தொடரும் தோழர்கள்

புதன், பிப்ரவரி 16, 2011

தலை வணங்கிகிறேன் தாயே!

”என்ன பிள்ளைகளா,மதிய உணவு சாப்பிட்டீர்களா?’-டீச்சர்
”டீச்சர்,மழை பெய்யுதில்லையா,கூரை ஓட்டை வழியாத் தண்ணி கொட்டித் தட்டுலே இருந்த சோறெல்லாம் நனஞ்சு போச்சு”-மாணவன்.

இதுதான் இன்று வரை அந்த மதிய உணவுக் கூடத்தின் நிலை.
உடைந்த அஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ்,அந்தக் கட்டிடம்.சமையல் வெட்ட வெளியில் .
இப்படித்தான் இயங்கி வந்தது அந்த மதிய உணவு மையம்!-இத்தனை நாள்.

இனியில்லை!

அழகிய புதிய கட்டிடம்,சமையல் அறை ,ஸ்டோர் ரூம் வசதியுடன் தயாராகி விட்டது!

அரசு புதுக் கட்டிடம் கட்டிக் கொடுத்துவிட்டதா?
அல்லது யாராவது வள்ளல் ஏற்பாடு செய்தாரா?
இல்லை!இல்லை!

கோடிக் கணக்கில் இலவசங்களுக்குச் செலவழிக்கும் அரசுக்கு இந்தச் சிறிய விஷயத்தைக் கண்டு கொள்ள நேரமிருக்குமா என்ன?
அது தவிர இதனால் என்ன பயன்?அந்த மாணவர்கள் ஓட்டுப் போடப் போகிறார்களா என்ன?
பின் எப்படி நடந்தது?

11 ஆண்டுகளுக்கு முன் பள்ளிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற,தற்போது 63 வயதாகும் ஓர் ஆசிரியையின் கருணை உள்ளம்!

29 ஆண்டு சேவைக்குப் பின் ஓய்வு பெற்ற அந்த ஆசிரியை,தனது ஓய்வூதியத்தை இத்தனை நாள் சேமித்து வந்த பணம்-ரூபாய்3.5 லட்சம்.

அதைப் பள்ளி நிர்வாகத்துக்குக் கொடுத்துதான் இந்தச் செயல் நடக்க உதவியிருக்கிறார் அந்த ஆசிரியை

“எனக்குக் குழந்தைகள் இல்லை.பள்ளி மாணவர்களெல்லாம் என்குழந்தைகள்தான்”என்று கூறும் பரந்த மனம் அவருக்கு இருக்கிறது!

”2009ஆம் ஆண்டு பார்கின்சன் வியாதியால் மரணமடைந்த என் கணவரின் நினைவாக இதைச்செய்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார்!

மதிய உணவு மையம் இருக்கும் பள்ளி---பல்லாவரம் கண்டோன்மெண்ட் அரசு உயர்நிலைப் பள்ளி.

அந்த மகத்தான செயல் புரிந்த ஆசிரியை—அந்தப் பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திருமதி.லலிதா.

தாயே!உங்களுக்குத் தலை மண்ணில் பட வணங்குகிறேன்!

இறைவன் அருள் என்றும் உங்களுடன் இருக்கட்டும்!

34 கருத்துகள்:

  1. அந்த தெய்வத்துக்கு என் வணக்கங்களும்..

    பதிலளிநீக்கு
  2. பாருங்க, இது போன்ற நல்ல காரியங்கள், செயல்கள் எல்லாம் எல்லோருக்கும் தெரிவதில்லை. தெரிவிக்கும் ஊடகங்கள் மிகக்குறைவு.
    இந்த பகிர்வு பலரும் அறிந்துகொள்ள வாய்ப்பு.
    ///நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும்
    பெய்யும் மழை.///
    என்ற பழந்தமிழ் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
    தங்கள் சமூகத்தை தூக்கி நிறுத்துவதாக மார்த்தட்டியவர்களின் பிளக்ஸ் பேணர்களாலும் , போஸ்டர்களாலும் நாடு நகரங்கள் நாரிகிடப்பதுதான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  3. அந்த அம்மையாரை வணங்குகிறேன் நான்..
    அவர்கள் வாழட்டும் நூறாண்டு..

    பதிலளிநீக்கு
  4. பயணமும் எண்ணங்களும் கூறியது...

    //அந்த தெய்வத்துக்கு என் வணக்கங்களும்..//
    அனைவரின் வணக்கங்களுக்கும் உரியவர்தான் அவர்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  5. கக்கு - மாணிக்கம் கூறியது...
    //தங்கள் சமூகத்தை தூக்கி நிறுத்துவதாக மார்த்தட்டியவர்களின் பிளக்ஸ் பேணர்களாலும் , போஸ்டர்களாலும் நாடு நகரங்கள் நாரிகிடப்பதுதான் மிச்சம்.//
    உண்மை!அரசுகள் கூட நலத்திட்டங்களால் தங்களுக்கு என்ன பயன் என்ற நோக்கில்தான் செயல்படுகின்றன.
    நன்றி மாணிக்கம்!

    பதிலளிநீக்கு
  6. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //அந்த அம்மையாரை வணங்குகிறேன் நான்..
    அவர்கள் வாழட்டும் நூறாண்டு..//
    உங்களோடு சேர்ந்து மீண்டும் நானும்.
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  7. இந்த பதிவை அந்த பணத்தாசை பிடித்த கொலைஞருக்கு சமர்ப்பணம் செய்கிறேன். ஒரு பதவியும் இல்லாத இந்த நல்ல மனம் எங்கெ. முதல்வராக இருந்தும் கோடிகள் இருந்தும் உதவாக்கரையாய் இந்த கள்ள மனம் எங்கே.

    பதிலளிநீக்கு
  8. மனதை நெகிழவைத்த பதிவு. இப்படிப்பட்ட சிலர் இருப்பதால்தான்,வானம் பொய்க்காதிருக்கிறது போலும்!

    விளம்பரம் இல்லாமல் அவர் ஆற்றிய பணியை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. விஜயன்,
    உங்கள் மனக்குமுறல் வார்த்தைகளாக வெடித்திருக்கிறது!இதே குமுறல் பெரும்பானமையானவர் மனத்திலும் இருக்கலாம்--அடக்கப்பட்டு.அது தேர்தலில் வெளிப்படுமா என்பதுதான் கேள்வி!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜயன்!

    பதிலளிநீக்கு
  10. வே.நடனசபாபதி கூறியது...
    //இப்படிப்பட்ட சிலர் இருப்பதால்தான்,வானம் பொய்க்காதிருக்கிறது போலும்!//
    மிகச்சரி.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  11. பகிர்வுக்கு நன்றி ... அந்த அம்மையாருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ..


    @விஜயன்

    அவரை விடுங்க. இன்னிக்கு பதிவர்கள் எத்தனை பேரு இதை படிச்சாங்க ? எதனை பேரு இதை பகிர்ந்தார்கள் ???

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கார்த்திக்.

    பதிலளிநீக்கு
  13. எங்கள் வணக்கங்களும் கூட... அவரை பற்றிய தகவல் பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  14. Chitra கூறியது...

    //எங்கள் வணக்கங்களும் கூட... அவரை பற்றிய தகவல் பகிர்வுக்கு நன்றிங்க.//
    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  15. மாணவர்களுக்கு மட்டுமே பாடம் சொல்லாமல் மனிதர்களுக்கே பாடமாய் திகழும் பாரதி கண்ட புதயுகப் பெண்ணே உன் உன் பாதம் பணிகிறேன்

    உன் கருணையுள்ளத்தில் கடவுளைக் காண்கிறேன்.

    பாப்பாரப்பட்டிநாகராஜன்
    16 02 2011

    பதிலளிநீக்கு
  16. அந்த ஆசிரியர் அவர்களுக்கு என் பணிவான வணக்கம்....

    பகிர்வுக்கு உங்களுக்கு என் நன்றிங்கைய்யா.

    பதிலளிநீக்கு
  17. தாயுள்ளம் படைத்த அந்த பெண்மணியை தமிழ்நாட்டின் தெரசா என்றே அழைக்கலாம் . வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  18. மாணவர்களுக்கு மட்டுமே பாடம் நடத்தியவர் மனிதர்களுக்கும் பாடமாய் திகழ்வது வணங்குதலுக்கு உரியது.

    பாரதிகண்ட புதுமைப்பெண்ணே உன் பாதம் பணிகிறேன்

    உன் க்ருணையின் உருவில் கடவுளை
    காண்கிறேன்

    பாப்பாரப்பட்டிநாகராஜன்
    16 02 2011

    பதிலளிநீக்கு
  19. தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.
    http://blogintamil.blogspot.com/2011/02/2-thursday-in-valaichcharam-rahim.html

    பதிலளிநீக்கு
  20. Nagarajan- Aswatha Rao- purushothama Rao சொன்னது…

    //உன் கருணையுள்ளத்தில் கடவுளைக் காண்கிறேன்.//
    இறைவன் மனித உருவத்தில்தான் வருகிறான்!
    உங்கள் கருத்து சரியே!
    நன்றி நாகராஜன்!

    பதிலளிநீக்கு
  21. ரஹீம் கஸாலி கூறியது...

    //தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.//
    பார்த்தேன், நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்!
    நன்றி கஸாலி!

    பதிலளிநீக்கு
  22. விக்கி உலகம் கூறியது...

    //தலை வணங்குகிறேன்!//
    வணங்கப்பட வேண்டியவர்தான்!
    நன்றி,மற்றும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  23. இது போன்ற கருணையுள்ளம் கொண்டவர்களால் தான் இந்த உலகம் இன்னும் இயங்கிகொண்டிருக்கிறது..

    உண்மையான வணக்கத்திற்க்குரியவர் இந்த தாயே,,,

    வணங்குகிறேன்,,

    பகிர்ந்துகொண்டதுக்கு நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  24. ஹரிஸ் கூறியது...
    //இது போன்ற கருணையுள்ளம் கொண்டவர்களால் தான் இந்த உலகம் இன்னும் இயங்கிகொண்டிருக்கிறது..
    உண்மையான வணக்கத்திற்க்குரியவர் இந்த தாயே,,,
    வணங்குகிறேன்,,
    பகிர்ந்துகொண்டதுக்கு நன்றி ஐயா....//
    வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஹரிஸ்!
    விருதகிரி விமர்சனத்துக்குப் பின் எதுவும் எழுதவில்லையே?

    பதிலளிநீக்கு
  25. ஆமா சார் கொஞ்சம் பிஸி...வேலையெல்லாம் முடிச்சிட்டு பொறுமையா எழுதுவோம்.எங்க போகபோறோம்....?

    பதிலளிநீக்கு
  26. அந்த தெய்வத்திற்கு நான் தலை வணங்குகிறேன்...பல நூறாண்டு அவர்கள் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  27. அந்தத் தாய் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. அம்மையார் வாழும் அதே உலகத்தில் வாழும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததே!

    பதிலளிநீக்கு
  29. வாசகர்களின் எண்ணங்களை மேம்படுத்தும் பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  30. அப்பாதுரை கூறியது...
    //அம்மையார் வாழும் அதே உலகத்தில் வாழும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததே!//
    நம் அனைவருக்கும்!
    நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  31. ராம்ஜி_யாஹூ கூறியது...

    // வாசகர்களின் எண்ணங்களை மேம்படுத்தும் பயனுள்ள பதிவு//
    நன்றி ராம்ஜி!

    பதிலளிநீக்கு
  32. we have to circulate this as many as possible.
    She is a role model for all kind of people.

    Good

    பதிலளிநீக்கு
  33. Shankar கூறியது...

    //She is a role model for all kind of people.// undoubtedly!
    Good//
    thank u shankar!

    பதிலளிநீக்கு