தொடரும் தோழர்கள்

வியாழன், செப்டம்பர் 08, 2011

நகைச்சுவைப் பரல்கள்!

ஒருவர் சொந்த விஷயமாக வெளியூர் சென்று அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்தார். அறைக்குள் நுழைந்தவுடன் ஒரு கணினி இருப்பதைப் பார்த்தார். இண்டெர்னெட் தொடர்பும் இருந்தது.

உடனே தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பத் தீர்மானித்தார். அனுப்பும் போது மின்னஞ்சல் முகவரியைத் தவறாக அடித்து விட்டார்!

ஏதோ ஒரு ஊரில் தன் கணவனை முதல் நாள்தான் பறி கொடுத்த ஒரு மனைவி, அனுதாபம் தெரிவிக்கும் மின்னஞ்சல்கள் வந்துள்ளனவா என்று பார்ப்பதற்காகத் தன் அஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்தாள். மின்னஞ்சலில் வந்த தகவலைப் பார்த்தாள்;மயங்கிக் கீழே விழுந்தாள்.

அவள் மகன் பதறிப்போய் ஓடோடி வந்தான்.அம்மாவைத்தூக்கும்போதே கணினியைப் பார்த்தான்.அதில் இருந்த செய்தி----

”என் அன்பு மனைவிக்கு

என்னிடமிருந்து இவ்வளவு விரைவில் மின்னஞ்சல் வருவது உனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

வந்து சேர்ந்தவுடனேயே கணினி கிடைத்தது!

உடனே உனக்குத் தகவல் அனுப்புகிறேன். இங்கு எல்லாம் வசதியாக இருக்கிறது.

உன் வருகைக்கான ஏற்பாடுகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
நாளை உன் வரவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்.

உன் அன்புக் கணவன்.”

மயங்கி விழாமல் என்ன செய்வாள்!

.........................................................
இரண்டு ஜோக்ஸ்

ராமு:-எனக்குச் சமைப்பது,கழுவுவது,துவைப்பது இதெல்லாம் செய்து அலுத்து விட்டது;எனவேதான் கல்யாணம் செய்து கொண்டேன்.

சோமு:-அடடே! அதே காரணத்துக்காகத்தான் நான் மணவிலக்கு வாங்கினேன்!

……………….

ராமு:-நான் தினமும் அலுவலகத்துக்குச் செல்லுமுன் என் மனைவியை முத்தமிடுவேன்.நீ எப்படி?

சோமு:-நானும்தான்,நீ சென்றபின்.

--------------------------

தர்மம்--ஒரு கவுஜ


அன்றொரு நாள்.....

ஒரு மாலை வேளை........

ரயில்வே ஸ்டேஷன் அது!

நான் டிரெயினின் உள்ளே,

நீ வெளியே.

நம் இருவரின் கண்களும்

ஒரே நேரத்தில் சந்தித்தபோது

உன் முகத்தில் தான்

எத்தனை உற்சாகம்?

அப்போது தான்

அப்போது தான்

அந்த வார்த்தையை நீ சொன்னாய்

"அய்யா...... தர்மம் போடுங்க சாமி! "

................

36 கருத்துகள்:

 1. எல்லாம் சூப்பருங்க.. உங்களுக்குள்ளும் ஒரு காமெடியன் இருக்கிறான் ஹா ஹா

  பதிலளிநீக்கு
 2. சூப்பர் பாஸ்! அதுவும் மின்னஞ்சல் செம்ம! :-)

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! ஆல் ஜோக்ஸ் ஆர் ஸோ கியூட் ஸார்! ரொம்ப நல்லா இருந்திச்சு! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. முதல் நகைச்சுவைக்கு எனக்கே மயக்க வருகிறது..

  பிச்சைக்கரனுக்கு செம பில்டப்...

  அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது...

  பதிலளிநீக்கு
 5. Riyas கூறியது...

  //எல்லாம் சூப்பருங்க.. உங்களுக்குள்ளும் ஒரு காமெடியன் இருக்கிறான் ஹா ஹா//

  நன்றி Riyas

  பதிலளிநீக்கு
 6. விக்கியுலகம் கூறியது...

  //அய்யய்யோ முடியல சாமி!//

  :-D நன்றி விக்கி.

  பதிலளிநீக்கு
 7. koodal bala கூறியது...

  //காமெடியோ ...காமெடி !//
  நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 8. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  // All jokes are super//
  நன்றி ராஜா.

  பதிலளிநீக்கு
 9. ஜீ... கூறியது...

  //சூப்பர் பாஸ்! அதுவும் மின்னஞ்சல் செம்ம! :-)//

  நன்றி ஜீ.

  பதிலளிநீக்கு
 10. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...

  //வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! ஆல் ஜோக்ஸ் ஆர் ஸோ கியூட் ஸார்! ரொம்ப நல்லா இருந்திச்சு! வாழ்த்துகள்!//

  நன்றி ஐடியா மணி!

  பதிலளிநீக்கு
 11. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //முதல் நகைச்சுவைக்கு எனக்கே மயக்க வருகிறது..

  பிச்சைக்கரனுக்கு செம பில்டப்...

  அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது..//

  நன்றி சௌந்தர்.

  பதிலளிநீக்கு
 12. ஏ யப்பா தல, பதிவு கூடவே வயித்து வலிக்கு என்னா மாத்திரைன்னும் போடக்கூடாதா சிரிச்சி முடியலை...

  பதிலளிநீக்கு
 13. சிரிக்க வைக்க ஒரு லிமிட் இருக்கு அவ்வ்வ்வவ், இப்பிடி போட்டு கொன்னுட்டீங்களே ஹா ஹா ஹா ஹா....

  பதிலளிநீக்கு
 14. எல்லா லெவலுக்கும் இறங்கி அடிக்கும் என் இனிய நண்பர் சென்னைப் பித்தன் வாழ்க!

  பதிலளிநீக்கு
 15. அருமையான நகைச்சுவைகள் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ........

  பதிலளிநீக்கு
 16. தக்குடு கூறியது...

  //நல்ல ரசனை உங்களுக்கு!! :))//
  நன்றி தக்குடு.:-D

  பதிலளிநீக்கு
 17. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // ஏ யப்பா தல, பதிவு கூடவே வயித்து வலிக்கு என்னா மாத்திரைன்னும் போடக்கூடாதா சிரிச்சி முடியலை...//
  சிரிச்சா நல்லதுதான்!

  பதிலளிநீக்கு
 18. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // சிரிக்க வைக்க ஒரு லிமிட் இருக்கு அவ்வ்வ்வவ், இப்பிடி போட்டு கொன்னுட்டீங்களே ஹா ஹா ஹா ஹா....//
  :) நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 19. செங்கோவி கூறியது...

  //எல்லா லெவலுக்கும் இறங்கி அடிக்கும் //
  கொஞ்சம் கிண்டல் தொனிக்குதே!

  //என் இனிய நண்பர் சென்னைப் பித்தன் வாழ்க!//
  இது உள்ளார்ந்த கருத்தே!
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 20. அம்பாளடியாள் கூறியது...

  // அருமையான நகைச்சுவைகள் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ........//
  // தமிழ்மணம் 10//

  நன்றி அம்பாளடியாள்!

  பதிலளிநீக்கு
 21. மின்னஞ்சல்கள் வந்துள்ளனவா என்று பார்ப்பதற்காகத் தன் அஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்தாள். மின்னஞ்சலில் வந்த தகவலைப் பார்த்தாள்;மயங்கிக் கீழே விழுந்தாள்.//

  ஹா.....இது கொடுமை...ஒரு எழுத்து மிஸ்ட் ஆனால் கணினி மூலம் மட்டும் அல்ல வாழ்கையிலும் பல திருப்பங்கள் நிகழும் என்பதனை இந்த சமயோசிதமான நகைச்சுவை சொல்லி நிற்கிறது

  பதிலளிநீக்கு
 22. உன் முகத்தில் தான்

  எத்தனை உற்சாகம்?

  அப்போது தான்

  அப்போது தான்

  அந்த வார்த்தையை நீ சொன்னாய்

  "அய்யா...... தர்மம் போடுங்க சாமி! //

  முடிக்கும் வரிகளில் பின் நவீனத்துவம் வழியும் அருமையான கவிதை ஐயா.

  பதிலளிநீக்கு
 23. நிரூபன் கூறியது...

  //மின்னஞ்சல்கள் வந்துள்ளனவா என்று பார்ப்பதற்காகத் தன் அஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்தாள். மின்னஞ்சலில் வந்த தகவலைப் பார்த்தாள்;மயங்கிக் கீழே விழுந்தாள்.//

  ஹா.....இது கொடுமை...ஒரு எழுத்து மிஸ்ட் ஆனால் கணினி மூலம் மட்டும் அல்ல வாழ்கையிலும் பல திருப்பங்கள் நிகழும் என்பதனை இந்த சமயோசிதமான நகைச்சுவை சொல்லி நிற்கிறது//
  நன்றி நிரூ!

  பதிலளிநீக்கு
 24. நிரூபன் கூறியது...

  உன் முகத்தில் தான்

  எத்தனை உற்சாகம்?

  அப்போது தான்

  அப்போது தான்

  அந்த வார்த்தையை நீ சொன்னாய்

  "அய்யா...... தர்மம் போடுங்க சாமி! //

  //முடிக்கும் வரிகளில் பின் நவீனத்துவம் வழியும் அருமையான கவிதை ஐயா.//
  நன்றி நிரூ!

  பதிலளிநீக்கு
 25. நகைச்சுவை பரல்களின் முத்து ஒவ்வொன்றும் அருமை. அதுவும் அந்த கடைசி கவிதை மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 26. வே.நடனசபாபதி கூறியது...

  //நகைச்சுவை பரல்களின் முத்து ஒவ்வொன்றும் அருமை. அதுவும் அந்த கடைசி கவிதை மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.//
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு