தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 31, 2015

எனக்களிக்கப்பட்ட பெருமை!



இரு தினங்களுக்கு முன் என் பழைய பதிவொன்றில் ஒரு பின்னூட்டம் வந்தது.”நான் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறேன்.நீங்கள்தான் இதன் எழுத்தாளரா;ஏனெனில் நான்  இதற்கான சிறப்பை அளிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இது தவிர அவரிடமிருந்து ஒரு மின் னஞ்சலும் வந்தது.அவர் கம்பராமாயணம்.அபிராமி அந்தாதி. கந்தரனுபூதி முதலிய நூல்களைத்தவிர பல வடமொழி நூல்களையும்  ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருப்பதாகவும் சொல்லியிருந்தார்.இத்தகைய புலமை பெற்ற ஒருவர் எனது சாதாரணக் கவிதையை மொழியாக்கத்துக்கு ஏற்றதாகக் கருதியது எனக்கு ஒரு பெருமை .

எனது கவிதையின் அவரது ஆங்கில மொழியாக்கம்கீழே:


Give me back, Oh God
Give me back , Oh God,
All that I have lost  ,

God asked , “which all have you lost?”

“Several , beyond count  , is it ever , possible to list them all,
I lost my youth due to change of time ,
I lost my prettiness   , due to change of form,
I lost my health  , due to change  of age ,
Which all shall I list, when you ask me , Oh  god
Give me back , oh  God, all that I have lost ” Said I.

That God  broke  in to a pretty laugh ,
“You learnt, you lost your ignorance,
You worked , you lost your poverty  ,
You were friendly, you lost your enemies,
There are  several more that I can list,
Shall I” the God asked  “return them all  “
,
I was perplexed, I realized the other  face of my loss ,
I understood   that the loss and gain  were  only the two faces,
I became clear  and God disappeared.

என் தமிழ்க் கவிதை


//இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!
----------------------------------------------------


இழந்ததெல்லாம்  திரும்பத் தா எனக் கென்றேன்

இழந்த தெவை என  இறைவன் கேட்டான்!

பலவும் இழந்திருக்கிறேன்  ,கணக்கில்லை

பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?

கால மாற்றத்தில்  இளமையை இழந்தேன்

கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்

காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்

காணாமல் போனாளே அவளை இழந்தேன்

வயதாக ஆக  உடல் நலமிழந்தேன்

எதை என்று சொல்வேன் நான்

இறைவன் கேட்கையில்?

எதையெல்லாம்  இழந்தேனோ

அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் பரமன்

கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்

உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்

நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்

சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல

தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.

திகைத்தேன்!

இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்

வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும்  பேறும்

இணைந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்

இறைவன் மறைந்தான்.//


அவர் பெயர் பி.ஆர்.ராம்சந்தர்.விஞ்ஞானி.கேரளாவில் பிறந்தவர். தமிழ்நாடு. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பணி புரிந்தவர்.ஆறு மொழிகள் அறிந்தவ்ர்.ஆங்கிலத்தில் புலமை உள்ளவர். அவரது வலைப்பதிவுகள்,ஆக்கங்கள் கீழே:

1.Translations of 1000 stotras: http://stotrarathna.blogspot.in/
2. Translations of 1300 Carnatic music krithis : http://translationsofsomesongsofcarnticmusic.blogspot.in/
3. Rules and rituals of Brahmins: http://brahminrituals.blogspot.com/
4. Raja Thatha's Blogs : http://rajathathablog.blogspot.com/
5. 100 Kerala temples: http://rajathathaskeralatemples.blogspot.com/
6. 100 Village gods of Tamil Nadu : http://villagegods.blogspot.com/
7. Stories and rhymes for children: http://raja-thatha-corner.bizhat.com/
8. Stories illustrating Malayalam Proverbs : http://www.sakthifoundation.org/~sakthi/images/uni5/pdf/English-PDF/Intelligence-Education/Uni5-Education/2-Elementary-Age-5-to-8/Languages-Elementary-%20Age%205%20to%208/Proverbs/Malayalam%20proverbs%20English%20translation.pdf
9. Translation of Narayaneeyam: http://narayaneeyamtrans.blogspot.com/
10. Thunjathu Ezhuthachan's Adhyathma Ramayana : http://rajathathas.blogspot.in/
11. Valmiki Ramayanam in English http://english

தலை வணங்குகிறேன் .


28 கருத்துகள்:

  1. இறப்பின் மறு பக்கத்தை பற்றி சொல்லவில்லையே அய்யா.....

    பதிலளிநீக்கு
  2. அருமை ஐயா மிகவும் அருமை சில விடயங்கள் பிறர் சொன்னால்தான் புரியும் என்பார்கள் உண்மைதான் போல எனக்கு இப்பொழுது புரிகிறது

    பதிலளிநீக்கு
  3. திருமிகு பி.ஆர்.ராம்சந்தர். அவர்களின் தகவல்கள் பிரமாண்டம்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  4. இவரது தியாகராஜ கீர்த்தனைகளின் மொழி பெயர்ப்பு,
    மிகவும் சிறப்பாக இருக்கிறது.

    ஒவ்வொரு தடவையும் கீர்த்தனைகளில் பொருள் பற்றி ஐயம் ஏற்படின் இவரது வலைக்குத்தான் சென்று பார்ப்பேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. காதலியிடம் இழந்த இதயத்துக்கு பதிலாய் என்ன பெற்றீர்கள் :)

    பதிலளிநீக்கு
  6. ராம்சந்தர் அவர்களைப் பற்றி ஓரளவு தெரியும். சுப்புதாத்தா சொல்வது போல் கீர்த்தனைகளைப் பற்றி அறிந்து கொள்ள அவரது வலைத்தளம் சென்றதுண்டு...

    வாழ்த்துகள் ஐயா!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அற்புதம்!... உங்கள் கவிதை மிக மிக அற்புதம்!! வியந்து ரசித்தேன்.

    மொழி மாற்றம் அதனை இன்னமும் மெருகேற்றியிருக்கிறது.

    God Bless You

    பதிலளிநீக்கு
  8. அருமையான கவிதை .ராம்சந்தர் விபரம் பகிர்ந்ததுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. முன்னர் படித்ததில்லை. இப்போதுதான் படிக்கிறேன். அருமை.

    பதிலளிநீக்கு
  10. கவிதையும் அருமை
    மொழிபெயர்ப்பும் அருமை
    வாழ்த்துக்கள் ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  11. அருமை! அருமை!! தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பெருமைக்கு வாழ்த்துக்கள்! தங்கள் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிறப்பு சேர்த்த திரு இராம் சந்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள்! அவரது படைப்புகளை படிக்க இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. அவரோடு உமக்கும் சேர்த்து நான் தலை வணங்குகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் அனைவருமே உங்களுக்குத் தலை வணங்க வேண்டியவர்கள்
      நன்றி

      நீக்கு
  13. அற்புதம்! இதைவிட வேறென்ன வேண்டும் ஐயா. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. உங்கள் கவிதைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தமை பெருமகிழ்ச்சி அய்யா!

    பதிலளிநீக்கு