தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 18, 2015

நானும் ரௌடிதான்!-2




நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி,  பலார்ஷா, ஆம்லா, நாக்பூர், போபால், ஜான்ஸி, ஆக்ரா, இட்டார்ஸி, தாண்டி டெல்லியை அடைய மறுநாள் முழுவதும் ரெயிலில் கழிந்தது   . ஆக்ராவை கடக்கும் போது தாஜ்மஹால் நினைவு வந்தது. நீதிபதியின் மகள் முகம் தோன்றி மறைந்தது. டிம்பிளுக்கு தாஜ்மஹாலை அர்ப்பணித்தான்.


டெல்லியில் தன் பெயர் ரிஷி என்று முடிவு செய்தான். அதற்கடுத்த நாள் காலை ரிஷி டெல்லி அடைந்தான்.


டெல்லியில் இறங்கியவுடன் தலை சுற்றியது. திருச்சியை விட பன்மடங்கு பிரம் மாண்டம். சாந்தினி சவுக் செல்லும் ரயில் ஏறி பழைய டெல்லியை அடைந்தான். 



ரெயில்வே பயணிகள் தங்கும் இடத்தில் குளித்தான்.கேண்டினில் வயிராற உண்டான். வெளியே நடந்தபோது அவன் வேலை செய்த வங்கியின் பழையடெல்லி கிளை பெரிதாக தெரிந்தது. எதிரில் ஒரு முஸ்லீம் கிழவர் பெரிய டீக்கடை வைத்திருந்தார். அன்று ஞாயிறு அவரிடம் சென்று வேலை கேட்டான். ரிஷிக்கு உடனே வேலை கிடைத்தது.


அன்று அரை நாள் லீவு. கோல்ச்சா திரையரங்கில் ஹம் கிஸிஸே கம் நஹின்சினிமா பார்த்து ரீசார்ஜானான். நான் எவருக்கும் குறைந்தவன் அல்லஎன்று உணர்ந்தான் ரிஷி என்ற மாரி.


மறுநாள் காலை வங்கி திறந்தவுடன் மாற்றம் கிடைத்து வந்தவன் போல வேலையில் ஜாய்ன் பண்ண துடித்தான். வங்கிக்கு டீ கொடுப்பது தன் கடை தான் என்று தெரிந்த வுடன் மகிழ்ந்தான்.முதலாளி ரிஷியை அழைத்து வங்கிக்கு டீ எடுத்துச் செல்லும் சிப்பந்தியுடன் கூடப் போகச் சொன்னார். அந்தப் பையனிடம் பேசி தன்னை வங்கி ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தச்  சொன்னான்.


அவன் மனதில் ஒரு திட்டம் உருவாகியது. 5000 ரூபாய் எடுத்து ஆயிரம் தான் கிட்டியது. ஒரு இலட்சம் ரூபாயையாவது கையாடிவிட வேண்டும் என முடிவு செய்தான்.


தந்தை சிறு வயதில் விளக்கிய கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்கச் சீர்த்தவிடத்து  என்ற குறள் நினைவுக்கு வந்தது. ஆறு மாதம் எல்லோரோடும் பழகினான்.


நான்கு உருப்படாத கேடிகளின் சகவாசமும் கிடைத்தது. சிறிய கையாடல்களில் கிடைத்த லூட்டை சமமாக பகிர்ந்து கொண்டார்கள். அவர்களில் உ.பி.யின் கருமுக்தேஷ்வர்  கிராமத்தை சேர்ந்த கங்காராம் என்பவனை பிடித்திருந்தது. 



யமுனை பாயும் டெல்லிக்கு மிக அருகாமையில் கங்கை ஓடும் சமவெளி அதுவே. ஒரு முறை கங்காராமுடன் அவன் கிராமத்துக்குசென்று சுவையான விருந்தை, நேர்த்தியான விருந்தோம் பலை அனுபவித்திருக்கிறான். கங்காராம் தான் அவர்கள் கேங்கின் நடுப்புள்ளி. கங்கா ராமிடமிருந்து போன் என்றாலே அவர்கள் கூடும் இடத்திற்கு விரைவார்கள். 


ரிஷி ஒரு வருடத்தில் ரூ.5,000/-ரூபாய் அவர்களால் சம்பாதித்துள்ளான். அவர்கள் அவனை முழுவதும் நம்பவில்லை. எப்படி பணம் பண்ணுகிறார்கள் என்ற சங்கதி துளி கூட ரிஷிக்கு தெரியாது. பணம் இருந்தால A/C. ரெஸ்டாரண்டு இல்லையென்றால் ஆலிலை மேல் பூரி சப்ஜி. ப்ரூட் சாலட் ஒரு ரூபாய். அவன் மாதம் ரூபாய் 300யிலிருந்து 400/- செலவு செய்வான். டீக் கடையின் சம்பளம் கூட பேசவில்லை. உணவும், இருக்கும் இடமும் இலவசம். வங்கி வேலையில் கிடைக்கும் பணமே அவனுக்கு போதுமானது. 


வங்கி முதன்மை மேலாளராக உத்தம் குமார் என்ற வட இந்தியர் பதவி வகித்தார். பதவி உயர்வுக்கான நேர் உரையாடலை ஏற்கனவே நன்றாக முடித்திருந்தார். பதவி உயர்வை உத்தேசித்தது. அவருக்கு பழைய டெல்லிகிளையின் முதன்மை மேலாளர் போஸ்டிங் கிடைத்தது.





