தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 21, 2011

காதலி!உன்னை எப்படி மறப்பேன்!

எனது 9-9-2011 தேதியிட்ட ”ஒரு பதிவர் மனம் திறக்கிறார் “ என்ற பதிவில் எனக்குப் பிடித்த என் பழைய பதிவுகளை”மீள் பதிவா”கக் கொடுக்கப்போகிறேன் என்று சொல்லியிருந்தேன்.ஏற்கனவே ஒரு மீள் பதிவு வெளியிட்டு விட்டேன்.

இப்போது ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று கவிதைப் பதிவுகளை ஒன்றாக இணைத்துத் தந்திருக்கிறேன்.சேர்த்துப் படிக்கும்போதுதான் தாக்கம் புரியும்.பிடித்திருந்தால் சொல்லுங்கள்.

…………………….

இன்னும் மறக்கவில்லை
..................................................

சாந்தோம் கடற்கரையின்
சாயங்கால நெருக்கங்கள்
இன்னும் மறக்கவில்லை!

கபாலி கோவில் பிரகாரத்தின்
கண்பேசும் பாஷைகள்
இன்னும் மறக்கவில்லை!

புளூ டயமண்ட் குளிர் இருட்டின்
உன் உஷ்ண ஸ்பரிசங்கள்
இன்னும் மறக்கவில்லை!

எல்பின்ஸ்டன் ஜஃபார்கோவின்
உன் எச்சில் பீச்மெல்பா
இன்னும் மறக்கவில்லை!

ஆனால்,

நிச்சயமாய் மறந்தது ஒன்று உண்டு

இரக்கமே இல்லாமல் நீ எறிந்த வார்த்தைகள்
என்னை மறந்து விடுங்கள்

அதை மறந்ததனால்தான் உன்னை
இன்னும் மறக்கவில்லை,இன்னும் மறக்கவில்லை!

இன்று--
சாந்தோம் கடற்கரை மறைந்து விட்டது;
புளூ டயமண்ட் தியேட்டர் தொலைந்து விட்டது;
எல்பின்ஸ்டன் டாக்கீஸ் இடிந்து விட்டது!.
ஆனால்?
அவற்றுடன் கலந்த உன் நினைவுகள்?

…………………………………

சாந்தோம் சந்திப்புகள்

காத்திருந்து காத்திருந்து உள்ளம் வாடுதடி-வழி
பார்த்திருந்து பார்த்திருந்து ண்களும் நோகுதடி.

எத்தனை நேரம்தான் நீர் அலைகளை எண்ணுவது?
எத்தனை தடவைதான் கடல் மணலைக் கிளறுவது?

சுண்டல்காரச் சிறுவனும் சுற்றிச் சுற்றி வருகின்றான்;
கிண்டலாய்க் கேட்பானோஅக்கா வரல்லையா?”

நேற்றும் நீ வரவில்லை இன்றும் வரவில்லை இன்னும்;
தேற்றுவாரின்றித் தேம்பியழுகிறதென் உள்ளம்.

அம்மா,தங்கையு டன் அனுமார் கோவில் போனாயோ?
(தண்ணித்துறை ஆஞ்சநேயர் மிகப் பிரசித்தம்-என் விளக்கம்)

சிநேகிதிகள் பலர் சூழ சினிமாவுக்குப் போனாயோ?
மாமிகள் பட்டாளத்துடன் மாம்பலம் போனாயோ ?

என்ன செய்தாயோ,என்னை மறந்து போனாய்.
உனக்காகத் தவிக்கும் உள்ளத்தை மறந்து போனாய்.

அடியே!

நாளையேனும் வந்தென்னைப்பார்-இல்லையேல் எனக்கு
நாளைகளே இல்லாமல் போய்விடும் போ!

………………………

சாந்தோம் சந்திப்புகளின் முடிவு!

