என்ன இது ஏதோ கரடு முரடான தலைப்பு என்று சிலர் யோசிக்கலாம்.
தமிழ்ப் பதிவில் வடமொழியில் ஏன் தலைப்பு எனச் சிலர்
எண்ணலாம்.
நான் எப்போதும் சொல்வதுதான் பதில்.
தலைப்பைப் பார்த்ததும் என்ன சொல்லியிருக்கிறார் என
எண்ணத் தூண்ட வேண்டும்.
கரதலாமலகம்...கரதல ஆமலகம்.
கரம் உங்களுக்குத் தெரியும்.
சில பேருந்துகளில் பார்த்திருப்பீர்கள் ஒரு அறிவிப்பு
“கரம்,சிரம் புறம் நீட்டாதீர் “என்று
ஆமலகம் என்றால் நெல்லிக்காய்.
இந்தியில் ஆம்லா என்று சொல்வார்கள்(அமலா இல்லை!}
இதைத்தான் தமிழிலும் சொல்வோம் உள்ளங்கை நெல்லிக்கனி
என்று.
நமக்குத் தெரிந்தது இரண்டு விதமான நெல்லிக்காய்கள்
பெரிய நெல்லி,அரநெல்லி
நெல்லிக்கனி என்று சொல்லும்போது க ண்டிப்பாக சில
செய்திகள்நினைவுக்கு வரும்
தமிழ்ப்பாட்டி அவ்வையாருக்கு அதியமான் ஈந்த நெல்லிக்கனி.
சாப்பிட்டால் நீண்டகாலம் வாழ வைக்கும்கனியைத் தான்
உண்ணாமல் அவ்வைக்குக் கொடுத்தான் அதியமான்
.
நம்மை வியக்க வைத்தான்.
இன்னொமொரு நெல்லிக்கனி
.
இளம் பிரம்மச்சாரி.
ஒளி வீசும் கண்கள்.
பார்த்தாலே பக்தி ஏற்படுத்தும்
தோற்றம்.
“பவதி பிக்ஷாந்தேஹி”என்று பிக்ஷைப் பாத்திரம் ஏந்தி
வருகிறார்
ஒரு வீட்டு வாசலில் நிற்கின்றார்.
வறியவர்கள் வாழும் வீடு.
ஒரே ஒரு நெல்லிக்கனி,தாங்கள் சாப்பிடுவதற்காக வைத்திருக்கிறார்கள்.
அதைக் கொடுத்து விடுகிறாள் அவ்வீட்டுப் பெண்மணி.
அவர்கள் நிலை அறிந்த அவர் பாடுகிறார் “அங்கம் ஹரே: .....”
“மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி...”
கனகதாரா
ஸ்தோத்திரம் பிறக்கிறது.
தங்க நெல்லிக்கனிகளாக அவ்வீட்டில் கொட்டுகிறது.
ஆதி சங்கரரின் அற்புதம்.
- கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில் பொன்மழைஎன்று கவியரசர் கண்ணதாசனும்,பொன்மாரி என்று உளுந்தூர்ப்பேட்டை சண்முகமும் தந்திருக்கின்றனர்.
,
நெபல்லிக்காயின் மகத்துவம்,மருத்துவ குணங்கள் பற்றி
எல்லாம் நீங்கள் அறியாததா?
எனவே நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை.
எழுதி முடிக்கையில் ஒன்று எனக்குக் கரதலாமலகம் ஆகத்
தெரிகிறது.
என்னால் முன்பு போல் எழுத இயலாது என்பது!
சொல்வார்கள்”ஆசை இருக்கிறது தாசில் பண்ண,அதிர்ஷ்டம்
இருக்கிறது மாடு மேய்க்க”........
டிஸ்கி:இது நேற்றே வெளி வந்திருக்க வேண்டியது.ஏனெனில்
நேற்று சங்கர ஜெயந்தி.
என் மதம் தாமதம்!