தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 19, 2015

ஆய கலைகள்....



இன்று உலக புகைப்பட நாள்.இந்நாளில் புகைப்படம் பற்றிய என் பழைய பதிவொன்று பொருத்தமானதாக இருக்கும் என்பதால் அதை அளிக்கிறேன்

//சமீபகாலமாக சில பதிவுகளில் கண்ட புகைப்படங்கள் என்னுள் ஒரு பொறாமையை ஏற்படுத்துகின்றன.எத்தனை ஆண்டுகளானலும் என்னால் ஆளுமைப்படுத்தமுடியாத ஒன்று புகைப்படக்கலை.

நான்   பட்டப்படிப்புப் படித்து வந்த போது ஒரு வீட்டு விசேடத்துக்காக என் நண்பர் ஒருவரிடம் காமிரா இரவல் வாங்கிப்(agfa foldable)  படம் எடுத்துத் தள்ளினேன். கடைசியாக எல்லாப்படங்களிலும் உருவங்கள் பாதியாகவோ அல்லது கலங்கியோ தெரிந்தன.

எனது அடுத்த முயற்சி சென்னையில் பட்ட மேற்படிப்பு படிக்கும்போது. நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்ற போது என் நண்பர் காமிராவை என் கையில்  கொடுத்து அனை வரையும் சேர்த்து ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னார்.யானை முன்னால் அவர்கள் நின்ற படத்தில் அவர்கள் தலைகள், யானையின் தலை மட்டுமே தெரிந்தது.அதன் பின் எங்கு சென்றாலும் காமிரா என் கைக்கு வராமல் பார்த்துக்கொண்டனர்.

பின்னர் சென்னையில் பணி புரியும்போது பர்மா பஜாரில் ஒரு யாஷிகா காமிரா வாங்கினேன்.குடும்பத்துடன் காஷ்மீர் செல்லும்போது டில்லி செங்கோட் டையில் காமிராவை கீழே போட்டு அது சிறிது வாய் பிளந்து கொள்ள பயணத்தில் ஒரு படமும் எடுக்கவில்லை.அதோடு முடிந்தது என் புகைப்பட நிபுணராகும் ஆசை.அந்தக் காமிரா எங்கோ கிடக்கிறது.

என் காமிரா ராசி நான் படம் எடுக்கும்போது மட்டுமன்றி நான் எடுக்கம்படும்போதும் இயங்குகிறது.

துபாய் சென்ற போது என் மருமகன் பல இடங்களில் என்னையும் என் மகளையும்க்ளிக்கினார்.புறப்படுவதற்கு முன் தினம் பிரிண்ட் எடுத்த போது அதில் ஒன்றுமே இல்லை.மிகப் பழைய ஃபிலிம் என்று ஸ்டூடியோக்காரர் சொல்லிவிட்டார்.

காமிராவுக்கு என்னிடம் என்ன விரோதமோ தெரியவில்லை.//


இப்போதெல்லாம் நான் சோனி எண்ணியல் புகைப்படக் கருவி இருந்தும் அதைப் பயன் பட்டுத்தாமல்,என் சாமர்த்தியக் கைபேசியையே படம் எடுக்கப் பயன் படுத்துகிறேன்;இதை ஒரு குழந்தை கூட பயன்படுத்திப் படம் எடுக்கலாமே!

இவை தவிர பல சிறுகதைகளுக்குக் காரணமாக இருந்த ஒரு புகைப்பட அனுபவம் உண்டு,

அது பற்றி இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.இதையும்,இதன் தொடர்ச்சியாக வந்த பலரது முடிவுகளையும் படியுங்கள்

25 கருத்துகள்:

  1. நல்ல விவரணம் ...சரி ஆனால் இங்கு உங்கள் புகைப்படம் நன்றாக வந்துள்ளதே...உங்கள் சுட்டியைப் பார்க்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  2. மொய் வைச்சாச்சு....பொதுவாக இதைச் சொல்லுவதில்லை...

    பதிலளிநீக்கு
  3. சித்திரமும் கைப்பழக்கம் இப்போது பல நவீன புகைப்பட கருவிகள் வந்துவிட்டது அல்லவா? முயன்று பாருங்கள்! எனக்கும் கேமிரா ஆசை உண்டு. பழைய சின்ன கேமரா ரோல் போட்டு எடுப்பது ஒன்றும் வீட்டில் இருக்கிறது. இப்போது டிஜிடல் மயம் ஆகிவிட்டதால் அதைப்பயன்படுத்துவது இல்லை! அலைபேசியில் எடுப்பதோடு சரி! காமிரா ஒன்று வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக மனதில் உள்ளது பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  4. புகைப்படத்துக்கும் உங்களுக்கும் ஏதோ முன் ஜென்மப்பகை போல தெரிகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது ஒரு சமாதான் உடன்படிக்கை ஏற்பட்டு விட்டது,சாமர்த்தியக் கைபேசி தயவால்!
      நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  5. #ஒரு பொன்மாலைப் பொழுதும்,ஒரு பெண்ணின் அழைப்பும்#
    தலைப்பே கவித,கவித:)

    பதிலளிநீக்கு
  6. இப்போது செல்ஃபோனிலேயே நன்றாக எடுக்க வருகின்றதாமே...புகைப்படக் கருவிகள் எதையும் இளைஞர்கள் வாங்குவதில்லையாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையேதான் நானும் எழுதியிருக்கிறேன்.13 எம் பி காமிரா ஆயிற்றே!
      நன்றி

      நீக்கு
  7. நான் எடுக்கும் புகைப்படங்களும் அவ்வண்ணமே! ராமலக்ஷ்மி, சாந்தி மாரியப்பன், கோமதி அரசு மேடம், வெங்கட் நாகராஜ் போன்றவர்கள் புகைப்படங்களைப் பார்க்கும்போது பொறாமையாகவும், வெட்கமாகவும் இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க வச்சிருக்கற காமிராவெல்லாம் எனக்கு சரிப்படாது.குறிபார்,சுடு.அவ்வளவுதான்!
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  8. கேமராவைப் பொறுத்தவரை என் அனுபவம் சற்றே வித்தியாசமானது. இதுவரை தொலைத்த கேமராக்கள் இரண்டு. வீணாக்கியது ஒன்று. ஆய்வு என்ற நிலையில் செல்லும்போது மற்றவற்றை மறந்துவிடுவதுண்டு. அவ்வாறே இதுவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பழைய யாஷிகா பயனில்லை.சோனி டிஜிடல் உபயோகப் படுத்தப்படாமல் கிடக்கிற்து.இப்போதெல்லாம் கைபேசிதான்.
      நன்றி ஐயா.

      நீக்கு
  9. நீண்ட கால காமிரா ஆசை
    கட்ந்த ஆண்டுதான் நினைவேறியது ஐயா
    ஆனாலும் வீட்டிலோ, அரங்குகளிலோ படம் எடுத்தால்
    தெளிவாக வருவதில்லை
    நன்றிஐயா

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் தான் தற்போது உங்களது மிடுக்கான கைப்பேசியில் அருமையாய் படம் எடுக்கிறீர்களே! எனவே புகைப்பட கருவியில் சரியாய் படம் எடுக்கவில்லையே என வருத்தப்படத் தேவையில்லை.

    பதிலளிநீக்கு
  11. அப்போதெல்லாம் கேமராவை இயக்குவதே பெரும் சாதனைபோல் இருந்தது. பிலிமை பிரிண்ட் போட்டுப் பார்த்து நன்றாக இருந்தால்தான் போன உயிர் வரும். மொபைல் வந்தப் பின் இன்று அனைவருமே போட்டோ கிராபர்தான்.
    த ம 9

    பதிலளிநீக்கு
  12. புகைப்படம் எடுப்பதும் ஒரு கலை தான் அது சிலருக்கு வெகுலாவகமாக அமைந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  13. மொபைல் வந்த பிறகு அனைவருமே புகைப்படக் கலைஞர்கள் தான்....

    நானும் அப்படி ஒன்றும் சிறப்பாய் புகைப்படம் எடுப்பதில்லை!

    பதிலளிநீக்கு