இன்று நீ வந்தாய்! கண்களில் கண்ணீரோடு,

ஏன் வந்தாய் என்னை உயிரோடு கொல்வதற்கா?

நின்றாய்,தள்ளி அமர்ந்தாய்,தரை நோக்கித் தலை கவிழ்ந்தாய்,

மெல்ல வாய் திறந்தாய் இரண்டு நாட்களாய்

என்னென்னவோ நடந்துபோச்சு;பெண்பார்த்தார்கள்,

பிடிக்குதென்று சொன்னார்கள்;நிச்சயம் செய்தார்கள்.

என் மனம் யார் பார்த்தார்கள்?என் குரல் யார் கேட்டார்கள் ?

அப்பா சொல்லி விட்டார்;ஆவணியில் கல்யாணம்.

என்ன நான் செய்வேன்,அழுவதற்கும் உரிமையில்லை.

உங்கள் மடியில் முகம் புதைத்து அழுவதென்றால்

என்னுயிரே இன்றெனக்கு அதற்கும் துணிவில்லை.

எஸ் மாப்பிள்ளை, அனைவருக்கும் சந்தோஷம்.

என்னைத் தவிர எல்லோரும் சிரிக்கின்றார்,

எதிர்க்கவும் வழியில்லை காதல் உரைக்கவும் துணிவில்லை,

ஒன்றும் புரியவில்லை,ஒரு வழியும் தெரியவில்லை,

ஓடிப்போய் மணந்திடவும் உள்ளம் ஒப்பவில்லை,

மன்னியுங்கள் என்னை மகாபாவியாகிவிட்டேன்,

உங்களைப் பிரிந்து உயிரின்றிப் போகின்றேன்,

என்னை மறந்து விடுங்கள்என்றுரைத்துப் போய்விட்டாய்.

உனக்குரிமையில்லாத ஒரு விஷயம் சொல்லிச்சென்றாய்

"உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி?"

என் நெஞ்சில் ,நெஞ்சத்துடிப்பில்,உயிர் மூச்சில் கலந்ததனால் இன்னுயிரே உன்னை நான் இன்னும் மறக்கவில்லை!
சந்தனக்காடுகள் பற்றியெரிகையில் சந்தனமே மணக்கும்
என் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்(……)என்றே ஒலிக்கும்
(கடைசி இரண்டு வரிகள் நன்றி சேவற்கொடியோன்)

(காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களே! (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்!)


48 கருத்துகள்:

  1. அண்ணே கொன்னுட்டீங்க போங்க!

    பதிலளிநீக்கு
  2. காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களே! (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்!//

    கலக்கிடீங்க போங்க...

    பதிலளிநீக்கு
  3. தேன் கூட அதிகம் சாப்பிட்டால் திகட்டும். ஆனால் உங்கள் கவிதைகளை திரும்பத்திரும்ப படித்தாலும் சுவை கூடுகிறதே தவிர குறைவதில்லை.
    Law of Diminishing Marginal Utility படி ஒன்றை தொடர்ந்து நுகர்ந்தால் அதன் பேரில் உள்ள ஈர்ப்பு குறையும் என்றும், ஆனால் பணம் சேர்க்கும் ஆசை மட்டும் அதற்கு விதிவிலக்கு என்பார்கள்.
    அதில் உங்கள் கவிதையையும் எடுத்துக்கொள்ளலாம் என்கிறேன் நான்.

    பதிலளிநீக்கு
  4. அருமை அருமை
    மூன்றையும் சேர்த்துப் படிக்க
    ஒரு உண்மைக் காதலின் மரணத்தை
    சந்திக்க நேர்கிறது நிஜம்
    மனம் கவர்ந்த பதிவு
    த.ம 2

    பதிலளிநீக்கு
  5. இன்று--
    சாந்தோம் கடற்கரை மறைந்து விட்டது;
    புளூ டயமண்ட் தியேட்டர் தொலைந்து விட்டது;
    எல்பின்ஸ்டன் டாக்கீஸ் இடிந்து விட்டது!.
    ஆனால்?
    அவற்றுடன் கலந்த உன் நினைவுகள்?//

    எல்லாம் மறைந்து விட்டது உன் நினைவுகள் மறக்கவில்லை, வலி.....!!!

    பதிலளிநீக்கு
  6. "உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி?"//


    அருமையான கவிதை[கள்] தல, மனசுக்கு பாரமா இருக்கு....

    பதிலளிநீக்கு
  7. சேர்த்துப் படிக்கும்போதுதான் தாக்கம் புரியும்./

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  8. நல்ல வேளை நம்ம லைஃப்ல காதல்னு ஒண்ணு இன்னும் வரல...

    பதிலளிநீக்கு
  9. இன்று--
    சாந்தோம் கடற்கரை மறைந்து விட்டது;
    புளூ டயமண்ட் தியேட்டர் தொலைந்து விட்டது;
    எல்பின்ஸ்டன் டாக்கீஸ் இடிந்து விட்டது!.
    ஆனால்?
    அவற்றுடன் கலந்த உன் நினைவுகள்?

    காதல் வரிகள் அருமை..

    பதிலளிநீக்கு
  10. ஆஹா...ஃபிளாஸ் பேக்கா இருங்க படிச்சுட்டு வாரேன்

    பதிலளிநீக்கு
  11. மூன்று கவிதைகளுமே சூப்பர்.... திரும்பவும் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. விக்கியுலகம் சொன்னது…

    //அண்ணே கொன்னுட்டீங்க போங்க!//
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  13. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்சங்களே! (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்!//

    //கலக்கிடீங்க போங்க...//
    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  14. suryajeeva கூறியது...

    //வாழ்க்கை சுழலும்..//
    நன்றி சூர்யஜீவா!

    பதிலளிநீக்கு
  15. வே.நடனசபாபதி கூறியது...

    //தேன் கூட அதிகம் சாப்பிட்டால் திகட்டும். ஆனால் உங்கள் கவிதைகளை திரும்பத்திரும்ப படித்தாலும் சுவை கூடுகிறதே தவிர குறைவதில்லை.
    Law of Diminishing Marginal Utility படி ஒன்றை தொடர்ந்து நுகர்ந்தால் அதன் பேரில் உள்ள ஈர்ப்பு குறையும் என்றும், ஆனால் பணம் சேர்க்கும் ஆசை மட்டும் அதற்கு விதிவிலக்கு என்பார்கள்.
    அதில் உங்கள் கவிதையையும் எடுத்துக்கொள்ளலாம் என்கிறேன் நான்.//

    மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  16. Ramani கூறியது...

    //அருமை அருமை
    மூன்றையும் சேர்த்துப் படிக்க
    ஒரு உண்மைக் காதலின் மரணத்தை
    சந்திக்க நேர்கிறது நிஜம்
    மனம் கவர்ந்த பதிவு
    த.ம 2//
    நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  17. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    இன்று--
    சாந்தோம் கடற்கரை மறைந்து விட்டது;
    புளூ டயமண்ட் தியேட்டர் தொலைந்து விட்டது;
    எல்பின்ஸ்டன் டாக்கீஸ் இடிந்து விட்டது!.
    ஆனால்?
    அவற்றுடன் கலந்த உன் நினைவுகள்?//

    // எல்லாம் மறைந்து விட்டது உன் நினைவுகள் மறக்கவில்லை, வலி.....!!!//
    மறையாது மனோ!

    பதிலளிநீக்கு
  18. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    "உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி?"//


    //அருமையான கவிதை[கள்] தல, மனசுக்கு பாரமா இருக்கு....//
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  19. இராஜராஜேஸ்வரி கூறியது...

    சேர்த்துப் படிக்கும்போதுதான் தாக்கம் புரியும்./

    // உண்மைதான்.//
    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  20. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    //அருமை .//
    நன்றி நண்டு @நொரண்டு .

    பதிலளிநீக்கு
  21. பாலா கூறியது...

    // நல்ல வேளை நம்ம லைஃப்ல காதல்னு ஒண்ணு இன்னும் வரல...//
    எதையோ இழந்து கொண்டிருக்கிறீர்கள் !
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  22. ரிஷபன் கூறியது...

    இன்று--
    சாந்தோம் கடற்கரை மறைந்து விட்டது;
    புளூ டயமண்ட் தியேட்டர் தொலைந்து விட்டது;
    எல்பின்ஸ்டன் டாக்கீஸ் இடிந்து விட்டது!.
    ஆனால்?
    அவற்றுடன் கலந்த உன் நினைவுகள்?

    // காதல் வரிகள் அருமை..//
    நன்றி ரிஷபன்.

    பதிலளிநீக்கு
  23. மாய உலகம் கூறியது...

    //ஆஹா...ஃபிளாஸ் பேக்கா இருங்க படிச்சுட்டு வாரேன்//
    வரல்லையே!
    நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  24. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //மூன்று கவிதைகளுமே சூப்பர்.... திரும்பவும் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.//
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  25. அருமையான கவிதைகள் ,அழகான உயிரோட்டமுள்ள வரிகள்

    பதிலளிநீக்கு
  26. அய்யா நீங்க கவிஞர்,கவிஞர்,கவிஞர்.

    பதிலளிநீக்கு
  27. வலிகளோடு இதயத்தில் தங்கிய ஞாபகச் சிதறல்களைக் கவிதைகள் மூலமாக மீட்டியிருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  28. முதலாவது கவிதை உண்மையிலே நீங்கள் சென்னை பித்தன்தான் என்பதை காட்டுகிறது...

    பதிலளிநீக்கு
  29. பிரமாதம்.
    காதலில் தோற்ற என்றால் என்ன?

    பதிலளிநீக்கு
  30. M.R கூறியது...

    //அருமையான கவிதைகள் ,அழகான உயிரோட்டமுள்ள வரிகள்//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  31. மாய உலகம் கூறியது...

    // அருமை அன்பரே... கலக்கிட்டீங்க//
    நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  32. FOOD கூறியது...

    //அய்யா நீங்க கவிஞர்,கவிஞர்,கவிஞர்.//
    நன்றி,நன்றி,நன்றி சங்கரலிங்கம் சார்!

    பதிலளிநீக்கு
  33. நிரூபன் கூறியது...

    //வலிகளோடு இதயத்தில் தங்கிய ஞாபகச் சிதறல்களைக் கவிதைகள் மூலமாக மீட்டியிருக்கிறீங்க.//
    நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு
  34. Philosophy Prabhakaran கூறியது...

    // முதலாவது கவிதை உண்மையிலே நீங்கள் சென்னை பித்தன்தான் என்பதை காட்டுகிறது...//
    மறக்க முடியாத இடங்கள் அவை!நன்றி பிரபா.

    பதிலளிநீக்கு
  35. அப்பாதுரை கூறியது...

    // பிரமாதம்.
    காதலில் தோற்ற என்றால் என்ன?//
    இரு மனமும் ஒத்த பின்னும் திருமணத்தில் முடியாத காதல்?
    நன்றி அப்பாதுரை சார்!

    பதிலளிநீக்கு
  36. தனிமரம் கூறியது...

    //வலிகள் நிறைந்த கவிதைகள் ஐயா//
    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  37. K.s.s.Rajh சொன்னது…

    //கலக்கீட்டீங்க சூப்பர்...//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  38. மூன்றும் முத்துக்கள்...

    பதிலளிநீக்கு
  39. மூன்று கவிதைகளும் மிக அருமை. உணர்வுகள் பிழியப்பட்டன.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு