தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 28, 2011

பென்சிலும் சிறுவனும்!

பாட்டி கடிதம் எழுதுவதைப் பேரன் பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரெனக் கேட்டான்”பாட்டி!கதை எழுதுகிறாயா.என்னைப் பற்றியா?”

பாட்டி எழுதுவதை நிறுத்திவிட்டுப் பேரனைப் பார்த்தாள்.சொன்னாள் ”உன்னைப் பற்றித்தான்.ஆனால் நான் என்ன எழுதுகிறேன் என்பதை விட நான் எதை வைத்து எழுதுகிறேன் என்பது முக்கியம்.நீ வளர்ந்து பெரியவனாகும்போது இந்தப் பென்சில் போல் இருக்க வேண்டும்”

பேரன் பென்சிலைப் பார்த்தான்.”என்ன பாட்டி இது சாதாரணப் பென்சில்தானே?விசேடமாக எதுவும் இல்லையே!”

பாட்டி சொன்னாள்--

நீ எப்படிப் பார்க்கிறாய் என்பதைப் பொறுத்தது அது.இதில் ஐந்து முக்கியப் பண்புகள் இருக்கின்றன.அவற்றை நீ ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை அமைதியாக,சிறப்பாக இருக்கும்.

முதலாவது.உன்னால் செயற்கரிய செயல்கள் செய்ய முடியலாம். ஆனால் உன்னை எப்போதும் ஒரு கை நடத்திச்செல்கிறது என்பதை மறக்காதே. அந்தக் கையைத்தான் கடவுள் என அழைக்கிறோம்.

இரண்டாவது.எழுதும்போது அவ்வப்போது நான் பென்சிலைச் சீவ வேண்டி வருகிறது.இது பென்சிலுக்குத் துன்பம் தரலாம்.ஆனால் சீவிய பின் பென்சில் கூர்மையடைகிறது.அது போல் நீயும் உன் வலிகளையும் ,துயரங்களயும் பொறுத்துக் கொள்ள வேண்டும்;ஏனெனில் அவை உன்னை மேலும் சிறந்தவனாக்கும்.

மூன்றாவது இந்தப் பென்சில் தவறாக எழுதியதை அழிப்பான் வைத்து அழிப்பதற்கு அனுமதிக்கிறது.வாழ்க்கையில் செய்த தவறுகளை மாற்றி அமைப்பது என்பது நல்லதே.அது உன்னை நியாய வழியில் எடுத்துச் செல்லும்.

நான்காவது இதில் முக்கியமானது வெளியே இருக்கும் மரப்பகுதி அல்ல; உள்ளே இருக்கும் எழுதும் பகுதி.அது போல் உன் உள்ளே இருப்பதின் மீது எப்போதும் கவனம் வை!

ஐந்தாவது, பென்சில் எப்போதுமே தன் தடத்தை விட்டுச் செல்கிறது.அது போல் நீ செய்யும் செயல்களெல்லாம் தம் தடத்தைப் பதித்துச் செல்வாய்.எனவே செயல்கலில் கவனம் தேவை!

இவற்றையெல்லாம் நினைவில் கொண்டால்

நீ பெரிய செயல்கள் செய்யலாம் ,கடவுளின் கைபற்றி!

அவ்வப்போது வாழ்க்கையில் நீ கூர்தீட்டப் படுவாய், உன் துன்பங்களால். ஆனால் அது உன்னை வலிமையாக்கும்!

உன் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும்!

உன் உள்ளே இருப்பதின் முக்கியத்துவத்தை நீ உணர்வாய்!

என்ன செய்தாலும் உன் முத்திரையைப் பதித்துச் செல்.எந்நேரத்திலும் கடமை தவறாதே!

இதுவே இந்தப் பென்சில் உனக்குக் கற்றுக் கொடுப்பது.”

(பாலோ கோல்ஹோ வின் படைப்பிலிருந்து.)

56 கருத்துகள்:

  1. ////இரண்டாவது.எழுதும்போது அவ்வப்போது நான் பென்சிலைச் சீவ வேண்டி வருகிறது.இது பென்சிலுக்குத் துன்பம் தரலாம்.ஆனால் சீவிய பின் பென்சில் கூர்மையடைகிறது.அது போல் நீயும் உன் வலிகளையும் ,துயரங்களயும் பொறுத்துக் கொள்ள வேண்டும்;ஏனெனில் அவை உன்னை மேலும் சிறந்தவனாக்கும்.//// பென்சிலும் மனிதனுக்கு முன் மாதிரி தான் !

    பதிலளிநீக்கு
  2. பென்சில்'ல ஒரு வாழ்க்கை தத்துவத்தையே சொல்லிட்டீங்க தல சூப்பர்!!!!

    பதிலளிநீக்கு
  3. இந்த காலத்துல பாட்டிகள் கதை கேட்க பிள்ளைகளுக்கு கொடுப்பினை இல்லை, எல்லா பாட்டிகளும் முதியோர் இல்லத்தில்....

    பதிலளிநீக்கு
  4. சாதாரணமான ஒரு பென்சிலை வைத்து வாழ்க்கைத் தத்துவத்தையே சொல்லிவிட முடிந்திருக்கிறதே... அபாரம் ஐயா!

    பதிலளிநீக்கு
  5. பென்சில்ல இவ்வளவு இருக்கா. அருமை.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா,
    ஒரு சிறுவனின் மனதினுள் வித்தியாசமான உணர்வலைகளை உருவாக்கவல்ல கதையினைப் பாட்டி சொல்லியிருக்கிறா.

    ரசித்தேன்.

    இக் கதைகள் நாளைய நாட்டின் தூண்களுக்குத் தேவை.

    பதிலளிநீக்கு
  7. //முதலாவது.உன்னால் செயற்கரிய செயல்கள் செய்ய முடியலாம். ஆனால் உன்னை எப்போதும் ஒரு கை நடத்திச்செல்கிறது என்பதை மறக்காதே. அந்தக் கையைத்தான் கடவுள் என அழைக்கிறோம்.//

    அப்படி என்றால் தவறாக எழுதுவது பென்சில் அல்ல, கை தானே... தவறுகளுக்கு பென்சில்கள் பொறுப்பு அல்ல என்று கூறியமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. பென்சில் பின்னால் பின்செல் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  9. அண்ணே பென்சில வச்சி ஒரு சுத்து வந்துட்டீங்க!

    பதிலளிநீக்கு
  10. ////இரண்டாவது.எழுதும்போது அவ்வப்போது நான் பென்சிலைச் சீவ வேண்டி வருகிறது.இது பென்சிலுக்குத் துன்பம் தரலாம்.ஆனால் சீவிய பின் பென்சில் கூர்மையடைகிறது.அது போல் நீயும் உன் வலிகளையும் ,துயரங்களயும் பொறுத்துக் கொள்ள வேண்டும்;ஏனெனில் அவை உன்னை மேலும் சிறந்தவனாக்கும்.//// //பென்சிலும் மனிதனுக்கு முன் மாதிரி தான் //
    நன்றி கந்தசாமி.

    பதிலளிநீக்கு
  11. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // பென்சில்'ல ஒரு வாழ்க்கை தத்துவத்தையே சொல்லிட்டீங்க தல சூப்பர்!!!!//
    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  12. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // இந்த காலத்துல பாட்டிகள் கதை கேட்க பிள்ளைகளுக்கு கொடுப்பினை இல்லை, எல்லா பாட்டிகளும் முதியோர் இல்லத்தில்....//
    வருத்தும் கசப்பான உண்மை.

    பதிலளிநீக்கு
  13. கணேஷ் கூறியது...

    //சாதாரணமான ஒரு பென்சிலை வைத்து வாழ்க்கைத் தத்துவத்தையே சொல்லிவிட முடிந்திருக்கிறதே... அபாரம் ஐயா!//
    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  14. Tamilan கூறியது...

    // பென்சில்ல இவ்வளவு இருக்கா. அருமை.//
    நன்றி தமிழன்.

    பதிலளிநீக்கு
  15. நிரூபன் கூறியது...

    //வணக்கம் ஐயா,
    ஒரு சிறுவனின் மனதினுள் வித்தியாசமான உணர்வலைகளை உருவாக்கவல்ல கதையினைப் பாட்டி சொல்லியிருக்கிறா.

    ரசித்தேன்.

    இக் கதைகள் நாளைய நாட்டின் தூண்களுக்குத் தேவை.//
    நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு
  16. suryajeeva கூறியது...

    //முதலாவது.உன்னால் செயற்கரிய செயல்கள் செய்ய முடியலாம். ஆனால் உன்னை எப்போதும் ஒரு கை நடத்திச்செல்கிறது என்பதை மறக்காதே. அந்தக் கையைத்தான் கடவுள் என அழைக்கிறோம்.//

    // அப்படி என்றால் தவறாக எழுதுவது பென்சில் அல்ல, கை தானே... தவறுகளுக்கு பென்சில்கள் பொறுப்பு அல்ல என்று கூறியமைக்கு நன்றி//
    பாலோ பார்க்காத ஒரு கோணம்!
    ஆனால் பென்சிலுக்கு இல்லாத ஒன்று நமக்கு இருக்கிறது-அறிவு.அதைச் சரியாகப் பயன் படுத்தாமல்,கடவுளின் வழியை விட்டு விலகிக் கெட்டால் அதற்குக் கை பொறுப்பல்லவே!
    புதிய பார்வைக்கு நன்றி சூர்யஜீவா.

    பதிலளிநீக்கு
  17. வே.நடனசபாபதி கூறியது...

    // பென்சில் பின்னால் பின்செல் என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். நன்றிகள் பல.//
    நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  18. விக்கியுலகம் கூறியது...

    //அண்ணே பென்சில வச்சி ஒரு சுத்து வந்துட்டீங்க!//
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  19. நல்ல பதிவு வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  20. ஒரு பென்சிலிருந்து தெரிந்து கொள்வதற்கே
    எவ்வளவு அறிய விஷயமிருக்கிறது
    அறியத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள் த.ம 7

    பதிலளிநீக்கு
  21. ஆகா! (பல்பத்திலிருந்து பேனாவுக்கு போன என் நிலை இப்போது தான் புரியுது :)

    பதிலளிநீக்கு
  22. மிகவும் அருமையான படைப்பு அன்பரே..
    சிந்திக்கும் விதமாகவும்
    மனதில் பதியும் விதமாகவும்

    அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  23. Nirosh சொன்னது…

    //நல்ல பதிவு வாழ்த்துக்கள்..!//
    நன்றி நிரோஷ்.

    பதிலளிநீக்கு
  24. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //சிறிய பென்சிலில் சீரிய தத்துவம்!!!//
    நன்றி சிபி.

    பதிலளிநீக்கு
  25. Ramani கூறியது...

    // ஒரு பென்சிலிருந்து தெரிந்து கொள்வதற்கே
    எவ்வளவு அறிய விஷயமிருக்கிறது
    அறியத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள் த.ம 7//
    நன்றி ரமணி.

    பதிலளிநீக்கு
  26. அப்பாதுரை கூறியது...

    //ஆகா! (பல்பத்திலிருந்து பேனாவுக்கு போன என் நிலை இப்போது தான் புரியுது :)//

    :) நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  27. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    //மிகவும் அருமையான படைப்பு அன்பரே..
    சிந்திக்கும் விதமாகவும்
    மனதில் பதியும் விதமாகவும்

    அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..//
    நன்றி குணசீலன்.

    பதிலளிநீக்கு
  28. தாங்கள் சென்னைப் பித்தரா-நல்ல
    சிந்தனைப் பித்தரா..
    அருமை ஐயா அருமை!
    நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  29. அருமையான கருத்துகள்..பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. மிக நல்ல கருத்தடங்கிய பகிர்வு....

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  31. பென்சிலை வைத்து ஒரு நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  32. புலவர் சா இராமாநுசம் சொன்னது…

    //தாங்கள் சென்னைப் பித்தரா-நல்ல
    சிந்தனைப் பித்தரா..
    அருமை ஐயா அருமை!
    நன்றி//
    மொத்தத்தில் ஒரு பித்தன்!
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  33. செங்கோவி கூறியது...

    //அருமையான கருத்துகள்..பகிர்விற்கு நன்றி//
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  34. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // மிக நல்ல கருத்தடங்கிய பகிர்வு....//

    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  35. shanmugavel கூறியது...

    //பென்சிலை வைத்து ஒரு நல்ல பகிர்வு.//

    நன்றி சண்முகவேல்!

    பதிலளிநீக்கு
  36. அருமையான பதிவு ஒரு பென்சில் மூலம்.
    முதலாவது.உன்னால் செயற்கரிய செயல்கள் செய்ய முடியலாம். ஆனால் உன்னை எப்போதும் ஒரு கை நடத்திச்செல்கிறது என்பதை மறக்காதே. அந்தக் கையைத்தான் கடவுள் என அழைக்கிறோம்.
    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

    பதிலளிநீக்கு
  37. பாலோ கோல்ஹோ வின் ஐந்து முத்துக்கள்...மறுபடி படிக்க வைத்ததுக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  38. ராக்கெட் ராஜா கூறியது...

    //அருமையான பதிவு ஒரு பென்சில் மூலம்.
    முதலாவது.உன்னால் செயற்கரிய செயல்கள் செய்ய முடியலாம். ஆனால் உன்னை எப்போதும் ஒரு கை நடத்திச்செல்கிறது என்பதை மறக்காதே. அந்தக் கையைத்தான் கடவுள் என அழைக்கிறோம்.
    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்//

    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  39. ரெவெரி கூறியது...

    // பாலோ கோல்ஹோ வின் ஐந்து முத்துக்கள்...மறுபடி படிக்க வைத்ததுக்கு நன்றி நண்பரே..//

    நன்றி ரெவெரி.

    பதிலளிநீக்கு
  40. ஆஹா அழகான தத்துவம் நிறைந்த கதை .பகிர்வுக்கு நன்றி ஐயா

    தமிழ் மணம் 13

    பதிலளிநீக்கு
  41. ஒரு பென்சிலின் செயல்போல் இருக்கனும் மனிதனின் நடத்தையும் அற்புதமான விளக்கம் ஐயா!

    பதிலளிநீக்கு
  42. ஒரு பென்சிலின் செயல்போல் இருக்கனும் மனிதனின் நடத்தையும் அற்புதமான விளக்கம் ஐயா!

    பதிலளிநீக்கு
  43. ஒரு எழுது கோலிற்குள் இத்தனை தத்துவம் அருமை. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  44. ஒரு பென்சிலில் இவ்வளவு தத்துவமா? ஆச்சரியம்!

    பதிலளிநீக்கு
  45. வயசானாலே இளசுகளுக்கு அட்வைஸ் கொடுக்குறதே வேலையா போச்சு...

    நான் உங்களை சொல்லல... கதையில வர்ற பாட்டியை சொன்னேன்...

    பதிலளிநீக்கு
  46. மிகச் சிறப்பான கருத்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  47. M.R சொன்னது…

    //ஆஹா அழகான தத்துவம் நிறைந்த கதை .பகிர்வுக்கு நன்றி ஐயா

    தமிழ் மணம் 13//

    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  48. தனிமரம் கூறியது...

    //ஒரு பென்சிலின் செயல்போல் இருக்கனும் மனிதனின் நடத்தையும் அற்புதமான விளக்கம் ஐயா!//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  49. kavithai (kovaikkavi) கூறியது...

    //ஒரு எழுது கோலிற்குள் இத்தனை தத்துவம் அருமை. பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com//
    நன்றி கோவைக்கவி.

    பதிலளிநீக்கு
  50. Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...

    //ஒரு பென்சிலில் இவ்வளவு தத்துவமா? ஆச்சரியம்!//
    நன்றி ஐடியா மணி.

    பதிலளிநீக்கு
  51. Philosophy Prabhakaran கூறியது...

    // வயசானாலே இளசுகளுக்கு அட்வைஸ் கொடுக்குறதே வேலையா போச்சு...

    நான் உங்களை சொல்லல... கதையில வர்ற பாட்டியை சொன்னேன்...//

    ஏற்கனவே நான் இளைஞன் என்று ஒப்புக்கொண்டு விட்டீர்கள்! பின் என்னை எப்படிச் சொல்ல முடியும்?!
    நன்றி பிரபா.

    பதிலளிநீக்கு
  52. FOOD கூறியது...

    //மிகச் சிறப்பான கருத்துக்கள். நன்றி.//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  53. சீனுவாசன்.கு கூறியது...

    // நம்ம சைட்டுக்கு வாங்க!
    கருத்த சொல்லுங்க!!
    நல்லா பழகுவோம்!!!//
    வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  54. ஒவ்வொரு ஜீவனிடமிருந்தும், ஒவ்வொரு பொருள்களிடமிருந்தும் நம் வாழ்க்கை நெறிகளை கற்றுக்கொள்ளலாம் என பென்சில் கதையை வைத்து உணர வைத்த அன்பருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  55. மாய உலகம் கூறியது...

    // ஒவ்வொரு ஜீவனிடமிருந்தும், ஒவ்வொரு பொருள்களிடமிருந்தும் நம் வாழ்க்கை நெறிகளை கற்றுக்கொள்ளலாம் என பென்சில் கதையை வைத்து உணர வைத்த அன்பருக்கு நன்றி//

    நன்றி ராஜேஷ்!

    பதிலளிநீக்கு