தொடரும் தோழர்கள்

தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

தொடர் பதிவுகளை சுவாரஸ்யமாக்குவது எப்படி?!



சிறிது காலம் ஓய்ந்திருந்த தொடர் பதிவுகள் மீண்டும் தலை தூக்கிச் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தொடர் பதிவுகளை எதனோடு ஒப்பிடலாம் என யோசித்தபோது இரு விடைகள் கிடைத்தன.

முன்பெல்லாம்  பல அடுக்கு விற்பனை(multi level marketing)என்ற ஒன்று பரவலாக இருந்தது.
ஒருவர் இதை அறிமுகப்படுத்துவார்.இதில் சேர்பவர் ரூ.5000 கட்டுகிறார் என வைத்துக் கொள்வோம்.அவர் மேலும் ஐந்து பேரை இத்திட்டத்தில் சேர்த்து விட வேண்டும்.அந்த ஐந்து பேரும் தலா ஐந்து பேரைச் சேர்க்க வேண்டும்,இவ்வாறு 25 இலிருந்து 125,அதிலிருந்து625 என்று விரிவடைந்து கொண்டே போகும்.இதில் சேர்ந்தால் என்ன லாபம் என்றால்.,ஒவ்வொரு சேர்க்கைக்கும்.சேர்த்து விட்டவர்களுக்கும்,அவர்களைச் சேர்த்து விட்ட வர்களுக்கும்....ஏதோ கமிசன் கிடைக்குமாம்.அதிகம் சேரச் சேர அதிகம் கமிசன்,அதிக வருமானம்(கடைசியில் பார்த்தால் ஆரம்பித்தவருக்கு லாபம்,மற்றவர்களுக்கு நாமம்!)

இது போல ஒரு  ஒரு ஊக்கத்தொகையை தொடர் பதிவில் அறிமுகப்படுத்தலாம்.பணம் வேண்டாம்,தமிழ் மண ஓட்டாக!தொடர்பதிவுக்கு அழைத்தவருக்கு அழைக்கப்பட்டவர்கள் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டாக வேண்டும்;அதற்குப்பின் வருபவர்கள்,முன் வந்த அனைவருக்கும் ஓட்டுப்போட வேண்டும்.....இப்படி! எப்புடி?

இன்னொரு நிகழ்வையும் ஒப்பிடலாம்.முன்பெல்லாம் கடிதம் வரும்,திருப்பதி பாலாஜியின் அற்புத நிகழ்வு பற்றி.அதில் சொல்லியிருப்பார்கள்,செய்தியைப் பத்துப்பேருக்கு எழுதியனுப்ப வேண்டு மென்று;அவ்வாறு உடன் எழுதியவருக்கு  லாட்டரியில் ஒரு கோடி கிடைத்தது, எழுதாமல் அலட்சியம் செய்தவருக்கு விபத்து நேர்ந்த்து என்று.இப்போதெல்லாம் இது போன்ற செய்திகள் மின்னஞ்சலில் வருகின்றன.

இது போல,ஐந்து பேரை அழைக்கும்போது ஊக்கச் செய்தி சொல்லலாம்.

“தொடரை உடனே தொடர்ந்து எழுதிய ராஜிக்கு இரண்டு ஆரணிப்பட்டுப் புடவைகள் கிடைத்தன, சிவகுமாருக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்டது,எழுதாமல் விட்ட சென்னை பித்தனுக்கு சென்ற ஆண்டு காலில் கார் ஏறியது” இப்படி ஏதாவது.

நல்லது நடக்கும் என்பதற்காக எழுதாவிட்டாலும்,கெட்டது நடக்காமல் இருக்க நிச்சயம் எழுதுவார்கள்தானே!

அப்புறம் என்ன !வாங்க!

பதிவுலகைத் தொடர் பதிவுகளால் நிரப்புவோம்!.......