தொடரும் தோழர்கள்

திங்கள், செப்டம்பர் 19, 2011

பரல்கள்--லிமெரிக்கும் பிறவும்!

உங்களுக்குத் தத்தீச்சி மகரிஷி பற்றித் தெரியுமா?! அகில இந்திய வானொலி பண்பலையில் ஒரு கண்தான விளம்பரத்தில், கர்ணனையும், தத்தீச்சியையும் உதாரணமாகக் கூறுகிறார்கள்.இது நாள் வரை கேள்விப்படாத பெயராக இருக்கிறதே எனத் தேடிப் பார்த்தேன்(நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாமோ என்னவோ).விவரம் கிடைத்தது. தேவ-அசுர யுத்தம் நடந்தபோது தேவர்கள் தங்கள் ஆயுதங்களையெல்லாம், பாதுகாப்புக்காக தத்தீச்சி ரிஷியிடம் ஒப்படைத்துச் சென்றனர்.

அசுரர்களால் அவற்றைக் கவர முடியவில்லை.பலகாலம் சென்றும் தேவர்கள் திரும்பி வந்து ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளாததால், மகரிஷி அவற்றைப் புனிதத் தண்ணீர்ப் பானையில் போட்டுக் கரைத்துக் குடித்துவிட்டார்!

சிறிது காலம் சென்று தேவர்கள் வந்து கேட்ட போது நடந்ததைக் கூறி, ஆயுதங்களைப் பெறத் தன்னைக் கொன்று எலும்புகளை எடுத்துக் கொள்ளும்படிக் கூறினார்.தேவர்கள் மறுக்கவே,அவர் தீயில் பாய்ந்து உயிர் நீத்தார்.பிரம்மா அங்கு வந்து அவரது எலும்புகளிலிருந்து ஆயுதங்கள் செய்து தேவர்களுக்கு அளித்தார்.முதுகெலும்பில் செய்யப் பட்டதே இந்திரனின் வச்சிராயுதம்.

விளம்பரத்தில் ,தெரியாத ரிஷியின் பெயர் சொல்வதற்குப் பதில்,நாம் அறிந்த குமணன்,சிபிச் சக்கிரவர்த்தி எவர் பெயரையாவது சொல்லியிருக்கலாமோ?ஆனால் இதிலும் ஒரு நன்மை.நான் தேடித் தெரிந்துகொண்டேன் ஒரு புதிய தகவலை!!

.....................................................

எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா?!

மணமாகி ஏழாண்டுகள் கழிந்தால்,அந்த’ ஏழாண்டு அரிப்பு ’ வந்து விடுகிறது. பழைய உறவில் அலுப்புத்தட்டிப்,புது உறவில் நாட்டம் பிறக்கிறது.இதுவே மண விலக்குக்குக் காரணமாகிறது.இதைத்தடுக்கச் சைனாவில் ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்களாம்.

செய்ய வேண்டுவது என்னவென்றால்,கணவனோ,மனைவியோ,தபால் இலாகா புதிதாக அறிமுகம் செய்திருக்கும் சிறப்பு அஞ்சல் உறை ஒன்று வாங்கி அதில் தன் மனதில் இருக்கும் காதலையெல்லாம் கொட்டி ஒருகடிதம் எழுதி அனுப்பி விட்டால்,அக்கடிதம் ஏழாண்டுகளுக்குப் பிறகு பெறுநருக்குக் கிடைக்கும். அதைப் படிப்பவர் ”அந்த நாள்ஞாபகம் நெஞ்சிலே வந்து” பிரச்சினைகள் இருந்தால் தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை!

எனக்கு ஒரு சந்தேகம்---பெறுநர்(அனுப்புநரும்) பழைய விலாசத்தில் இல்லாமல் வேறு இடத்துக்குப் போயிருந்தால் என்ன செய்வார்கள்?

…………………………………..

லிமெரிக் எழுதி ரொம்ப நாளாச்சு! (சிந்து கவி-நன்றி நிரூ)

இதோ-


”சிங்காரி சரசு விட்டா ஒரு லுக்கு

ரங்குவுக்கு ஏறிச்சு ஒரே கிக்கு

போனான் உடனே அவ வீடு

தங்கினான் சில நாள் அவளோடு

இப்ப அவன் கையில் திருவோடு!”

49 கருத்துகள்:

  1. தத்தீச்சி மகரிஷி கண்டறிந்து சொன்னதற்க்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அந்த கடித முறை இந்தியாவில் தேவையில்லையென்று நினைக்கிறேன்...


    அப்படியும் போடுவதென்றால் 50 ஆண்டுகள் கழித்து போடச்சொல்லுங்கள்....

    அறிய தகவல்

    பதிலளிநீக்கு
  3. முதல் இரண்டும் புது தகவல் ..மூன்றாவது சூப்பர், என்ன பொண்ணுங்க வந்து சண்டை பிடிக்காமல் பாத்துக்கோங்கோ )))

    பதிலளிநீக்கு
  4. haa.haa..



    ஒரு அறிய தகவல்..
    பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  5. ததீசி விவரம் மகாபாரதத்திலும் வருகிறது.

    பதிலளிநீக்கு
  6. ததீசி முனிவர் பற்றிய தகவல் நான் அறிந்ததே. எனக்கு உங்களின் லிமெரிக் மிகவும் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. நல்லா தகவல்
    அருமையான ஐடியா
    சூப்பர் கவிதை
    மசாலா கிக்கு

    பதிலளிநீக்கு
  8. கவிதை தருவது கிக்கே
    படிப்பவர் பொறுவது சொக்கே
    உள்ளேன் ஐயா!
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  9. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //தத்தீச்சி மகரிஷி கண்டறிந்து சொன்னதற்க்கு நன்றி...//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //அந்த கடித முறை இந்தியாவில் தேவையில்லையென்று நினைக்கிறேன்...


    அப்படியும் போடுவதென்றால் 50 ஆண்டுகள் கழித்து போடச்சொல்லுங்கள்....//
    அதுவும் சரிதான்!

    பதிலளிநீக்கு
  11. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //லிமெரிக் நச்...//
    நன்றி சௌந்தர்.

    பதிலளிநீக்கு
  12. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    // தெரிந்துகொண்டேன் பல புதிய தகவல்களை .//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. கந்தசாமி. கூறியது...

    //முதல் இரண்டும் புது தகவல் ..மூன்றாவது சூப்பர், என்ன பொண்ணுங்க வந்து சண்டை பிடிக்காமல் பாத்துக்கோங்கோ )))//
    :) நன்றி கந்தசாமி.

    பதிலளிநீக்கு
  14. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //haa.haa..



    ஒரு அறிய தகவல்..
    பகிர்வுக்கு நன்றி..//
    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  15. அப்பாதுரை கூறியது...

    // ததீசி விவரம் மகாபாரதத்திலும் வருகிறது.//
    இதிகாசம்,உபநிடதம் எல்லாவற்றிலும் கரை கண்டவராச்சே நீங்கள்.
    நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  16. கணேஷ் கூறியது...

    // ததீசி முனிவர் பற்றிய தகவல் நான் அறிந்ததே. எனக்கு உங்களின் லிமெரிக் மிகவும் //
    நன்றி கணேஷ்.
    பதிவுலகில் சிறக்க வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. கவி அழகன் கூறியது...

    //நல்லா தகவல்
    அருமையான ஐடியா
    சூப்பர் கவிதை
    மசாலா கிக்கு//
    நன்றி கவி அழகன்.

    பதிலளிநீக்கு
  18. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //கவிதை தருவது கிக்கே
    படிப்பவர் பொறுவது சொக்கே
    உள்ளேன் ஐயா!
    நன்றி//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  19. பல புதிய தகவல்கள் தெரிந்துகொண்டேன் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  20. தத்தீச்சி மகரிஷி.... புதிய தகவல்....

    கவிதை... :)))

    சீனா கடிதம்... நல்ல யோசனைதான்...

    பதிலளிநீக்கு
  21. ”சிங்காரி சரசு விட்டா ஒரு லுக்கு

    ரங்குவுக்கு ஏறிச்சு ஒரே கிக்கு

    போனான் உடனே அவ வீடு

    தங்கினான் சில நாள் அவளோடு

    இப்ப அவன் கையில் திருவோடு!”/////

    சிந்து கவி படித்து, அ சந்து போனேன்!

    பதிலளிநீக்கு
  22. என்னோடு தேசிய விதைக்கழகத்தில் பணிபுரிந்த ஒரு இராஜஸ்தானி நண்பரின் துணைப்பெயர் (Surname) ததீச்சி தான்.அப்பெயரின் முக்கியத்துவம் அப்போது தெரியவில்லை. தங்கள் பதிவு மூலம் ததீச்சி மகரிஷி பற்றிய புதிய தகவலை அறிந்துகொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  23. சீனாக்காரன் ஏன் எப்பவும் இப்படி யோசிக்கிறான்..

    பதிலளிநீக்கு
  24. நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாமோ என்னவோ

    நானும் கேள்வி படாத பெயர்தான் ஐயா

    பதிலளிநீக்கு
  25. மகரிஷியில் தொடங்கி,மணவாழ்க்கை ரகசியம் தொட்டு,மங்கையிடம் மயங்கியவனின் திருவோட்டையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  26. மாய உலகம் கூறியது...

    // பல புதிய தகவல்கள் தெரிந்துகொண்டேன் நன்றி நண்பரே!//
    நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  27. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //தத்தீச்சி மகரிஷி.... புதிய தகவல்....

    கவிதை... :)))

    சீனா கடிதம்... நல்ல யோசனைதான்...//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  28. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...

    ”சிங்காரி சரசு விட்டா ஒரு லுக்கு

    ரங்குவுக்கு ஏறிச்சு ஒரே கிக்கு

    போனான் உடனே அவ வீடு

    தங்கினான் சில நாள் அவளோடு

    இப்ப அவன் கையில் திருவோடு!”/////

    //சிந்து கவி படித்து, அ சந்து போனேன்!//

    நன்றி ஐடியா மணி!

    பதிலளிநீக்கு
  29. வே.நடனசபாபதி கூறியது...

    //என்னோடு தேசிய விதைக்கழகத்தில் பணிபுரிந்த ஒரு இராஜஸ்தானி நண்பரின் துணைப்பெயர் (Surname) ததீச்சி தான்.அப்பெயரின் முக்கியத்துவம் அப்போது தெரியவில்லை. தங்கள் பதிவு மூலம் ததீச்சி மகரிஷி பற்றிய புதிய தகவலை அறிந்துகொண்டேன். நன்றி.//
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  30. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    லிமெரிக் :))
    :))) நன்றி குணசீலன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  31. செங்கோவி கூறியது...

    // புதிய,நல்ல தகவல் ஐயா..நன்றி.//
    நன்றி செங்கோவி.

    பதிலளிநீக்கு
  32. செங்கோவி கூறியது...

    //சீனாக்காரன் ஏன் எப்பவும் இப்படி யோசிக்கிறான்..//
    அதானே!:)

    பதிலளிநீக்கு
  33. M.R கூறியது...

    நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாமோ என்னவோ

    // நானும் கேள்வி படாத பெயர்தான் ஐயா//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  34. FOOD கூறியது...

    //மகரிஷியில் தொடங்கி,மணவாழ்க்கை ரகசியம் தொட்டு,மங்கையிடம் மயங்கியவனின் திருவோட்டையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள்.//
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  35. தேடாமலேயே அவரை பற்றி உங்களிடம் தெரிந்து கொண்டேன்.

    சீனா காரன் ரொம்ப புத்திசாலிதான். என்னமா யோசிக்கிறாங்க?

    பதிலளிநீக்கு
  36. ஏழாண்டு அரிப்புக்கு சீன வைத்தியம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  37. புதிய பல தகவல்கள் ஐயா
    அறியத்தந்தமைக்கு
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. பாலா கூறியது...

    //தேடாமலேயே அவரை பற்றி உங்களிடம் தெரிந்து கொண்டேன்.

    சீனா காரன் ரொம்ப புத்திசாலிதான். என்னமா யோசிக்கிறாங்க?//
    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  39. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //ஏழாண்டு அரிப்புக்கு சீன வைத்தியம் சூப்பர்.//
    நன்றி சிபி.

    பதிலளிநீக்கு
  40. மகேந்திரன் கூறியது...

    // புதிய பல தகவல்கள் ஐயா
    அறியத்தந்தமைக்கு
    மிக்க நன்றி.//
    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  41. ததீசி மகரிஷி பற்றி நானும் ஒரு பதிவு எழுதினேன்.

    "பரல்கள்--லிமெரிக்கும் பிறவும்!"-- அருமையன பகிர்வுகளுகுப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  42. தத்தீச்சி மகரிஷி பற்றிய விடயம் புதியதாக இருக்கிறது.

    சீனாவில் மனம் விட்டுப் பேசி மகிழ்ச்சியாக வாழ அஞ்சல் முறையினை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
    நல்லதோர் விடயம்.

    பதிலளிநீக்கு
  43. ”சிங்காரி சரசு விட்டா ஒரு லுக்கு

    ரங்குவுக்கு ஏறிச்சு ஒரே கிக்கு

    போனான் உடனே அவ வீடு

    தங்கினான் சில நாள் அவளோடு

    இப்ப அவன் கையில் திருவோடு!//

    அவ்...
    இதே போல எம் மூரிலும் ஒரு கவிதை உண்டு,

    "கண்டவுடன் காதல் கொண்டார்
    கச்சேரியில் மணந்து கொண்டார்
    அண்டை ஓர் இரவு அறையில் உணவுண்டார்
    அடுத்த நாட் காலை மனந் தள்ளுண்டார்.!

    கச்சேரி: ரெஜிஸ்டர் ஆப்பிஸ்.

    பதிலளிநீக்கு
  44. லிமரிக் இன்றைய களவியலைச் சொல்லி நிற்கிறது.

    பதிலளிநீக்கு