தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

தொடர் பதிவுகளை சுவாரஸ்யமாக்குவது எப்படி?!சிறிது காலம் ஓய்ந்திருந்த தொடர் பதிவுகள் மீண்டும் தலை தூக்கிச் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தொடர் பதிவுகளை எதனோடு ஒப்பிடலாம் என யோசித்தபோது இரு விடைகள் கிடைத்தன.

முன்பெல்லாம்  பல அடுக்கு விற்பனை(multi level marketing)என்ற ஒன்று பரவலாக இருந்தது.
ஒருவர் இதை அறிமுகப்படுத்துவார்.இதில் சேர்பவர் ரூ.5000 கட்டுகிறார் என வைத்துக் கொள்வோம்.அவர் மேலும் ஐந்து பேரை இத்திட்டத்தில் சேர்த்து விட வேண்டும்.அந்த ஐந்து பேரும் தலா ஐந்து பேரைச் சேர்க்க வேண்டும்,இவ்வாறு 25 இலிருந்து 125,அதிலிருந்து625 என்று விரிவடைந்து கொண்டே போகும்.இதில் சேர்ந்தால் என்ன லாபம் என்றால்.,ஒவ்வொரு சேர்க்கைக்கும்.சேர்த்து விட்டவர்களுக்கும்,அவர்களைச் சேர்த்து விட்ட வர்களுக்கும்....ஏதோ கமிசன் கிடைக்குமாம்.அதிகம் சேரச் சேர அதிகம் கமிசன்,அதிக வருமானம்(கடைசியில் பார்த்தால் ஆரம்பித்தவருக்கு லாபம்,மற்றவர்களுக்கு நாமம்!)

இது போல ஒரு  ஒரு ஊக்கத்தொகையை தொடர் பதிவில் அறிமுகப்படுத்தலாம்.பணம் வேண்டாம்,தமிழ் மண ஓட்டாக!தொடர்பதிவுக்கு அழைத்தவருக்கு அழைக்கப்பட்டவர்கள் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டாக வேண்டும்;அதற்குப்பின் வருபவர்கள்,முன் வந்த அனைவருக்கும் ஓட்டுப்போட வேண்டும்.....இப்படி! எப்புடி?

இன்னொரு நிகழ்வையும் ஒப்பிடலாம்.முன்பெல்லாம் கடிதம் வரும்,திருப்பதி பாலாஜியின் அற்புத நிகழ்வு பற்றி.அதில் சொல்லியிருப்பார்கள்,செய்தியைப் பத்துப்பேருக்கு எழுதியனுப்ப வேண்டு மென்று;அவ்வாறு உடன் எழுதியவருக்கு  லாட்டரியில் ஒரு கோடி கிடைத்தது, எழுதாமல் அலட்சியம் செய்தவருக்கு விபத்து நேர்ந்த்து என்று.இப்போதெல்லாம் இது போன்ற செய்திகள் மின்னஞ்சலில் வருகின்றன.

இது போல,ஐந்து பேரை அழைக்கும்போது ஊக்கச் செய்தி சொல்லலாம்.

“தொடரை உடனே தொடர்ந்து எழுதிய ராஜிக்கு இரண்டு ஆரணிப்பட்டுப் புடவைகள் கிடைத்தன, சிவகுமாருக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்டது,எழுதாமல் விட்ட சென்னை பித்தனுக்கு சென்ற ஆண்டு காலில் கார் ஏறியது” இப்படி ஏதாவது.

நல்லது நடக்கும் என்பதற்காக எழுதாவிட்டாலும்,கெட்டது நடக்காமல் இருக்க நிச்சயம் எழுதுவார்கள்தானே!

அப்புறம் என்ன !வாங்க!

பதிவுலகைத் தொடர் பதிவுகளால் நிரப்புவோம்!.......

53 கருத்துகள்:

 1. //கடைசியில் பார்த்தால் ஆரம்பித்தவருக்கு லாபம்,மற்றவர்களுக்கு நாமம்//

  ஹா ஹா... சரியாக சொன்னீர்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதானே நடந்தது பல அடுக்கு வியாபாரத்தில்?

   நன்றி ஸ்கூல் பையன்

   நீக்கு
 2. ரசித்தேன்.....

  மற்றவர்களுக்கு நாமம்.... :))))))

  பதிலளிநீக்கு
 3. //கடைசியில் பார்த்தால் ஆரம்பித்தவருக்கு லாபம்,மற்றவர்களுக்கு நாமம்//

  ஆரம்பித்தவரையும் செர்ந்தவங்களுமாக சேர்த்து மும்பை ஜெயில்ல பிடிச்சு போட்டு களி திங்கக் குடுத்தாயிங்க ஹா ஹா ஹா...!

  பதிலளிநீக்கு

 4. “தொடரை உடனே தொடர்ந்து எழுதிய ராஜிக்கு இரண்டு ஆரணிப்பட்டுப் புடவைகள் கிடைத்தன, சிவகுமாருக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்டது,எழுதாமல் விட்ட சென்னை பித்தனுக்கு சென்ற ஆண்டு காலில் கார் ஏறியது” இப்படி ஏதாவது.//

  நாங்கெல்லாம் பச்ச பிள்ளைங்க சாமியோவ்....

  பதிலளிநீக்கு

 5. //நல்லது நடக்கும் என்பதற்காக எழுதாவிட்டாலும்,கெட்டது நடக்காமல் இருக்க நிச்சயம் எழுதுவார்கள்தானே! அப்புறம் என்ன !வாங்க!
  பதிவுலகைத் தொடர் பதிவுகளால் நிரப்புவோம்!.....//

  தொடர்பதிவை தொடர வழி சொல்லிவிட்டீர்கள். அப்படியே ஒரு பத்து பதினைந்து தலைப்புக்களையும் கொடுத்துவிடுங்களேன். பதிவிட அழைப்பவர்களுக்கு உதவியாக இருக்குமல்லவா?

  பதிலளிநீக்கு
 6. ஐந்து பேரை அழைக்கும்போது ஊக்கச் செய்தி சொல்லலாம்.

  அருமையான யோசனை..!

  பதிலளிநீக்கு
 7. அடடே.. இது நல்ல ஐடியாவா இருக்கே....! இதை செயல்படுத்தினால் இனி பதிவுலகம் தொடர்பதிவுகளால் தொடர்ந்து வாழ்ந்துகொண்டே இருக்கும்.. எப்படியும் பதிவு எழுதியே ஆக வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்திவிடும்...!!

  "வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் அப்படியே இருக்கு" வசனம்தான் ஞாபகம் வருது "சென்னை பித்தன்" சார்...!!!

  நல்லதொரு வித்தியாசமான சிந்தனை.. வேடிக்கையான பதிவு...பகிர்வினிற்கு நன்றி..!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //"வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் அப்படியே இருக்கு" வசனம்தான் ஞாபகம் வருது "சென்னை பித்தன்" சார்...!!!//

   காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளாலாம்!
   நன்றி தங்கம் பழனி

   நீக்கு
 8. ஹாஹா ஓகே ஓகே நடத்துங்க...

  பதிலளிநீக்கு
 9. சிவகுமாருக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்டது//மகிழ்வான செய்தி.வாழ்த்து தெரிவித்து தொடரலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் செய்தி உண்மையாக வாழ்த்துவோம்!
   நன்றி கண்ணதாசன்

   நீக்கு
 10. ஹா ஹா ஹா சென்னை பித்தன் காலில் கார் ஏறவில்லை, காலில் ஏற இருந்த காரை கேப்டன் விசயகாந்த் போல் தூக்கி தூர எரிந்து விட்டார்

  பதிலளிநீக்கு
 11. நீங்கள் வலைப்பதிவில் இளமை எனும் பூங்காற்று. தொடரட்டும் உங்கள் புரட்சிகர பயணம்...வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. தொடர்பதிவை எழுதி சுவாரஸ்யமாக்க இப்படிப்பட்ட வழிகளா!!!....

  தொடரட்டும்:))

  பதிலளிநீக்கு
 13. தமிழ்மணத்தில் ஓட்டு - நல்ல யோசனையாக உள்ளது. நான் எந்த பதிவாக இருந்தாலும் படித்து முடிந்ததும் எனது கருத்துரையையும் தமிழ்மணத்தில் வாக்கையும் தந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளேன். கவிஞர் ரமணியிடம் கற்ற பாடம்.

  பதிலளிநீக்கு
 14. உங்கள் பதிவில் நமது இந்திய தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எனது பதிவிலும் அதேபோல் செய்திட என்ன செய்ய வேண்டும் என்பதனைத் தெரிவிக்கவும். முன்னதாகவே, உங்களுக்கு என்னுடைய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்வாசி பிரகாஷின் இந்தப் பதிவைப் பாருங்கள்--http://www.tamilvaasi.com/2013/08/blog-post_5.html

   சுதந்திர தின வாழ்த்துகள்

   நீக்கு
 15. கடைசியில் பார்த்தால் ஆரம்பித்தவருக்கு லாபம்,மற்றவர்களுக்கு நாமம்//ஹீ ஹீ செம சிரிப்பு வெடி ஐயா!

  பதிலளிநீக்கு
 16. ஜுப்பர் யோசனைகள்! உங்க பாணியிலே கலக்கிட்டீங்க!

  பதிலளிநீக்கு
 17. //கடைசியில் பார்த்தால் ஆரம்பித்தவருக்கு லாபம்,மற்றவர்களுக்கு நாமம்//

  ரைட்டு..

  பதிலளிநீக்கு
 18. ஹா ஹ செம ..ஆனால் நல்ல யோசனை தமிழ்மணம் ஒட்டு

  பதிலளிநீக்கு
 19. ஒரு தகவலுக்காக மட்டும் இதனை பதிவு செய்துள்ளேன்.

  அன்புள்ள ப்ளாக்கர் நண்பன் அப்துல்பாசித் அவர்களுக்கு வணக்கம்! எனது ” துள்ளித் துள்ளி ஓடும் வலைத்தளம் (http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html) என்ற பதிவிற்கு, தாங்களே முன்வந்து ஆலோசனை தந்து இருந்தீர்கள். உண்மையில் பயம் காரணமாக அதன்படி உடனே அதனை பின்பற்றவில்லை. இப்போது நீங்கள் சொன்னபடி எனது வலைப்பதிவில் மாற்றம் செய்து விட்டேன். தங்களுக்கு நன்றி! உங்களுடைய பதிவினை மேற்கோள் சொல்லி எனக்கு வழிகாட்டிய சென்னை பித்தன் அவர்களுக்கும், எனக்கு சொல்லுமாறு சொல்லிய ச்கோதரி அம்பாள் அடியாள் அவர்களுக்கும், மற்றும் இது விஷயமாக சுட்டிக் காட்டிய சகோதரிகள் கவிஞர் வேதா. இலங்காதிலகம் மற்றும் மனோ சாமிநாதன் அவர்களுக்கும் நன்றி!

  அன்புடன் – தி.தமிழ் இளங்கோ
  வலைப் பதிவு: எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL http://tthamizhelango.blogspot.com
  நாள்: 06.08.2013

  பதிலளிநீக்கு
 20. ஹா ஹா ஹா... நல்ல வழிமுறைகள். அடுத்து முறை உங்களையே அழைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 21. அருமையான யோசனைதான்
  சுவாரஸ்யமான பகிர்வு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 22. வித்தியாசமான ஆலோசனைகள். எப்படியோ பதிவுலகம் கலகலப்பா இருக்கணும்.

  பதிலளிநீக்கு
 23. இப்படி யோசனை சொல்ற பதிவுகளுக்கு ஒரு நாலஞ்சு பேரை தொடர் போட்டு அறிவிச்சிருக்கலாம்...

  பதிலளிநீக்கு
 24. எங்கருந்துங்க உங்களுக்கு ஐடியா கிடைக்குது? அதுவும் டெய்லி ஒரு பதிவு ரசிக்கிறா மாதிரி...சூப்பர் சார்.

  பதிலளிநீக்கு