தொடரும் தோழர்கள்

புதன், செப்டம்பர் 07, 2011

அகலிகை ஏன் கல்லானாள்?

காத்திருந்தது அந்தக் கல் காலம் காலமாய்

சாத்திரம் போற்றும் நாயகன் காலுக்காய்

வேதமறிந்த முனிவன் தன் கோபத்தில்

பேதையின் நியாயம் மறந்து சபித்தனன்

இந்திரனின் வஞ்சகத்தால் மனம் கல்லாச்சு

சொந்த மணாளனின் சாபத்தால் உடலும் கல்லாச்சு!

வந்தான் ஒரு நன்னாளில் தசரதன் மைந்தனங்கு

தந்தான் மீண்டும் உரு பேதை அகலிகைக்கு

அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் வருந்தினான்

எவளுக்குமே இக்கதி வருவது தவறென்றான்.

ஆண்டுகள் பல கடந்தன,அகலிகை காத்திருந்தாள்

மீண்டும் அப்புண்ணியனைக் கண்களால் காண்பதற்கு

இலங்கையில் போர் வென்று திரும்பும் வழியினிலே

கலங்கிப் பின் மனம் தெளிந்த சீதையுடன் அங்கு வந்தான்

நடந்த நிகழ்வுகளைத் தனித்திருந்த போது வினவ

மடந்தை சீதையும் அனைத்தும் உரைத்தனளே.

தீக்குளித்த கதை கேட்டாள் அகலிகை உடலெல்லாம்

தீயினால் சுட்டது போல் கொடுந்துன்பம் எய்தினாள்

”இராமனா சொன்னான் உன்னைத் தீக்குளிக்க

இராமலே போனதோ நியாயம் அவனிடமும்

தன் மனைவி என்றதுமே நியாயம் வேறாயிற்றோ

என்ன கொடுமையிது ”என்றே அரற்றினாள்

கண் சிவந்தாள்,உள்ளம் மறுகினாள்,உடல் இறுகினாள்

பெண்ணவள் மீண்டும் கல்லாக மாறினாள்!

(கரு;புதுமைப் பித்தனின் ‘சாப விமோசனம்’ சிறுகதை)

42 கருத்துகள்:

  1. இந்தப் பாயிண்ட் ஆஃப் வியூவும் நல்லாத்தான் இருக்கு சார்..

    பதிலளிநீக்கு
  2. செங்கோவி கூறியது...

    //இந்தப் பாயிண்ட் ஆஃப் வியூவும் நல்லாத்தான் இருக்கு சார்..//
    கருத்து புதுமைப் பித்தனுடையது! கவிதை என்னுடையது!
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  3. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //அருமை தோழரே..//
    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  4. விக்கியுலகம் கூறியது...

    //அண்ணே அருமைன்னே!//

    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  5. அகலிகையின் கல் காவியத்திற்கு
    புதுமைச் சாயம்
    மீண்டும் கல்லானதற்கு சொல்லப்பட்ட
    காரணம் இனிமை.

    பதிலளிநீக்கு
  6. கரு-புதுமைப் பித்தர்
    உரு -சென்னைப் பித்தர்

    நன்று! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. மனைவியை சந்தேகப்படும் ஆளுங்களுக்கு ஆப்பே....!!!

    பதிலளிநீக்கு
  8. அருமையான ஒரு பாயின்ட் சொல்லி அசத்தி இருக்கீங்க தல...

    பதிலளிநீக்கு
  9. மகேந்திரன் கூறியது...

    //அகலிகையின் கல் காவியத்திற்கு
    புதுமைச் சாயம்
    மீண்டும் கல்லானதற்கு சொல்லப்பட்ட
    காரணம் இனிமை.//
    பாராட்டு புதுமைப் பித்தனுக்கு!
    நன்றி மகேந்திரன்!

    பதிலளிநீக்கு
  10. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //பின்றீங்களே?//
    நன்றி சிபி.

    பதிலளிநீக்கு
  11. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //கரு-புதுமைப் பித்தர்
    உரு -சென்னைப் பித்தர்

    நன்று! நன்றி!//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  12. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //மனைவியை சந்தேகப்படும் ஆளுங்களுக்கு ஆப்பே....!!!//
    சரியே!

    பதிலளிநீக்கு
  13. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  14. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அருமையான ஒரு பாயின்ட் சொல்லி அசத்தி இருக்கீங்க தல...//
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  15. Rathnavel கூறியது...

    //நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள் ஐயா.//
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  16. கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. கருத்து அவருடையதாயினும் அதனை கவிதையாக தந்த விதம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  17. என்ன இது? ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கே சார்!

    பதிலளிநீக்கு
  18. தமிழ் மணம் ஒட்டு போட்டாச்சு

    அப்புறம் கவிதை

    இது கவிதை இல்லை காவியம் .

    ஆம் உத்தமனாக சொல்வதற்கு ராமனை உதாரணம் சொல்வார்கள் ,அவனே தனது துணைவியை சந்தேகப்பட்டது அவனும் சராசரி என்பதையல்லவா குறிக்கிறது .

    அகலிகை மனதில் வானுயர்ந்த ராமன் இச்செய்தியால் கடுகை போல் சிறுத்து போனானே .

    என்பதை கவிதை வடிவில் தந்ததற்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  19. மனிதனுள் ஈரமில்லை என்பதால்...கல்லுக்குள் ஈரமிருந்து அது கண்ணீராய் வற்ற தொடங்கிற்று...அகலிகை கல்லானது இந்த பாலும் உலகில் சந்தேகம் எனும் கொடிய நோய் இருக்கிறது..அது தீண்டாமல் இருக்கவே கல்லானால் என்பதை கலக்கலான கதையில் சொல்லி அசத்திவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  20. அருமையான கவிதையாக்கம். சிறந்த சிறுகதையாளரின் படைப்பை கவிதை ஆக்க, முடிவு செய்தமைக்கு பாராட்டுகள். இந்த முயற்சி திடமாக தொடரட்டும் "தமிழ் இளைஞரே"..

    பதிலளிநீக்கு
  21. அகலிகை, சீதை இந்த இரண்டு வழக்கிலும் சர்ச்சை இருக்கிறது. முக்காலமும் உணர்ந்த முனிவர், இந்திரன் சேவல் வடிவத்தில் வந்து கூவியவுடன், விடிந்து விட்டது என்று எண்ணி கிளம்பியது ஏனோ?

    பதிலளிநீக்கு
  22. முதலாக உங்கள் வலைக்கு விஜயம். மிக வித்தியாசமான கருத்துக் கவிதை. மகிழ்ச்சி. நன்று. நன்று. வாழ்த்துகள்.
    வேதா.இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  23. பெண்ணவள் மீண்டும் கல்லாக மாறினாள்!

    கருத்தும் கவிதையும் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  24. புதுமைப்பித்தன் கருத்து!
    சென்னைப் பித்தன் கவிதை!!

    காம்பினேஷன் சூப்பர்!!!

    பதிலளிநீக்கு
  25. காத்திருப்பின் பின்னும் நாயகனைச் சேர முடியாத காரணத்தினால் கல்லான அகலிகை பற்றிய காவியக் கவிதையினைப் புனைந்திருக்கிறீங்க.

    நல்ல கவிதை ஐயா.

    பதிலளிநீக்கு
  26. பாலா கூறியது...

    //கவிதை நன்றாகத்தான் இருக்கிறது. கருத்து அவருடையதாயினும் அதனை கவிதையாக தந்த விதம் மிக அருமை.//

    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  27. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw கூறியது...

    //என்ன இது? ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கே சார்!//
    நன்றி மணி.

    பதிலளிநீக்கு
  28. M.R கூறியது...

    // தமிழ் மணம் ஒட்டு போட்டாச்சு

    அப்புறம் கவிதை

    இது கவிதை இல்லை காவியம் .

    ஆம் உத்தமனாக சொல்வதற்கு ராமனை உதாரணம் சொல்வார்கள் ,அவனே தனது துணைவியை சந்தேகப்பட்டது அவனும் சராசரி என்பதையல்லவா குறிக்கிறது .

    அகலிகை மனதில் வானுயர்ந்த ராமன் இச்செய்தியால் கடுகை போல் சிறுத்து போனானே .

    என்பதை கவிதை வடிவில் தந்ததற்கு நன்றி ஐயா//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  29. மாய உலகம் கூறியது...

    //மனிதனுள் ஈரமில்லை என்பதால்...கல்லுக்குள் ஈரமிருந்து அது கண்ணீராய் வற்ற தொடங்கிற்று...அகலிகை கல்லானது இந்த பாலும் உலகில் சந்தேகம் எனும் கொடிய நோய் இருக்கிறது..அது தீண்டாமல் இருக்கவே கல்லானால் என்பதை கலக்கலான கதையில் சொல்லி அசத்திவிட்டீர்கள்//

    நன்றி ராஜேஷ்.

    பதிலளிநீக்கு
  30. மாய உலகம் கூறியது...

    // தமிழ் மணம் 11//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  31. பாரத்... பாரதி... கூறியது...

    //அருமையான கவிதையாக்கம். சிறந்த சிறுகதையாளரின் படைப்பை கவிதை ஆக்க, முடிவு செய்தமைக்கு பாராட்டுகள். இந்த முயற்சி திடமாக தொடரட்டும் "தமிழ் இளைஞரே"..//

    நன்றி பாரத்.

    பதிலளிநீக்கு
  32. பாரத்... பாரதி... கூறியது...

    //அகலிகை, சீதை இந்த இரண்டு வழக்கிலும் சர்ச்சை இருக்கிறது. முக்காலமும் உணர்ந்த முனிவர், இந்திரன் சேவல் வடிவத்தில் வந்து கூவியவுடன், விடிந்து விட்டது என்று எண்ணி கிளம்பியது ஏனோ?//
    நடக்க இருப்பதை யாரால் மாற்ற இயலும்?

    பதிலளிநீக்கு
  33. kovaikkavi கூறியது...

    // முதலாக உங்கள் வலைக்கு விஜயம். மிக வித்தியாசமான கருத்துக் கவிதை. மகிழ்ச்சி. நன்று. நன்று. வாழ்த்துகள்.
    வேதா.இலங்காதிலகம்.//

    முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //பெண்ணவள் மீண்டும் கல்லாக மாறினாள்!

    கருத்தும் கவிதையும் அருமை. பாராட்டுக்கள்.//
    நன்றி இராஜராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு
  35. இராஜராஜேஸ்வரி கூறியது...

    //புதுமைப்பித்தன் கருத்து!
    சென்னைப் பித்தன் கவிதை!!

    காம்பினேஷன் சூப்பர்!!!//

    ஒரு இமயத்தின் அருகில் ஒரு மண் குவியல்!

    பதிலளிநீக்கு
  36. நிரூபன் கூறியது...

    //காத்திருப்பின் பின்னும் நாயகனைச் சேர முடியாத காரணத்தினால் கல்லான அகலிகை பற்றிய காவியக் கவிதையினைப் புனைந்திருக்கிறீங்க.

    நல்ல கவிதை ஐயா.//
    நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு
  37. புதுமைப்பித்தனின் கதையை முன்பே படித்து இரசித்து இருந்தாலும், தங்கள் கவிதை மூலம் திரும்பவும் அந்த கதைக்கருவை இரசிக்க வைத்தற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  38. வே.நடனசபாபதி கூறியது...

    //புதுமைப்பித்தனின் கதையை முன்பே படித்து இரசித்து இருந்தாலும், தங்கள் கவிதை மூலம் திரும்பவும் அந்த கதைக்கருவை இரசிக்க வைத்தற்கு நன்றி!//
    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு