ஒரு
சராசரித் தமிழ்ப் பட இயக்குனரும்,தயாரிப்பாளரும் உரையாடுகின்றனர்
“என்ன டைரக்டர் சார்,”இறுதிச்சுற்று” பார்த்தீங்களா?”
“என் உதவிப் பசங்க பார்த்துட்டு வந்து புகழ்ந்தாங்களேன்னு போனேன்.தியேட்டர்ல கூட்டமே இல்லை!வசூலே இல்லை போல”
படம்
எப்படி இருந்தது”
ஏதோ
இருக்கு!என்ன
சார் இது,ஒரு காமெடி இல்ல,லவ் டூயட் இல்ல,கவர்ச்சி இல்ல. படம் எப்படி ஓடும்?
“இந்தக்கதையில அதுக்கெல்லாம் இடம் இல்லையே சார்”
“ஏன் இல்ல?ஒரு நல்ல வாய்ப்பு கதையிலயே இருக்கு.மாதவன் மனைவி இன்னொருத் தனோட ஓடிப் போயிட்டான்னு ஒரு வசனத்தோட முடிச்சுடறாங்க.அதை நல்லா பெரிசாக்கி இருக்கலாமே!
“எப்படி”
மாதவன்
மனைவி வேடத்தில ஒரு கவர்ச்சி நடிகையைப் போடணும்.அவங்க முதல்ல ஒரு நீச்சல்
குளத்துல சந்திக்கணும்.அவ நீந்தும்போது ஒரு பாட்டு!ரெண்டு பேரும் நீச்சல் உடையில!லவ் மலருது.அப்புறம் ஆஸ்திரேலியாவில ஒரு டூயட்.அப்புறம் கல்யாணம்.
புது குத்துச் சண்டை வீரன் அறிமுகம்.அவன் பக்கம் அவ சாயிறா.மாதவன் தோத்ததும் அவ புதியவனோட ஓடிப் போயிடறா. தாடியோட
மாதவன்.இந்த இடத்துல இடை வேளை விடறோம்.
இதில
குத்துச் சண்டை
,பயிற்சி அதெல்லாம் வரல்லையே”
காட்டாம
விடுவமா?இப்போ
சொன்னது பூரா ஃப்ளேஷ்பேக்தானே!நடுவில் நடுவில அதையும் காட்டுவோம்.நாயகியோட அக்காவுக்கும் கோச் மேல லவ் வருது அதனால் வரும் சிக்கல், அதையும் சேர்த்துப்போம்
சரி,காமெடி?
பயிற்சிக்கு
வரும் இளைஞர்களில் சந்தானம் ஒருவர்!இது போதாதா?
சண்டைக்
காட்சி?
மாதவனை
அது யாரவரு,ஜாகிர் ஹுசேனா அவரு ஆள் வச்சு அடிக்க முயற்சி செய்யறார், அப்பொ அவங்களை மாதவன் போட்டுப் பொரட்டியெடுக்கறார்!
கடைசியில
மாதவனுக்கும் ரித்திகாவுக்கும் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க அது கையில கிளவுஸோட பிறக்கிற
மாதிரி சிம்பாலிக்கா காட்டித் தொடரும்னு கார்டு போடுவோம்!
இதெல்லா செஞ்சா வசூல் அள்ளிடுமே!
படம்
பற்றி பல விமர்சனங்கள் வந்து விட்டன.எனவே நான் புதிதாக என்ன சொல்ல இருக்கிறது?
எனக்கு மிகவும் பிடித்திருந்தது
டிஸ்கி:இந்தாளுக்கு இதே வேலை ! படப் பெயரைத் தலைப்பா வச்சிட்டு
வேறா ஏதாவது எழுதி ஏமாத்துவது;இந்த வாட்டி பல்பு வாங்க மாட்டோம்னு
வந்தீங்களா?
உங்களுக்கு ஒரு நூறு வாட் பல்பு!