தொடரும் தோழர்கள்

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

ஆன்மீகம்.

பதிவுலகில் ஆன்மீகம் என்பது ஏதோ தீண்டத்தகாத பொருள் போல் நோக்கப் படுகிறது. ஆயினும் சில பதிவர்கள் விடாப்பிடியாக அவர்களது ஆன்மீகப் பதிவுகளைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.தனது பதிவுகளை அதிகம்பேர் படிப்பது இல்லை என் வருத்தப்பட்டு,மதுரை சொக்கன் எனக்கு எழுதியனுப்பிய ஒரு கவிதை இதோ—

”நல்லவை சொல்ல நான் எண்ணி

நமக்குத்தொழில் பேச்சு என்று சொன்னால்

நாலு பேர் கூட இல்லையே படிக்க?

நாளெல்லாம் பல வலைப் பதிவுகளிலே

ஆளெல்லாம் கூடி அடிக்கிறார் கும்மி!

ஆன்மிகம் என்று சொன்னாலே

அருவறுத்து ஒதுங்கும் நிலையாச்சே!

அய்யா நான் என்ன சொல்ல இப்போ

”கடை விரித்தேன் கொள்வாரில்லை!””

கொஞ்சம் அங்கேயும் போய்ப் பாருங்களேன்.

எது எப்படியிருப்பினும் நம் அன்றாட வாழ்வில் ஆன்மீகம் கலந்திருப்பது தவிர்க்க இயலாதது.

காலயில் எழுந்தவுடன் நமது வலது உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டால் நல்லது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அப்போது ஒரு ஸ்லோகமும் சொல்ல வேண்டும்.அதன் பொருளாவது---

”லட்சுமிதேவி கைகளின் நுனியிலும்,சரஸ்வதி நடுவிலும், கௌரிதேவி அடிப்பாகத்திலும் இருக்கிறார்கள்.எனவே அதிகாலையில் கைகளைப் பார்ப்பது நன்மையைத் தரும்.”

இதில் சொல்லப்பட்ட விஷயத்தை நீங்கள் நம்பாமல் இருக்கலாம்.ஆனால் இந்தப்பழக்கத்துக்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது.காலையில் எழுந்தவுடன் நீங்கள் கையைப் பார்க்காமல் யாரையாவது பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.அன்று எல்லாமே நன்றாக நடந்தால் சரி.ஆனால் மோசமானதாக நடந்தால்?யார் முகத்தில் விழித்தோமோ என்று நொந்து கொள்வீர்கள்.அனாவசிய வெறுப்பு வரும்.அதற்காகத்தான் கையைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள்.

அது போலவே காக்கைக்குச் சோறு வைக்கும் வழக்கம்.நாம் உண்ணும் உணவை,ஏதாவது ஒரு உயிர்க்கு இட்டுவிட்டுச் சாப்பிட வேண்டும் என்ற நல்ல பழக்கத்தை மேற்கொள்வதற்காகச் சொல்லப்பட்டது.

திருமூலர் சொல்கிறார்-

"யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க் கின்னுரை தானே"-----

இது கூட நம்மால் முடியாதா?

ஆன்மீகம் பற்றிப் பேசும்போது ஆன்மீக குருக்கள் பற்றிப் பேச வேண்டியதாகிறது.நம் நாட்டில் ஆன்மீகத்தைப் பல வழிகளிலும் போதிக்கப் பல குருக்கள் இருக்கிறார்கள்,;மத போதகர்கள் இருக்கிறார்கள் .

இவர்களில் பலருக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் சீடர்கள்,பின்தொடர்வோர்,பக்தர்கள் இருக்கிறார்கள்.சாதாரண மக்கள் மட்டுமன்றி அறிஞர்கள்,உயர் பதிவியில் இருப்பவர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் அவர்கள் மீது பக்தி செலுத்துகிறார்கள்.இத்தனை பேரால் ஒருவர் வணங்கப்பட,நம்பப்பட வேண்டும் என்றால் அவர்களிடம் ஏதாவது ஒரு சக்தியிருக்க வேண்டும்!அவர்களின் குறைகள்,பலவீனங்கள் இவற்றையும் மீறி ஏதோ ஒன்று மற்றவர்களை அவர்கள்பால் ஈர்க்க வேண்டும்.

எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்.அவர் ஒரு பிரபல மத போதகர்.ஒரு சாம்ராஜ்யத்தையே நிறுவியவர்!எங்கள் வங்கியின் மதிப்புக்குரிய வாடிக்கையாளர்.மரியாதை நிமித்தம் அவரைச் சந்திக்க அவர் அலுவலகம் சென்றோம்!சால்வை அணிவித்தோம்;மலர்க்கொத்துக் கொடுத்தோம். பேசிக்கொண்டிருந்தோம்.

விடை பெற்றுப் புறப்படும் போது அவர் சொன்னார்”உங்களுக்காகப் பிரார்த்திக்கலாம்”

நாங்கள் நின்று கொண்டிருக்க அவர் பிரார்த்தனை செய்தார்.முடிந்ததும் ஆசீர்வதித்து அவர் கையை என் தலையில் வைத்தார்.

அந்த விநாடியில். ஒரு மின் அதிர்வு என் தலையிலிருந்து புறப்பட்டுக் கால் வரை பரவியது!விவரிக்க முடியாத அனுபவம்!

நான் நினைத்தேன்-” எத்தனையோ கோடிக்கணக்கான பிரார்த்தனைகள் மற்றவர் களுக்காகச் செய்திருக்கிறார். அந்தப் பிரார்த்தனைகளின் சக்தி அவருள் இருக்கிறது
அதையே நான் உணர்ந்தேன்”

நான் அவர் மதத்தைச் சேர்ந்தவன் அல்ல.ஒரு வாடிக்கையாளர் என்பது தவிர வேறு எந்த ஈடுபாடும் கிடையாது.எனவே எனது இந்த அனுபவம் முக்கியமானது.

பிரார்த்தனைகளின் சக்தியை எனக்கு உணர்த்தியது!35 கருத்துகள்:

 1. வெங்கட் நாகராஜ் கூறியது...

  // நல்ல பகிர்வு....//
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 2. இந்தியராக பிறந்த எல்லோரும், தனது வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ ஆன்மீகத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உற்றுக் கவனித்தால் உணரலாம். தாய்ப் பாலோடு தாயானவள் நமக்கு ஊட்டும் இந்திய, தமிழ்ப் பண்பாடு, அது. அதனாலேதானே ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆன்மீகத்தின் பால் ஈடுபாடு உண்டாகிறது! நல்ல விஷயம், நல்ல பகிர்வு. நன்றி!

  பதிலளிநீக்கு
 3. R.S.KRISHNAMURTHY கூறியது...

  //இந்தியராக பிறந்த எல்லோரும், தனது வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ ஆன்மீகத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உற்றுக் கவனித்தால் உணரலாம். தாய்ப் பாலோடு தாயானவள் நமக்கு ஊட்டும் இந்திய, தமிழ்ப் பண்பாடு, அது. அதனாலேதானே ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆன்மீகத்தின் பால் ஈடுபாடு உண்டாகிறது! நல்ல விஷயம், நல்ல பகிர்வு. நன்றி!//
  நன்றி ஆர்.எஸ்.கே.

  பதிலளிநீக்கு
 4. சரியாகச் சொன்னீர்கள் ஐயா
  ஆன்மிகம் பற்றி எழுவது பதிவர்கள் மத்தியில்
  கொஞ்சம் பயம் கலந்த பொருளாகவே இருக்கிறது.
  அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.

  தமிழ்மணம் 3

  பதிலளிநீக்கு
 5. மனிதநேயம் மதத்தை விட உயர்ந்தது

  பதிலளிநீக்கு
 6. முன்னோர்கள் சொல்லிச் சென்றதில் பலவும் அர்த்தம் நிறைந்ததே. அதில் பின்னால் வந்தவர்கள் அவர்களுக்கேற்றவாறு சில மூட பழக்கங்களையும் திணித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. தெளிவான சிந்தனை இருந்தால் ஆன்மிகம் இனிக்கும்.

  பதிலளிநீக்கு
 7. வள்ளலார்தான் ‘கடை விரித்தோம் கொள்வாரில்லை. கட்டிவிட்டோம்.’ என்றார். மதுரை சொக்கன் அவ்வாறு எண்ணத்தேவையில்லை. அவருக்கென்று ஒரு இரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
  நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்த மத போதகரின் பிரார்த்தனையின் சக்தியை அனுபவித்து இருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 8. //பதிவுலகில் ஆன்மீகம் என்பது ஏதோ தீண்டத்தகாத பொருள் போல் நோக்கப் படுகிறது. ஆயினும் சில பதிவர்கள் விடாப்பிடியாக அவர்களது ஆன்மீகப் பதிவுகளைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.தனது பதிவுகளை அதிகம்பேர் படிப்பது இல்லை என் வருத்தப்பட்டு...//

  ஆன்மிகம் என்பது உணரப்படுவது. எழுதப்படுவதல்ல. ஆன்மிக அனுபவங்கள் எழுதப்படலாம். அப்படிப்பட்ட பதிவுகளே ஆன்மிகப்பதிவுகள் எனலாம். எ.கா. உங்கள் இந்தப்பதிவு அப்படி வரும். குறிப்பாக, உங்கள் கடைசிப்பத்தி.

  ஆனால் the so-called ஆன்மிகப்பதிவுகள் என்ன செய்கின்றன ? இந்துப் புராணக்கதைகளையும், தேவாரம், திருவாசகம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றி எழுதுகிறார்கள். எழுதலாம். எழுதவேண்டும். ஆனால், அவற்றை இவர்கள் எழுதும் விதம் உண்மையிலே ஆன்மிகத்தைத் தூண்டாது. காரணம். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஒரு பாவனை; பண்டிதர் தமிழில் எழுதப்படும். இதோடு விட்டால் பரவாயில்லை. “என் பதிவை படிக்காமலிருப்பவர்கள் ஆன்மிகமில்லாதவர்கள்” என்ற தோரணை. அதாவது “ஆன்மிகம் என்பதே ஒரு சிலருக்குத்தான். அவர்கள் நாங்கள்தான்” என்ற மேட்டுக்குடித் தோரணை. ஒவ்வொருவரும் ஒரு கூட்டத்தை பின்னூட்டக்காரர்களாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் பதிவுகளைப் படித்தால், இந்து மதம் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே என்று நினைப்பை உருவாக்கும். இதில் பார்ப்பனப்பதிவர்களென்றால் கேட்கவே வேண்டாம்: ஒரே சமஸ்கிருத சுலோகங்கள்தான். ஒரு பெண் பார்ப்பன பதிவாளர் பார்ப்ப்னீய சடங்குகளைப் பற்றித்தான் எழுதுவார். அது மட்டுமே இந்துமதம் என்பது அவர் முடிபு. கோடிக்கணக்கான தமிழர்களுக்கு அச்சடங்குகளே தெரியாது. தேவையுமில்லை. தமிழ்நாடென்றால் பார்ப்பனர்கள் மட்டும்தானா? இவருக்கேன் புரியவில்லை. இவர்கள் எவருமே தமிழ்நாட்டுக்கிராமியத் தெய்வங்களைப்பற்றி எழுதுவதில்லை. ஏன் பெரியார் வரமாட்டார் இவர்களைக் கிண்டல் பண்ண ? வந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் அடங்க மாட்டார்கள்.

  இசுலாமியரென்றால், இவர்கள் மட்டுமே இறைவனை வணங்குவதாகவும் மற்றவர்களெல்லாம் இவர்கள் பாணியே பின்பற்றவேண்டுமென்றும் இருக்கும். இசுலாமியர் மட்டுமே படிக்கவேண்டும் எனச் சொல்லாமல் சொல்வார்கள். கிருத்துவர்கள் என்றால், ஒரே டெகினிக்கலாக பைபிள் வசனங்கள். புரிவது கடினம். இவர்களை நான் படிப்பதில்லை. ஆங்கிலத்திலேயே நேரடியாக படித்துக்கொண்டிருக்கிறேன்.

  ஆன்மிகப்பதிவாளர்களுள் பலர், தம் பதிவுகளை மதச்சண்டைகளை காரசாரமாக நடத்த உதவுகிறார்கள். இயேசு அல்லாவைப்பற்றி இந்து ஆன்மிகப்பதிவாளர்களும், இந்துக்கடவுளர்களைப்பற்றி கிருத்துவ இசுலாமியப்பதிவாளர்களும் அசிங்கமாக எழுதி வருகிறார்கள்.

  மதநல்லிணக்கமே தனது வலைபதிவின் குறிக்கோள் என்று திருச்சியிலிருந்து எழுதும் ஒருபதிவாளர், தன் பதிவில் கிருத்துவரும் இசுலாமியர் மட்டுமே மத நல்லிணக்கத்தை விரும்பவில்லை. இந்துக்கள் விரும்புகிறார்கள் என்ற மாதிரி பதிவுகள் போடுகிறார்கள். Absolute nonsense!

  மார்க்ஸ் சொன்னார்: ஆன்மிகம் என்பது ஒரு போதை. Religion is the opiate of the masses. இந்த பதிவாளர்களுக்குப் பொருந்தும். வெறும் போதை இவர்களுக்கு.

  ஆன்மிகப்பதிவுகள் பலவற்றைப்படித்து நான் வெறுப்படைந்ததே மிச்சம். இவர்களைப் படித்து நமக்கென்ன ஆன்மிகமாக பெருகும் ?

  எவர் எளிமையாக ஆன்மிக அனுவபங்களை கர்வமில்லாமல் ‘தான் பெற்ற பயனை இவ்வுலகம் பெற வேண்டும்’ என்ற விசால மனத்தில் எழுதுகிறாரோ அவரின் ஆன்மிகப்பதிவால் எல்லாருக்கும் நன்மை. அது கண்டிப்பாக படிக்கப்படும். போற்றப்படும். அப்படியும் சிலபதிவாளர்கள் இருக்கிறார்கள்.

  I have not read Madurai Chokkan's blog.

  பதிலளிநீக்கு
 9. ஆன்மிகம் என்றாலே கொஞ்சம் எட்ட தான் நிக்கிறம் ))

  பதிலளிநீக்கு
 10. உங்கள் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கின்றது..பிரார்த்தனையின் சக்தி பெரியது தான்.

  பதிலளிநீக்கு
 11. அருமையான பதிவு
  ஆன்மீக விழிப்புணர்வு

  பதிலளிநீக்கு
 12. மகேந்திரன் கூறியது...

  //சரியாகச் சொன்னீர்கள் ஐயா
  ஆன்மிகம் பற்றி எழுவது பதிவர்கள் மத்தியில்
  கொஞ்சம் பயம் கலந்த பொருளாகவே இருக்கிறது.
  அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.

  தமிழ்மணம் 3//

  நன்றி மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 13. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //மனிதநேயம் மதத்தை விட உயர்ந்தது//
  உண்மைதான்!

  பதிலளிநீக்கு
 14. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //நல்ல பதிவு//

  நன்றி!

  பதிலளிநீக்கு
 15. குடந்தை அன்புமணி கூறியது...

  //முன்னோர்கள் சொல்லிச் சென்றதில் பலவும் அர்த்தம் நிறைந்ததே. அதில் பின்னால் வந்தவர்கள் அவர்களுக்கேற்றவாறு சில மூட பழக்கங்களையும் திணித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. தெளிவான சிந்தனை இருந்தால் ஆன்மிகம் இனிக்கும்.//
  சரியே!
  நன்றி அன்புமணி.

  பதிலளிநீக்கு
 16. வே.நடனசபாபதி கூறியது...

  //வள்ளலார்தான் ‘கடை விரித்தோம் கொள்வாரில்லை. கட்டிவிட்டோம்.’ என்றார். மதுரை சொக்கன் அவ்வாறு எண்ணத்தேவையில்லை. அவருக்கென்று ஒரு இரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
  நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்த மத போதகரின் பிரார்த்தனையின் சக்தியை அனுபவித்து இருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான்.//

  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 17. குணசேகரன் கூறியது...

  //பதிவுலகில் ஆன்மீகம் என்பது ஏதோ தீண்டத்தகாத பொருள் போல் நோக்கப் படுகிறது. ஆயினும் சில பதிவர்கள் விடாப்பிடியாக அவர்களது ஆன்மீகப் பதிவுகளைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.தனது பதிவுகளை அதிகம்பேர் படிப்பது இல்லை என் வருத்தப்பட்டு...//

  //ஆன்மிகம் என்பது உணரப்படுவது. எழுதப்படுவதல்ல. ஆன்மிக அனுபவங்கள் எழுதப்படலாம். அப்படிப்பட்ட பதிவுகளே ஆன்மிகப்பதிவுகள் எனலாம். எ.கா. உங்கள் இந்தப்பதிவு அப்படி வரும். குறிப்பாக, உங்கள் கடைசிப்பத்தி.

  ஆனால் the so-called ஆன்மிகப்பதிவுகள் என்ன செய்கின்றன ? இந்துப் புராணக்கதைகளையும், தேவாரம், திருவாசகம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பற்றி எழுதுகிறார்கள். எழுதலாம். எழுதவேண்டும். ஆனால், அவற்றை இவர்கள் எழுதும் விதம் உண்மையிலே ஆன்மிகத்தைத் தூண்டாது. காரணம். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற ஒரு பாவனை; பண்டிதர் தமிழில் எழுதப்படும். இதோடு விட்டால் பரவாயில்லை. “என் பதிவை படிக்காமலிருப்பவர்கள் ஆன்மிகமில்லாதவர்கள்” என்ற தோரணை. அதாவது “ஆன்மிகம் என்பதே ஒரு சிலருக்குத்தான். அவர்கள் நாங்கள்தான்” என்ற மேட்டுக்குடித் தோரணை. ஒவ்வொருவரும் ஒரு கூட்டத்தை பின்னூட்டக்காரர்களாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் பதிவுகளைப் படித்தால், இந்து மதம் என்பது ஒரு சாராருக்கு மட்டுமே என்று நினைப்பை உருவாக்கும். இதில் பார்ப்பனப்பதிவர்களென்றால் கேட்கவே வேண்டாம்: ஒரே சமஸ்கிருத சுலோகங்கள்தான். ஒரு பெண் பார்ப்பன பதிவாளர் பார்ப்ப்னீய சடங்குகளைப் பற்றித்தான் எழுதுவார். அது மட்டுமே இந்துமதம் என்பது அவர் முடிபு. கோடிக்கணக்கான தமிழர்களுக்கு அச்சடங்குகளே தெரியாது. தேவையுமில்லை. தமிழ்நாடென்றால் பார்ப்பனர்கள் மட்டும்தானா? இவருக்கேன் புரியவில்லை. இவர்கள் எவருமே தமிழ்நாட்டுக்கிராமியத் தெய்வங்களைப்பற்றி எழுதுவதில்லை. ஏன் பெரியார் வரமாட்டார் இவர்களைக் கிண்டல் பண்ண ? வந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் இவர்கள் அடங்க மாட்டார்கள்.

  இசுலாமியரென்றால், இவர்கள் மட்டுமே இறைவனை வணங்குவதாகவும் மற்றவர்களெல்லாம் இவர்கள் பாணியே பின்பற்றவேண்டுமென்றும் இருக்கும். இசுலாமியர் மட்டுமே படிக்கவேண்டும் எனச் சொல்லாமல் சொல்வார்கள். கிருத்துவர்கள் என்றால், ஒரே டெகினிக்கலாக பைபிள் வசனங்கள். புரிவது கடினம். இவர்களை நான் படிப்பதில்லை. ஆங்கிலத்திலேயே நேரடியாக படித்துக்கொண்டிருக்கிறேன்.

  ஆன்மிகப்பதிவாளர்களுள் பலர், தம் பதிவுகளை மதச்சண்டைகளை காரசாரமாக நடத்த உதவுகிறார்கள். இயேசு அல்லாவைப்பற்றி இந்து ஆன்மிகப்பதிவாளர்களும், இந்துக்கடவுளர்களைப்பற்றி கிருத்துவ இசுலாமியப்பதிவாளர்களும் அசிங்கமாக எழுதி வருகிறார்கள்.

  மதநல்லிணக்கமே தனது வலைபதிவின் குறிக்கோள் என்று திருச்சியிலிருந்து எழுதும் ஒருபதிவாளர், தன் பதிவில் கிருத்துவரும் இசுலாமியர் மட்டுமே மத நல்லிணக்கத்தை விரும்பவில்லை. இந்துக்கள் விரும்புகிறார்கள் என்ற மாதிரி பதிவுகள் போடுகிறார்கள். Absolute nonsense!

  மார்க்ஸ் சொன்னார்: ஆன்மிகம் என்பது ஒரு போதை. Religion is the opiate of the masses. இந்த பதிவாளர்களுக்குப் பொருந்தும். வெறும் போதை இவர்களுக்கு.

  ஆன்மிகப்பதிவுகள் பலவற்றைப்படித்து நான் வெறுப்படைந்ததே மிச்சம். இவர்களைப் படித்து நமக்கென்ன ஆன்மிகமாக பெருகும் ?

  எவர் எளிமையாக ஆன்மிக அனுவபங்களை கர்வமில்லாமல் ‘தான் பெற்ற பயனை இவ்வுலகம் பெற வேண்டும்’ என்ற விசால மனத்தில் எழுதுகிறாரோ அவரின் ஆன்மிகப்பதிவால் எல்லாருக்கும் நன்மை. அது கண்டிப்பாக படிக்கப்படும். போற்றப்படும். அப்படியும் சிலபதிவாளர்கள் இருக்கிறார்கள்.//
  உங்கள் விரிவான பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது குணா!ஒரு சார்பின்றி நடுநிலையாக உங்கள் கருத்துக்களைச் சொல்லியி ருக்கிறீர்கள்.
  நன்றி!

  I have not read Madurai Chokkan's blog.
  படித்துப் பாருங்களேன்!

  பதிலளிநீக்கு
 18. கந்தசாமி. கூறியது...

  //ஆன்மிகம் என்றாலே கொஞ்சம் எட்ட தான் நிக்கிறம் ))//
  கிட்ட வாங்கய்யா!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 19. செங்கோவி கூறியது...

  //உங்கள் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கின்றது..பிரார்த்தனையின் சக்தி பெரியது தான்.//
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 20. கவி அழகன் கூறியது...

  //அருமையான பதிவு
  ஆன்மீக விழிப்புணர்வு//
  நன்றி கவி அழகன்.

  பதிலளிநீக்கு
 21. நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க பகிர்வுக்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 22. நான் கண்டவரை வலையுலகில்

  ஆன்மீகப் பதிவர்களையும்
  கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட பதிவர்களையும் சமமாகவே பார்க்க முடிகிறது.

  இன்றைய சூழலில்,

  கொள்கைகளை விவாதிப்பவர்கள் குறைவு என்பது உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 23. M.R கூறியது...

  //நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க பகிர்வுக்கு நன்றி ஐயா//
  M.R கூறியது...

  //தமிழ் மணம் எட்டு//

  நன்றி ரமேஷ்!

  பதிலளிநீக்கு
 24. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

  //நான் கண்டவரை வலையுலகில்

  ஆன்மீகப் பதிவர்களையும்
  கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட பதிவர்களையும் சமமாகவே பார்க்க முடிகிறது.

  இன்றைய சூழலில்,

  கொள்கைகளை விவாதிப்பவர்கள் குறைவு என்பது உண்மைதான்.//
  நன்றி குணசீலன் சார்!

  பதிலளிநீக்கு
 25. கண்டிப்பாக ஆன்மீகம் தேவை வாழ்வில் அது அன்புடன் கூடிய ஆன்மீகம் தெய்வ பலன் கிட்டும்.... வெறும் மந்திரங்கள் உச்சரிக்காமல்...மனதை ஒரு நிலைப்படுத்தி தியான நிலையில் சொல்ல்ப்படும் மந்திரத்தின் மகிமையால் உடலில் காந்த சக்தி வலுப்படும்... அச்சக்தியை நல்விசயங்களுக்காக போதிக்கலாம்... அருமையான பதிவு ஐயா...பகிர்வுக்கு நன்றி நீங்கள் குறிப்பிட்ட அன்பு பதிவுக்கு சென்று பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் ஐயா, ஆன்மீகப் பதிவுகளுக்கு பதிவுலகில் உள்ள நிலையினை விளக்கியிருக்கிறீங்க.

  கூடவே நன்றாக எழுதுவோர் காணாமற் போகின்றார்களே எனும் உண்மையினையும் உரைத்திருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 27. ஆன்மீகம் என்பது வாழ்வின் பிரித்துப்பார்க்க முடியாத அம்சம்..

  என்ன அதை புரிந்து கொள்ள முடியாதபோது/முயலாதபோது அதிலிருந்து நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகளை புரிந்துகொள்ள பலரால் முடிவதில்லை.,

  நமது எழுத்துகள் அந்தப்பணியினைச் செய்ய வேண்டும் என்பது என் அவா..

  மகிழ்ச்சி சென்னை பித்தன்..

  பதிலளிநீக்கு
 28. மாய உலகம் கூறியது...

  // தமிழ் மணம் 9//
  நன்றி ராஜேஷ்.

  பதிலளிநீக்கு
 29. மாய உலகம் கூறியது...

  //கண்டிப்பாக ஆன்மீகம் தேவை வாழ்வில் அது அன்புடன் கூடிய ஆன்மீகம் தெய்வ பலன் கிட்டும்.... வெறும் மந்திரங்கள் உச்சரிக்காமல்...மனதை ஒரு நிலைப்படுத்தி தியான நிலையில் சொல்ல்ப்படும் மந்திரத்தின் மகிமையால் உடலில் காந்த சக்தி வலுப்படும்... அச்சக்தியை நல்விசயங்களுக்காக போதிக்கலாம்... அருமையான பதிவு ஐயா...பகிர்வுக்கு நன்றி நீங்கள் குறிப்பிட்ட அன்பு பதிவுக்கு சென்று பார்க்கிறேன்//
  நன்றி ராஜேஷ்.

  பதிலளிநீக்கு
 30. நிரூபன் கூறியது...

  //வணக்கம் ஐயா, ஆன்மீகப் பதிவுகளுக்கு பதிவுலகில் உள்ள நிலையினை விளக்கியிருக்கிறீங்க.

  கூடவே நன்றாக எழுதுவோர் காணாமற் போகின்றார்களே எனும் உண்மையினையும் உரைத்திருக்கிறீங்க.
  நன்றி நிரூ!

  பதிலளிநீக்கு
 31. நிகழ்காலத்தில்... கூறியது...

  // ஆன்மீகம் என்பது வாழ்வின் பிரித்துப்பார்க்க முடியாத அம்சம்..

  என்ன அதை புரிந்து கொள்ள முடியாதபோது/முயலாதபோது அதிலிருந்து நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகளை புரிந்துகொள்ள பலரால் முடிவதில்லை.,

  நமது எழுத்துகள் அந்தப்பணியினைச் செய்ய வேண்டும் என்பது என் அவா..

  மகிழ்ச்சி சென்னை பித்தன்..//
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு