மார்கழி
பிறந்து விட்டது.
வழக்கம்
போல் எங்கள் குடியிருப்பின் காவல் தெய்வமான லக்ஷ்மிகணபதிக்குக் காலை பூஜைக்கான பிரசாதம்
செய்ய,குடியிருப்போர் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
நானும்
ஒரு நாள் பூஜையை ஏற்றுப் பிரசாதம் செய்ய எண்ணியுள்ளேன்.
வெண்பொங்கல்
செய்ய உத்தேசம்!
மார்கழி
மாதத்தைப் பீடை மாதம் என்று கூறுவார்கள்.
ஆனால்
கீதாச்சாரியன்,”மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் “ என்று சொல்கிறான்.
அப்படியெனில்
அது எப்படிப் பீடை மாதமாகும்?
கேள்வி
எழுகிறது.
உங்களுக்குத்
தலைவலிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
பையனை
அழைத்துச் சொல்கிறீர்கள்”
மருந்துக்கடைக்குப் போய்த் தலைவலி மாத்திரை வாங்கி வா” என்று.
பையனும்
கடைக்குச் சென்று தலைவலி மாத்திரை கேட்டுக் கடைக்காரர் மாத்திரை கொடுக்கிறார்,
அதைப் போட்டுக்கொண்டபின்
உங்கள் வலி நீங்குகிறது.
தலைவலி
மாத்திரை என்றால் என்ன?
தலைவலியை
உண்டாக்கும் மாத்திரையா?
அல்ல.மாறாகத் தலைவலியை
நீக்கும் மாத்திரை.
அதையே
தலைவலி மாத்திரை என்கிறோம்.
அதே
போல்,பீடை மாதம் என்றால்,பீடை ஏற்படுத்தும் மாதமல்ல;பீடையை நீக்கும் மாதம்!
மாதம்
முழுவதும்,காலை எழுந்து நீராடி,திருப்பாவை மூலம் கண்ணனையும்,
திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மூலம் சிவபிரானையும்
போற்றி மகிழ்ந்து அதன் மூலம் நம் பீடைகள் நீங்கப் பெறவேண்டும்.
இம்மாதத்தை
சூன்யமாதம் என்றும் சொல்வர்.
சூன்யம்
என்றால் பூஜ்யம்.
பூஜ்யனான
இறைவனை அதிகாலை தொழும் மாதம் ஆதலால்,பூஜ்ய மாதம்!
இம்மாதம்
தட்சிணாயனத்தின் கடைசி மாதம்.
ஒரு
ஆண்டு என்பதை,தேவர்களின் ஒரு நாள் எனக் கொண்டால்,மார்கழி மாதம் என்பது அதிகாலைப் பொழுதாகும்.
இரவும்
விடியலும் சந்திக்கும் வேளை!
எனவேதான்
அதிகாலை இறைவனை வணங்க வேண்டும்.
நாளை ஆருத்ரா தரிசனம்.
களி கூட்டுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.
