தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 09, 2011

பச்சோந்தி!(புதிய வடிவில்)

ஒரு கவிதை சொல்லப்பட்ட செய்தியால் மட்டும் சிறப்பாவதில்லை.
கவிதையின் வடிவமும் அதனை அழகாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது!
3-6-2011 அன்று பச்சோந்தி என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.
அதைப் படித்த பதிவுலக நண்பர் ஒருவர்,ஒரு கருத்துச் சொன்னார்!
கவிதை நன்றாகவே இருந்தாலும்,அதன் வடிவத்தை மேலும் சிறப்பாக்குவதற்காக,அதன் வரிகளைச் சிறியதாக்கிப் புது வடிவம் கொடுக்கலாம் என்று சொல்லி அதன் புதிய வடிவத்தை எனக்குக் காண்பித்தார்.உண்மையில் கவிதை மேலும் அழகாக இருப்பது புரிந்தது.
அக் கவிதையைப் புது வடிவில் அளிக்கிறேன்.அப்பதிவரின் பெயரைச் சொல்ல விருப்பம்தான்!ஆனால் அவர் விருப்பம், வெளியிடக் கூடாது என்பது!

தோட்டத்தில் நீர்பாய்ச்சி
நிற்கின்ற வேளையில்
சட்டென்று கண்ணில்
பட்டதந்த பச்சோந்தி!
கல்லெடுத்து வீசினேன்;
பச்சோந்தியை நோக்கி
சொல்லொணா வேகத்தில் மறைந்ததந்தப் பச்சோந்தி!
எங்கது மறைந்ததென்று
தேடுகின்ற வேளையில்;
அங்கொரு மரக்கிளையில்-
கிளையின் நிறமெடுத்து(க்)
கிளையோடு கிளையாய்க்
கிடந்ததந்தப் பச்சோந்தி!!


மற்றொமொரு கல் வீச்சில் மறைந்திட்ட பச்சோந்தி
பற்றி நின்றது மரத்தை ,
இலைகளோடு இலையாய்ப்
புதிதாகப் பச்சை நிறமெடுத்து!
எத்தனை வண்ணம்தான்
எடுக்குமந்தப் பச்சோந்தி
தன்னுயிரைக் காப்பதற்கு!
எனக்குத் தெரியவில்லை,
அதன் உண்மை வண்ணமென்ன?
உனக்காவது தெரியுமா
உன் உண்மை நிறம் பச்சோந்தியே?

தோற்றம் மாறினால், சுவை கூடுகிறது என்பதற்கு உங்கள் வாசிப்பு அனுபமே ’நிரூபணம்’!

புதிய வடிவத்தில் ,கவிதை’வடிவா’கயிருக்கிறதா?

’ஓமெ’ன்று சொல்கிறீர்கள்தானே!

(ஒரு பதிவை ஒப்பேத்தியாச்சு,நண்பர் தயவில்!)

34 கருத்துகள்:

  1. ஒரு கவிதை சொல்லப்பட்ட செய்தியால் மட்டும் சிறப்பாவதில்லை.
    கவிதையின் வடிவமும் அதனை அழகாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது!// முற்றிலும் உண்மை..

    பதிலளிநீக்கு
  2. அதென்ன ...பச்சோந்தி மட்டும் அடிக்கடி வருது .ஏதேனும் உள் குத்தா ......?

    பதிலளிநீக்கு
  3. அட முதலாவது கருத்துரை எனதா? ஒகே! கவிதை மாற்றிய விதம் மிக அருமையாக இருக்கு! எளிமையாகவும், சுவையாகவும் இருக்கு!

    பச்சோந்தியில் உண்மையான நிறம் பச்சை என்றுதான் நினைக்கிறேன்!!!

    கவிதை அருமை!!!

    பதிலளிநீக்கு
  4. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //ஒரு கவிதை சொல்லப்பட்ட செய்தியால் மட்டும் சிறப்பாவதில்லை.
    கவிதையின் வடிவமும் அதனை அழகாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது!// முற்றிலும் உண்மை.//
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  5. சமுத்ரா கூறியது...

    //நல்ல கவிதை//
    நன்றி சமுத்ரா!

    பதிலளிநீக்கு
  6. koodal bala கூறியது...

    //அதென்ன ...பச்சோந்தி மட்டும் அடிக்கடி வருது .ஏதேனும் உள் குத்தா ......?//
    அடிக்கடித் தோட்டத்துப்பக்கம் போகிறேன் இல்லையா?பச்சோந்தி பார்வையில் படுகிறது!
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  7. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

    //அட முதலாவது கருத்துரை எனதா? ஒகே! கவிதை மாற்றிய விதம் மிக அருமையாக இருக்கு! எளிமையாகவும், சுவையாகவும் இருக்கு!

    பச்சோந்தியில் உண்மையான நிறம் பச்சை என்றுதான் நினைக்கிறேன்!!!

    கவிதை அருமை!!!//

    முதலாவதாக இல்லாவிட்டால் என்ன?முதன்மையான கருத்துதானே!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  8. கவிதையை புது வடிவமாக்கியவரின் பெயரை சொல்லாவிட்டாலும் நீங்கள் கொடுத்த குறிப்புகள் ‘வடிவான’ கவிதையை பதிவேற்ற உதவிய நண்பர் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டேன்.

    அந்த செல்வமான ராசாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!

    மற்றும் இந்த புதிய கவிதைக்கு ‘ஓ’மென்று சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. ஒரு கவிதை சொல்லப்பட்ட செய்தியால் மட்டும் சிறப்பாவதில்லை.
    கவிதையின் வடிவமும் அதனை அழகாக்குவதில் பெரும் பங்கு
    வகிக்கிறது-முற்றிலும் உண்மை
    மேலும் ஒன்றைக் குறிப்பிட
    வேண்டும்
    காலத்தால் நிலைத்து நிற்பதற்கும்
    மனதில் பதிந்து நினத்தால் உடன்
    சொல்வதற்கும அது பெரும் பங்கு
    வகிப்பதை மரபுக் கவிதைகள் மூலமும் அறியலாம்

    புலவர் சா இராமாநுசம்
    புலவர் குரல்

    பதிலளிநீக்கு
  10. ஐயா இது கண்டிப்பா உள்குத்துதான் ,pona தடவை எஸ்கேப் அனா மாதிரி இப்ப முடியாது யாருக்கு உண்மை சொலுங்கோ ...........

    பதிலளிநீக்கு
  11. அந்த நண்பர் நம்ம "நாற்று " நிருபன் தானே

    பதிலளிநீக்கு
  12. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    //ஆமாம்...//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  13. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    //நயமான கவிதை.
    அழகு.//
    நன்றி முனைவர் குணசீலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  14. வே.நடனசபாபதி கூறியது...

    //கவிதையை புது வடிவமாக்கியவரின் பெயரை சொல்லாவிட்டாலும் நீங்கள் கொடுத்த குறிப்புகள் ‘வடிவான’ கவிதையை பதிவேற்ற உதவிய நண்பர் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டேன்.

    அந்த செல்வமான ராசாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!

    மற்றும் இந்த புதிய கவிதைக்கு ‘ஓ’மென்று சொல்கிறேன்.//
    நீங்கள் நினைப்பது சரியோ,தவறோ தெரியாது!
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  15. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    ஒரு கவிதை சொல்லப்பட்ட செய்தியால் மட்டும் சிறப்பாவதில்லை.
    கவிதையின் வடிவமும் அதனை அழகாக்குவதில் பெரும் பங்கு
    வகிக்கிறது-முற்றிலும் உண்மை
    //மேலும் ஒன்றைக் குறிப்பிட
    வேண்டும்
    காலத்தால் நிலைத்து நிற்பதற்கும்
    மனதில் பதிந்து நினத்தால் உடன்
    சொல்வதற்கும அது பெரும் பங்கு
    வகிப்பதை மரபுக் கவிதைகள் மூலமும் அறியலாம்//
    நல்ல கருத்தைச் சொல்லியிருக் கிறீர்கள்!
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  16. ரியாஸ் அஹமது கூறியது...

    // ஐயா இது கண்டிப்பா உள்குத்துதான் ,pona தடவை எஸ்கேப் அனா மாதிரி இப்ப முடியாது யாருக்கு உண்மை சொலுங்கோ ...........//
    இங்கு யார்தான் பச்சோந்தி இல்லை?

    பதிலளிநீக்கு
  17. ரியாஸ் அஹமது கூறியது...

    //அந்த நண்பர் நம்ம "நாற்று " நிருபன் தானே//
    அப்படியா?
    யாரோ,அவருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன் சொல்ல மாட்டேன் என!
    நன்றி ரியாஸ்!

    பதிலளிநீக்கு
  18. முரளி நாராயண் கூறியது...

    // அழகான கவிதை//
    நன்றி முரளி நாராயண்!

    பதிலளிநீக்கு
  19. நல்லா இருக்கு ஐயா...


    ///’நிரூபணம்’!// நிரூபன் எண்டு குறிப்பால் எடுத்துக்காட்டியுள்ளீர்கள்???? ஹிஹிஹி..

    பதிலளிநீக்கு
  20. கந்தசாமி. கூறியது...

    நல்லா இருக்கு ஐயா...


    ///’நிரூபணம்’!// //நிரூபன் எண்டு குறிப்பால் எடுத்துக்காட்டியுள்ளீர்கள்???? ஹிஹிஹி..//
    எனக்கு எதுவும் தெரியாது!ஹி,ஹி!
    நன்றி கந்தசாமி!

    பதிலளிநீக்கு
  21. நேசமித்ரன் அடிக்கடி சொல்வார்.
    வார்த்தைகளைச் செதுக்கி எடுத்து சுருங்கச் சொல் என்பார்.
    அதையேதான் நீங்கள் செய்திருக்கிறீர்கள்.மிகவும் அழகாய் வந்திருக்கிறது கவிதை !

    பதிலளிநீக்கு
  22. ஹேமா கூறியது...

    //நேசமித்ரன் அடிக்கடி சொல்வார்.
    வார்த்தைகளைச் செதுக்கி எடுத்து சுருங்கச் சொல் என்பார்.
    அதையேதான் நீங்கள் செய்திருக்கிறீர்கள்.மிகவும் அழகாய் வந்திருக்கிறது கவிதை !//
    நன்றி ஹேமா!

    பதிலளிநீக்கு
  23. பொங்கிவருகிறது
    மனதில்
    மாசற்ற
    மகிழ்ச்சி
    அவர் சொல்லக்கூடாது
    என்று சொன்னதும்
    நீங்கள் அதை சொல்லாமல்
    சொல்லியதும்
    பெருந்தன்மையில்
    இருவரும் சளைத்தவர்கள் இல்லை
    என்பது "நிரூபணம்"

    பதிலளிநீக்கு
  24. கவிதை அருமை,அதை களைகட்ட வைத்த விதம் அதனினும் அருமை.

    பதிலளிநீக்கு
  25. புதிய வடிவில் கவிதை அழகா இருக்கிறது ஐயா..

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. A.R.ராஜகோபாலன் கூறியது...

    // பொங்கிவருகிறது
    மனதில்
    மாசற்ற
    மகிழ்ச்சி
    அவர் சொல்லக்கூடாது
    என்று சொன்னதும்
    நீங்கள் அதை சொல்லாமல்
    சொல்லியதும்
    பெருந்தன்மையில்
    இருவரும் சளைத்தவர்கள் இல்லை
    என்பது "நிரூபணம்"//
    மிக்க நன்றி ஏ.ஆர்.ஆர்!

    பதிலளிநீக்கு
  27. FOOD கூறியது...

    // கவிதை அருமை,அதை களைகட்ட வைத்த விதம் அதனினும் அருமை.//
    நன்றி! என் சார்பிலும் நண்பர் சார்பிலும்!

    பதிலளிநீக்கு
  28. நிரூபன் கூறியது...

    //புதிய வடிவில் கவிதை அழகா இருக்கிறது ஐயா..

    வாழ்த்துக்கள்.//
    அழகாய் இருந்துதானே ஆக வேண்டும் நிரூபன்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  29. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //கவித கவித கலாய்ப்பு கலாய்ப்பு//
    ஆகா ஆகா,நன்றி நன்றி!

    பதிலளிநீக்கு