தொடரும் தோழர்கள்

சனி, நவம்பர் 07, 2015

உலகநாயகா!மருதநாயகமாக வா! -(மாயக்கட்டில் பகுதி-2!)



களத்தூர் கண்ணம்மாவின் செல்வமே,


கலை உலகின் ஆனந்த ஜோதியே
கலைத் தாயின் பாத காணிக்கையான
உன் கலைப் படைப்புக்களை
பார்த்தால் பசி தீரும்.
கலை உலகின் வானம்பாடி நீ.
இயக்குநர் சிகரத்தின் மேடையில்
மீண்டும் அரங்கேறி,அவர்
சொல்லத்தான் நினைத்தை
நினைத்தாலே இனிக்கும்படி
தில்லு முல்லு செய்யாமல்
ஒரு தொடர்கதை ஆக்கி
அபூர்வ ராகங்கள் பாட
உன்னால் தான் முடியும் தம்பி
நாம் பிறந்த மண்ணில்
இந்தியனாக, நாயகனாக,






தேவர் மகனாக திரை உலகோடு
ஏக் துஜே கேலியேஆகி
பேசாமல் பேசும் படம் எடுத்து
கண்ணில்லாமல் ராஜபார்வை பார்த்து
மூன்றாம் பிறையாய் சுடர்விட்ட நீ


ஆயிரம் பிறை சினிமா உலகிலேயே கண்டு களி
இளமையிலே ஊஞ்சலாடி
 மன்மத லீலை, புரிந்து
மன்மத அம்புகள் தொடுத்து
ஹலோ ராதா, ஹரே கிருஷ்ணா
என்று ராங் நம்பர்களை அழைத்து
உல்லாசப் பறவை ஆகப் பறந்து
மூன்று முடிச்சு போட்டாய்!
காக்கிச் சட்டையோடு
காதல் பரிசு தந்த,
ஜனரஞ்சக விக்ரம், சிங்காரவேலன்
எல்லாம் இன்ப மயம்
ஆனால் வாழ்வே மாயம்
சலங்கை ஒலியுடன் சாகர சங்கமமாகி,
ஸ்வாதி முத்யம் படைத்து
சிப்பிக்குள் முத்தானாய்.
16 வயதினிலே சப்பாணியாக
மயிலிடம் மையல் கொண்டு,
பலாத்காரம் செய்ய முனைந்த
பரட்டையைவதம் செய்தாய்
சிவப்பு ரோஜாக்களை
ரத்தத்தில் ஊற வைத்து
காதலியை ஆராதித்தாய்.
சட்டம் என் கையில் என்றில்லாமல்
சிறை சென்று தண்டனை அனுபவித்து,
கைதியின் டைரி குறிப்பில் எழுத
பலபடங்கள் உண்டு.
அவள் அப்படித்தான் என்றல்லாமல்
மகளிர் மட்டும் என்று முழங்கி
சதிலீலாவதியை, சரளாவை கெளரவித்தாய்
கோவை மாப்பிள்ளையாக
ஹேராம் என்று விருமாண்டியாக பல
குணாதிசயங்களை வெளிப்படுத்தி
ஆளவந்து, தப்புத் தாளங்கள் போட்டு,
உத்தம வில்லன் ஆனாய்
பாபநாசம் செய்தாய்,
முன்பல் கல்யாணராமனை
அற்புதமாக்கி,
கோகிலாவை காவியமாக்கி,
மீண்டும் கோகிலாவை காதலிக்க வைத்த 
சகலகலாவல்லன் நீ
மைக்கேல், மதன காமராஜனே,
அவ்வை ஷண்முகியே, பஞ்சதந்திரனே,
இந்த்ரன், சந்த்ரனே, தெனாலியே,
வசூல் ராஜாவே ரசகிர்களின் அபூர்வ
சகோதரனே (ராஜா என்னை மன்னித்து விடு)
வாழ்க நீ பல்லாண்டு!!!
தசாவதாரனே, விஸ்வரூபனே,
மஹாநதியே, அன்பே சிவம் உனக்கு
நான் உன்னைப்போல ஒருவன் தான் என்றாய்.
தவறு என்கிறோம் நாங்கள்
உன்னைப் போல் ஒரு கலைஞன் உண்டோ 
என்று அதிசயிக்கிறோம்.
தீபாவளிக்கு தூங்கா வனத்தில்
குருதிப்புனலுடன் வேட்டை ஆடு! விளையாடு!!
வெற்றிவிழா கொண்டாடு!!
மாயக் கட்டிலில் படுத்துறங்கி
மருதநாயகமாக ஜனனி
உலகநாயகனே!


28 கருத்துகள்:

  1. #களத்தூர் கண்ணம்'மாமா'வின் செல்வமே,#
    கமல் சீனிவாசன் மாமாவின் செல்வம்தானே :)

    பதிலளிநீக்கு
  2. ஆத்தாடி...! எத்தனை படங்களுடன் வாழ்த்துப்பா...! யப்பப்பா...!

    பதிலளிநீக்கு
  3. படங்களை கோர்த்து வாழ்த்துப்பா படைப்பது சிரமம்! நான் பட்டிருக்கிறேன்! அருமையாக கோர்த்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. அடடடடா அய்யா ஒரு படம் விடாமல் வாழ்த்து படம் அருமை! இன்று ஏஏஏகப்பட்ட படங்களை தெரிந்துகொண்டேன் நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  5. அடாடா என்ன ஐயா இப்படி போகுது பட்டியல் ரசித்தேன்

    பதிலளிநீக்கு

  6. கமலின் படங்களை அழகாய் தொடுத்து பாமாலை சூட்டிவிட்டீர்கள். பாராட்டுக்கள்! கமல் நற்பணி மன்றத்தினர் இந்த பதிவை படித்தால் உபயோகப்படுத்திக் கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  7. விஸ்வரூபனுக்கு பாராட்டுக்கள்.
    நான் பார்க்க வேண்டும் என்று விரும்பி பார்த்த படம் விஸ்வரூபம், வேறு ஒன்றிரண்டு அவரின் படங்கள் பார்த்திருக்கிறேன் பெயர் நினைவலில்லை.

    பதிலளிநீக்கு
  8. உலக நாயகனை வாழ்த்தி அருமையான கவிதை.
    த ம 6

    பதிலளிநீக்கு
  9. அட! கமலின் எல்லாம் படங்களும் அணிவகுத்து வாழ்த்து அருமை...

    பதிலளிநீக்கு
  10. மாயக்கட்டில் 2 என்றால் ....முந்தைய பகுதியில் அந்த மாயக்கட்டிலில் படுத்தவர் கமல் விசிறியோ....கமல் இப்படி எல்லாம் வந்து கனவில் விசிறிவிட்டாரோ...

    பதிலளிநீக்கு
  11. எங்கள் மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    உங்கள் பகுதியில் மரங்கள் பல விழுந்துள்ளன போல...பரவாயில்லை இந்த முறை ரமணன் எல்லோர் கலாய்ப்பிலிருந்தும் தப்பித்தார்..வரும் என்பார் வராது...வராது என்பார் வரும்..இம்முறை வந்தே விட்டது!!

    பதிலளிநீக்கு
  12. அவரின் படங்களாலேயே அவருக்கு ஒரு வாழ்த்து..... ரசித்தேன்.....

    தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு