// //காலிஃப்ளவர் குருமா, மசாலா கார தோசை//
அது சரி, உங்களுக்குத்தான் மசாலா வாசனை பிடிக்காதே... ஒருவேளை பூண்டு மட்டும்தான் பிடிக்காதோ!//
நேற்றைய என் பதிவில் எங்கள் பிளாக் ஸ்ரீராமின் பின்னூட்டம் இது .
இது போதாதா நமக்கு ஒரு பதிவு எழுதுவதற்கு?!
நான்
என் பட்டப் படிப்பை முடிக்கும் வரை மசாலா வாடையே எனக்குப் பிடிக்காதிருந்தது. ஒரு
முறை அண்டை வீட்டார் அவர்கள் வீட்டில் செய்த வெஜிடபிள் பிரியாணியைக் கொடுக்க வர, வேண்டாம் திருப்பிக் கொண்டு போய்விடுங்கள் என்று சொன்னகாலம்.
என்
நண்பர் ஒருவர் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி வாங்கித் தரும்போது சப்பாத்தி
குருமா வரவழைக்க,குருமாவின் வாடையால் அதைத் தொடாமலே தள்ளியவன்.
பின்னர்
பட்ட மேற்படிப்புக்குச் சென்னை வந்து சேர்ந்தேன்.விடுதி வாசம் ஆரம்பம்; அங்கு சைவச்
சாப்பாடு மட்டுமே!வழக்கமான சாப்பாடுதான்;பிரச்சினை இல்லை என்றுதான் எண்னினேன்;ஒரு
நாள் இரவு சாப்பிட அமர்ந்தேன்;வழக்கம்போல் வாழை இலை; சிறிதுநேரத்தில் மசாலாவின்
வாடை வந்தது;இலையில் வந்து விழுந்தது அந்த வாடையுடன் எதோ அரிசிச் சோறு. என்ன வென்று
கேட்டேன்;வெஜ்.புலாவ் என்று பதில் வந்தது’வேறு ஒன்றும் கிடையாதா என்றேன் இன்று
இதுவும் மோர்சாதமும்தான் என்றனர்;இடி விழுந்த.து போல் ஆயிற்று வாரம் ஒரு முறை இதுதான்
மெனு என அறிந்ததும்.கொஞ்சம் சாப்பிட்டேன்; பின்னர் அதிக மோர் சாதம்;வாரங்கள்
செல்லச் செல்லக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி விட்டேன்; எங்கள் குழுவுக்காக ரொட்டித் துண்டங்கள்
அதிகமாகவே விழும்!சப்பாத்தி குருமாவும் ஒரு நாள் உண்டு!
அன்றும் மோர்சாதம் உண்டு.சப்பாத்திக்குப் பின் சாதத்தில் குருமாவைக் கலந்து ஒரு
பிடிபிடித்துவிட்டுப் பின்னர் மோர்சாதத்துக்குப் போகும் அளவுக்கு முன்னேறி
விட்டேன்!
அதைப்
புலாவ் என்றுதான் அழைத்தார்கள்.இன்று வரை புலாவுக்கும் பிரியாணிக்கும் என்ன
வேறுபாடு என்று எனக்குத் தெரியாது;சிலர் அதை பிரிஞ்சி என்றும் அழைக்கிறார்கள்.அது
வேறு ஏதாவதா?
தேடிப்பார்த்தபோது
எனக்குக் கிடைத்த பதில் இதுவே....
அரிசியுடன்,காய்கறிகளையும்,மசாலாவையும்
சேர்த்து சமைப்பது புலாவ்
பிரியாணியில்
அரிசியும் காய்கறிகளும் தனியாகச் சமைக்கப்பட்டுப்பின் அடுக்கப்பட்டு குறைந்த
தீயில் சமைக்கப்படுகின்றன
சில வாரங்களுக்கு முன் என் பெண் வெஜ் பிரியாணியும் வெங்காயப் பச்சடியும் கொண்டு வந்து கொடுத்தாள்.அருமையான பாஸ்மதி அரிசி!
சூப்பர்.அந்தக்காலத்தில் கல்லூரி விடுதியில் சாதாரண
அரிசிதான்!
இப்போதெல்லாம்
திருமண வரவேற்பு விருந்தில் இந்த வெஜ்.சாதமும்( பிரியாணியா, பிரிஞ்சியா, புலாவா,ஃப்ரைட்
ரைஸா என்று நிச்சயம் தெரியாது!) ஒரு ஐட்டம்
ஆகி விட்டது
வெஜ்
பிரியாணி /புலாவ் செய்முறையைத் ‘திங்கக் கிழமையில்’ பார்க்க முடியும் என நம்புகிறேன்!
டிஸ்கி:என் வீட்டுச் சமையலில் பூண்டு கிடையாது என்பதே சாராம்சம்!
நன்றி ஸ்ரீராம்!
டிஸ்கி:என் வீட்டுச் சமையலில் பூண்டு கிடையாது என்பதே சாராம்சம்!
நன்றி ஸ்ரீராம்!