தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 14, 2011

வாங்க பழகலாம்--ரௌத்திரம்

ரௌத்திரம் பழகென்றான் பாரதி
உண்மைதான்!

பழகத்தான் வேண்டும்-
பழக்கமில்லாத எதுவும்
பழகத்தான் வேண்டும்!

சித்திரமும் கைப் பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்

கை பழகப் பழகத்தான்
சித்திரம் வரும்;
நா பழகப் பழகத்தான்
செந்தமிழ் வரும்
மனம் பழகப் பழகத்தான்
ரௌத்திரம் வரும்


நாமெல்லாம் பழகி விட்டோம்-

ரௌத்திரமல்ல!
சகிப்புத்தன்மை-ஆம்

புரையோடிப் போய் விட்ட
சமூக அவலங்களை நாம்
பழகி விட்டோம் -சகித்துக்கொள்ள!

சூழ் நிலையின் கைதிகளாய் வாழ்ந்து
பழகி விட்டோம்- சகித்துக் கொள்ள!

நரி இடம் போனால் என்ன,
வலம் போனால் நமெக்கென்ன
நம்மைத்தாக்காதவரை
என்னும் மனப்பாங்கால்
பழகி விட்டோம்- சகித்துக் கொள்ள!

எல்லோரும் காந்தியா என்ன?
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னமும் காட்டுவதற்கு!

நமது நேர்மையில் குறையில்லாத போது
ஒரு கன்னத்தில் அடித்தால்
திருப்பி ஒரு கன்னத்திலேனும்
அடிக்கும் துணிவு வர,
ரௌத்திரம் பழகு!

எளியோரை வலியோர் வாட்டினால்

வலியோரை வாட்ட
வராது இன்று தெய்வம்!

எளியோர்க்குத் துணை போக
உடல் வலிமை பெற வேண்டும்
பெற்றாலும் வேண்டும் மன வலிமை
அவ்வலிமை பெற வேண்டி
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!

வாங்க பழகலாம்!!

(மீள்பதிவு)

72 கருத்துகள்:

  1. வழக்கம் போல்,தமிழ்மணம் இயங்கவில்லை!

    பதிலளிநீக்கு
  2. அருமையான சிந்தனை நிட்சயம் ரௌத்திரம் பழகினால்த்தான்
    நன்மைகள் கிட்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .நீங்கள் இன்னும்
    என் தளத்தைப்
    பின்தொடரவில்லையே!...

    பதிலளிநீக்கு
  3. தமிழ்மணம் இனச்சென் பட் இணையமாட்டேங்குது தல...

    பதிலளிநீக்கு
  4. ரௌத்திரம் காட்டவேண்டிய இடத்தில் காட்டியே ஆகவேண்டும் தல...

    பதிலளிநீக்கு
  5. சகிப்புத்தன்மை நம் ரத்தத்தில் ஊறிப்போச்சோ....?

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் ஐயா,
    மன வலிமை வேண்டிட, ரௌத்திரம் பழகினால் நன்மை கிட்டும் என்பதனை அழகுறச் சொல்லி நிற்கிறது உங்கள் கவிதை.

    பதிலளிநீக்கு
  7. தமிழ் மணம் இன்னும் அப்டேற் ஆகலையே ஐயா.

    பதிலளிநீக்கு
  8. 45 மணித்துளிகள் கழித்தே தமிழ் மணத்தில் இணைக்க முடிந்தது!

    பதிலளிநீக்கு
  9. தமிழ்மணம் இணைந்து விட்டது ஐயா.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

    அருமையா சொல்லியிருக்கீங்க! சமூக சிந்தனை வெளிப்படுது!

    அப்டீன்னா, நான் இன்னிக்குப் போட்டிருக்குற பதிவு பத்தி உங்க கருத்து என்ன சார்? அவசியம் அறிய ஆசை!

    பதிலளிநீக்கு
  11. மீள பதிவுன்னாலும், ஒரு அருமையான பதிவு மறுபடியும் தந்ததற்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  12. வீரப் பதிவுக்கு வாழ்த்துக்கள்..>!

    பதிலளிநீக்கு
  13. //நமது நேர்மையில் குறையில்லாத போது
    ஒரு கன்னத்தில் அடித்தால்
    திருப்பி ஒரு கன்னத்திலேனும்
    அடிக்கும் துணிவு வர,
    ரௌத்திரம் பழகு!//
    ஒரு கன்னத்தில் அல்ல இரு கன்னங்களிலும் அடிக்கும் துணிவு வேண்டும். எனவே ரௌத்திரம் பழகுவோம்.
    வாக்களித்துவிட்டேன். இந்த நல்ல பதிவுக்கு!

    பதிலளிநீக்கு
  14. அம்பாளடியாள் கூறியது...

    //அருமையான சிந்தனை நிட்சயம் ரௌத்திரம் பழகினால்த்தான்
    நன்மைகள் கிட்டும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .நீங்கள் இன்னும்
    என் தளத்தைப்
    பின்தொடரவில்லையே!...//
    நன்றி அம்பாளடியாள்.
    தொடர்ந்து விட்டேன்!

    பதிலளிநீக்கு
  15. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //ரௌத்திரம் காட்டவேண்டிய இடத்தில் காட்டியே ஆகவேண்டும் தல...//
    கட்டாயமாக!

    பதிலளிநீக்கு
  16. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //ரௌத்திரம் காட்டவேண்டிய இடத்தில் காட்டியே ஆகவேண்டும் தல...//
    சந்தேகமின்றி!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  17. நிரூபன் கூறியது...

    //இனிய காலை வணக்கம் ஐயா,
    மன வலிமை வேண்டிட, ரௌத்திரம் பழகினால் நன்மை கிட்டும் என்பதனை அழகுறச் சொல்லி நிற்கிறது உங்கள் கவிதை.//

    நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு
  18. நிரூபன் கூறியது...

    // தமிழ்மணம் இணைந்து விட்டது ஐயா.//
    ஓட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...

    // வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

    அருமையா சொல்லியிருக்கீங்க! சமூக சிந்தனை வெளிப்படுது!

    அப்டீன்னா, நான் இன்னிக்குப் போட்டிருக்குற பதிவு பத்தி உங்க கருத்து என்ன சார்? அவசியம் அறிய ஆசை!//
    நன்றி ஐ.மணி.
    உங்கள் பதிவைப்படித்துக் கருத்தும் சொல்லிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  20. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    //அருமை .//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  21. குடிமகன் கூறியது...

    // பழகிடுவோம்!!//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  22. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //மீள பதிவுன்னாலும், ஒரு அருமையான பதிவு மறுபடியும் தந்ததற்கு நன்றிகள்..//

    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  23. Nirosh கூறியது...

    //வீரப் பதிவுக்கு வாழ்த்துக்கள்..>!//
    நன்றி Nirosh!

    பதிலளிநீக்கு
  24. வே.நடனசபாபதி கூறியது...

    //நமது நேர்மையில் குறையில்லாத போது
    ஒரு கன்னத்தில் அடித்தால்
    திருப்பி ஒரு கன்னத்திலேனும்
    அடிக்கும் துணிவு வர,
    ரௌத்திரம் பழகு!//
    //ஒரு கன்னத்தில் அல்ல இரு கன்னங்களிலும் அடிக்கும் துணிவு வேண்டும். எனவே ரௌத்திரம் பழகுவோம்.
    வாக்களித்துவிட்டேன். இந்த நல்ல பதிவுக்கு!//
    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  25. இன்றைய சூழலில் ரௌத்திரம் பழகியவன்தான்
    வாழ முடியும் இல்லையேல் வீழ்ச்சிதான் இதை
    மிக நேர்த்தியாக சொல்லிப்போகும் உங்கள்
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  26. அருமையான நடை, உணர்வுப்பூர்வமான எழுத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. உண்மைதான் ஐயா! இப்போதெல்லாம் ’ரெளத்திரம்’ எனும் வார்த்தையினை பாரதியார் பாடலில் வாயிலாக அறிந்ததை விட புதிய திரைப்பட தலைப்பின் வாயிலாக் உணர்ந்தவர்கள் தான் அதிகம்!எப்படியோ மக்கள் விழித்துக்கொண்டால் சரி தான்!

    பதிலளிநீக்கு
  28. சகிப்புத்தன்மை

    உண்மைதான் அன்பரே..

    இது இல்லாவிட்டால் இன்றைய உலகில் நம்மால் வாழமுடியாது.

    பதிலளிநீக்கு
  29. பழகத்தான் வேண்டும்-
    பழக்கமில்லாத எதுவும்
    பழகத்தான் வேண்டும்!

    கவிதைக்கான தலைப்பும்
    அதை எடுத்துச் சொல்லியவிதமும்
    பாராட்டுதலுக்குரியன.

    சிந்திக்கவைக்கும் கவிதை.

    பதிலளிநீக்கு
  30. Ramani சொன்னது…

    //இன்றைய சூழலில் ரௌத்திரம் பழகியவன்தான்
    வாழ முடியும் இல்லையேல் வீழ்ச்சிதான் இதை
    மிக நேர்த்தியாக சொல்லிப்போகும் உங்கள்
    பதிவு அருமை.//

    நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  31. N.H.பிரசாத் கூறியது...

    //அருமையான நடை, உணர்வுப்பூர்வமான எழுத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.//
    நன்றி பிரசாத்.

    பதிலளிநீக்கு
  32. நெல்லி. மூர்த்தி கூறியது...

    // உண்மைதான் ஐயா! இப்போதெல்லாம் ’ரெளத்திரம்’ எனும் வார்த்தையினை பாரதியார் பாடலில் வாயிலாக அறிந்ததை விட புதிய திரைப்பட தலைப்பின் வாயிலாக் உணர்ந்தவர்கள் தான் அதிகம்!எப்படியோ மக்கள் விழித்துக்கொண்டால் சரி தான்!//

    நன்றி மூர்த்தி.

    பதிலளிநீக்கு
  33. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    // சகிப்புத்தன்மை

    உண்மைதான் அன்பரே..

    இது இல்லாவிட்டால் இன்றைய உலகில் நம்மால் வாழமுடியாது.//
    சரியே!

    பதிலளிநீக்கு
  34. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    //பழகத்தான் வேண்டும்-
    பழக்கமில்லாத எதுவும்
    பழகத்தான் வேண்டும்!

    கவிதைக்கான தலைப்பும்
    அதை எடுத்துச் சொல்லியவிதமும்
    பாராட்டுதலுக்குரியன.

    சிந்திக்கவைக்கும் கவிதை.//
    நன்றி குணசீலன்!

    பதிலளிநீக்கு
  35. நாமெல்லாம் பழகி விட்டோம்-

    ரௌத்திரமல்ல!
    சகிப்புத்தன்மை-ஆம்//

    முற்றிலும் உண்மை அன்பரே!

    பதிலளிநீக்கு
  36. சூப்பர் பாஸ்! நல்லாச் சொன்னீங்க! எல்லாத்திலையும் 12 வது ஓட்டு என்னோடது!

    பதிலளிநீக்கு
  37. மாய உலகம் கூறியது...

    //நாமெல்லாம் பழகி விட்டோம்-

    ரௌத்திரமல்ல!
    சகிப்புத்தன்மை-ஆம்//
    //முற்றிலும் உண்மை அன்பரே!//

    //all voted//

    நன்றிகள் ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  38. ஜீ... கூறியது...

    //சூப்பர் பாஸ்! நல்லாச் சொன்னீங்க! எல்லாத்திலையும் 12 வது ஓட்டு என்னோடது!//

    நன்றி ஜீ!

    பதிலளிநீக்கு
  39. சூழ் நிலையின் கைதிகளாய் வாழ்ந்து
    பழகி விட்டோம்- சகித்துக் கொள்ள!



    ஆமா சரியா சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  40. Lakshmi கூறியது...

    சூழ் நிலையின் கைதிகளாய் வாழ்ந்து
    பழகி விட்டோம்- சகித்துக் கொள்ள!



    //ஆமா சரியா சொன்னீங்க.//
    நன்றி லக்ஷ்மி அவர்களே!

    பதிலளிநீக்கு
  41. மீள்பதிவு எனினும் இனிய பகிர்வு. பழகிக் கொண்டு விட்டோம்... என்பதை அழகிய கவிதையாக எழுதி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  42. புரையோடிப் போய் விட்ட
    சமூக அவலங்களை நாம்
    பழகி விட்டோம் -சகித்துக்கொள்ள!


    உண்மைதான் ஐயா

    பதிலளிநீக்கு
  43. தமிழ் மனம் -14

    நல்ல தகவல் ஐயா
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  44. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //மீள்பதிவு எனினும் இனிய பகிர்வு. பழகிக் கொண்டு விட்டோம்... என்பதை அழகிய கவிதையாக எழுதி இருக்கீங்க!//

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  45. M.R கூறியது...

    //புரையோடிப் போய் விட்ட
    சமூக அவலங்களை நாம்
    பழகி விட்டோம் -சகித்துக்கொள்ள!
    உண்மைதான் ஐயா//

    // தமிழ் மனம் -14

    நல்ல தகவல் ஐயா
    பகிர்வுக்கு நன்றி//

    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  46. மனம் பழகப் பழகத்தான்
    ரௌத்திரம் வரும்

    ரௌத்திரம் பழகிடுவோம்!!

    பதிலளிநீக்கு
  47. இராஜராஜேஸ்வரி சொன்னது…

    மனம் பழகப் பழகத்தான்
    ரௌத்திரம் வரும்

    //ரௌத்திரம் பழகிடுவோம்!!//

    நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  48. பதிவுலகின் ஜேம்ஸ்பாண்ட் வாழ்க!! கூலிங்க் கிளாஸ் கலக்கல்அண்ணே

    பதிலளிநீக்கு
  49. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    // பதிவுலகின் ஜேம்ஸ்பாண்ட் வாழ்க!!//
    பழசை ஞாபகப்படுத்திட்டீங்க! M.Sc படிக்கும்போது ஹாஸ்டலில் என் அறைக்கதவில் பிஸ்டல் படம்போட்டு 007 என எழுதி வைத்திருந்தேன்! வார்டனே பயந்து விட்டார்!!ஹா,ஹா!
    நன்றி!
    // கூலிங்க் கிளாஸ் கலக்கல்அண்ணே//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  50. அன்பின் உறவுகளே..
    கூடங்குளம் அணுஆலை தொடர்பாக 127 உறவுகள் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி நான்கு நாட்களாக என்னை எந்தவேலையையும் செய்யவிடவில்லை..

    ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் ஏதோ குற்றவுணர்வு என்னுள்..

    என் மனம் திறந்து எழுதிய கவிதை..

    127 உயிர்களின் கேள்விகளாக..

    “அடக்கம் செய்யவா அறிவியல்“

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

    காண அன்புடன் அழைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  51. அருமையா சொல்லியிருக்கீங்க!

    இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

    தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

    பதிலளிநீக்கு
  52. டைட்டிலைப்பார்த்து ஏமாந்துட்டேன் ஹி ஹி

    பதிலளிநீக்கு
  53. வைரை சதிஷ் சொன்னது…

    //அருமையா சொல்லியிருக்கீங்க!

    இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

    தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5//

    நன்றி சதிஷ்!
    படிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  54. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //டைட்டிலைப்பார்த்து ஏமாந்துட்டேன் ஹி ஹி//
    டைட்டிலில் ஏமாற எதுவுமே இல்லையே சிபி?!

    பதிலளிநீக்கு
  55. ரௌத்திரம் பழகிடுவோம் அய்யா...
    இது வீரக்கவிதை மட்டுமல்ல...வீரியமானதும் கூட...

    பதிலளிநீக்கு
  56. போக
    உடல் வலிமை பெற வேண்டும்
    பெற்றாலும் வேண்டும் மன வலிமை
    அவ்வலிமை பெற வேண்டி
    ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!

    அழகோ அழகு பித்தரே-நீங்கள்
    அளிப்பது அனைத்தும் அழகே
    புகழ அல்ல ஐயா-நான்
    புகல்வது அனைத்தும் மெய்யே

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  57. அழகிய சிந்தனை, மீள் பதிவென்றாலும் மிக அவசியமான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  58. ரெவெரி கூறியது...

    //ரௌத்திரம் பழகிடுவோம் அய்யா...
    இது வீரக்கவிதை மட்டுமல்ல...வீரியமானதும் கூட...//

    நன்றி ரெவெரி.

    பதிலளிநீக்கு
  59. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    போக
    உடல் வலிமை பெற வேண்டும்
    பெற்றாலும் வேண்டும் மன வலிமை
    அவ்வலிமை பெற வேண்டி
    ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!

    //அழகோ அழகு பித்தரே-நீங்கள்
    அளிப்பது அனைத்தும் அழகே
    புகழ அல்ல ஐயா-நான்
    புகல்வது அனைத்தும் மெய்யே//

    நன்றி புலவர் ஐயா !

    பதிலளிநீக்கு
  60. FOOD கூறியது...

    //அழகிய சிந்தனை, மீள் பதிவென்றாலும் மிக அவசியமான பகிர்வு.//

    காலமே நம் கவலைகளையும், வருத்தங்களையும் மாற்றும் அருமருந்து.
    நன்றி சங்கரலிங்கம்!

    பதிலளிநீக்கு
  61. தீமைகளை சகித்து கொள்ள பழகியது தான் நவீன நாகரீக வாழ்க்கை நமக்கு தந்த பாடமாக எடுத்து கொண்டது தான் பலவீனமாக விட்டது.

    பதிலளிநீக்கு
  62. சமீப காலமாக மக்கள் வீதியில் இறங்கி போராட தயாராகி விட்டார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஜன்லோக்பால்,தூக்குத்தண்டனை எதிர்ப்பு, கூடங்குளம் போராட்டம் ஆகியவை காட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
  63. பாரத்... பாரதி... சொன்னது…

    //தீமைகளை சகித்து கொள்ள பழகியது தான் நவீன நாகரீக வாழ்க்கை நமக்கு தந்த பாடமாக எடுத்து கொண்டது தான் பலவீனமாக விட்டது//
    முற்றிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
  64. பாரத்... பாரதி... கூறியது...

    //சமீப காலமாக மக்கள் வீதியில் இறங்கி போராட தயாராகி விட்டார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஜன்லோக்பால்,தூக்குத்தண்டனை எதிர்ப்பு, கூடங்குளம் போராட்டம் ஆகியவை காட்டுகின்றன.//

    ரௌத்திரம் பழகத் தொடங்கி விட்டார்கள்?
    நன்றி பாரத்.

    பதிலளிநீக்கு
  65. பித்தனின் வாக்கு கூறியது...

    //vanakkam ayya nanum chennai la irukkum oru pitthan than. ini ungalai follow pannikiren//
    வாங்க பித்தன்!இப்போதெல்லாம் எழுதுவதில்லையா?
    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  66. //
    நரி இடம் போனால் என்ன,
    வலம் போனால் நமெக்கென்ன
    நம்மைத்தாக்காதவரை
    என்னும் மனப்பாங்கால்
    பழகி விட்டோம்- சகித்துக் கொள்ள!//
    நச்சென்று கூறி உள்ளீர்கள் ..என்னுடைய கருத்தும் இதே .. நம்முடைய உரிமைகளுக்கு கூட போராட திராணி அற்று உள்ளோம் .. என்று நாம் நம் உரிமைகளை அச்சமின்றி கேட்க துவங்குகிறோமோ அன்று தான் விடிவு நமக்கு ..அங்கும் இங்கும் சிலர் டிராபிக் ராமசாமி போல் போராடுவதை பார்க்கும் பொது ஒரு நம்பிக்கை பிறக்கின்றது ...ஆனால் இது போறாது ...என்று அனைவரும் இதை உணர்ந்து செயல் படுகிறார்களோ அன்று தான் உண்மையான சுதந்திரம் ... வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  67. 49 ஓ போடவும் ரௌத்திரம் பழக வேண்டும் தோழர் ...

    பதிலளிநீக்கு
  68. suryajeeva கூறியது...

    // 49 ஓ போடவும் ரௌத்திரம் பழக வேண்டும் தோழர் ...//
    பளார்!!
    நன்றி சூர்யஜீவா.

    பதிலளிநீக்கு
  69. பளார் எல்லாம் கிடையாது... உங்கள் அனுபவத்தை நீங்கள் சொன்னீர்கள் என் ஆதங்கத்தை நான் சொன்னேன்...

    பதிலளிநீக்கு