தொடரும் தோழர்கள்

வியாழன், ஆகஸ்ட் 13, 2015

இன்னும் இருக்கும் சீதக்காதி!




சீதக்காதி என்று ஒரு வள்ளல் இருந்தார்.யார் வந்தாலும் இல்லையென்று சொல்லாமல் வழங்கியவர்.ஒரு முறை ஒரு பெரிரைச் சந்தித்தபோது அவர் குடும்ப நலம் விசாரிக்க வர் சொன்னார்”பெண்ணுக்கு மணம் முடிக்க வேண்டும்.ஆனால் என்னிடம் பணம் இல்லை.”என்று.உடனே சீதக்காதி பணம் கொடுக்க முன் வந்தார்.பெரியவர் சொன்னார்”இப்போது கொடுக்க வேண்டாம். மாப்பிள்ளை பார்த்தபின் வாங்கிக் கொள்கிறேன்என்று.சில நாட்களுக்குப் பின் பெண்ணுக்கு மாப்பிள்ளை முடிவு செய்த பெரியவர் சீதக்காதியைப் பார்க்க வந்தார்.ஆனால் சீதக்காதி இறந்து விட்டார்.


பெரியவர் அவர் சமாதி சென்று அழுது முறையிட, சமாதியிலிருந்து கை ஒன்று நீண்து விரலில் ஒரு விலை மதிப்புள்ள மோதிரம்.அதைக் கழட்டிச் சென்று தன் பெண்ணின் திருமணத்தை முடித்தார் அப்பெரியவர்.இது சீதக்காதி பற்றி நான் கேள்விப்பட்ட கதை.இறந்த பின்னும் கொடுத்தால்,”செத்தும் கொடுத் தான் சீதக்காதி” என்ற சொல்வழக்கு ஏற்பட்டது.

இன்று ஏன் இக்கதை என யோசிக்கிறீர்களா?

சொல்கிறேன்.

இன்று “உடல் உறுப்பு தான நாள்”

தானம் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை.

ஆங்கிலத்தில் “donation” என்ற சொல்லைத்தான் பயன் படுத்துகிறார்கள். 

அதாவது கொடை.

ஆனால் தமிழில் நாம் இரத்த தானம்,உடல் உறுப்பு தானம் என்று சொல்கி றோம்

மாறாகக் கொடை என்று சொவது சிறப்பாக இருக்கும் என எண்னுகிறேன். 

குருதிக் கொடை,கண்கொடை,உடல் உறுப்பு கொடை என்பன போல். 

சில உறுப்புகளை உயிருடன் இருக்கும்போது கொடுக்கலாம்,-ஒரு சிறுநீரகம், குடலின் பகுதி என்பன போல.

இதில் ஓர் அச்சம் இருக்கும்.இப்போது ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்து,பின்னர் மீதமுள்ள ஒன்று பழுதானால் நம் நிலை என்ன என்ற அச்சம்

சில உறுப்புகளை மூளைச்சாவுக்குப் பின் கொடுக்கலாம்.

இத்தகைய இறப்பு யாருக்கும் ஏற்பட வேண்டாம்.ஆனால் அப்படி ஏற்படும்
போது கொடை அளிப்பதில் இப்போது தயக்கம் கொஞ்சம் விலகியிருக்கிறது

ஆனால் ஒரு உறுப்பை எந்தவிதமான  சங்கடமுமின்றி ஒருவரின் இறப்புக்குப் பின் கொடுக்கலாம் .—கண்

கண் கொடையில் எடுக்கப்படப் போவது விழி வெண்படலம் மட்டுமே.

மண்ணுக்கோ.தீ நாக்குகளுக்கோ இரையாகப் போகும் ஒரு சிறு பகுதி வேறு சிலரின் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும்

யாருக்குப் போகப் போகிறது என்பது தெரியாது

உறவினரா,நண்பரா,அறிமுகமானவரா,நம் வகுப்பைச் சேர்ந்தவரா,நம் மத்தைச் சேர்ந்தவரா எந்தக்கேள்வியும் இல்லை;தடையும் இல்லை

யாரோ சிலர் பயன் பெறப்போகிறார்கள்.

இருண்ட சிலரின் வாழ்வு ஒளிமயமாகப் போகிறது.

இறந்தபின்னும் நம் கண் உலக்த்தைப் பார்க்கப் போகிறது

பகவான் (ஜி அல்ல!)சொல்கிறார்”எப்படி மனிதன் நைந்த பழைய உடைகளை நீக்கிப் புதிய உடை அணிகிறானோ அது போலவே ஆன்மாவும்,பழைய உடலை நீக்கி விட்டுப் புது உடலை அடைகிறது
   
ஆன்மாவுக்கு அழிவில்லை.

உடல் உறுப்புக் கொடையினால் உடலின்  உறுப்புகளுக்கும் உடன் அழிவி ல்லை.

எல்லாராலும் இயன்றது கண் கொடை!

அதைச் செய்யலாமே.



31 கருத்துகள்:

  1. அருமையான, தேவையான பதிவு.

    காலம் உங்களுக்கு நன்றி சொல்லும்.

    God Bless You

    பதிலளிநீக்கு
  2. இறந்தபின் தீயிற்கு இரையாக விடுவதைவிட நமது கண்ணை இன்னொருவரின் வாழ்வில் ஒளியேற்ற கண் கொடை தரலாம் என்ற உங்களின் கருத்தோடு உடன்படுகின்றேன். நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு,,,,,,,
    நன்றிகள்,

    பதிலளிநீக்கு
  4. இப்போது உடலுறுப்புகள் தானமென்பது மிக நல்ல நிலையில் விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது. உரிய நாளில் நல்ல செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பதிவிலேயே நல்ல விஷயம் ஒன்றையும் சொல்லியிருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா அருமையானதொரு விடயத்தை குறித்த நல்ல பதிவு கண்தானம் செய்யும் எண்ணம் என்னிடம் நீண்ட நாட்களாக இருக்கிறது
    தங்களது பதிவைக்கண்டவுடன் அதன் வழிமுறைகள் உடன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  7. கண்கொடை அனைவரும் செய்யலாம்தான்! நல்லதொரு பதிவு!

    பதிலளிநீக்கு
  8. தங்கள் கருத்து சரியானதே தானம் எனபதைவிட கொடை என்பதே சிறப்பு!

    பதிலளிநீக்கு
  9. #ஆன்மாவும்,பழைய உடலை நீக்கி விட்டுப் புது உடலை அடைகிறது#
    இது பகவான் சொன்னது ...இனி பகவான்ஜி சொல்வது ....என் கண் நிச்சயம் வேருடலை அடையும்:)

    பதிலளிநீக்கு
  10. சீதக்காதியை முன்வைத்து சிறப்பான தகவலைப் பகிர்ந்திருக்கிங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  11. அருமை அருமை ஒரு நல்ல விஷயத்தை வித்தியாசமாக மனதில் பதியும் வண்ணம் சொல்ல ஒரு சிலரால் மட்டுமே முடியும்

    பதிலளிநீக்கு
  12. அவசியமான பதிவு நல்ல கருத்து கொடை என்பதே சரியாகவும் போருதமக்கவும் இருக்கும். நன்றி !

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஐயா
    வள்ளல் சீதக்காதியைப்பற்றிய தங்களது பதிவில் பகுதி மாறுபடுகிறது அதாவது அவருடைய சமாதியில் இவர் போய் புலம்பியது வரை சரியே... பிறகு அன்றைய இரவு கனவில் வள்ளல் சீதக்காதி வந்து இவரிடம் ஒரு குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார் என்று சொல்லி இருக்கிறார் மறுநாள் இவர் போய் பார்த்த இடத்தில் புதையல் கிடைத்து இருக்கிறது அதை வைத்து தனது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளா் அன்று முதல்தான் அவருக்கு செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்று பெயர் வந்தது