கிளையில் நடக்கும் அசம்பாவிதங்கள் தன் பதவி உவை பாதித்து விடக்கூடாது என்று மிகமிக எச்சரிக்கையாக இருந்தார். பெரிய கிளையாக இருந்ததால் 5 காஷியர்கள் எல்லோரும் திறமை சாலிகள். இதுவரை ரொக்கப் பிரச்சனை எதுவும் எழுந்ததில்லை. கண்காணிப்பாளர்களும் சூரப்புலிகள். 


ஆனால் ரிஷியின் கழுகப் பார்வையிலிருந்து பணத்தை எப்படி காக்கப் போகிறார் களோ?!  

கொக்கு தக்க தருணத்திற்காக காத்திருந்தது. ...........


(தொடரும்)


19 கருத்துகள்:

  1. என்னங்க சார் ஃபோர் ட்வென்ட்டியோட வீர சாகசம் போல் இருக்கிறதே. அடுத்து என்ன?

    பதிலளிநீக்கு
  2. குறள் எப்படியெல்லாம் பயன்படுகிறது சாமி...!

    பதிலளிநீக்கு
  3. //கொக்கு தக்க தருணத்திற்காக காத்திருந்தது. ...........//

    கொக்கைப்போன்றே நாங்களும் காத்திருக்கிறோம் ..... அடுத்த பகுதியைக் கொத்திப் பிடிக்க ..ஸாரி.. படிக்க :)

    பதிலளிநீக்கு
  4. ஐயா! GT இரயில் பாதையில் ராஜமுந்திரி வராது அது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. (கொல்கத்தா பாதை). விஜயவாடாவிற்கு பிறகு வாரங்கல்,பின்பு ராமகூடம் வரும். அதுதான் தவறுதலாக ராஜமுந்திரி என தட்டச்சு ஆகிவிட்டது என எண்ணுகிறேன். பிறகு நாக்பூர், அம்லா, இடார்சி, போபால், குவாலியர் ஆக்ரா, மதுரா.புது தில்லி என்றிருக்கவேண்டும். ஒருவேளை திரு மாரி தில்லி போகும் சந்தோஷத்தில் இந்த வரிசையை மறந்துவிட்டார் போலும். இருக்கட்டும். அவர் அந்த வங்கியில் என்ன தில்லுமுல்லு செய்ய இருக்கிறார் என அறிய காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது நேர்வழி!ஆனால் அவன் வழிதவறிப்போகிறான் என்பது ஒருகுறியீடாகச் சொல்லப்பட்ட வழி அந்தத் தவறான வழி! இது எப்படி இருக்கு!
      நன்றி சார்

      நீக்கு
    2. நீங்கள் சொல்வது ஒரு வாதத்திற்கு வேண்டுமானால் சரிதான். ஆனால் மாரி G.T இரயிலில் பயணித்தான் என்றதால் அந்த வழியில் ராஜமுந்திரி வராது என்று சொன்னேன். எனினும் ‘கதைக்கு காலுண்டோ’ என்ற சொல்லாட்சிப்படி நீங்கள் சொல்வது சரியே!!!!

      நீக்கு
  5. பற பற என்று கொண்டு சென்று இறுதியில்
    கொக்கு தக்க தருணத்திற்காக காத்திருந்தது. ........... எனக்கண்டதும் எனக்கு
    திக்கு என ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. 420 மாரியை சாரி ரிஷியை தொடர்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  7. இன்னமும் முக்கியமான கட்டத்தை எட்டவில்லை போலும்! காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா

    நன்றாக உள்ளது..படித்து மகிழ்ந்தேன் ஐயா.. தொடருங்கள்... த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. “ஹம் கிஸிஸே கம் நஹின்” சினிமா பார்த்து ரீசார்ஜானான். “நான் எவருக்கும் குறைந்தவன் அல்ல” என்று ...அஹஹஹ்ஹ

    கொக்கு ஒற்றைக்காலில் காத்திருக்கும் ஆனால் நாங்கள் அப்படி நிற்க முடியாததால் ரெண்டு காலையும் ஊன்றிக் காத்திருக்கின்றோம் அடுத்த பதிவிற்காக..அதாவது ரிஷி எனும் மாரி எனும் காத்திருக்கும் கொக்கிற்கு என்ன சிக்கப்போகின்றதோ என்று அறிய

    பதிலளிநீக்கு
  10. நாங்களும் கொக்குப் போல காத்திருக்கிறோம் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  11. உறுமீன் வரும்வரை நானும் காத்திருக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் அய்யா! நானும் மாரிக்காக காத்திருக்கேன் அடுத்து என்ன னு?

    பதிலளிநீக்கு
  13. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  14. நல்ல மழை என்பதால் தில்லி வரும் ரயில் ராஜ்முந்திரி வழியே வந்தது போலும்!!!

    மாரி என்கிற ரிஷி - சாந்த்னி சௌக் பகுதியில்.... அட நம்ம ஏரியாவிலிருந்து கிட்ட தான்! என்ன செய்யப் போகிறான்! தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஐயா !

    நம்ம பயலுக எங்குபோனாலும் திருந்தாதுகளே ! ம்ம் ரிஷி கொக்கு என்னதான் பண்ணும் மேலே படிக்கிறேன் !
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு