தொடரும் தோழர்கள்

சனி, ஆகஸ்ட் 03, 2013

ஆடிப் பெருக்கும் அருக்காணியும்!ஆடிப் பதினெட்டுடீ இன்னிக்கு அருக்காணி

ஆத்து தண்ணி கரை புரண்டு ஓடுதடி

சோத்து மூட்டை கட்டி சொகுசா வாடி

சோக்காக் கரையோரம் சாப்பிடலாம்!


அம்மா தயவில வாங்கின அரிசியெல்லாம்

அன்னைக்கே காலியாப் போச்சு மச்சான்

பெரிய வீட்டில வாங்கின கம்புகொஞ்சம்

தெரியாமக்  காப்பாத்தி வெச்சிருக்கேன்

கூழு கொஞ்சம் காய்ச்சித் தாரேன்

குடிச்சுப்புட்டுக்   கூலி வேலைக்குப் போ!


வெவசாய நெலமெல்லாம் இப்போ

வீடு கட்டக் கூறு போட்டாச்சு

ஆத்தில தண்ணி கரை புரண்டு ஓடினாலும்

ஆடிப் பெருக்கெல்லாம் நமக்கு ஏது மச்சான்?!26 கருத்துகள்:

 1. ஆத்தில தண்ணி கரை புரண்டு ஓடினாலும்

  ஏழைக்கூலிகளின் ஏக்கம் தீர வழியில்லையோ என வருந்த வைக்கும் வரிகள்.

  பதிலளிநீக்கு
 2. யதார்த்த நிலை சொல்லும் அருமையான
  சிறப்புப் பதிவு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வருந்த வைக்கும் வரிகள்....

  இருக்கும் எல்லா இடத்திலும் வீடு கட்டிவிட்டால் சோத்துக்கு எங்க போக.... :(

  பதிலளிநீக்கு
 4. விவசாயிக்கு நிலமுமில்லை செய்கின்ற தொழிலுக்கு லாபமும் இல்லை என்ற நிலையில் கூலிகளின் வயிறு நிறைவது எப்படி ? அவர்கள் நிலையை எடுத்துக் கூறிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. This is one side of the picture;on the other hand I have been hearing about shortage of labour in villages with few willing to work in agricultural lands. on account of migration to cities where more facilities are available. Vasudevan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாணயத்துக்கு இரண்டு பக்கம்!
   நன்றி வாசு--அபூர்வ வருகைக்கு

   நீக்கு
 6. ஏழையின் ஏக்கமும், இயலாமையும் கலந்து சொல்லி சென்றது உங்க கவிதை. மண்வாசனயோடு..., பகிர்வுக்கு நன்றி ஐயா!!

  பதிலளிநீக்கு
 7. வருங்காலத்துல மண்ணைச் சாப்பிட்டுத்
  தண்ணியைக் குடிப்பார்கள் என்று தோன்றுகிறது.

  கவிதையின் கரு அருமை பித்தன் ஐயா.

  பதிலளிநீக்கு
 8. //ஆத்தில தண்ணி கரை புரண்டு ஓடினாலும்

  ஆடிப் பெருக்கெல்லாம் நமக்கு ஏது மச்சான்?!//

  ஆத்திலே தண்ணி கரைபுரண்டு ஓடுவது ஆடிப்பெருக்கு அன்றைக்கு மட்டும்தான். எனவே நிலம் இருந்தாலும் வேளாண்மை செய்ய இயலாது.

  பதிலளிநீக்கு
 9. ஏழைக்கு ஆடியாவது தீபாவளியாவது புத்தாண்டாவது...!

  பணக்காரனுக்கு எல்லா நாளும் ஒன்றே...!

  பதிலளிநீக்கு
 10. உள்ளே ஒளிந்திருக்கும் அந்த மகா கவியை வெளியே கொண்டு வாருங்கள்

  //ஆத்தில தண்ணி கரை புரண்டு ஓடினாலும்

  ஆடிப் பெருக்கெல்லாம் நமக்கு ஏது மச்சான்?!//


  நெஞ்சை நெருடும் வரிகள் . தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 11. தேடிப் பார்க்கிறேன்,யாராவது ஒளிந்திருக்கிறார்களா என்று!
  நன்றி கக்கு மாணிக்கம்

  பதிலளிநீக்கு
 12. எம்மைப் போன்ற சிறுவர்களுக்கும் புரியும் வடிவில் ஒரு கவிதை .. ரசித்தேன்

  பதிலளிநீக்கு