தொடரும் தோழர்கள்

அருளுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருளுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 29, 2015

மனிதனும் உணவும்!i



”எல்லாரும் சாப்பிட்டாச்சா?”

இல்லை இல்லை எனக் கோரஸ் குரல்கள்

”சாப்பிட்டு வந்தவர்கள் கையைத் தூக்குங்க”

எந்தக் கையும் உயரவில்லை
“பலே!இப்படித்தான் இருக்க வேண்டும்.ஆன்மீகச் சொற்பொழிவைக்கேட்க வரும்போது வயிறு புடைக்க சாப்பிட்டுவிட்டு வந்தால் தூக்கம்தான் வரும்.வள்ளுவர் சொன்னாரல்லவா. செவிக்குணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று.அதுபோல நீங்கள் 
எல்லாரும் செவிக்குவு வேண்டும் என்பதால் சாப்பாட்டைத் தள்ளிப் போட்டு விட்டீர்கள்!”

அப்படி நினைக்க எனக்கு ஆசைதான்;னால் நீங்கள் சாப்பிடாமல் வந்த காரணம் சொற் பொழிவுக்குப் பின் மண்டபத்தில் இனிப்புடன் சாப்பாடு உண்டு  என்பது உங்களுக்குத் தெரியும்(சிரிப்பு).எனவே அதற்காக இவனோட பேச்சைக் கொஞ்ச நேரம் சகித்துக் கொள்ளலாம் என்பாது உங்கள் எண்ணம்!(கூட்டத்தில் சிரிப்பு)

சாப்பிடாதவர்கள் இரண்டு விதம்.சாப்பிடுவதற்கு இருந்தும் சாப்பாடு இறங்காதவர்கள். அதனால் சாப்பிடாதவர்கள்.பசியிருந்தும் சாப்பிட ஏதும் இல்லாதவர்கள்.அதனால் சாப்பிடாதவர்கள்

எனவேதான் சாத்திரங்கள் சொல்லுகின்றன”தர்மம் செய்”என்று.தாங்களிலே சிறந்தது அன்னதானம்

உங்களுக்கெல்லாம் ஒருவேண்டுகோள்.வேண்டிய அளவு கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். உணவை  இலையில்  மிச்சம் வைத்து வீணாக்காதீர்கள். தைத்திரிய உபநிடதம் சொல்கி
றது”அன்னம் ந பரிசக்ஷீத”ஏனேனில் எல்லா உயிர்களுக்கும் உணவு முக்கியம்.எல்லோரும் உவால் ஆனவர்கள்.

தர்மம் எப்படிச் செய்வது.அந்த அளவு எனக்கு வசதி இல்லையே என்று சொல்லலாம்.

திருமூலர் சொல்கிறார்
“யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
 யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரைதானே”

ஆம்!நமது சாப்பாட்டைப் பகிர்ந்துண்டால் போதும்.அதுவே அறம்.

இந்த அடிப்படையில் தான் காஞ்சி மகாப் பெரியவர்கள் பிடி அரிசித்திட்டம் கொண்டு வந்தார்கள்.
உணவு என்பது முக்கியமானது

இன்று தண்ணீரையும் காசு கொடுத்து வாங்குகிறோம்.பத்து ரூபாய்க்கு ஒரு பாட்டில் தண்ணீர் கிடைத்தால் அம்மா தயவென்று மகிழ்கிறோம்!(சிரிப்பு)

நாளை அன்னதானத்தின் சிறப்பைப் பற்றி எடுத்துரைப்பேன்.சமையல்கூடத்திலிருந்து வரும் வாசனையை அனைவரும் நுகரத்தொடங்கி விட்டீர்கள்.எனவே சாப்பிடச் செல்ல,உங்களைச் சாப்பிடச்சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.நாளை பார்ப்போம்.

(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)


புதன், செப்டம்பர் 04, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?



ஒரு சிற்றூருக்கு ஒரு மகான் வந்தார்.

அவர் தெய்வீக சக்திகள் நிறைந்தவர்.

ஒருவர் விரும்புவதை நிறைவேற்றும் வல்லமை உள்ளவர்.

ஊர் மக்கள் அவர் முன் வந்து வணங்கினர்.

விரும்பியதைக் கேளுங்கள் என்று உரைத்தார்.

ஒவ்வொருவரும் தங்கள் விருப்பங்களைக் கூறினர்.

அனைத்தையும் அவர் கேட்டார்.

கடைசியில் சொன்னார்.”நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்.இன்று இரவு படுக்கப் போகும் முன் உங்கள் மனத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி விட்டு,உங்களுக்குத் தேவையானதைக் கேளுங்கள்”

அனைவரும் அவர் சொன்னபடி செய்தனர்

அந்த ஊரில் ஒருவன்;அவன் பெயர்...பாலகுமாரன் என்று வைத்துக் கொள்வோம்

அவன் நீண்ட நாட்களாக ஒரு மாருதி காரும்,பெரிய வீடும் வேண்டும் என எண்ணியிருந்தான்.

காலை எழுந்து பார்த்தால்,அவன் வீடு மூன்று படுக்கை அறை கொண்ட வீடாக மாறியி ருந்தது.

வெளியே வந்து பார்த்தான்.

வாசலில் ஒரு புத்தம்புது மாருதி கார் நின்றிருந்தது.

அவனுக்கு மகிழ்ச்சியில் கூத்தாட வேண்டும் போல் இருந்தது.

அப்போது அவன் பார்வை அடுத்த வீட்டு வாசலில் நின்றிருந்த பி.எம்.டபுள்யு காரின் மேல் விழுந்தது.

அப்பா!எவ்வளவு பெரிய அழகிய கார்!

எதிர் வீட்டைப் பார்த்தான்.

சிறிய வீடு இருந்த இடத்தில் ஒரு மாளிகை!

தன் வீட்டையும்,சிறிய காரையும் பார்த்தான்.

அவன் மனம் நகைத்தது”இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?”....(தலைப்பு வந்து விட்டதா!)

அவன் மட்டுமல்ல,அந்த ஊரில் அனைவருக்கும் அதே நிலை.

அடுத்தவருக்குக் கிடைத்ததைப் பார்த்து நெஞ்சம் பொருமிற்று!

மீண்டும் மகானிடம்....

மீண்டும் மன வருத்தங்கள்.....

மீண்டும் கோரிக்கைகள்......

இதற்கு முடிவேது?!

எவ்வளவு கிடைத்தாலும் திருப்தி அடையாத மனம் இருந்தால் வாழ்வில் மகிழ்வேது?

வசதி அதிகமானவரைப்பார்த்துப் பொறமைப் படாமல் வேறு பலரை விட நான் வசதியாக உள்ளேன் என்று நினைத்தால் திருப்தி, தானே வரும்!

இருப்பதை விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படாதீர்கள்!

(ஸ்வாமி பித்தானந்தாவின் உரையிலிருந்து)



வெள்ளி, மார்ச் 18, 2011

நான் என்னும் அகந்தை!

நான் என்னும் அகந்தை மனிதனின் எதிரி.

தன்னம்பிக்கை என்பது வேறு;அகம்பாவம் என்பது வேறு.
என்னால்தான் எல்லாமே முடியும்,நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு,இறுதியில் தோல்வியையே தரும்.

எந்த மனதில் அகந்தை இருக்கிறதோ அங்கு குழப்பமும் இருக்கும்.

கி.வா.ஜ. அவர்கள் சொல்வார்கள்’குழம்பு குழம்பியிருக்கிறது,ரசம் தெளிவாக இருக்கிறது.காரணம் குழம்பில் ’தான்’ இருக்கிறது;ரசத்தில் அதுஇல்லை என்று.(பிராமணர்கள்,குழம்பில் போடும் காயைத் ’தான்’ என்று சொல்வார்கள்)

அகந்தையின் விளைவு குழப்பம்;அதன் விளவு அவசரம்;செயல்திறன்
குறைபாடு;தோல்வி!

பார்த்தனுக்குப் போருக்கு முன் அகந்தை ஏற்பட்டது!
போர் தொடங்கு முன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான் ----

”ஸேநயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத!

படைகளப் பார்க்க விரும்பும் பார்த்தன் சொல்கிறான்”என்னுடைய ரதத்தை இரண்டு படைகளுக்கும் நடுவில் நிறுத்து”.

நாம் நமது மகிழ்வுந்து ஓட்டியைப் பார்த்து’வண்டியை எடு’ என்றுதான் சொல்வோம்.’என் வண்டியை எடு’என்று சொல்வதில்லை

ஆனால் அர்ஜுனன் சொல்கிறான்,தேரோட்டியாக வீற்றிருக்கும் பகவானைப் பார்த்து.

இந்த அகம்பாவத்தின் விளைவு –குழப்பம்,பேடிமைத்தனம் எல்லாம்.
இதைத் தெளிய வைக்க மிகப் பெரிய அறிவுரையே தர வேண்டியதாகிறது பகவானுக்கு!

ஒருமன்னன் இருந்தான்.ஒரு நாள் அவன் ஒரு ஞானியைப் பார்த்து ஆசி பெற நினைத்துச் சென்றான்.

அவன் வருவதைப் பார்த்த ஞானி தன் குடிலுக்குள் சென்று விட்டார்.
மன்னன் திகைத்தான்.

”ஞானியே, நான் வந்திருக்கிறேன்,வெளியே வந்து அருள் தாருங்கள்”
அவர் வரவில்லை.

”நான் சிம்மவர்மன் வந்திருக்கிறேன் ,வெளியே வாருங்கள்”
அவர் வரவில்லை.மன்னன் பொறுமை இழந்தான்.

“நான் இந்த நாட்டு மன்னன் வந்திருக்கிறேன்,உங்கள் அருளுக்காக”

உள்ளிருந்தே ஞானி சொன்னார்”நான் செத்த பின் வா!”

மன்னன் குழம்பினான் .அமைச்சரைக் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

அந்தக் காலத்தில் அமைச்சர்கள் எல்லாம் அறிவாளிகளாக இருந்தனர்!

அவர் சொன்னார்” அவர் சொல்வது உங்களுக்குள் இருக்கும் நான் என்ற ஆணவத்தை;அதை துறந்து வரச்சொல்கிறார் ”என்று .

நாடாண்டவர்களுக்கு மட்டுமல்ல நாடாளத்துடிப்பவர்களுக்கும் இது தேவையான அறிவுரை!

அகங்காரம்,மமகாரத்தைத்-நான் எனது என்பதை- துறந்தால் நன்மையே நடக்கும்.

அரங்கன் அருள் புரியட்டும்!

(ஸ்வாமி பித்தானந்த சரஸ்வதியின் வெளி வராத அருளுரைகள்!)