தொடரும் தோழர்கள்

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

அணு உலைகள்... அவசியமா? ஆபத்தா?

மறியல், கடையடைப்பு, உண்ணாவிரதம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என சத்யாகிரகம் செய்து வருகின்றனர் பொதுமக்கள். கடந்த 2 மாதங்களாக கொந்தளித்து கிடக்கின்றன தென் மாவட்ட கடற்கரையோர கிராமங்கள்.


ஏதோ குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்காகவோ, சாலை, பஸ் வசதி கேட்டோ இந்த போராட்டம் இல்லை. மனித உயிருக்கு உலை வைக்கும் அணு உலையை எதிர்த்து ஒட்டு மொத்தமாகக் குரல் கொடுத்து வருகின்றனர் கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள். இந்தியாவில் 1948ல் பாபா அணு ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டது. 1969ம் ஆண்டில் இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் தாராப்பூரில் இயக்கத்தை தொடங்கியது. தற்போதைய நிலையில் இந்தியாவில் 20 அணு உலைகள் மூலம் 4 ஆயிரத¢து 780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 7 அணு உலைகள் கட்டுமான நிலையில் உள்ளன. யுரேனியம், புளூட்டோனியம் அணுக்களின் கருவில் உள்ள சக்தியே அணுசக்தி ஆகும். அணு உலைக்குள் அணு எரிபொருள் பிளவுறுதல் மூலம் வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பத்தின் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.


இந்தியாவில் 1947ல் மின்சார உற்பத்தி 1,300 மெகாவாட்டாக இருந்தது. தற்போது ஒரு லட்சத்து 73 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப் படுகிறது. எனினும் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. 2030ம் ஆண்டில் மின்சாரத்தின் தேவை 4 லட்சம் மெகாவாட்டாக இருக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. இந்தியாவில் அடிப்படை தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி என ஆகியவற்றையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அடுத்த 20 ஆண்டுக ளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இந்தியாவிடம் நிலக்கரி, எண்ணெய் போன்ற எரிபொருட் களின் இருப்பு குறைவாக உள்ளது. 1000 மெகாவாட் அணு மின் உற்பத்திக்கு ஒரு ஆண்டிற்கு 30 டன் எரிபொருள் (யுரேனியம்) தேவை. ஆனால் 1000 மெகாவாட் அனல் மின் உற்பத்திக்கு ஒரு ஆண்டுக்கு 43 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி அல்லது 20 லட்சம் டன் எண்ணெய் தேவைப்படுகிறது. நீர் மின்சார உற்பத்திக்கு போதிய நீர் ஆதாரங்கள், அணைகள் இல்லை. சூரிய சக்தி ஆதாரம் ஒரு சில மண்டலங்களில் மட்டுமே கிடைக்கிறது. காற்றாலை மின்சாரம் சில கால கட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. எதிர்கால மின்சார தேவையை சமாளிக்க அணுசக்தியால் மட்டுமே முடியும். இதற்காக தான் அணு மின் நிலையங்கள் அமைக்கப்படுகிறது என அணு மின் நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.


ஆனால் கோடிகளை கொட்டி மனித சமுதாயத் துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலில் அணு மின்சாரம் தயாரிக்க வேண்டுமா என்பது தான் பொதுமக்களின் ஒரே கேள்வி. அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை மின்சாரம் என எத்தனையோ வழிகள் இருக்கும் போது கதிர்வீச்சு ஏற்பட்டால் மக்களைக் கொல்லும் பேராபத்து கொண்ட அணு உலைகள் தேவை தானா என கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.


நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் 13 ஆயிரத்து 171 கோடி மதிப்பீட்டில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 1, 2 அணு உலைகள் அமைக்கப் படுகின்றன. இவை தவிர 3, 4, 5, 6 என தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறனுள்ள நான்கு அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன.
இந்தியாவிலேயே முதன்முதலாக இங்கு தான் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. அணு உலைகளில் பயன்படுத்தும் எரிபொருளான செறிவூட்டப் பட்ட யுரேனியம் ரஷ்யாவில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் மீன்பிடி தொழில் செய்யக் கூடாது. 2 கி.மீ., சுற்றளவிற்குள் அணுமின் நிலைய கட்டடிங்களை தவிர வேறு எதுவும் இருக்கக் கூடாது. 5 கி.மீ., சுற்றளவிற்குள் ‘ஸ்டெரிலைஷேசன் ஷோன்‘ எனவும் அறிவித்துள்ளனர். அப்படியானால் மனிதர்கள் வசிக்கக் கூடாது எனவும் கூறப்படுகிறது. 5 கி.மீ., முதல் 16 கி.மீ.,க்குள் 10 ஆயிரம் மக்களுக்கு மேல் வசிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இதனால் அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கும் போது தங்கள் வாழ்வாதாரமே பாழாகி விடும் என்கின்றனர் கூடங்குளம் பகுதி மக்கள்.
அணு உலைகளை குளிர்விக்க கடல் தண்ணீர் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீர் பின்னர் அப்படியே கடலுக்கு செல்கிறது. இதனால் கடல் தண்ணீரில் கதிர்வீச்சு ஏற்பட்டு கடல் வாழ் இனங்கள் பாதிக்கப்படும். கடல் மீன்களை சாப்பிடும் மனிதர்களும் கத¤ர்வீச்சால் பாதிக்கப்படுவர். மீன் இனங்களே இருக்காது. பொதுமக்களின் உணவே கேள்விக்குறியாகி விடும் என்கின்றனர் அணு உலை எதிர்ப்பாளர்கள்.


இதுகுறித்து அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் உதயகுமார் கூறுகையில், மக்களுக்கு மின்சாரம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமைகளை பாதிக்காத வகையில் மின்சாரம் தயாரிக்க வேண்டும்.


அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் காற்று, தண்ணீரில் கதிர்வீச்சு தன்மை இருக்கும். உணவு, பழங்கள், காற்று அனைத்திலும் கதிர்வீச்சு பாதிப்பு உணரப்படும். இதனால் கருச்சிதைவு, குழந்தை இன்மை, புற்றுநோய், மன வளர்ச்சி இல்லாத குழந்தைகள் என எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர். ஜப்பான் நாட்டில் அமெரிக்க தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தான் அணு உலை அமைக்கப்பட்டது. அங்கு சுனாமி வந்த போது என்ன நிகழ்ந்தது? அப்படி இருக்கும் போது ரஷ்ய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் அணு உலைகளுக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்பில்லை. இது மட்டுமல்லாது தீவிரவாதிகள் அணுமின் நிலையங்களை குறிவைத்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சரே கூறியுள்ளார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சுற்று வட்டாரத்தில் மனித உயிரினமே இருக்காது. எனவே அணு உலைகளை மறந்து விட்டு மாற்று வழி மின் சக்தியை மத்திய அரசு யோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூடங்குளத்தில் அணு உலைகளுக்கு எதிராக தொடங்கியுள்ள போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அரசு நிர்வாகம் திணறி வருகிறது. மக்களின் பயன்பாட்டிற்கு தான் மின்சாரம். அந்த மின்சாரம் மனித உயிரையே குடிக்கும் என்றால் மாற்று வழியை யோசிக்கலாமே!

நன்றி:தினகரன்.

(அணு உலையில் யுரேனியம் பிளக்கப்படும்போது வெளியாகும் கதிரியக்கப் பொருள் சிசியம்.செர்னோபில் விபத்தின் போது நூறாயிரம் நூறாயிரங்கோடி செசியம் அணுக்கள் வெளியேறி காற்றில் கலந்தன. சிசியத்தின் தாக்கம் 30 ஆண்டுகளுக்கு இருக்குமாம்.இந்தக் கதிரியிக்கத்தின் விளவாகப் பாதிக்கப்பட்ட,படப்போகும் உயிர்களெத்தனை?இந்தச் சிசியத்தைத் தாவரங்கள் கிரகித்துக் கொள்வதால் ஏற்படும் கோர விளைவுகள் என்ன?இதெல்லாம் நினைத்தால் உறக்கம் வருமா?)

45 கருத்துகள்:

 1. பாதுகாப்பு விஷயத்தில் கண்டிப்பாக எந்தவித சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது...


  கூ்டன் குளத்திற்க்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 2. மாற்றுக்கருத்து இல்லை
  மாறமாட்டோம் எம்நிலையில்
  கூடங்குளம்
  மூடும்வரை.......

  பதிலளிநீக்கு
 3. உலகில் அநேக நாடுகள் அணு மின் நிலையங்கள் வேண்டாம் என்கிறபோது, நமது அரசு மட்டும் ஏன் இந்த விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கிறது எனத்தெரியவில்லை. இதை நாம் அனுமதித்தால் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதற்கு ஒப்பாகிவிடும். எனவே எல்லோரும் சேருவோம்.ஒன்றாக எதிர்ப்போம்.

  பதிலளிநீக்கு
 4. //அணு உலைகளை குளிர்விக்க கடல் தண்ணீர் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீர் பின்னர் அப்படியே கடலுக்கு செல்கிறது. இதனால் கடல் தண்ணீரில் கதிர்வீச்சு ஏற்பட்டு கடல் வாழ் இனங்கள் பாதிக்கப்படும். கடல் மீன்களை சாப்பிடும் மனிதர்களும் கத¤ர்வீச்சால் பாதிக்கப்படுவர். மீன் இனங்களே இருக்காது. பொதுமக்களின் உணவே கேள்விக்குறியாகி விடும் //

  மக்களின் ஆதாரத் தேவைகளே கேள்விக்குறியாகும் போது மறு பரிசீலனை தேவைதான்

  பதிலளிநீக்கு
 5. வருத்தமாக இருக்கிறது, இதைப் படித்து. எல்லாருமே கண்மூடிகளா?

  அணு உலை வெடித்து ஏற்படும் ஆபத்தை விட சென்னைத் தெருக்களில் உயிரிழக்கும் ஆபத்து statistically அதிகம். இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இது போன்ற திட்டங்கள் தேவை. nuclear energy is clean energy, cheaper energy.

  பாதுகாப்புக்குத் தேவையானதை ஒரு படி அதிகமாகச் செய்வதை விட்டு, இப்படி பிற்போக்காக நடக்கலாமா? நடப்பதை ஆதரித்துத் தான் எழுதலாமா?

  எதுக்குத் தான் உண்ணாவிரதம் என்று கணக்கில்லையா?

  பதிலளிநீக்கு
 6. விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரையை தந்துள்ளீர்கள்.
  புரியாதவர்கள் புரிந்துகொள்வார்கள்!

  பதிலளிநீக்கு
 7. அருமையாய் அலசி இருக்க்றீர்கள்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. நல்ல கட்டுரை. பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 9. அருமையாக சொல்லி இருக்கீங்க ஐயா

  நன்றி .

  தமிழ் மணம் 11

  பதிலளிநீக்கு
 10. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

  // நல்ல அலசல் .//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  // பாதுகாப்பு விஷயத்தில் கண்டிப்பாக எந்தவித சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது...

  கூ்டன் குளத்திற்க்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்...//

  நன்றி சௌந்தர்.
  விடுப்பில் இருந்தீர்களா?

  பதிலளிநீக்கு
 12. இந்தியாவில் தமிழகம் தவிர்த்து வேறு எங்குமே அணு உலை வைக்க இடம் இல்லையா அரசுக்கு?

  பதிலளிநீக்கு
 13. மகேந்திரன் கூறியது...

  //மாற்றுக்கருத்து இல்லை
  மாறமாட்டோம் எம்நிலையில்
  கூடங்குளம்
  மூடும்வரை.......//
  நன்றி மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 14. வே.நடனசபாபதி கூறியது...

  // உலகில் அநேக நாடுகள் அணு மின் நிலையங்கள் வேண்டாம் என்கிறபோது, நமது அரசு மட்டும் ஏன் இந்த விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கிறது எனத்தெரியவில்லை. இதை நாம் அனுமதித்தால் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதற்கு ஒப்பாகிவிடும். எனவே எல்லோரும் சேருவோம்.ஒன்றாக எதிர்ப்போம்.//
  நன்றி சபாபதி ஐயா!

  பதிலளிநீக்கு
 15. வே.நடனசபாபதி கூறியது...

  //உலகில் அநேக நாடுகள் அணு மின் நிலையங்கள் வேண்டாம் என்கிறபோது, நமது அரசு மட்டும் ஏன் இந்த விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கிறது எனத்தெரியவில்லை. இதை நாம் அனுமதித்தால் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதற்கு ஒப்பாகிவிடும். எனவே எல்லோரும் சேருவோம்.ஒன்றாக எதிர்ப்போம்.//
  நன்றி ரிஷபன்.

  பதிலளிநீக்கு
 16. அப்பாதுரை கூறியது...

  //வருத்தமாக இருக்கிறது, இதைப் படித்து. எல்லாருமே கண்மூடிகளா?

  அணு உலை வெடித்து ஏற்படும் ஆபத்தை விட சென்னைத் தெருக்களில் உயிரிழக்கும் ஆபத்து statistically அதிகம். இந்தியாவின் முன்னேற்றத்துக்கு இது போன்ற திட்டங்கள் தேவை. nuclear energy is clean energy, cheaper energy.

  பாதுகாப்புக்குத் தேவையானதை ஒரு படி அதிகமாகச் செய்வதை விட்டு, இப்படி பிற்போக்காக நடக்கலாமா? நடப்பதை ஆதரித்துத் தான் எழுதலாமா?

  எதுக்குத் தான் உண்ணாவிரதம் என்று கணக்கில்லையா?//
  மாற்றுக் கருத்துக்கு நன்றி. இது விவாதத்துக்குரியது!

  பதிலளிநீக்கு
 17. கோகுல் கூறியது...

  //விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரையை தந்துள்ளீர்கள்.
  புரியாதவர்கள் புரிந்துகொள்வார்கள்!//
  நன்றி கோகுல்.

  பதிலளிநீக்கு
 18. கவி அழகன் கூறியது...

  //அருமையாய் அலசி இருக்க்றீர்கள்
  வாழ்த்துக்கள்//
  நன்றி கவி அழகன்.

  பதிலளிநீக்கு
 19. Riyas கூறியது...

  // நல்ல விரிவான அலசல்..//
  நன்றி ரியாஸ்.

  பதிலளிநீக்கு
 20. FOOD கூறியது...

  // கருத்தாழமிக்க பதிவு.//
  நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 21. செங்கோவி கூறியது...

  //நல்ல கட்டுரை. பகிர்வுக்கு நன்றி ஐயா.//
  நன்றி செங்கோவி.

  பதிலளிநீக்கு
 22. M.R கூறியது...

  //அருமையாக சொல்லி இருக்கீங்க ஐயா

  நன்றி .

  தமிழ் மணம் 11//
  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 23. அணு உலையை உடனே மூடுவதுதான் நல்லது...

  பதிலளிநீக்கு
 24. அணு உலையை உடனே மூடுவதுதான் நல்லது...

  பதிலளிநீக்கு
 25. மக்களுக்காக இப்படிபட்ட திட்டம் என்பது தேவை இல்லாதது...

  பதிலளிநீக்கு
 26. கூ்டன் குளத்திற்க்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 27. என்னவென்றால் படித்து உணர்ந்த விஞ்ஞானிகள் எல்லாம் இது ஆபத்து என்று அடித்துக் கூறுகிறார்கள்.

  படிக்காத மேதைகளோ இல்லை என்கிறார்கள்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

  பதிலளிநீக்கு
 28. வணகம் ஐயா,

  கூடங்குளம் மக்களின் மன உறுதிக்குத் தலை வணங்குகிறேன்.

  நிச்சயம் இப் போராட்டம் வெற்றி பெறும்.
  கட்டுரைப் பகிர்விற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 29. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //அணு உலையை உடனே மூடுவதுதான் நல்லது.//

  நடக்குமா?

  பதிலளிநீக்கு
 30. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // மக்களுக்காக இப்படிபட்ட திட்டம் என்பது தேவை இல்லாதது...//
  சரி.
  நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 31. மாய உலகம் கூறியது...

  //கூ்டன் குளத்திற்க்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும்...//
  அதுவே அனைவரின் எண்ணமும்.
  நன்றி ராஜேஷ்.

  பதிலளிநீக்கு
 32. ! சிவகுமார் ! கூறியது...

  //இந்தியாவில் தமிழகம் தவிர்த்து வேறு எங்குமே அணு உலை வைக்க இடம் இல்லையா அரசுக்கு?//
  எங்கு வைத்தாலும் பாதிப்பு நம் மக்களுக்குத்தானே?

  நன்றி சிவகுமார்.

  பதிலளிநீக்கு
 33. போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்

  நண்பர்களே.தமிழகத்தை அழிவிலிருந்து காக்க போராடுவோம்

  பதிலளிநீக்கு
 34. ♔ம.தி.சுதா♔ கூறியது...

  // என்னவென்றால் படித்து உணர்ந்த விஞ்ஞானிகள் எல்லாம் இது ஆபத்து என்று அடித்துக் கூறுகிறார்கள்.

  படிக்காத மேதைகளோ இல்லை என்கிறார்கள்..//
  உலகம் பல விதம்!
  நன்றி ம.தி.சுதா.

  பதிலளிநீக்கு
 35. நிரூபன் கூறியது...

  //வணகம் ஐயா,

  கூடங்குளம் மக்களின் மன உறுதிக்குத் தலை வணங்குகிறேன்.

  நிச்சயம் இப் போராட்டம் வெற்றி பெறும்.
  கட்டுரைப் பகிர்விற்கு நன்றி ஐயா.//

  நன்றி நிரூ.

  பதிலளிநீக்கு
 36. மக்களுக்கு அச்சுறுத்தாலான பாதுகாப்பற்ற இந்த அணு உலைகளை
  மக்கள் நலன்கருதி மூடுவதுதானே நியாயமாகும் .உங்கள் சமூக
  நலன்கருதிய அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா .வாருங்கள்
  என் தளத்திற்கும் ...........

  பதிலளிநீக்கு
 37. அனைத்து ஓட்டுக்களும் போட்டாச்சு ........

  பதிலளிநீக்கு
 38. அனைவருக்கும் மிகச் சரியாக விளங்கும் வண்ணம்
  அணு உலைஆபத்து குறித்து தெளிவான
  கட்டுரையை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 39. ALL ABOVE PERSONS WITHOUT KNOWLEDGE OF atom THEY ARE TELLING FOR "NO"
  water circulated for coiling will not conditioned the atom rax. IF oil tanker coiled by water water cant mix with oil . THE ATOMIC RAY CANT CROSS THE LEAD. With out kuOdam kulaM we cant live. WE WANT SOME MORE KUDAM KULAMS.

  பதிலளிநீக்கு