தொடரும் தோழர்கள்

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

ஒரு வரலாறு-மீண்டும் தொடர்கிறது!

ஒரு வரலாறு என்ற ஒரு தொடரை 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதத் தொடங்கினேன்.அறிமுக இடுகையிலேயே Dr.ருத்ரன் அவர்கள் பின்னூட்டத்தில் வாழ்த்துச் சொல்லியிருந்தார்.என்ன காரணம் என்று தெரியவில்லை அந்தப்பதிவு ஆமை வேகத்தில்தான் வளர்ந்தது.நீண்ட நாட்களாகத் தேக்கமடைந்து விட்ட அத்தொடரை மீண்டு தொடர எண்ணி நவம்பர் 2010ல் ஒரு இடுகை வெளியிட்டேன்.நண்பர் நடன சபாபதி அவர்கள் பின்னூட்டத்தில் சொன்னார்கள்

//வே.நடனசபாபதி கூறியது...
ஏப்ரல் 2009 ல் இந்த தொடரை நீங்கள் ஆரம்பித்தபோது விரும்பிப்படித்தவன் நான்.
இடையிலே நிறுத்தி இருந்தபோது ஏமாற்றமாக இருந்தாலும், "இந்த வரலாறு தேதி வாரியாக வராது.கால இயந்திரம் முன்னும் பின்னும் பயணிக்கும்.பயணம் ஆரம்பம்." என்று நீங்களே ஆரம்பித்த அன்று சொன்னதால், திரும்பவும் கால இயந்திரம் பயணிக்கும் என்று காத்திருந்தேன். பயணம் தொடங்கியது அறிந்து மகிழ்ச்சி. அடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//

ஆனால் என் கவனம் வேறு திசையில் திரும்பியதால் பதிவு மீண்டும் தடைப்பட்டு விட்டது.இன்று காலை யு.எஸ் ஸில் இருக்கும் என் அண்ணன் மகள் தொலை பேசியில் இத்தொடரை நான் தாமதம் செய்வதற்காக வருத்தப் பட்டாள். எனவே இத்தொடரில் வாரம் ஒரு இடுகையாவது எழுத விழைகிறேன்---இன்ஷாஅல்லா!
இதுவரை வந்த இடுகைகள்---

http://chennaipithan.blogspot.com/2009/03/blog-post.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post_15.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post_22.html
http://chennaipithan.blogspot.com/2009/05/3a.html
http://chennaipithan.blogspot.com/2010/11/4.html.

ஒரு வேண்டுகோள்.மேலே குறிப்பிட்ட பதிவுகளைப் படித்துவிட்டுத் தொடரைப் படித்தால் தொடர்ச்சி புரியும்.நேரமிருந்தால் படியுங்கள்.நேரமில்லாதவர்களுக்காக ஒரு சுருக்கம்—

1)ராஜி என்கிற வரலாற்று நாயகி அறிமுகம்.76 ஆண்டுகளுக்கு முன்(இப்போது 78)
14 வயதில் மணந்து 26 வயதுக்குள் ஆறு குழந்தை பெற்று 32 வயதில் கணவனை இழந்து நிர்க்கதியான பெண்மணியின் அறிமுகம்.90 வயதிலும் அதே மன உறுதியுடன்(இப்போது 92) வாழும் பெண்மணி.

2)கணவன் மறைவுக்குப் பின் சென்னையிலிருந்து குழந்தைகளுடன் ராஜி புறப்படுகிறாள்.குழந்தைகள் அறிமுகம்,பெயர் மாற்றத்துடன்.ராஜியின் துயரம்.

3)8ஆம் வகுப்பு வரை சாத்தூரில் படித்த ராஜி,அங்கு பெண்கள்
உயர் நிலைப் பள்ளி இல்லாத காரணத்தால் மேற்படிப்புக்காகக் கடலூரில் இடம் கிடைக்காமல்,சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளியில் சேர்க்கப் படுகிறாள்.அது பற்றிய விவரங்கள்.

4)கால இயந்திரம் நிகழ்காலத்துக்கு வருகிறது.ராஜி செய்தித்தாளில் தன் பள்ளித்தோழி ஒருத்தியின் மறைவு பற்றிய செய்தி பார்க்கிறாள்.பள்ளி நாட்களில் தானும் அவளும் பாடிய பாட்டு ஞாபகம் வருகிறது.

5)ராஜியின் புகுந்த வீட்டில் கொலு.நவராத்திரியின்போது பாடகர் ஜி.என்.பி வீட்டில் அவருக்கு முன் ராஜி பாடியது!

6)இந்த வயதான காலத்தில் ராஜி படும் சிரமங்கள்.

இனி அடுத்த இடுகை 22ஆம் தேதி வெளியிடப்படும்.அதுவரை பழைய இடுகைகளைப் படிக்க எண்னுபவர்களுக்கு நேரம் தருகிறேன்;எனக்கும் தகவல் திரட்ட!

சந்திப்போம்!

20 கருத்துகள்:

  1. சீக்கிரமே போடலாமே . பழைய இடுகைகளைப் படிக்க பத்து நிமிடம் கூட ஆகவில்லை. கொஞ்சம் பெருசா போடுங்க சார்

    பதிலளிநீக்கு
  2. முந்தைய பதிவுகளின் சுருக்கங்களை படிக்கும் போதே, முழுவதும் படித்த உணர்வு ஏற்படிகிறது. தெளிவான சுருக்கம்..

    பதிலளிநீக்கு
  3. //அறிமுக இடுகையிலேயே Dr.ருத்ரன் அவர்கள் பின்னூட்டத்தில் வாழ்த்துச் சொல்லியிருந்தார்//


    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அசத்துங்க அசத்துங்க சென்னை பித்தன்....
    காத்திருக்கிறோம் நாங்கள்....

    பதிலளிநீக்கு
  5. எல் கே கூறியது...
    //சீக்கிரமே போடலாமே . பழைய இடுகைகளைப் படிக்க பத்து நிமிடம் கூட ஆகவில்லை. கொஞ்சம் பெருசா போடுங்க சார்//
    மனதில் இருக்கும் வேகம் விரல்களிலில்லை கார்த்திக்!இரண்டு விரல்களால் தமிங்க்லீஷில் எவ்வளவு நேரம் தட்ட முடியும்?நடுவே அந்தப் பதிவு பற்றியும் நினைக்க வேண்டியிருக்கிறது!இப்போதெல்லாம் ammas.com இல் சோதிட ஆலோசனைகளையே நிறுத்தி விட்டேன்,நேரமின்மையால்!அவ்வளவுபதிவுப் பைத்தியம்!
    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பாரத்... பாரதி... கூறியது...

    //முந்தைய பதிவுகளின் சுருக்கங்களை படிக்கும் போதே, முழுவதும் படித்த உணர்வு ஏற்படிகிறது. தெளிவான சுருக்கம்..//
    நன்றி பாரதி!

    பதிலளிநீக்கு
  7. பாரத்... பாரதி... கூறியது...

    //வாழ்த்துக்கள். //
    Dr.ருத்ரனின் வாழ்த்துக்காக உங்கள் வாழ்த்துக்கள்?!
    நன்றி பாரதி!

    பதிலளிநீக்கு
  8. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //அசத்துங்க அசத்துங்க சென்னை பித்தன்....
    காத்திருக்கிறோம் நாங்கள்...//
    நான் தொடர்கிறேன்.நீங்களும் தொடர வேண்டுகிறேன்!
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  9. ஐயா வணக்கம். உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //இனி அடுத்த இடுகை 22ஆம் தேதி வெளியிடப்படும்//

    மீண்டும் தொடர இருக்கின்ற வரலாற்றை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. தொடர் முழுதும் படித்துவிட்டு வருகிறேன்...
    See.,

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  12. வே.நடனசபாபதி கூறியது...
    // மீண்டும் தொடர இருக்கின்ற வரலாற்றை படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.//
    நன்றி நடனசபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  13. sakthistudycentre-கருன் கூறியது...

    //தொடர் முழுதும் படித்துவிட்டு வருகிறேன்...//
    வருகைக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  14. கொடுக்கப்பட்டு இருக்கும் லின்க்ஸ், கிளிக் செய்தாலே வாசிக்க எளிதாக இருக்கும் படி தரலாமே...
    மீண்டும் தொடரை தொடங்குவதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. முன் கதை சுருக்கமே இறுக்கமாதான் இருக்கு.... தொடருங்க..

    பதிலளிநீக்கு
  16. Chitra கூறியது...
    // கொடுக்கப்பட்டு இருக்கும் லின்க்ஸ், கிளிக் செய்தாலே வாசிக்க எளிதாக இருக்கும் படி தரலாமே...//
    வார்த்தையில் அடித்த போது அப்படித்தாங்க இருந்தது!பதிவில் காப்பி செய்தபோது இப்படி!என்ன செய்வதென்று எனக்குத்தெரியாது!என் கணினி ஞானம் அவ்வளவுதான்! மன்னிக்கவும்.
    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  17. சி.கருணாகரசு கூறியது...

    //முன் கதை சுருக்கமே இறுக்கமாதான் இருக்கு.... தொடருங்க..//
    தொடர்கிறேன்!தொடருங்கள்!
    நன்றி கருணாகரசு!

    பதிலளிநீக்கு
  18. உங்கள் சோர்வு புரிகிறது. கொலைக்கதை எழுதுவது சுலபம்.

    பதிலளிநீக்கு
  19. அப்பாதுரை கூறியது...
    //உங்கள் சோர்வு புரிகிறது. கொலைக்கதை எழுதுவது சுலபம்.//

    சரியாகச் சொன்னீர்கள்!
    தகவல்களைக் கேட்டு வாங்கி, அவற்றைத் தொகுத்துப் படிக்கச் சுவாரஸ்யமாக அளிப்பது கொஞ்சம் கடினம்தாம்.
    நன்றி அப்பாதுரை அவர்களே!

    பதிலளிநீக்கு