கண்ணன் வந்தான்.
வந்தவன் இருந்தானா?
இல்லையேல் சென்று
நாம் மீண்டும் அடுத்த ஆண்டு அழைக்கும்போதுதான் வருவானா?
எப்படி அழைத்தோம்…….
வீடு பெருக்கித்
துடைத்துச் சுத்தம் செய்தோம்
தோரணம் கட்டினோம்
கோலம் போட்டோம்.
சின்னச் சின்ன
கால்கள் வரைந்தோம்.
இவையெல்லாம்
வெறும் சடங்குகளாகச் செய்தோம்.
அவன் எங்கு
தங்க வேண்டுமோ அந்த இடத்தைச் சுத்தம் செய்தோமா?
அழுக்காறு,அவா,வெகுளி
போன்ற எதிர்மறைக் குப்பை எண்ணங்களால் நிரம்பி வழியும் நம் மனத்தைச் சுத்தம் செய்ய வேண்டாமா?
சுத்தமாக இருந்தால்தானே
அவன் வந்து அமர முடியும்?
அவன் நிரந்தரமாக
இருக்க முடியும்?
செய்வோமா?
அவனிடம் நம்மை
ஒப்படைப்போம்.
சமீபத்தில்
கேட்ட குட்டிக் கதையொன்று…
கண்ணன் அஸ்தினாபுரத்துக்கு
வருகிறான்.
அவன் தேர் நெருங்கியதும்
பீஷ்மர் வந்து “கண்ணா!என் வீட்டுக்கு வரவேண்டும்” என் அழைக்கிறார்.
“இதுதான் உங்கள்
வீடா?பின்னர் வருகிறேன்.”கண்ணன் அகன்றான்.
சிறிது தூரத்தில்
துரோணர் வந்தார்.
“கண்ணா!என்
வீட்டுக்கு வர வேண்டும்”
“ஓ! இது உங்கள்
வீடா? பின்னர் வருகிறேன்.”
சிறிது தூரத்தில்
விதுரர் வந்தார்
“கண்ணா!உன்
வீட்டுக்கு வரவேண்டும்”
‘ ஓ!? என் வீடல்லவா?கட்டாயம்
வரத்தான் வேண்டும்”
அவன் விதுரர்
வீட்டிற்குச் சென்றான்.
இதற்கும் மேல்
விளக்கம் தேவையா?!
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.