தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

விடுமுறை,சிரிமுறை!

வேலை தேடி வட்டரங்குக்குப் போனார் ஒருவர்.

முதளாளி அவரிடம் கேட்டார்பிறரால் செய்ய முடியாத ஏதாவது வேலை உன்னால் செய்ய முடியுமா?”

செய்வேன்;நான் நன்றாகச் சாப்பிடுவேன்

அப்படியா?எவ்வளவு சாப்பிடுவாய்?”

ஒரு வேளைக்கு 30 இட்லி.,30 வடை,30 தோசை,30 பரோட்டா எல்லாம் சாப்பிடுவேன்” 

முதலாளிக்கு மகிழ்ச்சி.அவர் சொன்னார்பிரமாதம்.இதையே ஒரு நிகழ்ச்சியாக வைத்து விடலாம்;எல்லோரும் ரசிப்பார்கள்

அவர் சொன்னார்நன்றி ஐயா!ஆனால் மாலைக்காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையில் எனக்கு குறைந்தது ஒரு மணி நேர இடைவெளியாவது வேண்டும்”.

எதற்கு?”

இரவுச் சாப்பாட்டுக்கு நான் வீட்டுக்குப் போகவில்லை என்றால் என் மனைவி வருத்தப் படுவாள்!

10 கருத்துகள்:

  1. 1977ல் கேட்ட ஜோக்கை நாற்பது வருடம் கழித்துக் கேட்டாலும்
    அந்த சுவை குறையவில்லை.

    என்னதான் பைவ் ஸ்டார் ஹோட்டலில் அறுசுவை உணவு சாப்பிட்டாலும் அருமை பெண்டாட்டி செய்து போடும் வெத்தக்குழம்பு, பருப்புத் துவையல், சுட்ட அப்பளத்துக்கு ஈடாகுமோ !!

    அவள் கருணைக்கும் ஒரு எல்லை உண்டோ !!

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  2. சுப்பு தாத்தா அவர்கள் சொன்னதுபோல் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் இது போன்ற நகைச்சுவை துணுக்குகள் வாய்விட்டு சிரிக்க வைக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. இன்றைய புரோட்டா சூரிக்கு இவன்தான் குருவோ :)

    பதிலளிநீக்கு
  4. ஹஹஹ சமீபத்தில் வந்த படத்தில் வரும் ஒரு நகைச்சுவைக் காட்சியை நினைவுபடுத்தியது...

    பதிலளிநீக்கு
  5. ஹா...ஹா...ஹா....

    'ராமன் எத்தனை ராமனடி' படக் காட்சி நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு