன்னும் ரட்சிக்காமல் இருப்பது சரிஅல்ல”என்று!
நமது தமிழ்த் தியாகராசர் சிவனும் ”நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா? நீ இரங்காயெனில் புகலேது என்றெல்லாம் அவளைக்
கேட்டிருக்கிறார்.
நம் கவியரசு அவர்கள் ராமன் எத்தனை
ராமனடி என்று நாமாவளி பாடி விட்டு “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்” அவனுக்கென்ன தூங்கி விட்டான், அகப்பட்டவன்
நானல்லவா”,காலம் செய்த கோலமடி,கடவுள் செய்த குற்றமடி” என்றெல்லாம்
பாடியிருக்கிறார்
ஆனால் நோபல் பரிசு பெற்ற பௌதிக விஞ்ஞானி
லியான் மேக்ஸ் லெடெர்மேன் தமது புத்தகத்தில் ஹிக்ஸ் போசனின் கண்டு பிடிப்பைக் ”கடவுளின்
அணு”(god’s particle) என்று பெயரிட்டு போசனைக்
கௌரவிப்பது மட்டுமல்லாமல் கடவுளையும் ஆராதித்துள்ளார்.
இல்லையென்றால் அது இல்லையென்றாலும்,
அவன் ,அவள்,அது உண்டென்றால் அது உண்டுதான் என்றே நினைக்கத் தோன்றுகிறது
......பார்த்தசாரதி
டிஸ்கி:உண்டென்று ஏற்றுக் கொண்டால்தானே போற்றுதலும்,தூற்றுதலும்!
இல்லையென்று சொன்னாலும்,இருந்தா நல்லாருக்கும் என்று சொன்னாலும்,போற்றுதலும் இல்லை தூற்றுதலும் இல்லை அல்லவா?