    நேற்று உடன் எனது அம்மாவுக்கு போண் செய்து நான் கேள்விப்பட்ட இந்த விசயத்தை உறுதி செய்து கொண்டு மீண்டும் வருகிறேன்
    எனது அம்மாவின் சொந்த ஊர் கீழக்கரை சீதக்காதியின் ஊரும் அதுவே கீழக்கரையில் அவர் பெயரில் சாலையும் கல்லூரியும் இருக்கிறது நான் பிறந்தது கீழக்கரையே...
    நன்றி வணக்கம்

    பதிலளிநீக்கு
  14. இதை தான் நம் மக்கள் செத்தும் கெடுத்தான் சீதகாதி என திரித்து வைத்திருகிறார்களே:((
    அருமையான பதிவு அய்யா! நானும், என் கணவர் கஸ்தூரியும்(மலர்த்தரு-மது) கண் கோடை செய்திருக்கிறோம்! ஆனால் கண்ணின் கருப்பு பகுதியை எடுப்பார்கள் என்றல்லவா கேள்விப்பட்டேன்?!@# இருங்க. போய் google பண்ணிட்டு வரேன்:)

    பதிலளிநீக்கு
  15. கண் கொடை என வாசிக்கவும். அப்புறம் சிரமம் தந்தமைக்கு மன்னிக்கவும்:)

    பதிலளிநீக்கு
  16. **https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88** இந்த சுட்டியை கொஞ்சம் பாருங்க அய்யா!

    பதிலளிநீக்கு
  17. கண் கொடை - நாங்களும் பதிவு செய்திருக்கிறோம்....

    அவசியமான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  18. இந்த உறுப்புகள் தானம் செய்ய முடிவு எடுக்கும் நபர்கள்
    எந்த இடத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்றும் தகால்
    தெரிவித்து இருந்தால் நல்லது.

    இரண்டாவது,

    நான் உறுப்புகள் தானம், கண் தானம் செய்து விட்டேன்.
    அப்ப நீங்க ?

    என்றும் முடித்து இருக்கலாம்.

    முக்கியமான பதிவு என்பதில் ஐயம் இல்லை.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  19. அய்யா சென்னைப் பித்தன் அவர்கள் சொன்ன கதையும் நண்பர் கில்லர்ஜி சொன்ன விளக்கமும் தவறானவை. நாள் கீழக்கரையில் உள்ள தாசீம் பீவி அப்துல் ரஹ்மான் மகளிர் கல்லூரி மாணவிகளை பேட்டிஎடுக்கப் போயிருந்தேன். அப்போது சீதக்காதி வழிவந்த ஒருவரை அறிமுகப்படுத்தினார்கள். அப்போது அவரிடம் இதைப் பற்றி கேட்டேன். இது ஏதோ மாயாஜால கதைப் போல் இருக்கிறதே உண்மையாக அப்படிதான் நடந்ததா? என்றேன். அவர் இல்லை என்றார்.

    வள்ளல் சீதகாதிக்கு தான் மரணம் அடையப்போகும் நாள் முன்பே தெரிந்துவிட்டது. அதை தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, நான் இறந்தப் பிறகு ஒரு புலவர் வருவார், அவருக்கு இந்த மோதிரத்தை கொடுத்துவிடுங்கள் என்று கூறி இறந்தார். அந்த புலவர் இவரை தேடி வந்த போதுதான் இறந்த சேதி தெரியும். கல்லறையில் வந்து புலவர் அழுது புலம்பியபோது அங்கு வந்த சீதக்காதியின் குடும்பத்தினர் அவருக்கு அந்த மோதிரத்தைக் கொடுத்தனர். அதுதான் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற பழமொழி உருவாக காரணமானது.

    பதிலளிநீக்கு
  20. உங்கள் வலைப்பக்கத்தை இன்று காண நேர்ந்தது. எதற்கெடுத்தாலும் ‘தானம்’ என்பதற்குப் பதில் ‘கொடை’ எனலாம் என்கிறீர்கள். சரியாகத்தான் படுகிறது. இதனைப்போலவே சில தமிழ் மொழிபெயர்ப்புகள் எனக்கும் சரியாகப்படுவதில்லை. ஆனால் வழக்கில் உள்ளதே!
    நிறைய இப்படி எழுதுங்கள்.நன்றி
    -ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com

    பதிலளிநீக்கு