தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 22, 2022

கண்ணனின் குடில்

 

கண்ணன் வந்தான்.

வந்தவன் இருந்தானா?

இல்லையேல் சென்று நாம் மீண்டும் அடுத்த ஆண்டு அழைக்கும்போதுதான் வருவானா?

எப்படி அழைத்தோம்…….

வீடு பெருக்கித் துடைத்துச் சுத்தம் செய்தோம்

தோரணம் கட்டினோம்

கோலம் போட்டோம்.

சின்னச் சின்ன கால்கள் வரைந்தோம்.

இவையெல்லாம் வெறும் சடங்குகளாகச் செய்தோம்.

அவன் எங்கு தங்க வேண்டுமோ அந்த இடத்தைச் சுத்தம் செய்தோமா?

அழுக்காறு,அவா,வெகுளி போன்ற எதிர்மறைக் குப்பை எண்ணங்களால் நிரம்பி வழியும் நம் மனத்தைச் சுத்தம் செய்ய வேண்டாமா?

சுத்தமாக இருந்தால்தானே அவன் வந்து அமர முடியும்?

அவன் நிரந்தரமாக இருக்க முடியும்?

செய்வோமா?

அவனிடம் நம்மை ஒப்படைப்போம்.

சமீபத்தில் கேட்ட குட்டிக் கதையொன்று…

கண்ணன் அஸ்தினாபுரத்துக்கு வருகிறான்.

அவன் தேர் நெருங்கியதும் பீஷ்மர் வந்து “கண்ணா!என் வீட்டுக்கு வரவேண்டும்” என் அழைக்கிறார்.

“இதுதான் உங்கள் வீடா?பின்னர் வருகிறேன்.”கண்ணன் அகன்றான்.

சிறிது தூரத்தில் துரோணர் வந்தார்.

“கண்ணா!என் வீட்டுக்கு வர வேண்டும்”

“ஓ! இது உங்கள் வீடா? பின்னர் வருகிறேன்.”

சிறிது தூரத்தில் விதுரர் வந்தார்

“கண்ணா!உன் வீட்டுக்கு வரவேண்டும்”

‘ ஓ!? என் வீடல்லவா?கட்டாயம் வரத்தான் வேண்டும்”

அவன் விதுரர் வீட்டிற்குச் சென்றான்.

இதற்கும் மேல் விளக்கம் தேவையா?!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

 

 

 

11 கருத்துகள்:

  1. "உன் வீடு" விளக்கம் அழகு ஐயா

    பதிலளிநீக்கு
  2. இந்த இன்டர்வியூவுக்கு செல்பவர்கள், தனக்கு முன்னால் சென்று வந்தவர்களை சூழ்ந்து கொண்டு என்ன கேள்வி கேட்டார்கள் என்ன கேள்வி கேட்டார்கள் என்று துளைத்தெடுத்து விடுவார்கள்.  விதுரருக்கு அந்தக் கஷ்டம் கூட இல்லை.  கேள்வியும் பதிலும் எல்லோரும் அறிய வெட்ட வெளியில்தானே..    சமாளித்துக் கொண்டு விட்டார் போல...!   

    ஹிஹிஹி கொனஷ்டையா யோசித்ச்சுப் பார்த்தேன்!

    பதிலளிநீக்கு
  3. செஞ்சோற்றுக்காக சிதறிப் போனவன் கர்ணன் மட்டுமல்ல.. பீஷ்மரும் துரோணர் இருவருமே பாஞ்சாலி அவமானப் படுத்தப்பட்ட போது அமைதியாய் இருந்தவர்கள்..

    விதுர நீதிக்கு இணையாக பீஷ்ம நீதியோ துரோண நீதியோ இல்லை..

    பதிலளிநீக்கு
  4. ஆனாலும்,
    இதையெல்லாம் உன்னால் தடுத்திருக்க முடியாதா?.. என்று உத்தவர் கண்ணனைக் கேட்டபோது,

    கண்ணன் சொன்ன வார்த்தைகள் -

    நான் சூது ஆடுவது கண்ணனுக்குத் தெரியாதிருக்க வேண்டும்.. கடவுளே!..

    - என்று, தருமபுத்திரன் நினைத்துக் கொண்டிருந்தான்.
    எனக்கு அழைப்பு இல்லாததால் வெளியே நின்றிருந்தேன்
    அப்போது நான்!..

    பதிலளிநீக்கு
  5. இந்தக் கதை கேட்டிருக்கிறேன் விதுரர் நீதி உயர்வானதாயிற்றே.

    சுத்தம் மனதில் இருந்தால், தானே வருவான் இறைவன். அதுதான் அவன் குடில்!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. விதுரன் போல் நாமும் இருந்தால் நம் வீட்டிற்கும் கண்ணன் வருவான் என்பதை அழகாக சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு