தொடரும் தோழர்கள்

ஞாயிறு, நவம்பர் 01, 2015

விடுமுறை,சிரிமுறை!!



ஒரு தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி உள்ளூர் பணக்காரர்களில்  யார் தம் நிறுவனத் துக்கு நன்கொடையே கொடுத்ததில்லை என்று பார்த்தார்.லட்சக்கணக்கில் பொருள் ஈட்டும் செல்வந்தர் ஒருவரின் பெயர் கிடைத்தது.அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்

“நீங்கள் உள்ளூர்ப் பெரிய மனிதர்களில் ஒருவர்.ஆண்டுக்கு60 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கிறீர்கள்.ஆனால் எந்த தொண்டு நிறுவனத்துக்கும் பண உதவி செய்ததில்லை. உங்களைப் பணக்காரராக்கிய இந்தச் சமூகத்துக்கு நீங்கள் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?” என்று கேட்டார்.

அவர் சொன்னார்”என்னைப் பற்றி எல்லாம் அறிந்தவராகத் தெரிகிறீர்கள்.என் தந்தை மிகுந்த நோய்வாய்ப்பட்டிருக்கிறார்;அவரது ஓய்வூதியம் அவரது மருத்துவச் செலவில் ஒரு சிறு பங்கே என்பது உங்களுக்குத் தெரியுமா?”

நிர்வாகி திகைத்தார்.

என் சகோதரர் கண்பார்வையற்று சக்கர நார்காலியிலேயே காலத்தைக் கழிக்கிறார்; அவருக்கு வருமானம் மிகக் குறைவு என்பது தெரியுமா?”

நிர்வாகி தயங்கிப் பேசினார்”வருந்துகிறேன்”

”என் சகோதரியின் கணவர் ஒரு வாகன விபத்தில் உயிரிழந்து அவள் மூன்று குழந்தை களுடன் நிராதரவாய் இருக்கிறாள் என்பதாவது தெரியுமா”

நிர்வாகி தன் பேச்சுக்காக வெட்கினார்.சொன்னார்” இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது”

அவரை இடை மறித்த செல்வந்தர் சொன்னார்”அவர்களுக்கே நான் பண உதவி எதுவும் செய்யாதபோது,உங்களுக்கு ஏன் செய்ய வேண்டும்?!”




(ஆங்கில மூலம்)
r

31 கருத்துகள்:

  1. சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தது குட்டிக் கதை

    பதிலளிநீக்கு
  2. செல்வந்தர் மட்டுமல்ல அவர் சொல்வேந்தரும் கூட :)

    பதிலளிநீக்கு
  3. கடைசி வரி சிரிக்க வைக்க வில்லை. இப்படியும் சில மனிதர்களா என நினைக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  4. பலர் இவ்வாறான நிலையில் சூழலை சமாளிக்கின்றனர் என்பதே உண்மை.
    வாய்ப்பு கிடைக்கும்போது விக்ரமம் என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த புத்தர் சிலையைப் பற்றிய அனுபவப்பகிர்வைக் காண வருக. http://ponnibuddha.blogspot.com/2015/11/blog-post.html

    பதிலளிநீக்கு
  5. பலர் நிஜ வாழ்வில் இதுபோலக் கல் மனதுடன் இருக்கிறார்கள் நான் கண் கூடக் கண்டிருக்கிறேன் .இது exaggeration அல்ல

    பதிலளிநீக்கு
  6. சிரிக்க அல்ல சிந்திக்க வைத்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    சிந்தனைக்கு அறிவான கதை... சிரிக்கவும் வைத்தது... வாழ்த்துக்கள் ஐயா த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. அருமை யோசிக்க வைத்த கதை ஐயா

    பதிலளிநீக்கு
  9. இதை சிரிப்பு என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை.
    த ம 8

    பதிலளிநீக்கு
  10. சிந்திக்க வைக்கும் சிரிப்பு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  11. சிரிக்க மட்டு மல்ல சிந்திக் வைத்தீர்!

    பதிலளிநீக்கு